Friday, June 24, 2011

சாம்சங் இன்ப்யூஸ் 4ஜி- எச்டிசி இவோ 4ஜி ஸ்மார்ட்போன்களின் ஒப்பீடு



ஸ்மார்ட்போன் சந்தையில் முன்னணி நிறுவனங்களுக்கான சந்தைப்போட்டி முடிவுக்கு வருவதாக தெரியவில்லை. அந்த அளவுக்கு புதிய அம்சத்துடன் ஸ்மார்ட்போனை ஒரு நிறுவனம் வெளியிட்டால், அடுத்த வாரமே அதே புதிய அம்சங்களுடன் புதிய ஸ்மார்ட்போனை மற்றொரு நிறுவனம் அறிமுகம் செய்துவிடுகிறது.

ஸ்மார்ட்போன் சந்தையில் நோக்கியா, சாம்சங், எச்டிசி மற்றும் சோனி எரிக்சன் ஆகிய நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த நிலையில், சந்தையில் ஒரே அம்சங்கள் கொண்ட சாம்சங் இன்ப்யூஸ் 4ஜி மற்றும் எச்டிசி இவோ 4ஜி ஆகிய ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்கள் பற்றிய ஓர் ஒப்பீட்டு அலசல்.

திரை:

இரண்டு போன்களும் தொடுதிரை (டச்ஸ்கிரீன்) மூலம் இயக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இரண்டும் அகன்ற திரையை கொண்டிருந்தாலும், சிறிய வித்தியாசம் உள்ளது. சாம்சங் இன்ப்யூஸ் 4ஜியில் 4.3 இஞ்ச் திரையும், எச்டிசி இவோ 4ஜியில் 4.5 திரையும் கொண்டிருக்கிறது.

பொழுதுபோக்கு அம்சங்கள்:

இரண்டு போன்களும் அனைத்து நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய பொழுதுபோக்கு அம்சங்களை கொண்டிருக்கின்றன. ரெக்கார்டிங், ப்ளேபேக், எம்பி3, ஏஏசி+ உள்ளிட்ட அனைத்து மியூசிக் பார்மெட்டுகளையும் இயக்கலாம்.

ஆடியோ:

ஆனால், சாம்சங் இன்ப்யூசை விட எச்டிசியின் ஸ்பீக்கர்கள் துல்லியமான ஒலியை வழங்குகிறது. தவிர, இரண்டு போன்களிலும், ஹோம்தியேட்டருடன் இணைத்துக்கொள்ளும் வகையில் ஆடியோ ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

கேமரா:

இரண்டு போன்களும் ஒரே கான்பியூகிரேஷன் கொண்ட 8 மெகாபிக்செல் கேமரா பொருத்தப்பட்டுள்ளன. எச்டிசி இவோ 4ஜியில் எல்இடி பிளாஷ் வசதி உள்ளது. ஆனால், சாம்சங் இன்ப்யூஸ் 4ஜியில் எல்இடி பிளாஷ் இல்லை.

தவிர, இரண்டு போன்களிலும் முகப்பு கேமரா இல்லை. இதனால், வீடியோ காலிங் வசதியை பெறமுடியாது என்பது மிகப்பெரிய மைனஸ் பாயிண்ட்.

தகவல் பரிமாற்றம்:

இரண்டு போன்களிலும் புளூடூத், வை-பை கனெக்ஷன் மற்றும் கம்ப்யூட்டருடன் இணைப்பதற்கான வசதிகளை கொண்டுள்ளன. இரண்டு போன்களிலும் நவீன தொழில்நுட்பங்கள் அப்லோடு செய்யப்பட்டுள்ளதால், அதிவேக தகவல் பரிமாற்ற வசதியை பெற முடிகிறது.

ஆப்பரேட்டிங் சிஸ்டம்:

இரண்டு போன்களிலும் ஆன்ட்ராய்டு 2.2 ப்ரோயோ ஓ.எஸ் அப்லோடு செய்யப்பட்டுள்ளது.

இன்டர்நெட் வசதி:

எச்டிசி இவோவில் வைமேக்ஸ் இன்டர்நெட் கனெக்ட்டிவிட்டியை பெற முடியும். அதேவேளை, சாம்சங் இன்ப்யூஸ் 4ஜியில் உள்ள ஜிபிஆர்எஸ், எட்ஜ், எச்எஸ்டிபிஏ மற்றும் எச்எஸ்பிஏ வசதிகள் எச்டிசி இவோ 4ஜியில் இல்லை.

இரண்டு போன்களும் ஒரே விலையில் விற்பனை செய்யப்படுவதால், தேர்வு செய்வதில் சிரமம் இருந்தாலும், வசதிகளை வைத்து பார்க்கும்போது எச்டிசி இவோ 4ஜி மனதை தன்பக்கம் இழுக்கிறது.

No comments:

Post a Comment