Tuesday, October 30, 2012

நோபல் பரிசு வாங்கிய ராமகிருஷ்ணன் !!!!!

நோபல் பரிசு வாங்கிய ராமகிருஷ்ணன் !!!!!

தமிழ்நாட்டில் உள்ள சிதம்பரத்தில் பிறந்த விஞ்ஞானி ராமகிருஷ்ணனுக்கு நோபல்பரிசு கிடைத்து உள்ளது. நோய் தடுப்பு மருந்து ஆராய்ச்சியில் மேற் கொண்ட புதியகண்டுபிடிப்புக்காக அவருக்கும், மேலும் 2 விஞ்ஞானிகளுக் க
ும் கூட்டாக இந்த பரிசுவழங்கப்பட்டு இருக்கிறது.

உலகிலேயே மிகப்பெரிய விருதாக கருதப்படுவது 'நோபல் பரிசு'.

ஐரோப்பா கண்டத்தில் உள்ள சுவீடன் நாட்டை சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரட் நோபல்நினைவாக ஆண்டுதோறும் இந்த பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இவர்தான் 'டைனமைட்'டை கண்டுபிடித்தவர்.

இலக்கியம், பொருளாதாரம், மருத்துவம், வேதியியல், இயற்பியல் ஆகியதுறைகளில் சாதனை படைத்தவர்களை 'ராயல் சுவீடன் அகாடமி' ஆண்டுதோறும்தேர்ந்து எடுத்து, நோபல் பரிசு வழங்கி கவுரவித்து வருகிறது.

நோபல் பரிசு ரூ.7 கோடி பரிசுத்தொகையை கொண்டது ஆகும்.

இந்த ஆண்டுக்கான (2009) நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே மருத்துவம், இயற்பியல்துறைகளுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

வேதியியல் துறைக்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த உயர்ந்த பரிசு தமிழ்நாட்டைச் சேர்ந்தஒருவருக்கு கிடைத்து உள்ளது.

இங்கிலாந்தில் வசிக்கும் 57 வயது தமிழரான விஞ்ஞானி வெங்கடராமன் ராமகிருஷ்ணனுக்கு 2009-ம்ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக 'ராயல் சுவீடன் அகாடமி' நேற்றுஅறிவித்தது. விஞ்ஞானி ராமகிருஷ்ணன் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரத்தில் பிறந்தவர்.

ராமகிருஷ்ணனுடன் அமெரிக்காவைச் சேர்ந்த தாமஸ் ஸ்டெயிட்ஸ் (வயது 69), இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்தஅடா யோனாத் ஆகியோர் வேதியியலுக்கான நோபல் பரிசை பகிர்ந்து கொண்டு உள்ளனர். அதாவதுவேதியியலுக்கான நோபல் பரிசை 3 பேரும் கூட்டாக பெறுகிறார்கள். இவர்களில் அடா யோனாத் பெண் ஆவார்.

நோய் எதிர்ப்பு (ஆன்டிபயாட்டிக்ஸ்) மருந்து தயாரிப்பதற்கு தேவையான வேதியியல் கண்டுபிடிப்புக்காகஇவர்களுக்கு இந்த விருது கிடைத்து உள்ளது. புரதச்சத்தை தரும் 'ரிபோசம்' என்ற வேதியியல் பொருள் பற்றிஇவர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சி நோய் எதிர்ப்பு மருந்து தயாரிக்க பெரிதும் உதவியாக இருக்கும்.

இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் நுண்ணணு உயிரியல் ஆய்வகத்தில் (எம்.ஆர்.சி.) 3 விஞ்ஞானிகளும் கூட்டாகஆய்வு மேற்கொண்டனர். இந்த குழுவுக்கு மூத்த விஞ்ஞானியான ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

தாமஸ் ஸ்டெயிட்ஸ் அமெரிக்காவில் உள்ள யேல் பல்கலைக்கழகத்தில் நுண்ணணு உயிரி இயற்பியல் மற்றும்உயிரி வேதியியல் துறையில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். பெண் விஞ்ஞானியான அடா யோனாத்இஸ்ரேலில் ரெகோவோட்டில் உள்ள வெய்ஸ்மான் விஞ்ஞான நிறுவனத்தில் உயிரியல் பேராசிரியராக இருந்துவருகிறார்.

தனக்கு நோபல் பரிசு கிடைத்து இருப்பது பற்றிய தகவல் கிடைத்ததும் விஞ்ஞானி ராமகிருஷ்ணன் மிகுந்தமகிழ்ச்சி அடைந்தார்.

அவர் கூறுகையில்; ஆராய்ச்சியில் என்னுடன் இணைந்து பணியாற்றிய விஞ்ஞானிகள், டாக்டர்கள்,மாணவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நான் மிகுந்த கடன்பட்டிருக்கிறேன் என்றார். கேம்பிரிட்ஜ் நுண்ணணுஉயிரியல் ஆய்வகம், உதா பல்கலைக்கழகம் ஆகியவை தங்கள் ஆராய்ச்சிக்கு பெரிதும் உதவியாகஇருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

நண்பர்களால் வெங்கி என்று அன்புடன் அழைக்கப்படும் விஞ்ஞானி வெங்கடராமன் ராமகிருஷ்ணன் 1952-ம்ஆண்டு சிதம்பரத்தில் பிறந்தார். 1971-ம் ஆண்டு குஜராத் மாநிலம் பரோடா பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி பட்டம்பெற்ற இவர், பின்னர் அமெரிக்கா சென்று 1976-ம் ஆண்டு ஓஹியோ பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறையில்டாக்டர் பட்டம் பெற்றார். அதன் பிறகு அவர் உயிரியியல் துறைக்கு மாறினார்.

சான்டியாகோவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பாடம் நடத்தினார். பிறகு அவர் ஆய்வுப்பணியில்ஈடுபட்டார். தற்போது இங்கிலாந்து நாட்டில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகிறார். `ரிபோசம்' தொடர்பாக 'நேச்சர்' உள்ளிட்ட பத்திரிகைகளில் ஆய்வு கட்டுரைகள் எழுதி இருக்கிறார்.

நோபல் பரிசு பெற்ற 3-வது தமிழர் என்ற பெருமை விஞ்ஞானி ராமகிருஷ்ணனுக்கு கிடைத்து உள்ளது. ஏற்கனவேசர் சி.வி.ராமன், சந்திரசேகர் ஆகியோர் நோபல் பரிசு பெற்று உள்ளனர். இப்போது ராமகிருஷ்ணனுக்கு அந்த பரிசுகிடைத்து இருக்கிறது.

மேலும் நோபல் பரிசு பெற்ற 7-வது இந்தியர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்து உள்ளது. விஞ்ஞானிராமகிருஷ்ணனுக்கு நோபல் பரிசு கிடைத்து இருப்பது இந்தியர்கள் அனைவருக்கும் பெரும் மகிழ்ச்சியைஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்க நாட்டின் குடியுரிமை பெற்றுள்ள விஞ்ஞானி ராமகிருஷ்ணன் தற்போது இங்கிலாந்தில் வசித்துவருகிறார்
Photo: நோபல் பரிசு வாங்கிய ராமகிருஷ்ணன் !!!!!

தமிழ்நாட்டில் உள்ள சிதம்பரத்தில் பிறந்த விஞ்ஞானி ராமகிருஷ்ணனுக்கு நோபல்பரிசு கிடைத்து உள்ளது. நோய் தடுப்பு மருந்து ஆராய்ச்சியில் மேற் கொண்ட புதியகண்டுபிடிப்புக்காக அவருக்கும், மேலும் 2 விஞ்ஞானிகளுக் கும் கூட்டாக இந்த பரிசுவழங்கப்பட்டு இருக்கிறது.

தாய்ப்பாலுக்கு நிகராய் ஏதுமில்லை !!!

தாய்ப்பாலுக்கு நிகராய் ஏதுமில்லை !!!

ஒரு குழந்தை பிறந்து, முதல் மூன்று மாதங்கள் மிகவும் முக்கியமான ஒரு பருவமாகும். இந்த மூன்று மாத காலத்தில் குழந்தையைப் பராமரிக்கும் முறை சரியாக இருந்தால் பிற்காலத்தில் குழந்தையின் உடல் நலம், வளர்ச்சி குறித்த பல பிரச்சினைகளை வராமல் தடுக்கலாம்.

இந்தக் காலகட்டத்தில் ஒரு தாய் எதிர்கொள்ளும் சவால்கள், அவற்றைச் சமாளிக்கும் வழிகள் ஆகியவற்றைத் தெரிந்து கொள்ளுங்கள்.

குழந்தை பிறக்கும் காலம்

ஒரு குழந்தை கருவில் உருவான காலத்தில் இருந்து 37 முதல் 40 வா
ரங்களில் பிறக்க வேண்டும். இவ்வாறு பிறக்கும் குழந்தைகள் முழுவளர்ச்சி பெற்ற, குறித்த காலத்தில் பிறந்த குழந்தைகள் என்று அழைக்கப்படுகின்றன.

37 வாரங்களுக்கு முன் பிறக்கும் குழந்தைகள் குறித்த காலத்திற்கு முன் பிறந்த குழந்தைகள்.

41 வாரங்களுக்குப் பின்னர் பிறக்கும் குழந்தைகள் குறித்த காலத்திற்குப் பின்பிறந்த குழந்தைகள்.

குறித்த காலத்திற்கு முன் பிறக்கும் குழந்தைகள் முழுமையான வளர்ச்சி நிலையை அடையாததால் பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும்.

பிறக்கும் குழந்தையின் எடை

ஒரு இந்தியக் குழந்தை பிறக்கும் போது இருக்க வேண்டிய சராசரி எடை 2.5 முதல் 3.5 கிலோ கிராம் ஆகும்.

எடை 2 கிலோ கிராமுக்கும் குறைவாக இருந்தால் இந்தக் குழந்தைகளை ஆபத்தான நிலையில் உள்ள குழந்தைகள் என்று அழைக்கிறோம்.

உடல் எடை அதிகரித்து, உடல் இயக்கங்கள் அனைத்தும் நல்ல முறையில் உள்ளது என்பது உறுதி செய்யப்படும் வரை, இந்தக் குழந்தைகளை NEONATAL INTENSIVE CARE UNIT (NICU) என்று அழைக்கப்படும் அவசர சிகிச்சைப் பிரிவில் வைத்துப் பாதுகாக்க வேண்டும்.

எடை 1.5 கிலோ கிராமுக்கும் குறைவாக இருந்தால் அந்தக் குழந்தைகள் மிக ஆபத்தான நிலையில் உள்ளவையாகக் கருதப்பட்டு மிகப் பிரத்தியேகக் கவனத்துடன் சிகிச்சை அளிக்க வேண்டியதிருக்கும்.

பராமரிப்பில் முக்கியமானவை:

தாய்ப்பால் கொடுத்தல்
மசாஜ்
குளிப்பாட்டுதல்,
தோல் பராமரிப்பு
கண்கள், தொப்புள் கொடி பராமரிப்பு
எடை
தடுப்பு ஊசிகள்
பிற உணவுகள் கொடுத்தல்
தாய்ப்பால்

தாய்ப் பால் என்பது குழந்தைகளுக்கு இயற்கை கொடுத்த அற்புதமான வரம். பாலூட்டி இனத்தைச் சேர்ந்த எல்லா உயிரினங்களும் தங்கள் குழந்தைகளைப் பாலூட்டிப் பராமரிக்கின்றன.

இன்றைய சமுதாயச் சூழலில் பல தாய்மார்களுக்குப் பாலூட்டும் பலம் குறைந்து கொண்டே வருகிறது. இதனால் பிற்காலத்தில் குழந்தைகள் பல நோய்களை எதிர்கொள்ளும் அபாயம் உள்ளது.

தாய்ப்பால் ஊட்டுவதால் உள்ள நன்மைகள்:

தாய்க்கும் குழந்தைக்கும் இடையில் ஒரு நெருக்கமான பிணைப்பு ஏற்படுகிறது.

தாய்க்கு மகிழ்ச்சியையும், ஆத்ம திருப்தியையும் தருகிறது.

குழந்தைக்கு பால் கொடுக்கும் காலம் வரை, தாய் மீண்டும் கருவுறும் வாய்ப்புக் குறைகிறது.

கருவுற்ற காலத்தில் கொழுப்பு மற்றும் எடை, தொடர்ந்து பால் கொடுக்கும் போது சிறிது சிறிதாகக் குறைகிறது.

குழந்தையின் சீரான வளர்ச்சிக்கும், இயக்கத்திற்குத் தேவையான எல்லா சத்துக்களும் சரியான அளவில் தாய்ப்பாலில் மட்டுமே உள்ளது.

பிற பால்களை விட தாய்ப்பால் எளிதில் செரிமானம் ஆகும்.

அலர்ஜி ஆகும் வாய்ப்புகள் குறைவு.

குழந்தையின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும் வரை, தாய்ப்பாலில் உள்ள நோய் எதிர்ப்பு அணுக்கள் பல நோய்களிலிருந்து குழந்தையைப் பாதுகாக்கிறது.

தாய்ப்பால் அருந்தி வளரும் குழந்தைகளுக்கு பிற்காலத்தில் இரத்தநாள அடைப்பு நோய்கள் வரும் வாய்ப்புகள் குறைவாக இருப்பதாக ஆராய்’ச்சிகளின் மூலம் தெரிய வந்துள்ளது.

தாய்ப்பாலில் நோய்க் கிருமிகள் இருப்பதில்லை. பிறவகை பால்களில் கிருமிகளை அகற்ற விசேஷ கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

தாய்ப்பால் ஊட்டுவதை எப்போது துவங்குவது?

குழந்தை பிறந்த உடனே பாலூட்டத் துவங்கினால்தான் பால் சுரப்பு அதிகமாக இருக்கும்.

நார்மல் டெலிவரி எனில் பிரசவம் ஆன 30 நிமிடங்களிலிருந்து ஒரு மணி நேரத்திற்குள்ளாக பாலூட்டத் துவங்கலாம்.

சிசேரியன் பிரசவம் எனில் மயக்க நிலையிலிருந்து தாய் வெளி வந்த உடன் பாலூட்டத் துவங்கிவிடலாம்.

சிலருக்கு முதல் ஒன்றிரண்டு நாட்கள் பால் சுரக்கும் அளவு குறைவாக இருக்கலாம். ஆனால், குழந்தை உறிஞ்சிக் குடிக்கக் குடிக்க பால் சுரக்கும் அளவும் அதிகமாகும்.

ஒரு சராசரி இந்தியத் தாயின் உடலில் ஒரு நாளில் சுரக்கும் பாலின் அளவு 700 மி.லிட்டர் முதல் 1000 மி. லிட்டர் வரை உள்ளது.

குழந்தைக்கு 1 வயது ஆகும் வரையிலும் தாய்ப்பால் ஊட்டுவது அவசியம். 1 ஒன்றரை வயதுவரை ஊட்டுவது நன்று.
சில தகவல்கள்.....

கொலஸ்ட்ரம்

பிரசவம் ஆகிய முதல் மூன்று நாட்கள் இந்த கொலஸ்ட்ரம் என்ற வெளிர் மஞ்சள் நிற பால் சுரக்கும். இவற்றில் நோய் எதிர்ப்பு அணுக்களும் புரதச் சத்தும் நிறைந்திருக்கும்.

தாய்ப்பால்

பிரசவம் ஆன மூன்று நாட்களுக்குப் பின் சுரக்கத் துவங்கும் பாலில் குழந்தைக்குத் தேவையான எல்லாச் சத்துக்களும் சரிவிகித அளவில் இருக்கும்.

ஊட்டும் போது முதலில் வரும் பால்

பாலூட்டத் துவங்கும் போது முதலில் வரும் பாலில் புரதம், மாவுச் சத்து, வைட்டமின்கள், தாதுப்பொருட்கள் ஆகியவை அதிகம் இருக்கும்.

கடைசியில் வரும் பால்

பாலூட்டும் போது கடைசியில் வரும் பாலில் கொழுப்புச் சத்து அதிகம் இருக்கும். இது குழந்தைகளுக்கு அதிகப்படியான சக்தியை அளிக்கும்.தடுப்பூசி: பிற உணவுகளை மருத்துவரின் ஆலோசனைப்படி கொடுக்கலாம்.
Photo: தாய்ப்பாலுக்கு நிகராய் ஏதுமில்லை !!!

ஒரு குழந்தை பிறந்து, முதல் மூன்று மாதங்கள் மிகவும் முக்கியமான ஒரு பருவமாகும். இந்த மூன்று மாத காலத்தில் குழந்தையைப் பராமரிக்கும் முறை சரியாக இருந்தால் பிற்காலத்தில் குழந்தையின் உடல் நலம், வளர்ச்சி குறித்த பல பிரச்சினைகளை வராமல் தடுக்கலாம்.

இந்தக் காலகட்டத்தில் ஒரு தாய் எதிர்கொள்ளும் சவால்கள், அவற்றைச் சமாளிக்கும் வழிகள் ஆகியவற்றைத் தெரிந்து கொள்ளுங்கள்.

குழந்தை பிறக்கும் காலம்

ஒரு குழந்தை கருவில் உருவான காலத்தில் இருந்து 37 முதல் 40 வாரங்களில் பிறக்க வேண்டும். இவ்வாறு பிறக்கும் குழந்தைகள் முழுவளர்ச்சி பெற்ற, குறித்த காலத்தில் பிறந்த குழந்தைகள் என்று அழைக்கப்படுகின்றன.

37 வாரங்களுக்கு முன் பிறக்கும் குழந்தைகள் குறித்த காலத்திற்கு முன் பிறந்த குழந்தைகள்.

41 வாரங்களுக்குப் பின்னர் பிறக்கும் குழந்தைகள் குறித்த காலத்திற்குப் பின்பிறந்த குழந்தைகள்.

குறித்த காலத்திற்கு முன் பிறக்கும் குழந்தைகள் முழுமையான வளர்ச்சி நிலையை அடையாததால் பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும்.

பிறக்கும் குழந்தையின் எடை

ஒரு இந்தியக் குழந்தை பிறக்கும் போது இருக்க வேண்டிய சராசரி எடை 2.5 முதல் 3.5 கிலோ கிராம் ஆகும்.

எடை 2 கிலோ கிராமுக்கும் குறைவாக இருந்தால் இந்தக் குழந்தைகளை ஆபத்தான நிலையில் உள்ள குழந்தைகள் என்று அழைக்கிறோம்.

உடல் எடை அதிகரித்து, உடல் இயக்கங்கள் அனைத்தும் நல்ல முறையில் உள்ளது என்பது உறுதி செய்யப்படும் வரை, இந்தக் குழந்தைகளை NEONATAL INTENSIVE CARE UNIT (NICU) என்று அழைக்கப்படும் அவசர சிகிச்சைப் பிரிவில் வைத்துப் பாதுகாக்க வேண்டும்.

எடை 1.5 கிலோ கிராமுக்கும் குறைவாக இருந்தால் அந்தக் குழந்தைகள் மிக ஆபத்தான நிலையில் உள்ளவையாகக் கருதப்பட்டு மிகப் பிரத்தியேகக் கவனத்துடன் சிகிச்சை அளிக்க வேண்டியதிருக்கும்.

பராமரிப்பில் முக்கியமானவை:

தாய்ப்பால் கொடுத்தல்
மசாஜ்
குளிப்பாட்டுதல்,
தோல் பராமரிப்பு
கண்கள், தொப்புள் கொடி பராமரிப்பு
எடை
தடுப்பு ஊசிகள்
பிற உணவுகள் கொடுத்தல்
தாய்ப்பால்

தாய்ப் பால் என்பது குழந்தைகளுக்கு இயற்கை கொடுத்த அற்புதமான வரம். பாலூட்டி இனத்தைச் சேர்ந்த எல்லா உயிரினங்களும் தங்கள் குழந்தைகளைப் பாலூட்டிப் பராமரிக்கின்றன.

இன்றைய சமுதாயச் சூழலில் பல தாய்மார்களுக்குப் பாலூட்டும் பலம் குறைந்து கொண்டே வருகிறது. இதனால் பிற்காலத்தில் குழந்தைகள் பல நோய்களை எதிர்கொள்ளும் அபாயம் உள்ளது.

தாய்ப்பால் ஊட்டுவதால் உள்ள நன்மைகள்:

தாய்க்கும் குழந்தைக்கும் இடையில் ஒரு நெருக்கமான பிணைப்பு ஏற்படுகிறது.

தாய்க்கு மகிழ்ச்சியையும், ஆத்ம திருப்தியையும் தருகிறது.

குழந்தைக்கு பால் கொடுக்கும் காலம் வரை, தாய் மீண்டும் கருவுறும் வாய்ப்புக் குறைகிறது.

கருவுற்ற காலத்தில் கொழுப்பு மற்றும் எடை, தொடர்ந்து பால் கொடுக்கும் போது சிறிது சிறிதாகக் குறைகிறது.

குழந்தையின் சீரான வளர்ச்சிக்கும், இயக்கத்திற்குத் தேவையான எல்லா சத்துக்களும் சரியான அளவில் தாய்ப்பாலில் மட்டுமே உள்ளது.

பிற பால்களை விட தாய்ப்பால் எளிதில் செரிமானம் ஆகும்.

அலர்ஜி ஆகும் வாய்ப்புகள் குறைவு.

குழந்தையின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும் வரை, தாய்ப்பாலில் உள்ள நோய் எதிர்ப்பு அணுக்கள் பல நோய்களிலிருந்து குழந்தையைப் பாதுகாக்கிறது.

தாய்ப்பால் அருந்தி வளரும் குழந்தைகளுக்கு பிற்காலத்தில் இரத்தநாள அடைப்பு நோய்கள் வரும் வாய்ப்புகள் குறைவாக இருப்பதாக ஆராய்’ச்சிகளின் மூலம் தெரிய வந்துள்ளது.

தாய்ப்பாலில் நோய்க் கிருமிகள் இருப்பதில்லை. பிறவகை பால்களில் கிருமிகளை அகற்ற விசேஷ கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

தாய்ப்பால் ஊட்டுவதை எப்போது துவங்குவது?

குழந்தை பிறந்த உடனே பாலூட்டத் துவங்கினால்தான் பால் சுரப்பு அதிகமாக இருக்கும்.

நார்மல் டெலிவரி எனில் பிரசவம் ஆன 30 நிமிடங்களிலிருந்து ஒரு மணி நேரத்திற்குள்ளாக பாலூட்டத் துவங்கலாம்.

சிசேரியன் பிரசவம் எனில் மயக்க நிலையிலிருந்து தாய் வெளி வந்த உடன் பாலூட்டத் துவங்கிவிடலாம்.

சிலருக்கு முதல் ஒன்றிரண்டு நாட்கள் பால் சுரக்கும் அளவு குறைவாக இருக்கலாம். ஆனால், குழந்தை உறிஞ்சிக் குடிக்கக் குடிக்க பால் சுரக்கும் அளவும் அதிகமாகும்.

ஒரு சராசரி இந்தியத் தாயின் உடலில் ஒரு நாளில் சுரக்கும் பாலின் அளவு 700 மி.லிட்டர் முதல் 1000 மி. லிட்டர் வரை உள்ளது.

குழந்தைக்கு 1 வயது ஆகும் வரையிலும் தாய்ப்பால் ஊட்டுவது அவசியம். 1 ஒன்றரை வயதுவரை ஊட்டுவது நன்று.
சில தகவல்கள்.....

கொலஸ்ட்ரம்

பிரசவம் ஆகிய முதல் மூன்று நாட்கள் இந்த கொலஸ்ட்ரம் என்ற வெளிர் மஞ்சள் நிற பால் சுரக்கும். இவற்றில் நோய் எதிர்ப்பு அணுக்களும் புரதச் சத்தும் நிறைந்திருக்கும்.

தாய்ப்பால்

பிரசவம் ஆன மூன்று நாட்களுக்குப் பின் சுரக்கத் துவங்கும் பாலில் குழந்தைக்குத் தேவையான எல்லாச் சத்துக்களும் சரிவிகித அளவில் இருக்கும்.

ஊட்டும் போது முதலில் வரும் பால்

பாலூட்டத் துவங்கும் போது முதலில் வரும் பாலில் புரதம், மாவுச் சத்து, வைட்டமின்கள், தாதுப்பொருட்கள் ஆகியவை அதிகம் இருக்கும்.

கடைசியில் வரும் பால்

பாலூட்டும் போது கடைசியில் வரும் பாலில் கொழுப்புச் சத்து அதிகம் இருக்கும். இது குழந்தைகளுக்கு அதிகப்படியான சக்தியை அளிக்கும்.தடுப்பூசி: பிற உணவுகளை மருத்துவரின் ஆலோசனைப்படி கொடுக்கலாம்.

Tuesday, October 23, 2012

கிரெடிட் கார்டு 6 புத்திசாலித்தனமான வழிகள்!

இன்று கிரெடிட் கார்டு என்பது அந்தஸ்தின் அடையாளமாகிவிட்டது. தேவையிருக்கிறதோ, தேவையில்லையோ பலரும் கிரெடிட் கார்டு பயன்படுத்த விரும்புகிறார்கள்.

உங்களுக்கும் அந்த ஆசையிருந்தால் கிரெடிட் கார்டை பயன
்படுத்தும்போதும் பின்வரும் 6 புத்திசாலித்தனமான விஷயங்களைக் கவனத்தில் வையுங்கள்...

1. 'பில்லிங் சைக்கிள்'

ஒவ்வொரு கிரெடிட் கார்டுக்கும் ஒரு 'பில்லிங் சைக்கிள்' உள்ளது. நீங்கள் எப்போதும் உங்கள் நிலுவைத் தொகையை முழுமையாகச் செலுத்திவிடுவீர்கள் என்றால், 'பில்லிங்' சுழற்சியின் ஆரம்பத்தில் நீங்கள் வாங்கும் பொருட்களுக்கு ஓர் இலவச 'கிரெடிட்' காலத்தை அனுபவிக்கலாம்.

2. குறைந்தபட்சத் தொகை

நீங்கள் குறைந்தபட்சத் தொகையைச் செலுத்திவிடுவது, மீதமுள்ள தொகையை கடனாகக் கருதி அதற்கு வட்டி விதியுங்கள் என்று வங்கிக்குத் தெரிவிப்பதாக அமையும். கிரெடிட் கார்டு மீதான கடன்களுக்கான வட்டி விகிதம் பொதுவாக அதிகம் என்பதை ஞாபகத்தில் வையுங்கள்.

3. உஷாராக வேண்டிய நேரம்

கிரெடிட் கார்டு உரிமையாளர் குறைந்தபட்சத் தொகையைச் செலுத்தாவிட்டால், அதுகுறித்து அவருக்கு ஓர் எச்சரிக்கை விடுக்கப்படும். கார்டு வழங்கல் விதிகளின்படி, அவர் கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறியவராகக் கருதப்படுவார். அப்போது அவர் உஷாராகிக்கொள்ள வேண்டும்.

4. பணம் எடுக்கும்போது...

கிரெடிட் கார்டை பயன்படுத்திப் பணம் எடுப்பதெல்லாம், அவ்வாறு எடுத்த நாளில் இருந்து கடனாகக் கருதப்படும். அம்மாதிரியான கடன்களுக்கு எந்த `இலவச கிரெடிட் காலமும்' இல்லை என்பது உங்கள் நினைவிருக்கட்டும்.

5. தனிநபர் கடனாக மாற்றலாம்

கிரெடிட் கார்டு நிலுவைத் தொகையைத் திருப்பிச் செலுத்த முடியாமல் அவஸ்தைப்படுகிறீர்களா? அதுபோன்ற நிலையில், உங்கள் நிலுவையை ஓரளவு குறைந்த வட்டியில் தனிநபர் கடனாக மாற்றுவதற்குச் சம்பந்தப்பட்ட வங்கி முன்வரலாம். நீங்கள் அதை வழக்கமான கடனைப் போல பல்வேறு தவணைகளில் செலுத்தி முடிக்கலாம். உங்களுக்கு அந்த முறை சரியாக வரும் என்று தோன்றினால் உடனே வங்கி நிர்வாகிகளிடம் பேசுங்கள்.

6. கிரெடிட் அளவு

கிரெடிட் கார்டை பயன்படுத்தி நீங்கள் அதிகமாகச் செலவழிப்பது போலத் தோன்றினால் உங்கள் கார்டின் கிரெடிட் அளவைக் குறைக்கும்படி கார்டு நிறுவனத்திடம் நீங்கள் கேட்கலாம்.

கிரெடிட் கார்டு குறித்து அலர்ஜி அடையத் தேவையில்லை. புத்திசாலித்தனமாகவும் கவனமாகவும் பயன்படுத்தினால் அது தக்க சமயத்தில் உதவும் ஒரு சிறந்த பொருளாதாரத் துணைவன் என்கிறார்கள் நிபுணர்கள். என்ன சரிதானே ?
Photo: கிரெடிட் கார்டு  6 புத்திசாலித்தனமான வழிகள்!

இன்று கிரெடிட் கார்டு என்பது அந்தஸ்தின் அடையாளமாகிவிட்டது. தேவையிருக்கிறதோ, தேவையில்லையோ பலரும் கிரெடிட் கார்டு பயன்படுத்த விரும்புகிறார்கள்.

உங்களுக்கும் அந்த ஆசையிருந்தால் கிரெடிட் கார்டை பயன்படுத்தும்போதும் பின்வரும் 6 புத்திசாலித்தனமான விஷயங்களைக் கவனத்தில் வையுங்கள்...

1. 'பில்லிங் சைக்கிள்'

ஒவ்வொரு கிரெடிட் கார்டுக்கும் ஒரு 'பில்லிங் சைக்கிள்' உள்ளது. நீங்கள் எப்போதும் உங்கள் நிலுவைத் தொகையை முழுமையாகச் செலுத்திவிடுவீர்கள் என்றால், 'பில்லிங்' சுழற்சியின் ஆரம்பத்தில் நீங்கள் வாங்கும் பொருட்களுக்கு ஓர் இலவச 'கிரெடிட்' காலத்தை அனுபவிக்கலாம்.

2. குறைந்தபட்சத் தொகை

நீங்கள் குறைந்தபட்சத் தொகையைச் செலுத்திவிடுவது, மீதமுள்ள தொகையை கடனாகக் கருதி அதற்கு வட்டி விதியுங்கள் என்று வங்கிக்குத் தெரிவிப்பதாக அமையும். கிரெடிட் கார்டு மீதான கடன்களுக்கான வட்டி விகிதம் பொதுவாக அதிகம் என்பதை ஞாபகத்தில் வையுங்கள்.

3. உஷாராக வேண்டிய நேரம்

கிரெடிட் கார்டு உரிமையாளர் குறைந்தபட்சத் தொகையைச் செலுத்தாவிட்டால், அதுகுறித்து அவருக்கு ஓர் எச்சரிக்கை விடுக்கப்படும். கார்டு வழங்கல் விதிகளின்படி, அவர் கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறியவராகக் கருதப்படுவார். அப்போது அவர் உஷாராகிக்கொள்ள வேண்டும்.

4. பணம் எடுக்கும்போது...

கிரெடிட் கார்டை பயன்படுத்திப் பணம் எடுப்பதெல்லாம், அவ்வாறு எடுத்த நாளில் இருந்து கடனாகக் கருதப்படும். அம்மாதிரியான கடன்களுக்கு எந்த `இலவச கிரெடிட் காலமும்' இல்லை என்பது உங்கள் நினைவிருக்கட்டும்.

5. தனிநபர் கடனாக மாற்றலாம்

கிரெடிட் கார்டு நிலுவைத் தொகையைத் திருப்பிச் செலுத்த முடியாமல் அவஸ்தைப்படுகிறீர்களா? அதுபோன்ற நிலையில், உங்கள் நிலுவையை ஓரளவு குறைந்த வட்டியில் தனிநபர் கடனாக மாற்றுவதற்குச் சம்பந்தப்பட்ட வங்கி முன்வரலாம். நீங்கள் அதை வழக்கமான கடனைப் போல பல்வேறு தவணைகளில் செலுத்தி முடிக்கலாம். உங்களுக்கு அந்த முறை சரியாக வரும் என்று தோன்றினால் உடனே வங்கி நிர்வாகிகளிடம் பேசுங்கள்.

6. கிரெடிட் அளவு

கிரெடிட் கார்டை பயன்படுத்தி நீங்கள் அதிகமாகச் செலவழிப்பது போலத் தோன்றினால் உங்கள் கார்டின் கிரெடிட் அளவைக் குறைக்கும்படி கார்டு நிறுவனத்திடம் நீங்கள் கேட்கலாம்.

கிரெடிட் கார்டு குறித்து அலர்ஜி அடையத் தேவையில்லை. புத்திசாலித்தனமாகவும் கவனமாகவும் பயன்படுத்தினால் அது தக்க சமயத்தில் உதவும் ஒரு சிறந்த பொருளாதாரத் துணைவன் என்கிறார்கள் நிபுணர்கள். என்ன சரிதானே ?

மழை நீர் நம்முடைய உயிர் நீர் !!

மழை நீர் நம்முடைய உயிர் நீர் !!

மழை நீரை சேமிப்போம் !! மனிதவளம் காப்போம் !!

குடிநீரும் அதன் அவசியமும் சொல்ல தேவையில்லை. தாவரங்கள் முதல் மனிதன் வரை உயிர்வாழ மிக அவசியமானதாகும். மனிதனின் உடலில் பிரதான சக்தி நீராக இருக்கின்றது. மழைத்துளியே ந
ம்மலுடைய உயிர் நீர் என்றே சொல்லலாம்

2025ல் ஆசியா ஆப்பிக்கா நாடுகளில் கடுமையான குடிநீர் பஞ்சம் உருவாகலாம் என்று கணக்கிடப்படுகின்றது. ஏன் நீருக்காக ஒரு நாட்டின் மேல் போர் தொடுக்கும் காலமும் வரலாம் என்று எச்சரிக்கை விடப்படுக்கின்றது. இருந்தாலும் மக்களிடம் எந்த விதமான விழிப்புணர்வும் வரவில்லை என்பதுதான் கவலைக்கிடமான ஒன்று. வளர்ந்துவரும் நாடுகள் கூட இதைப்பற்றி பெரிதுப்படுத்திக்கொண்டதாக தெரியவில்லை. வளர்ந்த நாடுகளோ நமக்கென்ன என்ற நிலையில் இருக்கின்றது.

மனிதன் குடிப்பதற்கும் குளிப்பதற்கும் தேவை நீர். நம் பூமியானது நான்கில் மூன்று பகுதி நீரால் சூழப்பட்டிருந்தாலும். மனிதனின் தேவைக்கு மழை நீரையும், நிலத்தடி நீரை பயன்ப்படுத்த வேண்டியுள்ளது. கடல் நீர் உப்புத்தன்மையும் கடினதன்மையும் உள்ளதால் நேரடியாக விவசாயத்திற்கோ இல்லை குடிநீராகவோ பயன்படுத்த முடியவில்லை. கடல்நீரை குடிநீராக்கும் திட்டங்கள் இருந்தும் நடைமுறைக்கு இன்னும் வரவில்லை. இதன் செலவினங்கள் அதிகம்.. ஒரு வேடிக்கையான விடயம் என்னவென்றால் காட்டாற்று தண்ணீரையும் நதிநீரையும் சேமிக்காமல் கடலில் கலக்க செய்துவிட்டு கடல்நீரை குடிநீராக்கும் திட்டங்களை தீட்டுகின்றார்கள். உபரியாக கடலில் கலக்கும் தண்ணீரை சேமித்து குடிநீராக்கும் திட்டங்களை கொண்டு வரலாமே!

ஆதிகால மனிதன் நாடோடியாக காடுகளில் சுற்றி திரிந்துக் கொண்டும் கண்ணில் கண்ட பழங்கள் கிழங்குகளை உண்டும் வாழ்த காலங்களை தாண்டி, என்று மனிதன் குழுக்களாக ஓர் இடத்தில் தங்கி வாழத்தொடங்கினானோ அன்றுதான் மனித நாகரிகமும் வளர்ச்சிக் கண்டது. அதேபொல் அவனால் உண்டாக்கப்பட்ட கழிவுகளும் பிரச்சனைகளாக உருவாகிவிட்டது.

இயற்கையான கழிவுகளை இயற்கையே சமன் செய்துவிடும். ஆனால் மனிதன் நாகரிக வளச்சிப்பாதையில் உண்டான தொழிற்ச்சாலை வேதியியல் கழிவுகள் நதியிலும் ஆற்று படுகைகளிலும் கலந்து விடப்பட்டன. இதனால் நதிநீரும் மாசுப்பட்டது அதனைச் சார்ந்து நிலத்தடிநீரும் உவர்ப்பானது. இதன் காரணமாக பல நோய்களும் வர ஆரம்பித்துவிட்டது. 65 சதவிகிதம் நோய்கள் நீரினால் பரவுகின்றது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

நாம் வரலாற்று பாடங்களில் படித்துள்ளோம், குளங்களை வெட்டினார் அணைகள் கட்டினார்கள் ஆனால் இன்று நடப்பது குளங்கள் தோரும் துண்டு போட்டு வீடுகள் கட்டினோம். தப்பி தவறி இருக்கும் குளங்கள் தூரு வார எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதுதான் இன்றைய நிலை.

மனித நாகரிக வளர்ச்சிதான் இந்த சீர்கேடுக்கு காரணம் என்று சொல்வதிற்கில்லை. நாகரிக வளர்ச்சியையும் நாம் ஏற்றுகொள்ளதான் வேண்டும். அதே வேலையில் தொலை நோக்குப்பார்வையில் சில நடவடிக்கைகளும் நாம் மேற்கொண்டால்தான் இந்த பூமியை நாளைய தலைமுறைக்கும் விட்டு செல்ல முடியும்.

தனிப்பட்ட மனிதனின் முன்னேற்ற வழிகளை அவனால் பார்த்துக்கொள்ளமுடியும். பார்த்துக்கொள்ளதான் வேண்டும். ஆனால் குளங்களை வெட்டுவது, அவற்றை தூர்வாறுவது, நதிகளின் போக்கை பயன்படும்படி நடவடிக்கை எடுப்பது, அணைகள் கட்டி பாசன வசதியை அதிகப்படுத்துவது எல்லாம் நாம் நமக்காக ஏற்படுத்திய அரசுதான் செய்ய வேண்டும். அதுதான் அரசின் தலையான கடமையும் கூட. நாம் காண்பது இலவச தொலைக்காட்சிப் பெட்டி வழங்குதல், இலவச வேட்டி சேலை வழங்குதல்.

முன்பெல்லாம் ஊர் திருவிழாக்களில் தண்ணீர் பந்தல் வைப்பார்கள். எனக்கு தெரிந்து கோடைக்காலங்களில் பேருந்து நிலையங்களிலும் மக்கள் கூடும் இடங்களிலும் தண்ணீர் பந்தல் ஒரு சேவையாக செய்வார்கள். ஆனால் இன்று குடிநீரை காசு கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்பதுதான் இன்றைய மிகப்பெரிய கவலை. இந்த நிலை வெறும் பத்தாண்டுகளில் தான் நடந்துள்ளது என்றால் நாம் எதோ ஒன்றை தவறவிட்டுவிட்டோம் என்பதுதான் உண்மை.

காலங்களின் வளர்ச்சினால் மனிதன் பெரிய பெரிய கட்டிடங்களிலும் தனித்தனி வீடுகளிலும் வசிக்க ஆரம்பித்தான். அதே போல் வீடுகளில் தனியாக குளியல் அறை, கழிவறை என்ற அமைப்புக்கு சென்றான். (இன்னும் கழிவறை இல்லா வீடுகளும் இருக்கு அதே போல் திறந்த வெளியில் மலம் போக்கும் நிலையும் இருக்கு என்பதும் கசப்பான உண்மை) இதனால் தண்ணீரின் பயன்பாடும் அதிகரித்தது அதனுடன் அதன் கழிவுகளும் அதிகரித்தது. இப்படி வரும் கழிவுகளை முறையற்ற நிலையில் மறுபடியும் நதிகளிலும் ஆறுகளிலும் கலந்துவிடுவதால் வந்த நிலைதான் இன்றைய சுகாதரமற்ற குடிநீருக்காண காரணங்கள்.தாகம் என்று வருபவர்களுக்கு தண்ணீர் கொடுப்பதும் . தண்ணீர் கொடுக்கும் வாய்ப்பு கிடைத்தற்கு மகிழ்வதும் மக்களின் பண்பாடாக இருந்தது. ஆனால் இன்று பணம் கொடுத்து வாங்கி தண்ணீர் குடிக்க வேண்டிய நிலை.

நீர் இல்லா நிலையை இந்த பூமியில் நினைத்துக்கூட பார்க்க முடியாது. அதேபோல் நீர் இல்லாமல் உயிரின் ஒரு அணுவும் அசையாது என்பதும் உண்மையே.இப்படிப்பட்ட பனிப் பாலைவனங்களை மனிதன் வாழ்வதற்கு தவிர்க்கப்பட்டது. இயற்கை செய்த விளையாட்டில் சுமார் 17,000 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட வெப்பஉயர்வு பூமி பந்தின் ஒரு திருப்பு முனையாக அமைந்து விட்டதாக அறிவியலர்கள் கூறுகின்றார்கள். அந்நாளில் ஏற்பட்ட வெப்ப உயர்வு உலகின் பருவநிலையில் ஒரு மாபெரும் மாற்றத்தை உருவாக்கிவிட்டது. இந்த நிகழ்வுதான் நாகரிகத்தின் ஆதாரமாக அமைந்துவிட்டது என்றால் மிகையாகாது.அந்த பருவநிலை மாற்றங்கள் உலகில் தொடர்ந்தது. அந்த மாற்றம்தான் உலகை மாற்றியமைக்க முதன்மையான காரணமாக அமைந்துவிட்டது. தெற்கிலும் வடக்கிலும் உள்ள பனிப்பாறைகள் வெப்ப உயர்வு காரணமாக உருக ஆரப்பித்தது. பனி உருகி நீராகியது. நீர் நதிகளாகி கடலில் கலந்தது. அதனால் கடல்மட்டம் உயர்ந்தது.

வெப்ப அதிகரிப்பால் கடல் நீர் நீராவியாக மாறி மேலே கிளம்பி பின் மழையாக கொட்டியது. இதனால் ஏரி , குளங்கள் நதிகளாக ஓட ஆரம்பித்தது. இந்த நதிக்கரைதான் மனித நாகரிக வளர்ச்சியின் ஆதாரம். இந்த நதிக்கரை நாகரிகம்தான் மனித வரலாற்றை மாற்றியமைக்கப்பட்டது என்றே சொல்லலாம். இதற்கு பின் பருவநிலை மாற்றங்கள் உருவாகின.

உயிர்கள் வாழ நீர் மிக முக்கியம் . நீரை நன்னீர், கடினநீர் எனப்பிரிக்கலாம். நன்னீரில் வேதி உப்புகளும் திண்ம உலோகங்களும் குறைவாக இருக்கும். இந்த நீர்தான் மனிதன் குடிப்பதற்கும் வேளாண்மைக்கும் பயன்படுத்தப்படுகின்றது.

நன்னீர் எங்கெல்லாம் கிடைக்கின்றது? நதி, ஏரி,குளம், ஊற்று, நிலத்தடியில், கேணிகள் மூலம் கிடைக்கின்றது.

நன்னீர் எப்படி உருவாகின்றது? பனி உருகுதல் மூலமும், மழையினாலும் நன்னீர் கிடைக்கின்றது.
நன்னீரின் நிலை என்ன? நன்னீர் மூன்று நிலைகளில் காணலாம். நீர்,பனிகட்டி,நீராவி ஆகும். இது மூன்றையும் ஒரே நேரத்தில் காண்பது அரிது. ஆனால் 4 டிகிரி செல்சியசில் இந்த மூன்றையும் காணலாம்..! இப்படிப்பட்ட நன்னீர்தான் நாம் உயிர்வாழ பயன்ப்படுகின்றது. கடலிருந்து சூரியவெப்பத்தால் ஆவியாகி மேலே சென்று பின் குளிர்ந்து மழையாக பெய்கின்றது இதில் எந்த மாற்றமும் இல்லை. அப்படியிருந்தும் குடிநீருக்காக நாம் இன்று சிரமப்படுவதேன்?

நீரினால் நோய்கள், குடிநீருக்காக போராட்டங்கள். காசுக்கு வாங்கி நீரை குடிக்கும் நிலை மனிதனுக்கு மனிதனே காரணமாகின்றான். நீரை தனி ஒரு பொருளாக உருவாக்கவும் முடியாது என்பதுதான் உண்மை.

குடிநீர் எப்படி மாசுப்படுகின்றது? நிலத்தடிநீர் குறைய காரணம் என்ன? உலக வெப்ப மயமானதிற்கும் குடிநீருக்கும் தொடர்பு உண்டா? இதை தடுக்க நாம் செய்ய் வேண்டிய கடமை என்ன? என்பதை பற்றி நாம் வெறும் பேசிக்கொண்டு மட்டும் இருந்தால் போதாது மக்களாகிய நாமும் கொஞ்சம் இயற்கையே பேணி காப்பதில் அக்கறை கொள்வோம் .மழை நீரை சேமிப்போம்
Photo: மழை நீர் நம்முடைய உயிர் நீர் !!

மழை நீரை சேமிப்போம் !! மனிதவளம் காப்போம் !!

குடிநீரும் அதன் அவசியமும் சொல்ல தேவையில்லை. தாவரங்கள் முதல் மனிதன் வரை உயிர்வாழ மிக அவசியமானதாகும். மனிதனின் உடலில் பிரதான சக்தி நீராக இருக்கின்றது. மழைத்துளியே நம்மலுடைய உயிர் நீர் என்றே சொல்லலாம் 

சூராவளி பற்றி தெரிந்து கொள்வோம் !!!

சூராவளி பற்றி தெரிந்து கொள்வோம் !!!

சூராவளி என்பது ஒருவகை சுழலும் காற்றாகும். இந்த காற்றின் கட்டுக்கடங்காத வேகத்தில் சுழன்றபடியே மேகங்களை தொட்டுக் கொண்டு நிலப்பரப்பை சூரையாடி பயிர்களையும், வீடுகளையும் நாசம் செய்துவிடும் ஆற்றல் கொண்டவைகளா
கும். சூராவளி என்பது ஒரு புனல் (Funnel) வடிவத்தில் காணப்படும் பயங்கரமான சூராவளியின் மேற்பகுதி மேகத்தை தொட்டு கிணறு போன்ற அகன்று காணப்படும் மேலும் இதன் வால் பகுதி கூர்மையான வாள் போன்று வலைந்து காணப்படும். இவற்றிற்கு ஆங்கில்தில் டொர்னடோ (Tornado) என்று பெயர்.

சூராவளியின் வேகம்

பல்வேறு சூராவளிகள் குறைந்த பட்ச வேகமாக மணிக்கு 40 மைல்கள் என்ற வேகத்தில் சுழன்றடிக்கும் (அதாவது 64 கி.மீ வேகம்) மற்றும் அதிக பட்சமாக மணிக்கு 110 மைல்கள் என்ற வேகத்தில் சூழன்றடிக்கும் (அதாவது மணிக்கு 177 கி.மீ வேகம்) இந்த வேகம் சுமார் 250 அடி (75 மீட்டர்) நிலப்பரப்பை ஒரு வினாடியில் தாக்கும் வல்லமை படைத்தது.

சூராவளிகள் சுழல ஆரம்பிக்கும் போது எதிர்பாராத விதமாக காற்றின் வேகம் 300 மைல்களாக இருந்தால் இந்த சூராவளிகள் குறைந்தபட்சடம் 1 மைல் (அதாவது 1.6 கி.மீ) பரப்பளவு கொண்ட நிலப்பரப்பை ஒரு வினாடியில் துவம்சம் செய்து அப்படியே மெல்ல நகர்ந்து பல மைல்கள் நகர ஆரம்பிக்கும். இவைகள்தான் சூராவளிகள் அதாவது வானத்தின் சுனாமி என்று கூட கூறலாம்.

சூராவளி – டொர்னடோ எவ்வாறு உருவாகிறது

ஒரு குறிப்பிடட திசையிலிருந்து வீசக்கூடிய குளிர்ந்த காற்று மற்றும் வரண்ட காற்றும் அதன் எதிர்திசையிலிருந்து வீசக்கூடிய சூடான காற்று மற்றும் ஈரப்பதமான காற்றுடன் மோதுகிறது. இப்படிப்பட்ட பல்வேறு வகையான காற்றுகள் ஒன்றுடன் ஒன்று மோதும்போது அதிலிருந்து ஒரு வெளிப்படும் விசையே சூராவளி எனப்படுகிறது. இந்த மோதல்கள் அதிகமான அளவு நடைபெறும்போது அந்த சூராவளிக்கு பலம் கூடுகிறது. இதற்கு பெயர்தான் டொர்னடோ எனப்படுகிறது.

இந்த சூராவளி காற்றின் அறிகுறிகள் என்ன?

டொர்னடோ என்ற பயங்கரமான சூராவளி வீசுவதற்கு முன்னர் ஆலங்கட்டி மழைகள் ஏற்படுமாம் அந்த ஆலங்கட்டியின் தாக்கம் வீடுகளின் கூரைகளை துவம்சம் செய்துவிடுமாம்.

இந்த சூராவளி காற்றின் வேகம் என்ன?

வானத்தில் ஒரு பயங்கரமான சூராவளி உருவாகிவிட்டால் அந்த சூராவளி நிலத்தை தொடுவதற்கு எடுத்துக்கொள்ளும் நேரம் வெறும் 12-13 நிமிடங்கள் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். 13ம் வினாடியிலிருந்து இந்த சூராவளி நிலத்தை பதம் பார்த்து அக்குவேறு ஆணிவேராக பிடிங்கி அதை தனக்குள் வசப்படுத்திக்கொண்டு அதே வேகத்தில் நகர ஆரம்பிக்குமாம்.

இந்த சூராவளி காற்றின் சக்தி எத்தகையது?

மனிதர்கள், கால்நடைகள் கூட இந்த சூராவளியில் சிக்கி வீசப்படுகிறது. சாலையில் நிருத்தப்பட்டிருக்கும் வாகனங்கள் தூக்கி வீசப்பட்டு வீட்டின் கூரைகளின் மேல் நிற்குமாம் அவ்வளவு பயங்கரமானது இந்த அதிபயங்கர சூராவளிகள்.

சூராவளியின் வகைகள் பார்ப்போம்

இந்த வகை சூராவளிகள் SUPERCELL TORNADOES என்று அழைக்கப்படுகின்றன. இந்த வகை சூராவளி மேகங்களை கருவாக கொண்டு சூழன்றடிக்கும். ஒரு பக்கம் மேகங்கள் மழைச்சாரல்களை வீசிக்கொண்டும் மற்றொரு பக்கம் சூரைக் காற்றை சூழன்றபடியும் வீசி பல கிலோமீட்டர்களை நாசம் செய்யக்கூடிய ஆற்றல் பெற்றிருக்கும். இந்த வகை சூராவளிகள் ஒரு நிலத்தை தொட்டுவிட்டால் அதன் வேகம் 200 கி.மீ.க்கும் குறைவாக இருக்காது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

LANDSPOUT (லேன்ட் ஸ்பவ்ட்)

நிலத்தில் உள்ள மணல் மேடுகளை பதம்பார்த்து மணலை வீசியவண்ணம் சூழன்றடிக்கும் இந்த கொடிய சூராவளிக்கு லேன்ட் ஸ்பவ்ட் என்று பெயர். இது முதலில் கண்ட SUPERCELL TORNADOES-களுக்கு அடுத்தபடியாக வீசக்கூடிய சூராவளியாகும். இவைகள் கனத்த மேகங்களை இழுத்துக்கொண்டு சுழலாமல் பலவீனமான மேகங்களைக் கொண்டு காற்றை சுழன்றடிக்கும் ஆற்றலை பெற்றிருக்கிறது.

GUSTNADO

இந்த GUSTNADO என்றழைக்கப்படும் சூராவளி பலவீனமானதாகும். இவைகள் சற்று வேகம் குறைந்ததாகவும் விரைவில் நின்றுவிடக் கூடியதாகவும் காணப்படும். இந்த சூரைக்காற்றினால் தூசுப்படலம் சற்று அதிகமாக காணப்படும். இந்த வகை சூராவளிகளுக்கு மேகங்களுடன் நெருங்கய தொடர்பிருக்காது மாறாக காற்றின் வேகம்தான் இவைகளையும் உருவாக்குகிறது.

WATERSPOUT

வாட்டர் ஸ்பவ்ட் எனப்படும் இந்த சூராவளிகள் நீர்நிலைகளில் ஏற்படக்கூடிய சூராவளிகளாகும். இவைகள் நிலத்தில் வீசக்கூடிய SUPERCELL எனப்படும் அதிபயங்கர சூராவளிகளின் வடிவ மேயாகும் ஆனால் இவைகள் நீரில் சூழன்றடிப்பதால் இதனால் ஏற்படும் பாதிப்பகள் மனிதனுக்கு மிக குறைவுதான். இந்த சூராவளிகள் நிலத்தை தொடுவதற்குள் அதன் சக்தியை இழந்து விடுகின்றன.

DUST DEVILS

இந்த வகை சூராவளிகளுக்க டஸ்ட் டெவில் என்று பெயர் அதாவது தூசுகளின் சாத்தான். இந்த சூராவளி அதிகமாக பாலைவனங்களில் வீசுவதுதான் வழக்கம். இவைகள் உச்சி வெயில் மற்றும் மதிய நேரங்களில் அதிகமாக வீசுகின்றன. இவைகள் மணிக்கு 70 மைல்கள் வேகத்தில் சுழன்றடிக்கும் ஆற்றல் பெற்றிருக்கின்றன. இவைகள் மிகவும் பலவீனமான சூராவளிகளாகும் இவைகளுக்கு மேகங்களுடன் எந்த தொடர்பும் காணப்படாது மாறாக காற்றின் அழுத்தம் இவ்வகை சூரைக் காற்றை வீசிக்கொண்டு சில நிமிடங்களில் தன் சக்தியை இழந்துவிகின்றன. தூசுப்படலத்தை தட்டிச் செல்வதால் கண்களுக்கு மிகவும் பாதிப்புகள் ஏற்படுத்துகின்றன. சற்று அதிகமாக வீசினால் ஒரு வாகத்தை தலை குப்புற கவிழ்த்துவிடும் ஆற்றல் பெற்றிருக்கும்.

FIREWHIRLS

நெருப்புச் சுறாவளிகள் அதாவது சூராவளி சூழலும் போது அதன் உராய்வினால் காய்ந்த இழை தழைகள் கருகி நெருப்பு உண்டாகிறது இந்த நெருப்புச் ஜுவாலைகளை சூராவளி தன்னுள் இழுத்தபடியே பிற இடங்களுக்கு பரவி நாசத்தை ஏற்படுத்தும் ஆற்றல் பெற்றுள்ளன. இவைகள் பெரும்பாலும் விவசாய நிலங்கள் மற்றும் காடுகள் உள்ள பகுதிகளில் பேரிழப்பை ஏற்படுத்திவிடுகின்றன.

இந்த நெருப்புச் சூராவளிகள் 1923ம் ஆண்டு ஜப்பான் நாட்டில் உள்ள டோக்கியோவின் Hifukusho-Ato என்ற கிராமத்தில் சுமார் 38,000த்திற்கும் மேற்பட்ட மனிதர்களை வெரும் 15 நிமிட இடைவெளியில் நெருப்பினால் பொசுக்கி அழித்துள்ளது. இவைகள் பெரும்பாலும் 10 முதல் 50 மீட்டர் அகல உயரமும் 10 அடி அகலம் கொண்டதாகவும் காணப்படும். இச்சுறாவளிகள் சூழன்றடிக்கும் போது காற்றின் வேகம் மணிக்கு 160 கீ.மீ என்ற வேகத்தில் காணப்படும். 49 அடி உயரமுள்ள மரத்தை கூட சில வினாடிகளில் அழித்துவிடும்

நன்றி
சென்னை > பெரோஸ்
Photo: சூராவளி  பற்றி  தெரிந்து கொள்வோம் !!!

சூராவளி என்பது ஒருவகை சுழலும் காற்றாகும். இந்த காற்றின் கட்டுக்கடங்காத வேகத்தில் சுழன்றபடியே மேகங்களை தொட்டுக் கொண்டு நிலப்பரப்பை சூரையாடி பயிர்களையும், வீடுகளையும் நாசம் செய்துவிடும் ஆற்றல் கொண்டவைகளாகும். சூராவளி என்பது ஒரு புனல் (Funnel) வடிவத்தில் காணப்படும் பயங்கரமான சூராவளியின் மேற்பகுதி மேகத்தை தொட்டு கிணறு போன்ற அகன்று காணப்படும் மேலும் இதன் வால் பகுதி கூர்மையான வாள் போன்று வலைந்து காணப்படும். இவற்றிற்கு ஆங்கில்தில் டொர்னடோ (Tornado) என்று பெயர்.

சூராவளியின் வேகம் 

பல்வேறு சூராவளிகள் குறைந்த பட்ச வேகமாக மணிக்கு 40 மைல்கள் என்ற வேகத்தில் சுழன்றடிக்கும் (அதாவது 64 கி.மீ வேகம்) மற்றும் அதிக பட்சமாக மணிக்கு 110 மைல்கள் என்ற வேகத்தில் சூழன்றடிக்கும் (அதாவது மணிக்கு 177 கி.மீ வேகம்) இந்த வேகம் சுமார் 250 அடி (75 மீட்டர்) நிலப்பரப்பை ஒரு வினாடியில் தாக்கும் வல்லமை படைத்தது.

சூராவளிகள் சுழல ஆரம்பிக்கும் போது எதிர்பாராத விதமாக காற்றின் வேகம் 300 மைல்களாக இருந்தால் இந்த சூராவளிகள் குறைந்தபட்சடம் 1 மைல் (அதாவது 1.6 கி.மீ) பரப்பளவு கொண்ட நிலப்பரப்பை ஒரு வினாடியில் துவம்சம் செய்து அப்படியே மெல்ல நகர்ந்து பல மைல்கள் நகர ஆரம்பிக்கும். இவைகள்தான் சூராவளிகள் அதாவது வானத்தின் சுனாமி என்று கூட கூறலாம்.

சூராவளி – டொர்னடோ எவ்வாறு உருவாகிறது

ஒரு குறிப்பிடட திசையிலிருந்து வீசக்கூடிய குளிர்ந்த காற்று மற்றும் வரண்ட காற்றும் அதன் எதிர்திசையிலிருந்து வீசக்கூடிய சூடான காற்று மற்றும் ஈரப்பதமான காற்றுடன் மோதுகிறது. இப்படிப்பட்ட பல்வேறு வகையான காற்றுகள் ஒன்றுடன் ஒன்று மோதும்போது அதிலிருந்து ஒரு வெளிப்படும் விசையே சூராவளி எனப்படுகிறது. இந்த மோதல்கள் அதிகமான அளவு நடைபெறும்போது அந்த சூராவளிக்கு பலம் கூடுகிறது. இதற்கு பெயர்தான் டொர்னடோ எனப்படுகிறது.

இந்த சூராவளி காற்றின் அறிகுறிகள் என்ன?

டொர்னடோ என்ற பயங்கரமான சூராவளி வீசுவதற்கு முன்னர் ஆலங்கட்டி மழைகள் ஏற்படுமாம் அந்த ஆலங்கட்டியின் தாக்கம் வீடுகளின் கூரைகளை துவம்சம் செய்துவிடுமாம்.

இந்த சூராவளி காற்றின் வேகம் என்ன?

வானத்தில் ஒரு பயங்கரமான சூராவளி உருவாகிவிட்டால் அந்த சூராவளி நிலத்தை தொடுவதற்கு எடுத்துக்கொள்ளும் நேரம் வெறும் 12-13 நிமிடங்கள் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். 13ம் வினாடியிலிருந்து இந்த சூராவளி நிலத்தை பதம் பார்த்து அக்குவேறு ஆணிவேராக பிடிங்கி அதை தனக்குள் வசப்படுத்திக்கொண்டு அதே வேகத்தில் நகர ஆரம்பிக்குமாம்.

இந்த சூராவளி காற்றின் சக்தி எத்தகையது?

மனிதர்கள், கால்நடைகள் கூட இந்த சூராவளியில் சிக்கி வீசப்படுகிறது. சாலையில் நிருத்தப்பட்டிருக்கும் வாகனங்கள் தூக்கி வீசப்பட்டு வீட்டின் கூரைகளின் மேல் நிற்குமாம் அவ்வளவு பயங்கரமானது இந்த அதிபயங்கர சூராவளிகள்.

சூராவளியின் வகைகள் பார்ப்போம்

இந்த வகை சூராவளிகள் SUPERCELL TORNADOES என்று அழைக்கப்படுகின்றன. இந்த வகை சூராவளி மேகங்களை கருவாக கொண்டு சூழன்றடிக்கும்.  ஒரு பக்கம் மேகங்கள் மழைச்சாரல்களை வீசிக்கொண்டும் மற்றொரு பக்கம் சூரைக் காற்றை சூழன்றபடியும் வீசி பல கிலோமீட்டர்களை நாசம் செய்யக்கூடிய ஆற்றல் பெற்றிருக்கும். இந்த வகை சூராவளிகள் ஒரு நிலத்தை தொட்டுவிட்டால் அதன் வேகம் 200 கி.மீ.க்கும் குறைவாக இருக்காது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

LANDSPOUT (லேன்ட் ஸ்பவ்ட்)

நிலத்தில் உள்ள மணல் மேடுகளை பதம்பார்த்து மணலை வீசியவண்ணம் சூழன்றடிக்கும் இந்த கொடிய சூராவளிக்கு லேன்ட் ஸ்பவ்ட் என்று பெயர். இது முதலில் கண்ட SUPERCELL TORNADOES-களுக்கு அடுத்தபடியாக வீசக்கூடிய சூராவளியாகும். இவைகள் கனத்த மேகங்களை இழுத்துக்கொண்டு சுழலாமல் பலவீனமான மேகங்களைக் கொண்டு காற்றை சுழன்றடிக்கும் ஆற்றலை பெற்றிருக்கிறது.

GUSTNADO

இந்த GUSTNADO என்றழைக்கப்படும் சூராவளி பலவீனமானதாகும். இவைகள் சற்று வேகம் குறைந்ததாகவும் விரைவில் நின்றுவிடக் கூடியதாகவும் காணப்படும். இந்த சூரைக்காற்றினால் தூசுப்படலம் சற்று அதிகமாக காணப்படும். இந்த வகை சூராவளிகளுக்கு  மேகங்களுடன் நெருங்கய தொடர்பிருக்காது மாறாக காற்றின் வேகம்தான் இவைகளையும் உருவாக்குகிறது.

WATERSPOUT

வாட்டர் ஸ்பவ்ட் எனப்படும் இந்த சூராவளிகள் நீர்நிலைகளில் ஏற்படக்கூடிய சூராவளிகளாகும். இவைகள் நிலத்தில் வீசக்கூடிய SUPERCELL எனப்படும் அதிபயங்கர சூராவளிகளின் வடிவ மேயாகும் ஆனால் இவைகள் நீரில் சூழன்றடிப்பதால் இதனால் ஏற்படும் பாதிப்பகள் மனிதனுக்கு மிக குறைவுதான்.  இந்த சூராவளிகள் நிலத்தை தொடுவதற்குள் அதன் சக்தியை இழந்து விடுகின்றன.

DUST DEVILS

இந்த வகை சூராவளிகளுக்க டஸ்ட் டெவில் என்று பெயர் அதாவது தூசுகளின் சாத்தான். இந்த சூராவளி அதிகமாக பாலைவனங்களில் வீசுவதுதான் வழக்கம். இவைகள் உச்சி வெயில் மற்றும் மதிய நேரங்களில் அதிகமாக வீசுகின்றன. இவைகள் மணிக்கு 70 மைல்கள் வேகத்தில் சுழன்றடிக்கும் ஆற்றல் பெற்றிருக்கின்றன. இவைகள் மிகவும் பலவீனமான சூராவளிகளாகும் இவைகளுக்கு மேகங்களுடன் எந்த தொடர்பும் காணப்படாது மாறாக காற்றின் அழுத்தம் இவ்வகை சூரைக் காற்றை வீசிக்கொண்டு சில நிமிடங்களில் தன் சக்தியை இழந்துவிகின்றன. தூசுப்படலத்தை தட்டிச் செல்வதால் கண்களுக்கு மிகவும் பாதிப்புகள் ஏற்படுத்துகின்றன. சற்று அதிகமாக வீசினால் ஒரு வாகத்தை தலை குப்புற கவிழ்த்துவிடும் ஆற்றல் பெற்றிருக்கும்.

FIREWHIRLS

நெருப்புச் சுறாவளிகள் அதாவது சூராவளி சூழலும் போது அதன் உராய்வினால் காய்ந்த இழை தழைகள் கருகி நெருப்பு உண்டாகிறது இந்த நெருப்புச் ஜுவாலைகளை சூராவளி தன்னுள் இழுத்தபடியே பிற இடங்களுக்கு பரவி நாசத்தை ஏற்படுத்தும் ஆற்றல் பெற்றுள்ளன. இவைகள் பெரும்பாலும் விவசாய நிலங்கள் மற்றும் காடுகள் உள்ள பகுதிகளில் பேரிழப்பை ஏற்படுத்திவிடுகின்றன.

இந்த நெருப்புச் சூராவளிகள் 1923ம் ஆண்டு ஜப்பான் நாட்டில் உள்ள டோக்கியோவின் Hifukusho-Ato என்ற கிராமத்தில் சுமார் 38,000த்திற்கும் மேற்பட்ட மனிதர்களை வெரும் 15 நிமிட இடைவெளியில் நெருப்பினால் பொசுக்கி அழித்துள்ளது. இவைகள் பெரும்பாலும் 10 முதல் 50 மீட்டர் அகல உயரமும் 10 அடி அகலம் கொண்டதாகவும் காணப்படும். இச்சுறாவளிகள் சூழன்றடிக்கும் போது காற்றின் வேகம் மணிக்கு 160 கீ.மீ என்ற வேகத்தில் காணப்படும். 49 அடி உயரமுள்ள மரத்தை கூட சில வினாடிகளில் அழித்துவிடும் 

நன்றி 
சென்னை > பெரோஸ்

மூட்டுவலியும் (Arthritis) முடக்காத்தானும் (Balloon Vine) !!

நம்மில் பலரும் மூட்டுவலியினால் (ஆர்த்ரைடிஸ்-Arthritis) அவதிப்படுகிறோம். இதற்கான மூலகாரணம் நாம் அறியவேண்டியது ஒன்று நாம் சிறுவயதில் ஓடி ஆடி விளையாடுகிறோம். சிறுவயதில் சிறுநீர் கழிக
்க வேண்டுமானால் உடனடியாக செய்துவிடுகிறோம். வயதானால் நல்ல டாய்லட் அல்லது வேறு பல காரணங்களால் அடக்கிக் கொள்கிறோம். சிறுநீரகங்களில் சிறுநீர் நிரம்பி இருந்தாலும், நாம் சரியான இடத்திற்காக, நேரத்திற்காக அடக்கி வைக்கிறோம் இந்த நிலை பெண்களுக்கு 10 வயது முதலும், ஆண்களுக்கு 18 வயது முதலும் ஆரம்பிக்கும். இந்த நேரங்களில் நமது சிறுநீரகங்கள் சிறுநீரை வெளியேற்ற இயலாமல் தவிக்கிறது.

அப்பொழுது மூளையிலிருந்து செல்லும் உத்தரவு மூலமாக தற்காலிகமாக சிறுநீரகம் தன் வேலையை நிறுத்தி வைக்கிறது. இதனால் நம் உடலில் ஓடும் ரத்தம், சிறுநீரை வெளியேற்றாமல் அப்படியே எல்லா இடங்களுக்கும் செல்கிறது. அவ்வாறு செல்லும்போது இரத்தத்தில் உள்ள யூரிக் ஆசிட் கிறிஸ்டல்ஸ் (uric acid crystals) மூட்டுகளில் படிந்து விடுகிறது. இந்தச் சிறு சிறு கற்கள் சுமார் சினோரியல் மெம்கிரேம் (நமது மூட்டுகள் நம் எண்ணத்திற்கு ஏற்ப அசைவதற்கு உதவும் ஒரு தசை) என்னும் இடத்தில் உட்கார்ந்து விடுகிறது. இது பல வருடங்களாக தொடர்ந்து நடைபெறுகிறது.

சிலருக்கு 35 வயதுக்கு மேல் காலை படுக்கையை விட்டு எழும்பொழுது இடுப்பு, பாதம், கை, கால் முட்டிகளில் அதிக வலி இருக்கும். இதுதான் ருமாட்டாயிட் ஆர்த்ரைட்டிஸின்(rheumatoid arthritis) ஆரம்ப நிலை.
இந்தியாவில் 65 சதவிகித மக்கள் இந்த வகை மூட்டு வலியினால் பாதிக்கப்படுகின்றனர். இதில் 85 சதவிகிதம் பெண்கள். பலவிதமான மருத்துவ முறைகளில் இந்த நோய்க்கு மூலகாரணம் கண்டுபிடித்து மருந்து அளிப்பதில்லை. நம் முன்னோர்கள் 2000 வருடங்களுக்கு முன்பே இயற்கை மருத்துவ குணம் கொண்ட கீரையை நமக்கு அறிமுகப்படுத்தி உள்ளார்கள். அதுதான் முடக்கத்தான் கீரை.

ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ் யுனிவர்சிட்டியிலிருந்து இந்தியாவின் சில மூலிகைகளை காப்பாற்றியும், அதில் உள்ள மருத்துவக் குணங்களையும், எந்த மூலக்கூறு ஒவ்வொரு மூலிகையிலும் எந்தெந்த வியாதிகளுக்கு நிவாரணம் அளிக்கிறது என்பதைப் பற்றியும் கூட்டு முயற்சியில் செயல்பட்டார்கள்.

அப்போது முடக்கத்தானிலுள்ள தாலைட்ஸ் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் யூரிக் ஆசிட்டைக் கரைக்கும் சக்தி படைத்திருப்பதை அறிந்து, மேலும் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வெற்றியும் கண்டுள்ளார்கள்.
இதன் சிறப்புக் குணம் நமது மூட்டுகளில் எங்கு யூரிக் ஆசிட் இருந்தாலும் அதைக் கரைத்து. சிறு நீரகத்திற்கு எடுத்துச்சென்று விடும். இதுபோல் எடுத்துச்சென்று சிறுநீராக வெளியேற்றும்போது, அது சோடியம் மற்றும் பொட்டாசியம் இவைகளை நம் உடலிலே விட்டு விடுகிறது. இது ஒரு மிக முக்கியமான இணையான மாற்றத்தை நம் உடலில் ஏற்படுத்துகிறது. இதனால் நமக்கு உடல் சோர்வு ஏற்படுவதில்லை. மூட்டுகளுக்கு கனிப்பொருள் சக்தியும் அளிக்கிறது.

முடக்கத்தான் கீரையை தோசை மாவில் கரைத்து, தோசை செய்து சாப்பிட வேண்டும். அந்தக் கீரையைக் கொதிக்க வைத்து உண்ணக் கூடாது. அதனுள் உள்ள மருத்துவ சத்துக்கள், கொதிக்க வைப்பதின் மூலம் அழிந்து விடும்.

மழைக்காலங்களில் மட்டுமே இந்தக் கீரை கிடைக்கும். முடக்கத்தான் கீரை, மருத்துவ குணங்கள் நிறைந்த, ஒரு அரிய‌ கீரையாகும். தமிழ்நாட்டு கிராமங்களில், எல்லோர் வீட்டுக் கொல்லைப் புறத்திலும் இது படர்ந்து கிடக்கும்.
Photo: மூட்டுவலியும் (Arthritis) முடக்காத்தானும் (Balloon Vine) !!

நம்மில் பலரும் மூட்டுவலியினால் (ஆர்த்ரைடிஸ்-Arthritis) அவதிப்படுகிறோம். இதற்கான மூலகாரணம் நாம் அறியவேண்டியது ஒன்று நாம் சிறுவயதில் ஓடி ஆடி விளையாடுகிறோம். சிறுவயதில் சிறுநீர் கழிக்க வேண்டுமானால் உடனடியாக செய்துவிடுகிறோம். வயதானால் நல்ல டாய்லட் அல்லது வேறு பல காரணங்களால் அடக்கிக் கொள்கிறோம். சிறுநீரகங்களில் சிறுநீர் நிரம்பி இருந்தாலும், நாம் சரியான இடத்திற்காக, நேரத்திற்காக அடக்கி வைக்கிறோம் இந்த நிலை பெண்களுக்கு 10 வயது முதலும், ஆண்களுக்கு 18 வயது முதலும் ஆரம்பிக்கும். இந்த நேரங்களில் நமது சிறுநீரகங்கள் சிறுநீரை வெளியேற்ற இயலாமல் தவிக்கிறது.

அப்பொழுது மூளையிலிருந்து செல்லும் உத்தரவு மூலமாக தற்காலிகமாக சிறுநீரகம் தன் வேலையை நிறுத்தி வைக்கிறது. இதனால் நம் உடலில் ஓடும் ரத்தம், சிறுநீரை வெளியேற்றாமல் அப்படியே எல்லா இடங்களுக்கும் செல்கிறது. அவ்வாறு செல்லும்போது இரத்தத்தில் உள்ள யூரிக் ஆசிட் கிறிஸ்டல்ஸ் (uric acid crystals) மூட்டுகளில் படிந்து விடுகிறது. இந்தச் சிறு சிறு கற்கள் சுமார் சினோரியல் மெம்கிரேம் (நமது மூட்டுகள் நம் எண்ணத்திற்கு ஏற்ப அசைவதற்கு உதவும் ஒரு தசை) என்னும் இடத்தில் உட்கார்ந்து விடுகிறது. இது பல வருடங்களாக தொடர்ந்து நடைபெறுகிறது.

சிலருக்கு 35 வயதுக்கு மேல் காலை படுக்கையை விட்டு எழும்பொழுது இடுப்பு, பாதம், கை, கால் முட்டிகளில் அதிக வலி இருக்கும். இதுதான் ருமாட்டாயிட் ஆர்த்ரைட்டிஸின்(rheumatoid arthritis) ஆரம்ப நிலை.
இந்தியாவில் 65 சதவிகித மக்கள் இந்த வகை மூட்டு வலியினால் பாதிக்கப்படுகின்றனர். இதில் 85 சதவிகிதம் பெண்கள். பலவிதமான மருத்துவ முறைகளில் இந்த நோய்க்கு மூலகாரணம் கண்டுபிடித்து மருந்து அளிப்பதில்லை. நம் முன்னோர்கள் 2000 வருடங்களுக்கு முன்பே இயற்கை மருத்துவ குணம் கொண்ட கீரையை நமக்கு அறிமுகப்படுத்தி உள்ளார்கள். அதுதான் முடக்கத்தான் கீரை.

ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ் யுனிவர்சிட்டியிலிருந்து இந்தியாவின் சில மூலிகைகளை காப்பாற்றியும், அதில் உள்ள மருத்துவக் குணங்களையும், எந்த மூலக்கூறு ஒவ்வொரு மூலிகையிலும் எந்தெந்த வியாதிகளுக்கு நிவாரணம் அளிக்கிறது என்பதைப் பற்றியும் கூட்டு முயற்சியில் செயல்பட்டார்கள்.

அப்போது முடக்கத்தானிலுள்ள தாலைட்ஸ் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் யூரிக் ஆசிட்டைக் கரைக்கும் சக்தி படைத்திருப்பதை அறிந்து, மேலும் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வெற்றியும் கண்டுள்ளார்கள்.
இதன் சிறப்புக் குணம் நமது மூட்டுகளில் எங்கு யூரிக் ஆசிட் இருந்தாலும் அதைக் கரைத்து. சிறு நீரகத்திற்கு எடுத்துச்சென்று விடும். இதுபோல் எடுத்துச்சென்று சிறுநீராக வெளியேற்றும்போது, அது சோடியம் மற்றும் பொட்டாசியம் இவைகளை நம் உடலிலே விட்டு விடுகிறது. இது ஒரு மிக முக்கியமான இணையான மாற்றத்தை நம் உடலில் ஏற்படுத்துகிறது. இதனால் நமக்கு உடல் சோர்வு ஏற்படுவதில்லை. மூட்டுகளுக்கு கனிப்பொருள் சக்தியும் அளிக்கிறது.

முடக்கத்தான் கீரையை தோசை மாவில் கரைத்து, தோசை செய்து சாப்பிட வேண்டும். அந்தக் கீரையைக் கொதிக்க வைத்து உண்ணக் கூடாது. அதனுள் உள்ள மருத்துவ சத்துக்கள், கொதிக்க வைப்பதின் மூலம் அழிந்து விடும்.

மழைக்காலங்களில் மட்டுமே இந்தக் கீரை கிடைக்கும்.  முடக்கத்தான் கீரை, மருத்துவ குணங்கள் நிறைந்த, ஒரு அரிய‌ கீரையாகும். தமிழ்நாட்டு கிராமங்களில், எல்லோர் வீட்டுக் கொல்லைப் புறத்திலும் இது படர்ந்து கிடக்கும்.

கணினி மெதுவாக இயங்க காரணம் என்ன !!

கணினி மெதுவாக இயங்க காரணம் என்ன !!

புதியதில் வேகமாக இயங்கிய நம் கணினி சில மாதங்களில் மிக மெதுவாக இயங்க ஆரம்பித்து விடும். இதற்கு நாம் சரியாக பரமரிக்காதது தான் மிக முக்கியமான காரணம். இப்படி ஆகாமல் இருக்க அடிக்கடி நீங்கள் உங்கள் கணினியை சரி
யாக பராமரித்தல் அவசியம். இந்தப் பதிவில் எப்படி இது ஏற்படுகிறது, எப்படி சரி செய்வது போன்ற முறைகளை காண்போம்.

காரணங்கள்:

மிகக் குறைந்த Hard Disk Space
நிறைய Program-கள் இயங்கிக் கொண்டு இருப்பது.
Data Corruption
அதிக சூடாகுதல்
Operation System ஆனது Corrupt ஆகி இருத்தல்.
Hardware Problems
Driver பிரச்சினை
இந்த ஏழும் மிக முக்கியமான காரணங்கள், இனி தீர்வுகளை காணலாம்.

Reboot :

உங்கள் கணினியை Restart அல்லது ஒரு முறை Shutdown செய்து ON செய்வது மூலம் இதை தவிர்க்கலாம்.

Hard Disk Space

இது மிக மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம். நீங்கள் எந்த Drive-இல் Operating System இன்ஸ்டால் செய்து உள்ளீர்களோ, அதன் மொத்த அளவில், 25 சதவீதம் காலி இடம் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுதல் அவசியம்.

மற்ற Drive-களில் குறைந்த பட்சம் 500MB - 1GB காலியாக இருத்தல் நலம்.

Hard drive corrupted or fragmented

இந்த இரண்டையும் நீங்கள் மெதுவாக இயங்கும் போதெல்லாம் கவனிக்க வேண்டும்.

Run ScanDisk - இது Hard Disk - இல் ஏதேனும் பிரச்சினை உள்ளதா என்று சோதிக்க பயன்படுகிறது.

இதை செய்ய - My Computer >> Right Click Any Drive (C:, D:, E:. etc...) Properties>> Tools>> Error Check

இதில் Start என்பதை கிளிக் செய்யவும். Scan ஆரம்பித்து விடும்.

அந்த பகுதியில் வரும் "Automatically fix errors" என்பதை கிளிக் செய்தால், அடுத்த முறை கணினி On/Restart ஆகும் போது இந்த சோதனை நடைபெறும்.

Run Defrag - இதை செய்ய My Computer >> Right Click Any Drive (C:, D:, E:. etc...) Properties>> Tools>> Defragment now என்பதை தெரிவு செய்து, வரும் பகுதியில் Drive தெரிவு செய்து, Defragment என்பதை என்பதை கிளிக் செய்யவும். இந்த செயல் இப்போது தொடங்கி விடும்.

தேவை இன்றி இயங்கும் Programs

சில நேரங்களில் நம் கணினியில் சில ப்ரோக்ராம்கள் பின்னணியில் இயங்கி கொண்டிருக்கும், இவை நம் கணினியின் வேகத்தை குறைக்கும். CTRL+ALT+DELETE அழுத்தி "Task Manager" பகுதிக்கு வரவும். இதில் "Applications" Tab -இல் தேவை இல்லாத ப்ரோக்ராம் மீது ரைட் கிளிக் செய்து "Go To Process" கொடுத்தால் "Process" பகுதியில் அந்த மென்பொருளின் இயக்கம் தெரிவு செய்யப்பட்டு இருக்கும். இங்கே மீண்டும் ரைட் கிளிக் செய்து "End Process" தந்து விடும்.

கணினி ON ஆகும் போதே சில ப்ரோக்ராம்கள் இயங்க ஆரம்பித்து விடும், இது வீண். அவற்றை நிரந்தரமாக நிறுத்த கம்ப்யூட்டர் வேகமாக இயங்க msconfig என்ற பதிவை படிக்கவும்.

Virus பிரச்சினைகள்

இது எல்லோருக்கும் தெரிந்த பிரச்சினை. நல்ல Antivirus மென்பொருள் மட்டுமே இதற்கு தீர்வு.

Device பிரச்சினைகள்

உங்கள் கணினியில் உள்ள Device கள் கூட உங்கள் கணினியை மெதுவாக இயங்க வைக்கும். இவற்றை செக் செய்ய. Right Click On My computer>> Manage என்பதை கிளிக் செய்து அதில் "Device Manager" பகுதிக்கு செல்லவும்.

இங்கே உள்ள Device-களில் கீழே காண்பது போல வந்தால் அவற்றில் பிரச்சினை என்று அர்த்தம்

இவற்றில் முதலாவது போல மஞ்சள் நிறத்தில் வந்தால் அதன் மீது ரைட் கிளிக் செய்து Remove செய்து விட்டு கணினியை Restart செய்யவும். இப்போது மீண்டும் Detect ஆகும்.

இரண்டாவது போல பெருக்கல் குறி வந்தால் Disable ஆகி இருக்கலாம், அப்படி என்றால் ரைட் கிளிக் செய்து enable தரவும். இது enable ஆகியும் பிரச்சினை என்றால் Remove செய்து விட்டு Restart செய்யவும்.

மறுபடியும் பிரச்சினை குறிபிட்ட Device க்கு நீங்கள் Latest Driver ஐ தரவிறக்க வேண்டும்.

கம்ப்யூட்டர்/Processor சூடாகுதல்

மிக அதிக நேரம் இயங்கினால் இந்த பிரச்சினை வரும். அத்தோடு உங்கள் கணினியின் CPU பகுதியில் சேர்ந்து இருக்கும் குப்பைகள் இந்த பிரச்சினையை உருவாக்கும். எனவே CPU-வை கழட்டு சுத்தப்படுத்த வேண்டும். இந்த நேரத்தில் மிக கவனமாக சுத்தம் செய்ய வேண்டும். எந்த Wire, அல்லது Device-க்கும் எந்த பிரச்சினையும் வரமால் பார்த்துக் கொள்ள வேண்டும்.

எனவே இதை கணினி பற்றி நன்கு அறிந்த ஒருவரை அருகில் வைத்து செய்தல் நலம்.

RAM Memory Increase செய்தல்

உங்கள் கணினியில் RAM Memory பொறுத்து உங்கள் கணினி வேகம் மாறும். இப்போதைய நிலைமைக்கு 2GB RAM பயன்படுத்துதல் நலம்(கணினியை பொறுத்து மாறும், எனவே இது குறைந்த பட்ச அளவு). புதிய கணினி வாங்குவோர் இந்த விசயத்தில் எப்படி தெரிவு செய்வது என்பதை புதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன? என்ற பதிவில் படிக்கலாம்.

உங்கள் RAM Memory எவ்வளவு என்று அறிய Right Click On My Computer >> Properties என்பதில் General Tab-இல் பார்க்கவும்.

Registry Cleaner பயன்படுத்துதல்

பெரும்பாலும் மேலே சொன்ன வழிகளுக்கு உங்கள் கணினி வேகமாக இயங்க வேண்டும். அப்படியும் மெதுவாகத் தான் இயங்குகிறது என்றால் சில Registry Cleaner மென்பொருட்களை பயன்படுத்தி முயற்சிக்கலாம்.

குப்பைகளை நீக்கி கணினியை வேகமாக இயங்கச் செய்வது எப்படி? என்ற பதிவில் CCleaner என்ற Registry Cleaner மென்பொருள் குறித்து விவரிக்கப்பட்டுள்ளது. இதை முயற்சி செய்யவும்.

Operation System இன்ஸ்டால் செய்தல்

மேலே சொன்ன எதுவும் வேலைக்கு ஆகவில்லை என்றால் புதிய Operating System இன்ஸ்டால் செய்து முயற்சிக்கவும்.

Hardware பிரச்சினைகள்

மேலே கூறிய எல்லாம் செய்தும் பிரச்சினை என்றால் Hard Drive, RAM, Mother Board, CPU போன்றவற்றில் ஏதேனும் பிரச்சினை என்று அர்த்தம். இனி Service Center-ஐ நாடுதல் நலம்.

பழைய கணினி

உங்கள் கணினி ஐந்து வருடத்துக்கும் அதிகமாக உழைத்து இருந்தால் அதை மாற்றி விட்டு புதிய கணினியை வாங்குதல் நலம்.

அவ்வளவு தான் நண்பர்களே. சற்றே பெரிய பதிவாகினும் உங்களுக்கு கட்டாயம் பயன்படும் என்று நினைக்கிறேன்.
Photo: கணினி மெதுவாக இயங்க காரணம் என்ன !!

புதியதில் வேகமாக இயங்கிய நம் கணினி சில மாதங்களில் மிக மெதுவாக இயங்க ஆரம்பித்து விடும். இதற்கு நாம் சரியாக பரமரிக்காதது தான் மிக முக்கியமான காரணம். இப்படி ஆகாமல் இருக்க அடிக்கடி நீங்கள் உங்கள்  கணினியை சரியாக பராமரித்தல் அவசியம். இந்தப் பதிவில் எப்படி இது ஏற்படுகிறது, எப்படி சரி செய்வது போன்ற முறைகளை காண்போம்.