Tuesday, June 7, 2011
திருப்பதி கோவில் ரகசியங்கள் tirumala tirupati balaji
திருப்பதிஸ்ரீனிவாசபெருமாளுக்குதிருவேங்கடமுடையான்,ஏழுமலையான்,மலகுனிய நின்ற பெருமாள் ,வெறுங்கை வேடன்,புனுகு காப்பு மேனியன் என பல பெயர்கள் உண்டு! பொதுவாகவ்றே கோவிந்தன்,ஏழுமலையான்.,சீனிவாசன் என்று பக்தர்களின் கோஷம் மலையில் எதிரொலிக்கிறது.
தாளப்பாக்கம் அன்னமய்யா 32,000 பாடல்கள் பாடியிருக்கின்றார்.1491 ஆம் ஆண்டு மசிண்டி வேங்கட்த்துறைவார் என்பவரால் வேங்கடாச்சால மஆத்மியம் எழுதப்பட்ட்து.வராஹ புராணம் ,பத்ம புராணம் ,கருட புராணம்,ப்ரம்மாண்ட புராணம்,மார்க்கெண்டேய புராணம் போன்ற பல புராணங்களில் இருந்து எடுத்தாண்ட தொகுப்பாகவே வேங்கடாச்சல மஹாத்மியம் விளங்குகிறது.
இந்த திருப்பதி திருமலை,திருச்சானூர் கோயில்களில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்வெட்டுக்கள் உள்ளன..பல்லவ,சோழ,பாண்டிய,சாளுவ வம்ச மன்னர் காலத்து கல்வெட்டுக்கள் மற்றும் கிருஷ்ண தேவராயர் காலத்து கல்வெட்டு,அச்சுதராயர்,சதாசிவராயர் காலத்து கல்வெட்டு,பல்லவ மன்ன்ன் ந்ந்திவர்மன் கல்வெட்டு(இவரது கல்வெட்டு பார்த்தசாரதி கோயிலிலும் உள்ளது)இதில் தமிழ் கல்வெட்டுகள் அதிகம் காணப்பெறுகின்றன.
கி.பி 1583 ஆம் ஆண்டு கல்வெட்டில் அபிஷேகப்பொருட்களை பற்றி விரிவான விவரங்கள் உள்ளன்.பெருமாளது அபிஷேகப்பொருளாக குங்குமப்பூ,புனுகு,வாசனை திரவியங்கள்,அரைத்த சந்தனம்,போன்றவை தங்க வட்டிகளில் வைக்கப்பட்டு இவருக்கு திருமஞ்சனம் செய்விக்கப்படுகிறது.ஹைதராபாத் நிஜாமிடம் தான் கோடிக்கணக்கான ஆபரணங்கள் இருப்பதாக சொல்கிறார்கள்.இவரிடம் அதைவிட பலகோடி மிகுதியாக ஆபரணங்கள் திருமலையில் உள்ளன.
பெருமாளுக்கு வெள்ளிக்கிழமை திருமஞ்சனம் முடித்து 21 முழ நீளமுள்ள பட்டு பீதாம்பரம் அணிவிக்கப்படுகிறது.ஒருமுறை அணிவிக்கப்படும் பட்டு வஸ்திரம் மறுமுறை அணிவிக்கப்படுவதில்லை.இவர் திருமணத்திற்காக குபேரனுக்கு எழுதிய கடன்பத்திரம் இப்போதும் உள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.இது வடமொழியில் உள்ளது.இதை எழுத சொன்னவர் பிரம்மா.எழுதி கொடுத்தவர் ஸ்ரீனிவாசன்.எழுதி வாங்கியவர் குபேரன்.
கலியுகத்தில் விளம்பி வருசத்தில் வைசாக மாசத்தில் வளர்பிறையில் ஏழாவது நாளன்று கடன் வாங்கியதாகவும்,ராமர் முத்திரையுடன் கூடிய பதினாலு லட்சம் பணத்தை பெற்றதாகவும் ஆயிரம் வருட்த்தில் திருப்பி கொடுப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
முதல் சாட்சி நான்முகன்.இரண்டாவது சாட்சி சிவபெருமான்.மூன்றாவது சாட்சி அரச மரம்.இவ்வாறு ஸ்ரீனிவாசப்பெருமாள் தன் கையால் எழுதி கொடுத்த்தாக சொல்லப்படுகிறது.தெலுங்கு வருஷப்பிறப்பன்றும் தீபாவளி நாளிலும் ஆனி மாதமும் நடக்கும் அரசு தர்பார் மிகவும் விஷேசமானதாகும்.
அதிகாலை தோமாலை சேவை ஆரம்பமாகும் முன்,அன்றாட வரவு செலவு கணக்குகள் பெருமாளின் முன்பு படிக்கப்படுகிறது.ஆங்கிலேயரான சர் தாமஸ் மன்றோ தன் பெயரில் ஒரு நைவேதிய கட்டளையை இங்கு ஏற்படுத்திய வைத்துள்ளார்.(நீங்கள் நினைப்பது சரிதான்..அவர் வேரு யாருமல்ல..சென்னை அண்ணா சாலையில் குதிரை மீது அமர்ந்தவாறு சிலையாக நிற்கும் சர் தாமஸ் மன்றோ தான்)
மூலவரை போன்ற திருமேனி கி.பி.966 ஆம் ஆண்டு வெள்ளியால் செய்யப்பட்ட்து.சக்தி விடங்கன் என்ற மன்ன்னின் அரசி காடவன் பெருந்தேவி சில ஆபரணங்களையும் அளித்துள்ளார்.இந்த தகவல் கல்வெட்டாக கோயிலின் வடக்கு பிரகாரத்தில் 16 தமிழ்வரி எழுத்துக்களால் செதுக்கப்பட்டுள்ளது...
இத்திருக்கோயில் முதலில் அரசர்களாலும் ,பின் ஆங்கிலேயர்களாலும் பின் மஹந்தகளாலும் ,பரம்பரை மிராசு தீக்ஷிதர்களாலும்,பின் திருமலை திருப்பதி தேவஸ்தான கமிட்டியாலும் நிர்வகிக்கப்பட்டு வருகிறது...
திருப்பதி கோயிலின் கதை நீண்ட வரலாறு கொண்ட்து..ஒரு சந்தர்ப்பத்தில் அரசனால் அங்குள்ள அர்ச்சகர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர்....அது எதற்காக..விரைவில் எழுதுகிறேன்...
-ராணி வார இதழில் ஸ்வாமி கண்ணன் பட்டாச்சார்யார் எழுதியது.
Subscribe to:
Post Comments (Atom)
அலர்மேலு மங்கை தொண்டைமான் மகள் தானே
ReplyDelete