Tuesday, February 28, 2012
திருமலையில் பக்தர்கள் சேவை செய்யலாம்
மதுரை:மதுரை ஸ்ரீ வாரி சேவை சார்பில், திருப்பதி திருமலை பக்தர்களுக்கு, சேவை செய்ய விருப்பமுள்ள கல்லூரி மாணவர்கள் முதல் 58 வயதுக்குட்பட்டவர்கள் பங்கேற்கலாம். வைகுண்டம் காம்ப்ளக்ஸில் தரிசனத்திற்கு காத்திருக்கும் பக்தர்களுக்கு, தேவஸ்தானம் சார்பில் அளிக்கப்படும் உணவுகளை வினியோகிப்பது, காவல் துறைக்கு உதவுவது, பூக்களை பறிப்பது, மாலை தொடுப்பது, லட்டு தயாரிப்பதில் உதவுவது, பக்தர்களை ஒழுங்குபடுத்துவது போன்ற, விருப்பமான சேவையை தேர்ந்தெடுத்து செய்யலாம். மார்ச் மூன்றாம் வாரத்தில், ஒருவார சேவைக்காக, மதுரையில்இருந்து திருமலைக்கு பக்தர்கள் அழைத்துச் செல்லப்படுகின்றனர். ஒரு நாளைக்கு ஐது மணிநேரம் சேவை செய்ய வேண்டும். கடைசிநாளில், சுவாமி சிறப்பு தரிசனத்திற்கு அழைத்துச் செல்லப்படுவர். சேவை நாட்களில் உணவு, தங்குமிடம் இலவசம். மேலும் தகவல்களுக்கு, குழுத் தலைவர் கிரிதரனை, 94433 94308ல் தொடர்பு கொள்ளலாம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment