சிங்கப்பூர்: பேட்டரியில் இயங்கும் எலக்ட்ரிக் காரை விரைவில் அறிமுகப்படுத்த இருப்பதாக ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சுற்றுச்சூழல் மாசுபடுதல்,எரிபொருள் பற்றாக்குறை மற்றும் விலையேற்றம் உள்ளிட்ட காரணங்களால் எதிர்காலத்தில் பேட்டரியில் இயங்கும் எலக்ட்ரிக் கார்களுக்கு அதிக கிராக்கி ஏற்படும் என்று கருதப்படுகிறது.இதனால்,பல முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்கள் எலக்ட்ரிக் கார் தயாரிப்பு பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன.
இந்த பட்டியலில் சொகுசு கார் தயாரிப்புக்கு புகழ்பெற்ற ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனமும் இணைய உள்ளது.தனது எலக்ட்ரிக் காரை விரைவில் அறிமுகப்படுத்த இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கூறியதாவது:
"ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் புகழ்பெற்ற சொகுசு காரான ஃபான்டோம் மாடலை அடிப்படையாக கொண்டு புதிய 102EX எலக்ட்ரிக் கார் உருவாக்கப்பட்டுள்ளது.மாதிரி எலக்ட்ரிக் காரின் புகைப்படங்கள் விரைவில் வெளியிடப்படும்.
வரும் மார்ச் 1ந்தேதி துவங்கும் ஜெனிவா நகரி்ல் துவங்கும் கார் கண்காட்சியில்,எங்களது புதிய எலக்ட்ரிக் காரை காட்சிக்கு வைக்க முடிவு செய்துள்ளோம்.இந்த ஆண்டு இறுதி வரை புதிய எலக்ட்ரிக் கார் சோதனை ஓட்டம் நடத்தி பார்க்கப்படும்.எலக்ட்ரிக் காரை முழு அளவில் உற்பத்தியை துவங்குவது குறித்து முடிவு செய்யவில்லை,"என்று கூறினார்.
No comments:
Post a Comment