Saturday, November 4, 2017

பௌர்ணமியும் - அன்னாபிஷேகம்யும் அதன்சிறப்பும்

உலகில் உள்ள உயிர்களுக்கெல்லாம் உயிராய் செயல்படுவது அன்னம். அத்தகைய அன்னத்தை இறைவனுக்கு அபிஷேகம் செய்விப்பது அன்னாபிஷேகம் என்று சிறப்பாக சொல்லப்படுகின்றது. எத்தனையோ பொருட்கள் இருக்க இறைவனுக்கு அன்னாபிஷேகம் செய்விப்பது ஏன்? எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள் அன்னவடிவில் இருப்பதாக சாமவேதத்தில் கூறப்படுகின்றது. அன்னமும் லிங்க வடிவில் உள்ளது. அன்னத்தால் இறைவனை அபிஷேகிப்பது மிகவும் விஷேசமானது ஆகும்.
#பௌர்ணமியும்அதன்சிறப்பும்
பௌர்ணமி மாதத்திற்கு ஒருமுறை வரும். அந்நாளில் வீடுகளில் தீபம் வைத்து வழிபடுவது சிறப்பு. ஒவ்வொரு மாதத்திற்கும் வரும் பௌர்ணமியில் ஒரு சிறப்பு அடங்கியுள்ளது. அதை அறிந்து விரதமிருந்தால் நன்மைகள் வீடு தேடி வரும். தமிழ் மாதத்தில் வரும் பௌர்ணமியின் சிறப்பை இங்கு பார்ப்போம்.
🌖 #சித்ராபௌர்ணமி - சித்ரகுப்தனின் பிறந்தநாள்.
🌖 #வைகாசிபௌர்ணமி - முருகனின் பிறந்தநாள்.
🌖 #ஆனிப்பௌர்ணமி - இறைவனுக்கு கனிகளை படைக்கும் நாள்.
🌖 #ஆடிப்பௌர்ணமி - திருமால் வழிபாட்டிற்கு உகந்தது.
🌖 #ஆவணிப்பௌர்ணமி - ஓணம், ரக்ஷாபந்த திருநாள்.
🌖 #புரட்டாசிபௌர்ணமி - உமாமகேசுவர பூஜை உகந்த நாள்.
🌖 #ஐப்பசிபௌர்ணமி - சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் நடைப்பெறும்.
🌖 #கார்த்திகைப்பௌர்ணமி - திருமால், பிரம்மா ஆகியோர் சிவபெருமானின் அடிமுடி காண முயன்ற நிகழ்வு.
🌖 #மார்கழிப்பௌர்ணமி - சிவபெருமான் நடராஜராக ஆனந்ததாண்டவம் ஆடிய நாள்.
🌖 #தைப்பௌர்ணமி - சிவபெருமானுக்கு பெருவிழா நடத்தும் நாள்.
🌖 #மாசிப்பௌர்ணமி - பிரம்மனின் படைப்பு தொழில் துவங்கிய நாள்.
🌖 #பங்குனிப்பௌர்ணமி - சிவபெருமான் உமையம்மை திருமண நாள்.
ஒவ்வொரு மாத பௌர்ணமியின் சிறப்பையும் அறிந்து பூஜை மற்றும் தீபம் ஏற்றினால் நன்மைகள் தேடி வரும்.
#பரமானந்தம்அளிக்கும்
#அன்னாபிஷேகவைபவம்...!!
ஐப்பசி பவுர்ணமி அன்று சந்திரன் தனது அமிர்த கலையாகும்
பதினாறு கலைகளுடன் பூரண சோபையுடன் பிரகாசிக்கிறது..
ஆண்டுக்கு ஒருமுறை ஐப்பசி மாத பௌர்ணமி அன்று சிவாலயங்களில் சாயரட்சையின் போது சிவபெருமானின் அருவுருவமான லிங்கத்திருமேனிக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுவது சிறப்பு.!
தானத்தில் மிக உயர்ந்ததாகக் கூறப்படுவது அன்னதானம் மட்டுமே. அன்னமாகிய அரிசி சாதம் கொண்டு சிவலிங்கத்தை மூடி அபிஷேகம் செய்யும் அன்னாபிஷேகத்தின் போது,
வடித்த சாதத்தில் தீர்த்தம் விட்டு ஆறவைத்துப் பிறகு சிவவடிவத்தை முழுவதும் மறைக்கும் படியாக அன்னத்தைக் கொண்டு அபிஷேகம் செய்வார்கள்.
உண்டி (உணவு) கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்று புறநானூறும், மணிமேகலையும் அன்னதானத்தின் மகிமையைக் கூறுகின்றன.
உணவு அளிப்பதனால் உதரம் (வயிறு) நிறைந்து, உள்ளம் குளிர்ந்ததால் உண்டாகும் வாழ்த்துக்கள் என்றும் வீண்போவதில்லை.
நீள்வட்ட வடிவம் கொண்ட சிவ வடிவ ஆற்றல் பிரபஞ்சம் முழுதும் நீக்கமற நிறைந்திருக்கின்றது.
அன்னம் எனும் அரிசியின் வடிவம் கூட நீள்வட்ட வடிவம் தான்.
அன்னமும் ஒரு சிவவடிவம் தான்.
அண்டம் முழுக்க சிவவடிவம் தான். சிவபெருமானுக்கு செய்யப்படும் அபிஷேகம் முழுக்க சிவ வடிவமாகவே இருப்பதால் எண்ணற்ற சிவாலயங்களை தரிசனம் செய்த பெரும் பாக்கியம் கிடைக்கும்.
அன்னாபிஷேகம் சிவலிங்கத் திருமேனியின் எல்லா பாகங்களுக்குமாக முழுமையாகவே செய்யப்படும்.
அன்ன அபிஷேகம் மட்டும்தான் கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் அப்படியே வைக்கப்பட்டிருக்கும். அந்த சமயத்தில் யஜுர் வேத பாராயணமும், ருத்திரம், சமகம் போன்ற மந்திரங்களின் பாராயணமும் நடைபெறும்.
நாழிகை நேரம் முடிந்த உடன் அன்னத்தை அகற்றி விடுவார்கள்.
பின்னர் மீதமிருக்கும் ஐந்து வகைப் பொருட்கள் கொண்டு அபிஷேகம் நடைபெறும். லிங்கத்தின் ஆவுடையிலும் பாணத்தின் மீதும் சாத்தப்பட்ட அன்னம் மிகவும் கதிர்வீச்சுடன் இருக்கும்.
எனவே அதனை எவரும் உண்ணாமல் அப்படியே எடுத்துச் சென்று நீர்வாழ் உயிர்களுக்கு உணவாக கோயில் குளத்திலோ இல்லை ஆற்றிலோ கொண்டு கரைப்பார்கள்.
நமது இந்து மதம் எப்போதும் மனிதனை மட்டுமே முன்னிறுத்தி எதையும் இறைவனிடம் வேண்டுவதில்லை.
எல்லா உயிரினங்களும் வாழ வேண்டும். அவ்வாறு வாழ்ந்தால் தான் மனிதனுக்குத் தேவையான உணவு தடையின்றிக் கிடைக்கும் என்பதை இயற்கையின் சமன்பாட்டு விதியை நன்கு அறிந்திருந்தனர் நம் முன்னோர்.
அதனால்தான் அன்னாபிஷேகப் பிரசாதம் நீரில் வாழும் புழு, பூச்சிகள், மீன்கள், மற்ற நீர் வாழ் உயிரினங்கள் எல்லாமும் பெற வேண்டும் என்ற உயரிய நோக்கம் கொண்டு நீரில் கரைக்கப்படுகிறது.
நல்ல அதிர்வுகளும், உடலுக்குத் தேவையான கதிர் வீச்சுகளும் நிறைந்திருக்கும் பிரும்ம பாகத்தில் சாத்தப்பட்ட அன்னம் மனிதர்களுக்கே அளிக்கப்படுகிறது.
ஏனெனில் அவற்றைத் தாங்க சிறு உயிர்களால் முடியாது என்ற ஜீவகாருண்யமே காரணம்.
பிரசாதமாக வினியோகிக்கப்படும் அன்னத்தில் தயிர் சேர்த்துக் கொடுக்கப்படுகிறது.
இந்தப் பிரசாதத்தை உண்டால் நோய் நொடிகள் வராது, குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதிகம்.
சிவ பெருமான் அபிஷேகபிரியர் , மகா விஷ்ணு அலங்கார பிரியர் .
சிவ பெருமானுக்கு அபிஷேகம் செய்யக் காண்பது கண்கள் கொள்ளாக் காட்சியாக இருக்கும். பால், தயிர் போன்ற பொருட்கள் கொண்டு செய்யப்படுவது போல உலகத்திற்கு ஆதாரமாக இருக்கும் அன்னத்தை, அனைத்திற்கும் ஆதாரமாக இருக்கும் சிவபெருமானுக்கு செய்வது பெரும் புண்ணியத்தினைத் தரக்கூடியது.
அன்னாபிஷேகக் காட்சி அளவற்ற இன்பம் தரக்கூடியது. அன்னாபிஷேகத்தில் கலந்து கொள்வதால், அன்னதானம் செய்த புண்ணியமும் கிடைக்கின்றது. அன்னம் என்பது பிரம்மா, விஷ்ணு, சிவ சொரூபமாக கருதப்படுகிறது.
ஜீவன் கொடுக்கும் அன்னமும் சிவலிங்கம் ஆக மதிக்கப்படுகிறது. அன்னம் வேறு, ஆண்டவன் வேறல்ல. இரண்டும் ஒன்றுதான் இதையே சோத்துக்குள்ளே இருக்கிறார் சொக்க நாதர் என்றும் குறிப்பிடுவர்.
அபிஷேகப் பிரியரான சிவபெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்வது சிறப்புடையதாகும்.
சுவாமியின் மீது விழும் ஒவ்வொரு பருக்கையும் ஒரு லிங்கம் என்பது ஐதீகம்.
எனவே அன்று சிவாலயங்களுக்கு சென்று வழிபாடு செய்தால் கோடி சிவதரிசனம் செய்த பலன் கிடைக்கும்.
அன்னம் பாலிக்கும் தில்லை சிற்றம்பலம் என்று சிறப்பிக்கப்படும் சிதம்பரத்தில் தினமும் காலை 11 மணி அளவில் ரத்ன சபாபதிக்கு அன்னாபிஷேகம் நடைபெற்று அந்த அன்னம் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்படுகின்றது.
அன்னாபிஷேகம் செய்த சாதத்தை குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் உண்டால் பலன் நிச்சயம் உண்டு என்பது ஐதீகம்.
ஆகாயத்தில் பிறந்த காற்றின் துணையுடன் தீ எரிகிறது. நிலத்தில் விளைந்த நெல் அரிசியாகிறது.
அரிசி நீரில் மூழ்கி, தீயில் வெந்து அன்னமாகிறது. எனவே அன்னமும் பஞ்ச பூதங்களின் சேர்க்கையாகிறது.
இந்த அன்னத்தை அபிஷேக நிலையில் இறைவன் சிவபெருமானின் திருமேனி முழுவதும் சாத்தி நாம் வழிபடுவது, ஐம்பூதங்களும் அவருள் அடக்கம் என்பதை உணர்த்துகிறது.
அன்னாபிஷேக தினத்தில் சிவனை வணங்கினால் பஞ்சபூதங்களை வழிபட்ட புண்ணியம் கிடைப்பதோடு முக்தியும் கிடைக்கும்....!!
#ௐநமச்சிவாய.






No comments:

Post a Comment