Friday, February 18, 2011
இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் டாப் 6 கார்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் முதலிடம் இரண்டாமிடம் மற்றும் நான்காம் இடங்களை மாருதி நிறுவனத் தயாரிப்புகளே பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆல்டோ
அதிகம் விற்பனையாகும் கார்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது மாருதி ஆல்டா. 2009-ம் ஆண்டில் மட்டும் 212568 ஆல்டோ கார்கள் விறபனையாகியுள்ளன. இந்தியாவில் ஒரு ஆண்டில் 2 லட்சத்துக்கும் அதிகமாக விற்கப்பட்ட ஒரே கார் ஆல்டோதான்.
நடுத்தர வர்க்கம் மற்றும் சிறிய குடும்பத்தினரின் முதல் விருப்பம் ஆல்டோதான்.
பார்க்கிங் பிரச்சினை இல்லாத காரும் இதுவே என்கிறது சர்வே.
வேகன் ஆர்
இரண்டாம் இடம் மாருதியின் இன்னொரு தயாரிப்பான வேகன் ஆருக்கு கிடைத்துள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் 134,768 கார்கள் இந்த மாடலில் விற்பனையாகியுள்ளன.
எல்பிஜியிலும் இயங்கும் வசதியை மாருதி நிறுவனமே செய்து தருவதால், குடும்பத்தினர் விரும்பி வாங்கும் காராக மாறியுள்ளது.
டாடா இன்டிகா
111256 கார்கள் விற்பனையாகி கடந்த ஆண்டில் 3 வது இடம் பெற்றுள்ளது டாடா இன்டிகா.
முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரான முதல்கார் என்ற பெருமை இன்டிகாவுக்கு உண்டு. இந்தப் பிரிவில் மேலும் மேலும் புதிய மாடல்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது டாடா.
மாருதி ஸ்விப்ட்
நவீன இளைஞர்கள், இளம் தொழிலதிபர்கள் விரும்பி வாங்கும் காராக மாறியுள்ளது இந்த யுகத்தின் காராக வர்ணிக்கப்படும் ஸ்விப்ட். மாருதியின் நடுத்தரப் பிரிவு கார்களில் அதிகம் விற்பனையாவது ஸ்விப்ட்தான்.
2009-ல் இதன் விற்பனை 110,071.
ஹூண்டாய் ஐ 10
106,095 கார்கள் விற்பனையானதன் மூலம் 2009-ல் அதிகம் விற்பனையான கார்கள் பட்டியலில் 5-ம் இடம் கிடைத்துள்ளது ஐ 10-க்கு.
மைலேஜ், வசதி, ஓட்டுவதற்கு இலகுவானது என பல சிறப்புகளைக் கொண்டுள்ளது ஐ10.
சான்ட்ரோ
ஹூண்டாய் சான்ட்ரோவுக்கு 6வது இடம் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு இதன் விற்பனை 91,478.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment