Friday, December 21, 2012

வெட்டை நோயைக் குணப்படுத்தும் சேப்பங்கிழங்கு. . .

கிழங்குவகைகளுள் அதிகமான மாவுச்சத்தைக் கொண்டவை, சேப்பங்கிழங்குகள் தான், உருளைக் கிழங்கைவிட எளிதில் வேகக்கூடியவை; செரிமானம் ஆகக்கூடியவை. உருளைக் கிழங்கைவிட, இனிப்புச் சுவை அதிகம் கொண்டவை.

சேப்பங்கிழங்கில் வெண்மை, கருமை என இரு நிறவகை உண்டு. ஐரோப்பாவில் 13 வகைகள் உள்ளன.

100 கிராம் சேப்பங்கிழங்கில் கிடைக்கும் கலோரி அளவு 97 ஆகும். அதில் மாவுச்சத்து 21 சதவிகிதமும், புரதம் சதவிகிதமும், ஈரப்பதம் 73 சதவிகிதமும் உள்ளன.

குழந்தைகள் அறிவுடனும் உடல் உறுதியுடனும் வளர….
சேப்பங்கிழங்கு வெட்டை நோயைக் குணமாக்கும். இருசாராரின் மலட்டுத் தன்மையையும் நீக்கும். இரத்த விருத்தியை அதிகரிக்கச் செய்யும். காய்ச்சல் நேரத்திலோ, தொடர்ந்து மருந்து சாப்பிட்டு வரும் காலத்திலோ இக்கிழங்கைச் சாப்பிட்டால் அது மருந்தை முரிக்கும். வாதம், இருமல் ஆகியன உள்ளவர்களும் தவிரிக்க வேண்டிய கிழங்கு இது. மற்றபடி எல்லா வயதுக்காரர்களும் நனகு சாப்பிட வேண்டிய கிழங்குகளுள் இதவும் ஒன்றாகும். கண்பார்வைத் திறனை அதிகரிக்கும்.

ஹாவாயிலும் மற்ற பசிபிக் தீவுகளிலும் சேப்பங்கிழங்கும், சேப்பங்கீரையும் முக்கிய உணவாக உள்ளன. தென்னமெரிக்காவில் டாஸீன் என்று இதற்குப் பெயர்.

வேகவைத்த கிழங்கைக்கொண்டு சூப்பு, குழம்பு, கேக் முதலியன தயாரிக்கிறார்கள். இக்கிழங்கிலிருந்து குழந்தைகளுக்கான சத்துணவுப் பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன. குழந்தைகளுக்கான மற்ற சத்துணவுப் பொருள்களில் முக்கிய மூலப் பொருளாகவும் இக்கிழங்கு மாவு பயன்படுகிறது. வளரும் குழந்தைகளுக்குத் தேவையான அளவு பாஸ்பரஸ், கால்சியம், இரும்பு, வைட்டமின் ‘ஏ’, வைட்டமின் ‘பி’ போன்றவையும் இக்கிழங்கில் அதிக அளவு உள்ளன. இதனால் குழந்தைகள் புத்திக்கூர்மையுள்ளவர்களாய் வளர்கின்றனர்.

மேற்கண்ட நன்மைகளை இக்கிழங்கை வேகவைத்துப் பொரியல் செய்து சாப்பிட்டாலே பெறலாம். சேப்பங்கிழங்கும், கீரையும் சற்றுக் கசப்பாய் இருக்கும். இதைப் போக்கப் புளிசேர்த்துச் சமைக்க வேண்டும்.

கிழங்கைப் போலவே கீரையும் சத்து மிகுந்தது. 100 கிராம் சேப்பங்கீரையில் 56 கலோரி வெப்பம் உடலுக்குக் கிடைக்கிறது. ஆனால், வைட்டமின் ‘ஏ’, வைட்டமின் ‘சி’ முதலியவை அதிகமாகவும், மாவுச்சத்து குறைவாகவும் சேப்பங்கீரையில் உள்ளன.

சேப்பங்கீரையைத் தண்டுடன் சேர்த்துச் சமைத்தால் சத்துகள் அதிகமாய்க் கிடைக்கும். வாடிய கீரையையும் சமைத்துண்ணலாம். இது இக்கீரைக்கு மட்டுமே உள்ள சிறப்பம்சமாகும். வளரும் குழந்தைகளுக்குக் கால்சியமும், பாஸ்பரஸும் மிக அவசியமானவையாகும். 100 கிராம் உலர்ந்த சேப்பங்கீரையில் 1500 மில்லிகிராம் கால்சியமும், 308 மில்லிகிராம் பாஸ்பரஸும் கிடைக்கின்றன.

சேப்பங்கிழங்கின் இலைகள் முக்கோணவடிவில் பெரிய அளவில் இருக்கும்: பார்க்க மிகவும் அழகானவையாகவும் இருக்கும்.

சிறந்த உணவான சேப்பங்கீரையை வேகவைத்த தண்ணீரில் நெய் கலந்து குடித்தால் வயிற்றுவலி, மலச்சிக்கல் முதலியவை உடனே குணமாகும்.

சேப்ப இலையின் சாறு வெட்டுக்காயங்களை உடனே ஆற்றும். வெட்டுக்காயத்தின்
மீது சில துளிகள் விட்டால் போதும்.

மூல நோய்க்கு மிகச்சிறந்த உணவு மருந்து, இக்கீரை. காதுவலி, காதில் சீழ் வடிதல் முதலியவை குணமாக சேப்பங்கீரைச் சாற்றினை துளியளவு காதில் விட்டால் போதும்! காதுவலி குறையும் குணமாகும். காதில் உள்ள சீழ் நீங்கும்; அதனால் ஏற்பட்ட புண்ணும் உடனே குணமாகும்.

பூச்சிகள் கடித்த இடத்தில் இக்கீரைச் சாற்றைப் பூசினால் நஞ்சு இறங்கிவிடும்; வலியும் குறையும்.

புளி சேர்த்துச் சமைத்துண்பதால் சேப்பங்கீரை இரத்தக் கடுப்பை குணமாக்குகிறது. தாது விருத்தியை அதிகரித்து குழந்தைப் பேறு கிடைக்கவும் வழி செய்யப்பயன்படுகிறது.

சேப்பங்கிழங்கின் தாயகம் ஐரோப்பாவும் மேற்கு ஆசியாவும் ஆகும்.

சேப்பங்கிழங்கின் மாவுச்சத்து, கீரையின் மருத்துவக்குணங்கள் முதலியவற்றிற்காக இந்தியா உட்பட பல நாடுகள் சேப்பங்கிழங்கு உற்பத்தியில் அதிகம் ஈடுபாடு காட்டிவருகின்றன.

வீட்டுத் தோட்டங்களில் சேப்பங்கீரையை உணவிற்காக வளர்ப்பது இந்தியாவின் அதிகரித்துள்ளது. இது சிறந்த மூலிகையாகும்.

மூலநோய் குணமாகவும், மூளைவளர்ச்சி அதிகரிக்கவும் சேப்பங்கிழங்கு, சேப்பங்கீரை முதலியவற்றை உணவில் அடிக்கடி இடம் பெறச் செய்யுங்கள்.
புகைப்படம்: வெட்டை நோயைக் குணப்படுத்தும் சேப்பங்கிழங்கு. . . 

No comments:

Post a Comment