Friday, March 16, 2012

2012 - 2013 ‌பொது ‌நி‌தி‌நிலை அ‌றி‌க்கை

ஃபிரிட்ஜ், ஏசி (குளிர்சாதனப் பெட்டி) மீதான வரி 30 விழுக்காடாக உயர்வு.

பீடி, சிகரெட் மீதான வரி உயர்த்தப்படுகிறது.

பான் பராக் போன்ற பொருட்கள் மீதான வரி உயர்வு.

இறக்குமதி செய்யப்படும் சைக்கிள்களுக்கு இறக்குமதி வரி 30 விழுக்காடாக உயர்வு.

ஆயத்த ஆடைகள் மீதான வரி உயர்த்தப்படுகிறது.

-----------------

தங்கம், பிளாட்டினம் ‌மீதான இறக்குமதி வரி உயர்த்தப்படுகிறது.

தங்கக் கட்டி, தங்க நாணயம் ‌மீதான இறக்குமதி வரி 4 விழுக்காடாக உயர்வு.

மறு சுழற்சி தங்கத்தின் ‌மீதான இறக்குமதி வ‌ரி 3 விழுக்காடாக உயர்வு.

-------------

LED, LCD இறக்குமதி வரி ரத்து செய்யப்படுகிறது.

LED விளக்குகளுக்கான இறக்குமதி வரி குறைக்கப்படுகிறது.

நிலக்கரி இறக்குமதிக்கான வரி நீக்கம்.

--------------

சொகுசுக் கார் உற்பத்தி வரி 10 விழுக்காட்டில் இருந்து 12 விழுக்காடாக உயர்வு.

பெரிய வகைக் கார் உற்பத்தி வரி 27 விழுக்காடாக உயர்வு.

சுரங்கப் பணிகளுக்காக இறக்குமதி செய்யப்படும் கருவிகளுக்கு இறக்குமதி வரி குறைப்பு.

சாலைப் பணிகளுக்கு இறக்குமதி செய்யப்படும் கருவிகளுக்கு வரி குறைக்கப்படுகிறது.

-----------------

உள்ளாட்சி, அரசுத் துறை வழங்கும் சேவைகளுக்கு வரி விதிப்பு கிடையாது.

பள்ளி, கல்லூரி, தொழில் கல்வி பணிகளுக்கு சேவை விரி இல்லை.

சாலை, நீர் வழி, போக்குவரத்துப் பணிகளுக்கு சேவை வரி இல்லை.

வேளாண், கால்நடைத் துறை பணிகளுக்கும் சேவை வரி கிடையாது.

திரைத்துறைக்கும் சேவை வரி கிடையாது.

சுங்க வரி விதிப்பில் மாற்றம் இல்லை.

வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வரும் முதலீட்டில் ஓராண்டிற்கு வரி கிடையாது.

---------------

மொ‌த்த வருவா‌ய் ரூ.10 ல‌ட்ச‌த்து 77,312 கோடி.

மொத்தச் செலவு ரூ.14 லட்சத்து 90 ஆயிரம் கோடியாக உள்ளது.

வ‌‌ரி வருவா‌ய் ரூ.7 ல‌ட்ச‌த்து 71,071 கோடி. இதர வருவா‌ய் ரூ.1 ல‌ட்ச‌த்து 64,614 கோடி.

திட்டங்களுக்காக ரூ.5 லட்சத்து 21 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு.

-----------

நிறுவனங்களுக்கான வருமான வரி விதிப்பில் மாற்றம் இல்லை.

பங்கு பரிவர்தனைகளுக்கான வரி வதிப்பு குறைப்பு

---------------

வருமான வரி உச்ச வரம்பு உயர்வு


தனி நபர் வருமான வரி உச்ச வரம்பு ரூ.2 லட்சமாக உயர்த்தப்படுகிறது.

ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை 10 விழுக்காடு வருமான வரி வசூலிக்கப்படும்.

ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை 20 விழுக்காடு வருமான வரி வசூலிக்கப்படும்.

ரூ.10 லட்சத்திற்கு மேல் 30 விழுக்காடு வருமான வரி வசூலிக்கப்படும்.


-------------

எண்ணெய் நிறுவனங்களுக்கு மானியம் வழங்குவதால் ஆண்டிற்கு ரூ.49,000 கோடி இழப்பு ஏற்படுகிறது.

கல்விக் கடன் வழங்க கல்விக் கடன் உத்தரவாத நிறுவனம் அமைக்க முடிவு.

----------------

விமானத் துறையில் 49 விழுக்காடு அந்நிய முதலீட்டை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அந்நிய நேரடி முதலீட்டை 51 விழுக்காடாக அதிகரிக்க மாநிலங்களுடன் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும்.

------------

கறுப்பு பணம் குறித்த வெள்ளை அறிக்கை நடப்புக் கூட்டத் தொடரிலேயே தாக்கல் செய்யப்படும்.

நாட்டின் பாதுகாப்பிற்கு ரூ.1 லட்சத்து 95 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.

குழந்தைகள் மேம்பாட்டிற்கு ரூ.15,850 கோடி ஒதுக்கீடு.

----------


தனியார் விமாள நிறுவனங்கள் அயல்நாடுகளில் இருந்து நேரடியாக எரிபொருளை இறக்குமதி செய்ய அனுமதி.

தனியார் பங்களிப்பு மூலம் ரூ.25 லட்சம் கோடி கிடைக்கும் என எதிர்பார்ப்பு.

-----------

சுய உதவிக் குழுக்களுக்கு மேலும் ரூ.200 கோடி ஒதுக்கீடு.

மாற்றுத் திறனாளிகளின் ஓய்வூதியம் ரூ.300 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

ஊரக குடிநீர்த் திட்டத்தை மேம்படுத்த ரூ.14,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

சமூகப் பாதுகாப்பை மேம்படுத்த ரூ.8,447 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

-------------

3 லட்சம் வரை கடன் வாங்கும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 7 விழுக்காடு வரை வட்டி.

வாங்கிய கடன் குறித்த நேரத்தில் செலுத்தினார் 4 விழுக்காடு மட்டுமே வட்டி வசூலிக்கப்படும்.

கிராமப்புற வேலை வாய்ப்புத் திட்டங்களுக்கு ரூ.24,000 ஒதுக்கீடு.

கிராமப்புற அடிப்படைக் கட்டமைப்பை மேம்படுத்த ரூ.20,000 கோடி ஒதுக்கீடு.

தேசிய ஊரக சுகாதரத்துறையை மேம்படுத்துவதற்கு ரூ.20,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

---------------

வரும் நிதியாண்டில் ரூ.30,000 கோடிக்கு அரசுத் துறைப் பங்குகளை விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

வரி விலக்குடன் கூடிய உள்கட்டமைப்புப் பத்திரங்கள் வெளியீடு ரூ.60,000 கோடியாக உயர்வு.

கிராம வங்கிகளுக்கு மறு கடன் வழங்க நபார்டு வங்கிக்கு ரூ.10,000 அளிக்கப்படும்.

----------

மராட்டிய மாநிலத்தில் ரூ.70 கோடியில் புதிய விசைத்தறிப் பூங்கா அமைக்கப்படும்.

வேளாண் கடன் இலக்கு ரூ.5,75,000 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நாட்டுக்குத் தேவையான யூரியாவை 5 ஆண்டுகளில் இந்தியாவே தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு சிட்பி மூலம் 5,000 கோடி நிதி வழங்கப்படும்.

வேளாண் பொருட்கள் சேமிப்புக் கிடங்குகளை அதிகரிக்கத் திட்டம்.

----------------

பள்ளி மாணவர்களுக்கான சத்துணவிற்கு ரூ.11,937 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஊரகப் பகுதி குடிநீர் மேம்பாட்டிற்கு ரூ.14,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஊரகப் பகுதிகளில் வீட்டுக் கடன் திட்ட நிதிக்கு ரூ.400 கோடியாக அதிகரிப்பு.

நீர்ப்பாசன வளர்ச்சிக்கு ரூ.300 கோடி ஒதுக்கீடு.

------------


விமான நிறுவனங்கள் ரூ.5,000 கோடி வரை அயல்நாட்டுக் கடன் வாங்க அனுமதி.

விமானத்துறை செயல்பாட்டை மேம்படுத்த ரூ.5,000 ஒதுக்கப்படும்.

-----------


வீட்டுக்கடன் வட்டிக்கு அளிக்கப்பட்டுவரும் 1 விழுக்காடு மானியம் மேலும் ஒரு வருடத்திற்கு நீட்டிக்கப்படும்.

ஆந்திரா, ஜார்க்கண்டில் கைத்தறிப் பூங்காக்கள் அமைக்கத் திட்டம்.

மேற்கு மாநிலங்களில் வேளாண்மையை மேம்படுத்த ரூ.1,000 கோடி ஒதுக்கீடு.

-----------

கிராமப்புற வீட்டு வசதி திட்டங்களுக்கு ரூ.4,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

12வது ஐந்தாண்டுத் திட்டத்தில் உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.50 லட்சம் கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

-------------

சரக்கு மற்றும் சேவை வரி வரும் ஆகஸ்ட் மாதம் முதல் நடைமுறைக்கு வருகிறது.

மானியங்களில் முறைகேடுகளைத் தவிர்க்க புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும்.

---------------

வரும் நிதியாண்டில் 8,800 கி.மீட்டருக்கு தேசிய நெடுஞ்சாலை அமைக்கத் திட்டம்.

ஊரக வங்கிகளை பலப்படுத்த திட்டம்.

மின் உற்பத்திக்கு நிலக்கரி பற்றாக்குறையே பெரும் பிரச்சனையாக உள்ளது.

அடிப்படை கட்டமைப்புப் பணிகளை மேம்படுத்த நிதி திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

------------

ராஜீவ் காந்தி பெயரில் புதிய வரிச் சேமிப்புத் திட்டம் துவங்கப்படும்.

பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யும் சிறு முதலீட்டாளர்களுக்கு வரி விலக்கு.

-------------

அரசு வங்கிகளின் மூலதனத்தை அதிகரிக்க 15,888 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

5 இலக்குகளை அடிப்படையாக வைத்து திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளது.

ஏற்றுமதி வளர்ச்சியின் காரணமாக அந்நியச் செலாவணி உயர்வு கண்டுள்ளது.

அடிப்படை கட்டமைப்புகளில் தனியாரைச் சேர்க்க முடிவு.

----------------

கச்சா எண்ணெய் விலை உயர்வு பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கிறது.

வரி வசூல் குறைவால் நிதி பாற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

செலவினத்தைக் குறைத்து நிதி பற்றாக்குறையை சமாளிக்க அரசு நடவடிக்கை எடுக்கும்.

உணவுப் பொருள் உற்பத்தி, விநியோகப் பிரச்சனையால் பண வீக்கம் ஏற்பட்டுள்ளது.

-------------




ரூ.50,000 வரை பங்குகளில் முதலீடு செய்பவர்களுக்கு 50 விழுக்காடு வரி விலக்கு அளிக்கப்படும்.

கடன் பத்திரங்களில் அந்நிய முதலீட்டிற்கு அனுமதி.

குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டைப் போக்கத் திட்டம்.

----------------

பணவீக்க விகிதம் வரும் நிதியாண்டில் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உர மானியத்தை நேரடியாக உழவர்களுக்கு வழங்கத் திட்டம்.

சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் மானியத்தையும் நேரடியாக வழங்க திட்டம்.

பொதுத்துறை நிறுவனங்கள் நிதியை தாங்களே கையாள்வதற்கு கூடுதல் அதிகாரம்.


-----------------


வேளாண் வளர்ச்சி 2.5 விழுக்காடு வளர்ச்சி.

தொழில்துறை 3.9 விழுக்காடு வளர்ச்சி. சேவை துறை 9.4 விழுக்காடு வளர்ச்சி.

ஏற்றுமதி 23 விழுக்காடு வளரும் என்ற நம்பிக்கை உள்ளது.
வரிச் சலுகை மானியங்களால் நிதி கையிருப்பு குறைந்து வருகிறது.

விநியோக நிர்வாகத்தை மேம்படுத்துவது அவசியம்.

---------------

பொது வா‌ழ்‌வி‌ல் ஊழலை ஒ‌ழி‌க்க அரசு உறு‌தி பூ‌ண்டு‌ள்ளது.

உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்ற முழு மானியம் வழங்கப்படும்.

வேளாண்மை, விசைத்துறை, போக்குவரத்துறையை மேம்படுத்த திட்டங்கள் தீட்டப்படும்.

மின்சாரம், நிலக்கரி, சிமெண்ட் உள்ளிட்ட பொருட்களில் போதுமான வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது.

உலகப் பொருளாதாரப் பிரச்சனையால் அதிக பாதிப்பு ஏற்பட்ட போதிலும், இந்தியா மீட்சி கண்டுள்ளது.

கருப்புப் பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்.

---------------

உள்நாட்டு உற்பத்தி 6.9 விழுக்காடாக உள்ளது. வரும் நிதியாண்டில் 7.6 விழுக்காடாக இருக்கும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வேளாண் துறை வளர்ச்சியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் இந்தியாவின் பொருளாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார மீட்சி ஆண்டாக இந்த ஆண்டு அமையும்.

----------------

2012 -13 ஆ‌ம் ஆ‌ண்டு‌‌க்கான 81வது பொது ‌நி‌தி‌நிலை அ‌றி‌க்கை ‌நி‌தியமை‌ச்ச‌ர் ‌பிரணா‌‌‌ப் முக‌ர்‌ஜி நாடாளும‌ன்ற‌த்‌தி‌ல் இ‌ன்று காலை 11 ம‌ணி‌க்கு த‌ா‌க்க‌ல் செ‌ய்‌தா‌ர்.

நி‌தி‌‌நிலை அ‌றி‌க்கை‌யி‌ல் இட‌ம் பெ‌ற்று‌ள்ள ‌‌சிற‌ப்ப‌ம்ச‌ங்க‌ள் வருமாறு :

‌ஐ‌ந்து இல‌‌க்குளை அடி‌ப்படையாக கொ‌ண்டு ‌தி‌ட்ட‌ங்க‌ள் வகு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன.

பண‌‌வீ‌க்க‌‌ம் ‌வி‌கித‌ம் அடு‌த்தா‌ண்டு குறையு‌ம்.

12வது ஐ‌ந்தா‌ண்டு ‌தி‌ட்ட‌த்‌தி‌ன் முத‌ல் ஆ‌ண்டி‌ல் காலடி வை‌த்து‌ள்ளோ‌ம்.

ஐ‌ந்து இல‌‌க்குகளை அடி‌ப்படையாக கொண‌்டு ‌தி‌ட்ட‌ங்‌களை வகு‌த்து‌ள்ளோ‌ம்.

நில‌க்க‌‌ரி, ‌மி‌ன்சார‌ம், ‌சிமெ‌ண்‌ட் உ‌ள்‌ளி‌‌ட்ட துறைக‌ளி‌ல் ‌மீ‌ட்‌சி ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது.

பா‌தி‌ப்பு இரு‌ந்த ‌போ‌து‌ம் பொருளாதா வள‌ர்‌ச்‌சி‌யி‌ல் இ‌ந்‌தியா மு‌ன்‌னிலை

உலக பொருளாதார‌ம் ‌பி‌ன்னடைவதா‌ல் இ‌ந்‌தியாவு‌க்கு‌ம் பா‌தி‌ப்பு.

2012 -13 ஆ‌ம் ஆ‌‌ண்டி‌ற்கான ‌‌நி‌தி‌நிலையை அ‌றி‌க்கையை ‌நி‌தியமை‌ச்ச‌ர் ‌பிரணா‌ப் முக‌ர்‌ஜி இ‌ன்று தா‌க்க‌ல் செ‌ய்தபோது எ‌தி‌ர்‌க்க‌ட்‌சி உறு‌ப்‌பின‌ர்க‌ள் அம‌ளி‌யி‌ல் ஈடுப‌ட்டன‌ர்.

‌பி‌ன்ன‌ர் சபாநாயக‌ர் ‌மீராகுமா‌‌‌ர் கே‌ட்‌டு‌க் கொ‌ண்ட‌தி‌ன்பே‌ரி‌ல் எ‌தி‌ர்‌க்க‌ட்‌சி உறு‌ப்‌பின‌ர்க‌ள் அமை‌தியானா‌ர்க‌ள். இதையடு‌த்து ‌பிரணா‌ப் முக‌ர்‌ஜி ‌நி‌தி‌‌நிலை அ‌றி‌க்கையை படி‌த்தா‌ர்.

No comments:

Post a Comment