Monday, December 20, 2010

வசூலாகாத‌ கடன் மட்டும் ரூ.57,000 கோடி

சென்ற 2009-10-ஆம் நிதி ஆண்டில், பொதுத் துறை வங்கிகளின் வசூலாகாத நிகர கடன் ரூ.57,301 கோடியாக அதிகரித்துள்ளது. இது, இதற்கும் முந்தைய ஆண்டின் வசூலாகாத கடனை விட 30 சதவீதம் அதிகம் என மத்திய நிதித்துறை இணை அமைச்சர் நமோ நாராயண் மீனா தெரிவித்தார். சென்ற நிதி ஆண்டில், பொதுத் துறை வங்கிகள் வழங்கிய மொத்த கடனில், வசூலாகாத நிகர கடன் 2.27 சதவீதம் என்ற அளவில் உள்ளது. கடந்த 2008-09-ஆம் நிதி ஆண்டில், பொதுத் துறை வங்கிகளின் நிகர வசூலாகாத கடன் ரூ.44,039 கோடி என்ற அளவில் இருந்தது. இது, வழங்கிய மொத்த கடனில் 2.09 சதவீதமாகும். கடந்த 2007-08-ஆம் நிதி ஆண்டில், பொதுத் துறை வங்கிகளின் வசூலாகாத கடன் ரூ.39,749 கோடியாக இருந்தது என அமைச்சர் மேலும் கூறினார்.

Thanks To
tamilvanigam

No comments:

Post a Comment