Tuesday, December 14, 2010

கட்டுரை போட்டி அறிவிப்பு-தேர்தலில் பணச்செல்வாக்கு மற்றும் வன்முறையை தவிர்ப்பது எப்படி?

சென்னையை சேர்ந்த 'நந்தினி வாய்ஸ் பார் தி டிப்ரைவ்டு' என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு கீழ்க்கண்ட தலைப்பில் அகில இந்திய அளவில் கட்டுரை போட்டி நடத்துகிறது.

தலைப்பு: தேர்தலில் பணச்செல்வாக்கு மற்றும் வன்முறையை தவிர்ப்பது எப்படி?

கல்லூரி மாணவ மாணவியர்களை மேற்கூறிய பிரச்சனைகளைப் பற்றி ஆலோசிக்க ஊக்கப்படுத்தி அவர்களின் கருத்துக்களை வெளியிட வாய்ப்பளித்து, அவர்களின் பரிந்துரைகளை மத்திய அரசு மற்றும் தேர்தல் ஆணையம் தெரிந்து கொள்வதற்காக, நந்தினி வாய்ஸ் பார் தி டிப்ரைவ்டு கல்லூரி மாணவ.மாணவியருக்கு இந்த போட்டியை நடத்துகிறது.

இந்த போட்டியில் கலந்து கொள்ள விதிமுறைகள்

* இந்தியாவிலுள்ள அனைத்துக்கல்லூரி மாணவ மாணவியர்களும் இக்கட்டுரைப் போட்டியில் கலந்து கொள்ளலாம்.
* போட்டிக் கட்டுரையானது தமிழ், ஆங்கிலம்,இந்தி ஆகிய மொழிகளில் ஏதாவது ஒரு மொழியில் 1500 வார்த்தைகளுக்கு மிகாமல் எழுதப்பட வேண்டும்.
* கட்டுரைகள் மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பலாம்.
* பத்து சிறந்த கட்டுரைகளுக்கு பரிசு அளிக்கப்படும்.


போட்டிக்கட்டுரை கீழ்க்கண்ட முகவரிக்கு ஜனவரி 10 ஆம் திகதிக்குள் வந்து சேர வேண்டும் என்று இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

தொடர்புக்கு
என்.எஸ்.வெங்கட்ராமன், நிறுவனர்.
நந்தினி வாய்ஸ் பார் தி டிப்ரைவ்டு,
எம்.60-1, 4 வது குறுக்கு தெரு, பெசண்ட் நகர், சென்னை-600 090.
தொலைப்பேசி எண்: 044-2491 6037. 2446 1346

மின்அஞ்சல்: nsvenkatchennai@gmail.com
இணையதளம்: http://www.nandinivoice.org/


Thanks
Ananth
Green India Foundation

No comments:

Post a Comment