கோடையை உணர்த்தும் விதமாக காலை நேரத்திலேயே வெயில் கொளுத்த ஆரம்பித்துவிட்டது. என்னதான் வெயில் என்றாலும் வேலை மற்றும் வீட்டுத் தேவைகளுக்காக வெளியில் சென்றுதான் தீரவேண்டும். வெப்பத்தினால் உடலில் நீர்சத்து குறைவதோடு நாவறட்சியும், தாகமும் ஏற்படுகிறது. எனவே கோடையை சமாளிக்க பழச்சாறுகளை உட்கொண்டால் வெப்பத்தினால் ஏற்படும் நோய் பாதிப்புகளை சமாளிக்கலாம். உடலுக்கு தேவையான வைட்டமின் சத்துக்களும் கிடைக்கும்.
சுக்கு மல்லி மூலிகைச் சாறு
கோடை காலத்தில் உஷ்ணத்தினால் பித்தநோய் ஏற்படுவது இயல்பு. எனவே இரண்டு டம்ளர் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் சுக்கு தட்டிப்போட்டு அதனுடன் கொத்தமல்லியை பொடி செய்து நன்றாக கொதிக்கவிடவேண்டும். அதில் பனங்கற்கண்டு அல்லது சர்க்கரை சேர்த்து ஆறவைத்து அருந்த வேண்டும். இதனால் பித்த நோய் குணமாகும்.
மாம்பழச் சாறு
மாம்பழத்தை நன்றாக தோல் உறித்து அதனுடன் பால் கலந்து மிக்சியில் அடித்து ஐஸ் சேர்த்து கோடைக்கேற்ற குளுமையான சத்தான பானத்தை அருந்தலாம்.
தர்பூசணிப்பழச் சாறு
கோடையின் கொடுமையிலிருந்து விடுபட நினைப்பவர்கள் தர்பூசணி பழத்தை அதிகம் உண்ணலாம். இந்தப் பழத்தை சாறு எடுத்து உண்ணும் போது கல்லடைப்பு என்னும் நோயுடன் சிறுநீர் வெளியேறும் போது தோன்றும் பல்வேறு குறைபாடுகளும் நீங்கும். நீரிழிவும் கட்டுப்படும். தர்பூசணிப்பழச் சாறுடன் தேன் கலந்து உண்டுவர காய்ச்சல் குணமாகும். சாறுடன் சமஅளவு மோர் கலந்து அருந்த காமாலை குணமாகும்.
எலுமிச்சைச் சாறு
உடல் களைப்பு, கை, கால் மூட்டுக்களில் உள்ள கணுக்களில் வீக்கம் வலி ஆகியவை இருந்தால் எலுமிச்சைச்சாறுடன் விளக்கெண்ணெய் கலந்து தேய்த்து வர வலியிலிருந்து மீளலாம்.பழுத்த வாழைப்பழத்துடன் எலுமிச்சைச் சாறும் தேனும் கலுந்து குழைத்து உண்ண மலக்குடலில் உள்ள குறைகள் நீங்கி பல நோய்கள் வராது தடுக்கலாம்.
எலுமிச்சைச் சாறுடன் தேன் அல்லது வெல்லம் கலந்து ஒரு பழத்திற்கு அரை லிட்டர் தண்ணீர் கலந்து அருந்த வேண்டும். தொடர்ந்து அருந்துவதால் மூல நோய்கள், வயிற்றுக்கடுப்பு, பித்தத்தால் வரும் நோய்கள் ஆகியவை குணமாகும். ஆனால் அளவுக்கதிகமாக இதை அருந்தும்போது குடல் தன் பலத்தை இழக்க நேரிடும்.
இளநீர் பானம்
இளநீரை எந்த பருவத்திலும் அருந்தலாம். கோடையில் இளநீர் ஏற்ற பானம். இளநீருடன் எலுமிச்சை சாறு கலந்து அருந்துவதால் டைபாய்டு நோய் குணமாகும். வெள்ளை வெங்காய சாறுடன் கலந்து அருந்துவதால் மலேரியா நோய் குணமாகும். வெள்ளை வெங்காயத்துடன் கற்பூரம் கலந்து அருந்த எலுமிச்சைச் சாறுடன் அருந்துவதால் காலரா குணமாகும்.
தக்காளிச் சாறு
தக்காளி ஏழைகளின் ஆப்பிள் என்ற அழைப்படுவதற்கு ஏற்ப பல விதமான நோய்களை குணமாக்கும் ஆப்பிளில் இருக்கும் சத்தைவிட சற்று அதிகான சத்துடன் விலை மலிவாக கிடைக்கும்.
கோடை காலத்தில் தக்காளிச் சாற்றை நாள்தோறும் காலைவேளையில் உண்டுவர உடல் வலிமை அதிகமாவதுடன் வேண்டாத சதைகளும் குறையும். நீரிழிவு வியாதியும் கட்டுப்படும். சாறுடன் தேன் கலந்து உண்டுவர ரத்தம் சுத்தமாகும். தோல் நோய்கள் குணமாகும்.
ஆப்பிள் பழச்சாறு
ஆப்பிள் பழச்சாறு உடற் சோம்பல், உடல்களைப்பு, வேளையில் ஆர்வமின்மை போன்றவற்றை குணமாக்கும் தன்மையுள்ளது. ஆப்பிள் பழச்சாறுடன் தேனும் பொடித்த ரோஜா இதழ், ஏலம் ஆகியவற்றை கலந்து அருந்த ரத்த சோகை குணமாகும். மேலும் கர்ப்பிணி பெண்கள் இச்சாற்றை அருந்த பிரசவத்தின் போது இழக்கும் சக்தியை பெறலாம். குழந்தைகளுக்கு ஆப்பிள் சாறு கொடுக்க உடல் வளர்ச்சி, உடற்பலம் பெருகும்.
திராட்சை பழச் சாறு
கோடையில் திராட்சைச் சாறு தொடர்ந்து அருந்தி வர இரத்த அழுத்தகுறைவு, நரம்பு தளர்ச்சி, குடற்புண், காமாலை, வாயுகோளாறுகள், மூட்டுவலி ஆகியவை குணமாகும். திராட்சைச் சாறுடன் தேன் கலந்து உண்டுவர ரத்த விருக்தியுண்டாகி உடல்பலம் மிகும். நீரிழிவு வியாதிக்கு சர்க்கரை சேர்க்காத சாறு மிகவும் நல்லது.
ஆரஞ்சு பழச் சாறு
ஆரஞ்சு பழச்சாறு அருந்துபவர்களுக்கு உடலில் நோயினை எதிர்க்கும் சக்தி அதிகமாகிறது. எளிதில் ஜீரணம் செய்ய தகுந்தது. இருதய நோய்கள் எளிதில் குணமாகும். டைபாய்டு, ஜுரம் ஆகியவை குணமாகும். ஆரஞ்சுச் சாறுடன் இளநீர் கலந்து அருந்துவதால் சிறுநீர் தாராளமாக வெளியேறும். சிறுநீரக குறைபாடு குணமாகும். குழந்தைகளுக்கு கொடுக்க குடல் பலம் பெருகும்.
இச்சாறுடன் எலுமிச்சைச் சாறு கலந்தும் அருந்தலாம் தொண்டையில் புற்றுநோய் கொண்டு எந்த உணவும் உட்கொள்ள இயலாத நிலையிலுள்ளவர்களுக்கு ஆரஞ்சுச்சாறு அருமருந்தாகும். திட உணவு உட்கொள்ளாத வகையில் உள்ளவர்கள் இச்சாற்றை துளி துளியாக அருந்தி உடல் நலம் பெறலாம்.
பாதாம் பால், தேன்
பாதாம் பருப்பை நன்கு பொடித்து அதனுடன் காய்ச்சிய பாலை ஊற்றி, அதில் தேன் கலந்து ஏலக்காய் தட்டிப்போட்டு காய்ச்சி ஆறவைத்து ஃப்ரிட்ஜ்ல் வைத்து குடிக்கலாம் கோடைக்கேற்ற சத்தான பானம் இது.
No comments:
Post a Comment