ஊட்டி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர்க்கண்காட்சி இன்று தொடங்குகிறது.
கோடை விழா
ஊட்டியில் கோடை விழா கடந்த 7ம்தேதி ரோஜா கார்டனில் ‘ரோஜா கண்காட்சி’ மூலம் துவங்கியது. அதனை அடுத்து கடந்த 14,15ம்தேதிகளில் கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சி நடைபெற்றது. ஊட்டி சீசனின் மிக முக்கிய நிகழ்வான மலர்க்கண்காட்சிஇன்று முதல் துவங்க இருக்கிறது. 22ம் தேதிவரை இந்த கண்காட்சி நடைபெற இருக்கிறது.
பூக்களால் உலகக் கோப்பை
இந்திய அணியின் உலகக்கோப்பை வெற்றியை நினைவூட்டும் வகையில் பூக்களால் ஆன பிரம்மாண்டமான உலகக்கோப்பை அலங்காரம் இந்த ஆண்டு மலர்க்கண்காட்சியின் சிறப்பம்சம் ஆகும். இது தவிர, பிரம்மாண்டமான கங்காரு ஒன்றின் உருவத்தையும் தாவரவியல் பூங்காவில் உருவாக்கி வருவார்கள். இந்த ஆண்டு கண்காட்சிக்கென பிரத்யேகமாக 15 ஆயிரம் தொட்டிகளில் செடிகள் நடவு செய்யப்பட்டு வளர்க்கப்பட்டு வந்தன.
சிறப்பு ஏற்பாடுகள்
மலர்க்கண்காட்சிக்கு இந்தியா முழுவதிலும் இருந்து சுற்றுலாப்பயணிகள் வருவார்கள் என்பதால் ஏராளமான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் அடிப்படை வசதிகள் ஆகியவை உள்ளூர் நிர்வாகத்தினரால் சிறப்பாகச் செய்யப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment