காற்றினிலே... வரும் கீதம்
காற்றினிலே வரும் கீதம்
காற்றினிலே வரும் கீதம்
கண்கள் பனித்திடப்
பொங்கும் கீதம்
கல்லும் கனியும் கீதம்
காற்றினிலே வரும் கீதம்
பட்ட மரங்கள் தளிர்க்கும் கீதம்
பண்ணொளி பொங்கும் கீதம்
காட்டு விலங்கும்
கேட்டே மயங்கும்
மதுர மோகன கீதம்
நெஞ்சினிலே நெஞ்சினில்
இன்பக் கனலை எழுப்பி
நினைவழிக்கும் கீதம்
காற்றினிலே வரும் கீதம்
சுனை வண்டுடன்
சோலைக் குயிலும்
மனம் குவிந்திடவும்
வான வெளிதனில்
தாரா கணங்கள்
தயங்கி நின்றிடவும்
ஆ என் சொல்வேன்
மாயக் கண்ணன்
வேய்ங்குழல் பொழி கீதம்
காற்றினிலே வரும் கீதம்
நிலா மலர்ந்த
இரவினில் தென்றல்
உலாவிடும் நதியில்
நீல நிறத்து
பாலகன் ஒருவன்
குழல் ஊதி நின்றான்
காலமெல்லாம் காலமெல்லாம்
அவன் காதலை எண்ணி
உருகுமோ என் உள்ளம்
காற்றினிலே வரும் கீதம்
அமரர் கல்கி அவர்களால் இயற்றப்பட்டு, "பாரத ரத்னா", எம்.எஸ். அவர்களால் பாடப்பட்ட காலத்தால் அழியாத பாடல், பக்த மீரா திரைப்படம் ( 1945). உண்மையான பக்தமீராவை நமக்கு மட்டுமன்றி இந்தியா முழுதும் அறிமுகம் செய்தவர் திருமதி எம்.எஸ். அவர்கள் என்றால் அது மிகையாகாது.
பக்த மீரா:
ராஜ பரம்பரையில் பிறந்த மீரா, தன்னுடைய குழந்தைப் பருவத்தில் தாயை இழந்து, பாட்டனாரின் அரவணைப்பில் மீரா வளர்ந்தாள். சிறுவயதில், தாத்தா பகவான கிருஷ்ணரின் புகழ் பாட்டை ஊட்டி வளர்த்ததால், அவள் கிருஷ்ண பரமாத்மாவை அதிகமாக நேசிக்கத் தொடங்கினாள். சித்தூரை ஆண்ட மகாராஜா போஜ்ராஜ் என்பவருக்கு மீராவை மணமுடித்த போதும்,பகவான் கிருஷ்ண பரமாத்மாவை மீரா கணவராக ஏற்ராள். கணவனின் மறைவுக்கு பின்னர், சித்தூரை ஆண்ட சகோதரன் விக்ரமாதித்தனின் கோபம் மற்றும் சதிச்செயல் பக்தமீராவிடம் பலிக்கவில்லை.!
ஒரு முறை விஷப்பால் அமிர்தமாகவும், நல்ல பாம்பு கூடை, மலர்க் கூடையாகவும் மாறிய அதிசயம் நிகழ்ந்தது.இத்தகைய தொல்லைகளைக் கொடுத்த சகோதரனை மன்னித்து, ப்க்தமீரா பிருந்தாவனம் சென்று,மகான் ஜீவ்கோஸ்வாமியை சந்தித்தார்.! அதன் மூலம் பகவான் க்ருஷ்ணணை வழிபடும் முறைகளை அறிந்து, துறவரம் பூண்டு, த்வாரகை சென்றார். பக்தமீரா, கிருஷ்ணரை புகழ்ந்து பல பாடல்களைப் பாடினார். அப்படி பாடிக் கொண்டிருந்த சமயத்தில் திடீரென்று மீரா துவாரகையில் உள்ள கிருஷ்ணனோடு கலந்தாள். கிருஷ்ணரையே கணவராக எண்ணிய மீராவின் வாழ்க்கைச் சரித்திரம் என்றும் நம்முடைய மனத்தில் ஆழமாக பதிந்திருக்கிறது என்று சொல்லலாம். இன்றுடன், தெய்வமாக வனங்கப்படும் "பக்தமீரா", இறைவனுடன் கலந்து, அவ்வுலகம் சென்று 445 வருடங்கள் ஆகியுள்ளன என்ற தகவலுடன் இனிய காலை வணக்கம் நட்புகளே
No comments:
Post a Comment