சென்னை: அட்சய திருதியை முன்னிட்டு, இந்த நிதியாண்டில் 20 ஆயிரம் கிலோ தங்கத்தை இறக்குமதி செய்ய அரகசுத் துறை நிறுவனமான கனிம மற்றும் உலோக விற்பனைக் கழகம் (எம்எம்டிசி) முடிவு செய்துள்ளது.
இது குறித்து அந்த நிறுவனத்தின் தலைவர் சஞ்ஜீவ் பாத்ரா கூறியதாவது:
"இந்தியாவில் தங்கத்தின் தேவை எப்போதும் அதிகமாகவே உள்ளது. கடந்த நிதியாண்டில் மொத்தம் 73,900 கிலோ தங்கம் இறக்குமதி செய்யப்பட்டது. இதில் எம்எம்டிசி மட்டும் 19 ஆயிரம் கிலோ தங்கத்தை இறக்குமதி செய்தது.
இந்தியாவில் தங்கத்தின் சில்லறை விற்பனை விலை வேகமாக அதிகரித்து வருகிறது. வரும் மே 16-ம் தேதி அட்சய திருதியை வருவதால் தங்கத்தின் விற்பனையும், விலையும் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது திருமண சீசன் என்பதால் தங்கத்தின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது", என்றார்.
இந்தியாவில் எம்எம்டிசி-தான் அதிக அளவு தங்கத்தை இறக்குமதி செய்யும் அரசுத் துறை நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment