Saturday, December 31, 2011

2011 - Important News

ஜனவரி

1 - நடிகை மீனாவுக்கு சென்னை மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது.

2 - கவிஞர் வைரமுத்துவின் ஆயிரம் பாடல்கள் நூல் வெளியீடு சென்னையில் நடந்த்து. முதல்வர் கருணாநிதி வெளியிட்டார். முதல் பிரதிநிதியை நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் பெற்றுக் கொண்டனர்.

10 - டிவி மற்றும் சினிமா காமெடி நடிகை ஷோபனா தற்கொலை செய்து கொண்டார்.

- வில்லன் நடிகர் வேலு தனக்குத் தொல்லை தருவதாக மலையாளத்திலிருந்து தமிழுக்கு நடிக்க வந்தவரான நடிகை பாக்யாஞ்சலி போலீஸில் புகார் கொடுத்தார்.

14 - இசைஞானி இளையராஜாவுக்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது வழங்கப்படுவதாக முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.

27 - பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியனுக்கு பத்மபூஷன் விருதை மத்திய அரசு அறிவித்தது.

28 -நடிகர்கள் ஆர்யா, தமன்னா, அனுஷ்கா உள்ளிட்டோருக்கு கலைமாமணி விருதை தமிழக அரசு அறிவித்தது.

29 - நித்தியானந்தாவுடன் அந்தரங்க கோலத்தில் இருந்தது தொடர்பாக பெங்களூர் கோர்ட்டில் திடீரென ஆஜராகி ரகசிய வாக்குமூலம் கொடுத்தார் நடிகை ரஞ்சிதா.

பிப்ரவரி

6 - நடிகர் எஸ்.வி.சேகர், காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

20 - பிரபல பின்னணிப் பாடகர் மலேசியா வாசுதேவன் மரணமடைந்தார்.

மார்ச்

23 - தனது கணவரிடமிருந்து விவாகரத்து கேட்டு மலையாள நடிகை ஜோதிர்மயி கோர்ட்டில் வழகக்குத் தொடர்ந்தார்.

24 - எஸ்.பி.பாலசுப்ரமணியன், நடிகை தபு, நடிகர் ஜெயராம் உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டன.

26 - சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு தருவதாக நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் அறிவித்தது.

30 - வேலைக்காரப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் இந்தி நடிகர் ஷைனி அகுஜாவுக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது மும்பை கோர்ட்.

ஏப்ரல்

3 - திமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய சென்ற நடிகர் வடிவேல் மீது கமுதி பஸ் நிலையத்தில் கல்வீசித் தாக்குதல் நடந்தது.

6 - நடிகை சுஜாதா சென்னையில் மரணமடைந்தார்.

12 - ஐ.நா. அமைப்பின் இளைஞர் தூதராக நடிகர் விக்ரம் தேர்வானார்.

13 - சபரிமலையில் ஐயப்பன் சிலையைத் தொட்டதாக கன்னட நடிகை ஜெயமாலா மீது தொடரப்பட்ட வழக்கை கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

14 - துபாயில் நீச்சல்குளத்தில் மூழ்கி பின்னணிப் பாடகி சித்ராவின் மன வளம் குன்றிய மகள் மரணமடைந்தார்.

22 - பச்சைப் புரட்சி எனும் புதிய அமைப்பைத் தொடங்கினார் நடிகர் விக்ரம். இந்த அமைப்பு மூலம் தமிழகம் முழுவதும் முதல்கட்டமாக 1 லட்சம் மரங்களை நட அவர் திட்டமிட்டுள்ளார்.

- சர்வதேச அளவிலான திரைப்பட வர்த்தகத்தை நம் வசப்படுத்த தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா உலகம் இணைந்து செயல்பட வேண்டும்', என்றார் நடிகர் கமல்ஹாஸன்.

- பிபிசியில் நிருபராக பணியாற்றி வரும் கேரளாவைச் சேர்ந்த சுப்ரியா மேனனுக்கும், மலையாள நடிகர் பிருத்விராஜுக்கும் இன்று படு ரகசிய்மாக திருமணம் நடந்தது.

29 - இயக்குநர் கே.பாலச்சந்தருக்கு தாதா சாஹேப் பால்கே விருது வழங்கப்பட்டது.

- ரஜினியின் ராணா படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பு இன்று காலை ஏவிஎம் ஸ்டுடியோவில் தொடங்கியது.

- ராணா படப்பிடிப்பு தொடங்கியதுமே ரஜினிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு சென்னை இசபெல்லா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

- தமிழக சினிமா ரசிகர்களை பெரும் வியப்பில் ஆழ்த்தும் வகையில் தனது ரசிகர் நற்பணி இயக்கத்தை கூண்டோடு கலைப்பதாக நடிகர் அஜீத் அறிவித்தார்.

- என் குடும்பத்தினர் திரைப்படத்துறையில் ஈடுபட்டால் ஏன் தான் இந்த நெஞ்செரிச்சலோ? என்று முதல்வர் கருணாநிதி ஒரு அறிக்கையில் கேட்டார்.

மே

14 - உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ரஜினிகாந்த், இசபெல்லா மருத்துவமனையிலிருந்து போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

17 - சுவாசக் கோளாறு, குடல் நோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த்துக்கு முழுமையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

- நடிகர் வடிவேலுவின் பண்ணை வீடு தாக்கப்பட்டது.

19 - 58வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன. நடிகர் தனுஷுக்கு ஆடுகளம் படத்தில் நடித்ததற்கா சிறந்த நடிகர் விருதும், தென் மேற்குப் பருவக் காற்று படத்தில் நடித்த சரண்யா பொன்வண்ணனுக்கு சிறந்த நடிகைக்கான விருதும் கிடைத்தது. தமிழ்த் திரைப்படங்கள் மொத்தமாக 14 விருதுகளை அள்ளின. அதில் ஆடுகளம் படத்திற்கு மட்டும் 6 விருதுகள் கிடைத்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. தென் மேற்குப் பருவக் காற்று 3 விருதுகள் பெற்றது. எந்திரன் படத்துக்கும் 2 விருதுகள் தரப்பட்டன.

27 - சிறுநீரக பாதிப்புக்காக சிங்கப்பூரில் சிகிச்சை பெறுவதற்காக நடிகர் ரஜினிகாந்த்தும், அவரது குடும்பத்தினரும் சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றனர்.

ஜூன்

3 - நடிகர் கார்த்திக்கும், ரஞ்சனிக்கும் கோவையில் திருமணம் நடந்தது.

- இயக்குநர் செல்வராகவனுக்கு சென்னையில் இரண்டாவது திருமணம் நடந்தது. மணமகள் பெயர் கீதாஞ்சலி.

15 - சிங்கப்பூர் மருத்துவமனையிலிருந்து நடிகர் ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். முதல்வர் ஜெயலலிதாவை போனில் தொடர்பு கொண்டு தமிழக மக்களை காப்பாற்றியதாக கூறினார். அடுத்து கருணாநிதியைத் தொடர்பு கொண்டு தேர்தல் தோல்விக்கு ஆறுதல் கூறினார்.

ஜூலை

7 - பிரபுதேவாவுக்கும், அவரது மனைவி ரமலத்துக்கும் சென்னை குடும்ப நல கோர்ட் விவாகரத்து வழங்கியது.

13 - 46 நாள் சிங்கப்பூர் பயணத்தை முடித்துக் கொண்டு நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னை திரும்பினார்.அவருக்கு விமான நிலையத்தில் பெரும் திரளான ரசிகர்கள் கூடி வரவேற்பு அளித்தனர்.

25 - பழம்பெரும் தமிழ் நடிகர் ரவிச்சந்திரன் மரணமடைந்தார்.

26 - தமிழில் பெயர் வைத்தால் மட்டும் போதாது, வன்முறை, ஆபாசம் போன்றவையும் இல்லாமல் இருந்தால்தான் தமிழ்ப் படங்களுக்கு வரிச் சலுகை அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

27 - நடிகை வனிதாவின் 2வது கணவர் ஆனந்தராஜு, வனிதாவை விட்டு பிரிந்தார்.

28 - அம்புலி படத்தின் நாயகன் அஜய் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டார்.

ஆகஸ்ட்

1 - மோசடியாக தனது நிலத்தை அபகரித்து விட்டார் நடிகர் வடிவேலு என்று ஓய்வு பெற்ற வங்கிஅதிகாரி பழனியப்பன் சென்னை போலீஸில் புகார் கொடுத்தார்.

8 - நடிகை நயனதாரா, பிரபுதேவாவை மணப்பதற்காக இந்து மதத்திற்கு மாறியதாக செய்திகள் வெளியாகின.

14- பிரபல இந்தி நடிகர் ஷம்மி கபூர் மரணமடைந்தார்.

25 - ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருந்த அன்னா ஹஸாரேவை நேரில் சென்று நடிகர் விஜய் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

செப்டம்பர்

1 - இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவுக்கு, திருப்பதியில் 2வது திருமணம் நடந்தது.

9 - பழம்பெரும் நடிகை காந்திமதி புற்றுநோயால் மரணமடைந்தார்.

13 - ஸ்ரீபெரும்புதூர் அருகே பண்ணை வீட்டில் நடிகை விசித்ராவின் தந்தை முகமூடிக் கொள்ளையர்களால் படுகொலை செய்யப்பட்டார்.

15 - எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மகன் எஸ்.பி.சரண் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறி பரபரப்பு புகாரைக் கூறினார் கவர்ச்சி நடிகை சோனா.

21 - தனது மனைவி ஜமுன கலாதேவியை பாடலாசிரியர் சினேகன் அபகரித்துக் கொண்டதாக சென்னையைச் சேர்ந்த பிரபாகரன் என்ற என்ஜீனியர் போலீஸில் புகார் கொடுத்தார்.

29 - உடல் நல பாதிப்பிலிருந்து மீண்ட பின்னர் முதல் முறையாக எஸ்.பி.முத்துராமனுக்கு நடந்த பாராட்டு விழாவில் கலந்து கொண்டார் ரஜினிகாந்த்.

அக்டோபர்

20 - தனது மகன் தனக்கு சாப்பாடு போடாமல் புறக்கணிப்பதாக பழம்பெரும் காமெடி நடிகர் லூஸ் மோகன் போலீஸில் புகார் கொடுத்தார்.

27 - நடிகை மனோரமாவுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

31 - நடிகர் ஷக்திக்கும், ஸ்மிருதிக்கும் சென்னையில் திருமணம் நடந்தது.

நவம்பர்

1 - இசைஞானி இளையராஜாவின் மனைவி ஜீவா மரணமடைந்தார்.

- மனோரமாவுக்கு தலையில் ஆபரேஷன் நடத்தப்பட்டது.

7 - சிவாஜிகணேசன் பேரன் துஷ்யந்த்துக்கும், அபிராமிக்கும் திருமணம் நடந்தது.

16 - நடிகரும்,திமுக எம்.பியுமான ரித்தீஷ் குமார், நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

19 - பாலிவுட் நடிகை ஐஸ்வர் ராய்க்கு மும்பை மருத்துவமனையில் அழகான பெண் குழந்தை சுகப் பிரசவமாக பிறந்தது.

30 - சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத் தலைவராக நடிகை ராதிகா சரத்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

- ரூ 20 லட்சம் கடனுக்காக ரூ 1.5 கோடி சொத்துக்களை மிரட்டிப் பறித்ததாக தயாரிப்பாளர் தங்கராஜ் கொடுத்த புகாரின் பேரில், பிரபல விநியோகஸ்தர் மதுரை அன்பு என்கிற அன்புச்செழியன் கைது செய்யப்பட்டார்

டிசம்பர்

1 - இந்தி நடிகர் ஆமிர்கான் - கிரண் ராவ் தம்பதிக்கு வாடகைத் தாய் மூலம் அழகிய ஆண் குழந்தை பிறந்தது.

- பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரண் தேஜாவுக்கும் அப்பல்லோ மருத்துவமனை நிறுவனர் பிரதாப் சி ரெட்டியின் பேத்தி உபாஸனாவுக்கும் இன்று நிச்சயதார்த்தம் நடந்தது.

- 2-வது திருமணத்துக்கு வற்புறுத்தி நடிகை வைஷ்ணவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் நடிகர் தேவ் ஆனந்துக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டு கடுங்காவல் தண்டனைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

- பழம்பெரும் இயக்குநர் எல்லிஸ் ஆர்.டங்கன் காலத்தில் இருந்து திரைப்படங்களில் மிருகங்களுக்கு பயிற்சி அளிப்பவராக பணிபுரிந்த புலிக்குட்டி கோவிந்தராஜ் மரணமடைந்தார்.

- வாடகைக்கு எடுத்த காரை, திருப்பிக் கொடுக்காமல் 10 மாதங்களாக தன்னிடமே வைத்துக் கொண்டுள்ளார் என நடிகை புவனேஸ்வரி மீது போலீஸில் புகார் தரப்பட்டது.

- இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பு சார்பில் திரைப்படங்கள் சார்ந்த ஊடகம் மற்றும் தொழில்துறை மாநாடு சென்னையில் உள்ள லீராயல் மெரிடியன் ஓட்டலில் இன்று தொடங்கியது.

2- காசோலை மோசடி வழக்கில் தமிழ் நடிகை சொர்ணாவுக்கு விதிக்கப்பட்ட 3 மாத சிறைத்தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. அண்ணன் ஒரு கோவில், மூன்று முடிச்சு உள்பட பல தமிழ் படங்களில் நடித்தவர் நடிகை சொர்ணா.

- பிரபல திரைப்பட விநியோகஸ்தரான மதுரை அன்புச் செழியன் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

3 - நில அபக‌ரி‌ப்பு வழ‌க்‌கி‌ல் கைது செ‌ய்ய‌ப்ப‌ட நடிகரும், தி.மு.க. எ‌ம்.‌பி.யுமான ரித்தீஷ் குமார் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்

- பைனான்சியர் அசோக்குமாரிடம் காரை வாடகைக்கு எடுத்துக் கொண்டு அதை அவர் கேட்டபோது ஆள் வைத்துத் தான் தாக்கியதாக கூறப்படும் புகாரை நடிகை புவனேஸ்வரி மறுத்தார்.

- ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் குழந்தையின் படத்தை வெளியிட ரூ 5 கோடி தருவதாக இரு பத்திரிகைகள் அமிதாப் பச்சனிடம் பேரம் பேசின. ஆனாலும் குழந்தையின் படத்தை பிரசுரிக்க மறுத்துவிட்டதாக தெரிவித்தார் அமிதாப்.

- தற்கொலை செய்து கொண்ட சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்டுள்ள த டர்டி பிக்சர் படத்தை திரையிட பாகிஸ்தான் தடை விதித்தது.

4 - 88 வயதான பழம்பெரும் இந்தி நடிகர் தேவ் ஆனந்த் லண்டனில் மரணமடைந்தார். மாரடைப்பால் அவரது உயிர் பிரிந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

- உயிரே என்னோடு கலந்து விடு படத்தின் நாயகி அமலு, தன்னுடன் நடித்த ஹீரோவான டோனி என்கிற அந்தோணியை காவல் நிலையத்தில் தஞ்சமடைந்து கல்யாணம் செய்து கொண்டார்.

- பாகிஸ்தானின் சர்ச்சை நடிகை வீணா மாலிக் எப்எச்எம் இந்தியா இதழுக்காக அவர் முழு நீள நிர்வாண போஸ் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார். தனது இடது தோள்பட்டையில் ஐஎஸ்ஐ என்று பாகி்ஸ்தான் உளவு அமைப்பின் பெயரை முத்திரை குத்தியும் பரபரப்பை ஏற்படுத்தியது.

5 - தன்னுடைய ஆபாசப் படத்தை வெளியிட்டு தனது புகழுக்கு களங்கம் கற்பித்ததற்காக ரூ. 10 கோடி நஷ்ட ஈடு தர வேண்டும் என்று கோரி எப்எச்எம் இந்தியா இதழுக்கு பாகிஸ்தான் நடிகை வீணா மாலிக் நோட்டீஸ் அனுப்பினார்.

- முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையை தீர்க்கக் கோரி கேரள நடிகர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினர்.

- தனது பெயரை யாரும் படங்களுக்கு வைக்கக் கூடாது என்று நடிகர் ரஜினிகாந்த் அறிவுறுத்தியுள்ளதாக அவரது உதவியாளர் சுதாகர் அறிவித்தார்.

18 - சென்னையில் மகாத்மா காந்தி பற்றிய சினிமாவைப் பார்க்க வந்த அன்னா ஹஸாரேயைச் சந்தித்துப் பேசினார் நடிகர் அர்ஜூன்.

20 - விண்ணைத்தாண்டி வருவாய் படத்தின் இந்தி ரீமேக்கின் இசை வெளியீட்டு விழா ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால் எதிரே நடக்கவிருந்தது. ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு திடீரென தடை விதிக்கப்பட்டது.

- திருநெல்வேலியில் நடிகை பத்மப்ரியாவின் மலையாளப் படப்பிடிப்பு நடத்த தமிழ் இளைஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், படப்பிடிப்புக் குழு அங்கிருந்து வெளியேறியது.

21 - தி டர்ட்டி பிக்சர் படத்தில் ஆபாசமாக நடித்ததாக தன் மீது போடப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று நடிகை வித்யாபாலன் பதில் மனு தாக்கல் செய்தார்.

22 - கேரள மாநிலம் கருநாகப்பள்ளி அருகே கார் மோதியதில் மோட்டார் சைக்கிள் பயணி பலியான சம்பவம் தொடர்பாக மலையாள நடிகை சங்கீதா மோகன் கைது செய்யப்பட்டார்.

- சென்னையில் நடந்த சர்வதேச படவிழாவில் வாகை சூடவா, அழகர்சாமியின் குதிரை மற்றும் ஆடுகளம் படங்களுக்கு மொத்தம் ரூ.6 லட்சம் பரிசு வழங்கப்பட்டது.

23 - தமிழகத்தின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும், கண்டனத்தையும், குமுறலையும் சம்பாதித்த, தமிழக அரசால் திரையிட தடை விதிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய டேம் 999 படத்துக்கு இசைப் புயல் ஏ.ஆர். ரஹ்மான் முழு ஆதரவு தெரிவித்தார். இந்தப் படத்தின் ஒரு பாடலுக்காவது ஆஸ்கர் விருது கிடைக்க தான் கடவுளிடம் பிரார்த்தனை செய்வதாக அவர் கூறினார்.

24 - தான் நடிக்கும் படங்களிலெல்லாம் சாமி கும்பிடுபவர்களையும், வாஸ்து உளளிட்டவற்றை நம்புபவர்களையும், கடவுள் பக்தி உள்ளவர்களையும் சரமாரியாக விமர்சிக்கும், நக்கலடிக்கும், கிண்டலடிக்கும் காமெடி நடிகர் விவேக், திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலுக்குப் போய் சாமியை பய பக்தியுடன் வணங்கி விட்டு வந்தார்.

- தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான கருணா கோஷ்டி ஐரோப்பிய நாடுகளில் ஏற்பாடு செய்துள்ள புத்தாண்டு விழா கொண்டாட்டத்தில் பங்கேற்கவிருந்ததை ரத்து செய்துவிட்டதாக நடிகர் ஜீவா அறிவித்தார்.

25 - கேரளாவைச் சேர்ந்த மலபார் கோல்ட் நிறுவனத்தின் இசை நிகழ்ச்சியில் பங்கேற்காமல் புறக்கணிக்க வேண்டும் என்று கோரி இசைஞானி இளையராஜாவின் வீடு முன்பு பெரியார் தி.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தி கோரிக்கை மனு ஒன்றையும் அளித்தனர்.

- மே 17 இயக்கம் சார்பில் சென்னை மெரீனா கடற்கரையில் நேற்று பொதுக் கூட்டம் நடந்தது. இதில் இயக்குநர்கள் பாரதிராஜா, தங்கர்பச்சான், சேரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

- டேம் 999 படம் ஆஸ்கர் விருது பெற வாழ்த்தது தெரிவித்தது தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை குறித்து இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் விளக்கம் தெரிவித்தார். தனக்கு முல்லைப் பெரியாறு அணை விவகாரம் குறித்துத் தெரியாது என்றும் தவறாக கருத்து தெரிவித்திருந்தால் மன்னிப்பு கேட்பதாகவும் கூறினார் அவர்.

26 - சென்னை மெரீனா கடற்கரையில் அனுமதியில்லாமல் பொதுக்கூட்டம் நடத்தியதாக கூறி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இயக்குநர்கள் பாரதிராஜா, தங்கர்பச்சான், கவிஞர் தாமரை உள்ளிட்ட10 பேர் மீது திடீரென சென்னை போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

27 - வலுவான லோக்பால் மசோதா கோரி மும்பையில் உண்ணாவிரதம் மேற்கொண்ட சமூக ஆர்வலர் அன்னாஹசாரேவுக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு தெரிவித்தார்.

28 - கந்தா என்ற படத்தைத் தயாரித்த பழனிவேல் என்பவரின் மனைவி கல்பனாவுக்கு எதிராக தொடரப்பட்ட செக் மோசடி வழக்கில், அவரைக் கைது செய்ய சென்னை ஜார்ஜ்டவுன் கோர்ட் உத்தரவிட்டது.

- ரூ 6 லட்சம் பணத்துக்காக கொடுத்த காசோலைகள் பணமின்றி திரும்பிய வழக்கில் பிரபல இயக்குநர் சரணை கைது செய்ய சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

- ரஜினியை விமர்சித்துப் பேசிய காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் உருவப்படத்தை எதிர்த்து போராட்டம் நடத்தினர் வேலூர் மாவட்ட ரஜினி ரசிகர்கள்.

- பிரபல நடிகை பிரதியூஷா தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அவருடைய காதலருக்கு விதிக்கப்பட்ட கடுங்காவல் தண்டனையை 2 ஆண்டாக ஆந்திர உயர்நீதிமன்றம் குறைத்தது. ஆனால், அபராத தொகையை மட்டும் ஆயிரம் ரூபாயில் இருந்து ரூ.50 ஆயிரமாக அதிகரித்து உத்தரவிட்டது.

- பிரதமர் மன்மோகன் சிங். ஜப்பான் பிரதமர் யோசி கியோ நோடாவுக்கு டெல்லி ரேஸ்கோர்ஸ் ரோட்டில் உள்ள தனது வீட்டில் கொடுத்த விருந்து நிகழ்ச்சியில் கொலவெறி பாடலை எழுதிய தனுஷும் கலந்து கொண்டார்.

30 - இந்த ஆண்டில் முதல் முறையாக இன்று ஒரே நாளில் 13 திரைப்படங்கள் ரிலீஸாகின.

No comments:

Post a Comment