பசுபிக் சமுத்திரத்தினை விட அத்திலாண்டிக் சமுத்திரம் உவர்ப்பானதாகும்.
சிறுத்தைகள் தமது வேகத்தினை 2 செக்கன்களில் 0 இல் இருந்து 70 கிலோமீற்றர் வேகத்திற்கு விரைவுபடுத்தும் இயலுமை கொண்டதாகும்.
1666ம் ஆண்டு லண்டன் நகரில் ஏற்பட்ட மிகப்பெரிய தீவிபத்தொன்றின் காரணமாக லண்டன் நகரின் அரைவாசிக்கும் அதிகமான பகுதி எரிந்து நாசமாகியதாம். ஆனால் இத்தீவிபத்தின் காரணமாக 6 பொதுமக்களே பாதிப்புக்குள்ளாகினர்.
90%க்கும் அதிகமான நிக்கரகுவா மக்கள் ரோமன் கத்தோலிக்கத்தினையே பின்பற்றுகின்றனர்.
வெனிசுலாவில் அமைந்துள்ள ஏஞ்சல் நீர்வீழ்ச்சியானது , நயாகாரா நீர்வீழ்ச்சியினை விட அண்ணளவாக16மடங்கு உயரமானதாகும்.
நயாகாரா நீர்வீழ்ச்சி
ஏஞ்சல் நீர்வீழ்ச்சி
கரீபியன் பிராந்தியத்தில் புகையிரதப் பாதைகளை கொண்டுள்ள ஒரே தீவு கியூபா தேசம்தான்.
பிரிட்டன் மகாராணியாரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலம் பக்கிங்ஹாம் மாளிகையாகும். பக்கிங்ஹாம் மாளிகையானது 602 அறைகளைக் கொண்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டிலுள்ள ஒரு இடமானது “ Y” என்ற பெயரிலேயே அழைக்கப்படுகின்றது.
ஐக்கிய அமெரிக்காவின் மிகப்பெரிய மாநிலம் அலஸ்கா மாநிலமாகும். அலஸ்கா மாநிலமானது, ரஷ்யாவிடமிருந்து ஏக்கருக்கு 2சதங்கள் வீதம் செலுத்தி அமெரிக்காவினால் கொள்வனவு செய்யப்பட்டதாம்.
No comments:
Post a Comment