Wednesday, October 5, 2011

mars-is-full-water-molecules-scientists

வாஷிங்டன்: செவ்வாய் கிரகத்தில் முந்தைய ஆராய்ச்சிகளில் கண்டுபிடிக்கப்பட்ட தண்ணீரின் அளவை காட்டிலும், அதிகளவிலான நீர் மூலக்கூறுகள் இருப்பதை புதிய ஆராய்ச்சிகள் மூலம் விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர்.

ஐரோப்பிய விண்வெளி நிலையத்தின் செவ்வாய் எக்ஸ்பிரஸ் குழு மற்றும் சர்வதேச விண்வெளி விஞ்ஞானிகள் குழுவின் உதவியுடன் அமெரிக்காவின் நாசா வி்ஞ்ஞானிகள் சிவப்பு கிரகமான செவ்வாய் கிரகம் குறித்து ஆராய்ந்து வருகின்றனர்.

கடந்த காலங்களில் நடந்த ஆராய்ச்சிகளில் செவ்வாய் கிரகத்தில் ஆங்காங்கே தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளது என மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், தற்போதைய ஆராய்ச்சி மூலம் செவ்வாய் கிரகத்தில், பூமியில் உள்ளதை போல மேகங்கள் போன்ற வாயு நிலை நீர் இருப்பதாக தெரியவந்துள்ளது. அதாவது எதிர்பார்த்ததை விட 100 மடங்கு அதிக அளவிலான தண்ணீர் மூலக்கூறுகள் இருப்பது தெரிய வந்துள்ளது.

ஆனால் இந்த நீரை தரையில் பார்க்க முடியாது. இருப்பதும் தெரியாது. வாயு நிலை உள்ள இந்த நீர் துகள்கள் தூசி மற்றும் காற்றில் கலந்துள்ள மற்ற துகள்களோடு கலந்து செவ்வாய் கிரகத்தை சுற்றி வருகிறது. இது கிரகத்தில் சில இடங்களில் பனிப்பாறையாக உள்ளது.

காற்றில் தொடர்ந்து தூசு சுற்றிக் கொண்டிருப்பதால், அந்த நீர் துகள்கள் நிலத்தை அடைய முடியாமல் உள்ளது. இதனால் செவ்வாய் கிரகத்தில் பார்க்கும் போது தண்ணீர் இல்லாவிட்டாலும், கிரகத்தின் எல்லா இடங்களிலும் நீர் நிறைந்து காணப்படுகிறது.

No comments:

Post a Comment