சைவத் தமிழர் பழக்க வழக்கங்களில் கடைப்பிடிக்கப் படும் சில சம்பிரதாயங்களும் அவற்றிற்கான விளக்கமும்:
1. வடக்கு பக்கம் தலை வைத்து படுக்க கூடாது என்பார்கள் - காரணம் என்ன?
இதை பற்றி அறிய, நாம் முதலில் காந்தம் (Magnet) பற்றியும் அதன் இயல்பு பற்றியும் அறிந்திருக்க வேண்டும்.
காந்தம், உலோகப் (இரும்பு (Iron) செப்பு போன்ற) பொருட்களையும், காந்த தன்மை கொண்ட பொருட்களையும் தன் வசம் இழுக்கும் வல்லமை கொண்டது என்பது நாம் சிறு வயதில் பாடசாலைகளில் செய்த ஆராய்ச்சியின் (Experiments) மூலம் அறிந்து கொண்டவைகளாகும்.
காந்ததிற்கு இரண்டு துருவங்கள் (Poles) உண்டு - வட துருவம் (North Pole) மற்றும் தென் துருவம் (South Pole). காந்தங்கள் இரண்டின் ஒத்த துருவங்கள் ஒன்றை ஒன்று விலகி கொள்ளும் (தள்ளும்)(Like Poles repel each other), எதிர் துருவங்கள் ஒன்றை ஒன்று ஈர்க்கும் (இழுக்கும்)(Unlike poles attract each other) தன்மைகளைக் கொண்டதாகும்.
எனவே, நாம் ஆய்வு கூடத்தில் (Laboratory) ஆய்வு முடிந்த பின் எதிர் துருவங்களை ஒன்றாக வைப்போம். அப்போது தான் அதன் காந்த ஈர்ப்பு தன்மை அப்படியே இருக்கும். ஒரே துருவங்களை ஒன்றாக வைத்தால் அதன் காந்த ஈர்ப்பு தன்மை சிதைந்துவிடும். மேலும், இயல்பாக இருக்கும் காந்தம் (Natural Magnets) தன்னுடன் இருக்கும் இரும்பு துண்டுகளை சிறு சிறு காந்த துண்டுகளாக மாற்றும் தன்மை கொண்டது.
பூமி எப்படி காந்தம் ஆனது?
சூரியனின் வெப்பத்தால் பூமியின் கிழக்கு பகுதி சூடாகிறது. அப்போது பூமியின் மேற்கு பகுதி குளிர்ந்து இருக்கிறது. இதனால் வலிமையான, நிலையான, வெப்பமான மின்னோட்டம் கிழக்கு திசையில் இருந்து மேற்கு திசைக்கு சூரியனால் உருவாக்கப்படுகிறது. எனவே மின்னோட்டத்தின் திசைக்கு வலப்புறம் இருக்கும் வடக்கு திசை, நேர் மின்னோட்டதையும் (Positive Current), இடதுபுறம் இருக்கும் தெற்கு திசை, எதிர் மின்னோட்டதையும் (Negative Current) பெறுகிறது. இதனால் பூமி ஒரு பெரிய காந்தம் ஆகிறது. அத்துடன் பூமி தன்னைத்தானே சுற்றுவதனாலும் காந்த சக்தியைப் பெறுகின்றது.
மனிதன் எப்படி காந்தப் பொருள் ஆனான்?
மனித உடலில் ஓடும் ரத்தம் வெள்ளை அணு, சிவப்பு அணு மற்றும் பல ரசாயன பொருட்களை கொண்டது. இதில் சிவப்பு அணுவில் இரும்பு சத்து உள்ளது. இந்த சிவப்பு அணுவின் காரணமாக மனிதன் பூமியின் ஈர்ப்பு தன்மைக்கு உள்ளாகிறான்.
எப்படி தூங்க வேண்டும்?
பூமிக்கு இரண்டு துருவங்கள் உண்டு. வட துருவம் நேர் மின்னோட்டம் உடையது. தென் துருவம் எதிர் மின்னோட்டம் உடையது. இந்த மின்னோட்டம் வடக்கில் இருந்து தெற்கிற்கும், தெற்கில் இருந்து வடக்கிற்கும் செல்லும். அதே போல் மனிதனின் தலை நேர் மின்னோட்டம் கொண்டது. கால் எதிர் மின்னோட்டம் கொண்டது.
நாம் தெற்கு பக்கம் தலை வைத்து, வடக்கு பக்கம் கால் நீட்டி படுக்கும் போது, பூமியின் நேர் மின்னோட்டம் மனிதனின் எதிர் மின்னோட்டத்துடன் இருக்கும். காந்தத்தின் இயல்புப்படி மின்னோட்டம் சிராக இருக்கும்.
இதனால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். இதனை மாற்றி செய்யும் போது, நாம் பகல் முழுவதும் உட்கார்ந்து, நடந்து மற்றும் பல வேலைகள் செய்து சேர்த்து வைத்த சக்தி சீர்குலைந்துவிடும்.
எனவே தெற்கில் தலை வைத்து படுப்பது உத்தமம்.
அதனால் போலும் இறந்தவர்களுடைய பூதவுடலையும் தெற்கே தலைவைத்து படுக்க வைப்பார்கள்.
வாசலுக்கு கால் நீட்டக் கூடாது. ஏன்?
வீட்டு வாசல் புனிதமானது. அதனால்தான் வீட்டு வாசல் முற்றத்தில் கோலம் போடுகிறார்கள். வாசலில் மாவிலை கட்டி புனிதப்படுத்துகிறார்கள். வீட்டு வாசல் அசுத்தமாகவும், கவனிப்பாரற்றும் இருக்குமாயின் வீட்டில் மகிழ்ச்சியையும், மங்களத்தையும் தரவல்ல சீதேவி வீட்டினுள் புக மாட்டாள் என்பது சைவத் தமிழர் பண்பாட்டில் வந்த கூற்று. வீடும், அதன் வாசலும் எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். அப்போதுதான் சீதேவி வீட்டில் குடி கொள்வாள். சீதேவி வரும் வாசலை (பாதை) நோக்கி கால் நீட்டினால் சீதேவி தன் வருகையை வீட்டார் விரும்பவில்லை என கருதி சீதேவி திரும்பிச் சென்று விடுவாள் என்பதனால்தான் வீட்டு வாசக்கு கால் நீட்டக் கூடாது என்றார்கள். வீட்டிற்னுள் சீதேவி வராவிட்டால் மூதேவி குடி கொள்வாள் என்பது ஐதீகம். மூதேவி வீட்டினுள் குடிகொண்டால் மகிழ்ச்சி குன்றும். துன்பம் பெருகும்.
வீட்டு வாசலில் மாவிலை கட்டுவதால் புனிதமாகின்றது. மாவிலையை தேவர்கள் ஆக ஆவகணம் செய்வது சைவவ மரபு. இங்கே தேவர்கள் தம்மை வரவேற்க காத்திருக்கிறார்கள் என்பதன் அடையாளமாகவே மாவிலை வாசலில் மாவிலை கட்டப்பெறுகின்றது. மாவிலை கட்டும் போது மிகவும் அவதானம் தேவை. மாவிலையை முன்பக்கம் வளைது க்தொங்க விடுவது தேவர்கள் தலை வணங்கி வரவேற்பதாகவும், மாவிலையை பின்பக்கம் வளைத்து தொங்க விடுவது தேவர்கள் சீதேவியின் வரவை விரும்பவில்லை என கருதுவதாக பொருள் பெறும் என சைவ நூல்கள் விளக்கமளித்துள்ளன.
No comments:
Post a Comment