என்.டி.ஆர் தேசிய விருதுக்கு ரஜினி, கமல்ஹாசன் தேர்வு ஆந்திர அரசு அறிவிப்பு | ஆந்திர அரசு சார்பில் நந்தி விருதுகள் நேற்று தில் அறிவிக்கப்பட்டன. இதில், என்.டி.ஆர் தேசிய விருதுக்கு ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 2014, 2015, 2016 ஆண்டுகளுக்கான ஆந்திர அரசின் நந்தி விருதுகள் உட்பட சிறப்பு விருதுகள் நேற்று மாலை ஹைதராபாத்தில் அறிவிக்கப்பட்டன. இதில் 2014-ல் சிறந்த நடிகர் பாலகிருஷ்ணா, வில்லன் ஜகபதி பாபு, சிறந்த படம் லெஜண்ட், சிறந்த நடிகை அஞ்சலி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். 2015-ம் ஆண்டு சிறந்த நடிகர் மகேஷ்பாபு, சிறந்த படம் பாகுபலி, சிறந்த நடிகை அனுஷ்கா, சிறந்த இயக்குநர் ராஜமவுலி, 2016-ம் ஆண்டு சிறந்த படம் பெள்ளி சூபுலு, சிறந்த நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மேலும், 2014-ம் ஆண்டுக்கான என்.டி.ஆர். தேசிய விருதுக்கு நடிகர் கமல்ஹாசன், 2015-ல் இயக்குநர் ராகவேந்திர ராவ், 2016-ல் நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவ்விருதுகள் விரைவில் வழங்கப்பட உள்ளதாக தேர்வு குழுவை சேர்ந்த நடிகை ஜீவிதா, எம்பி முரளி மோகன், கிரிபாபு ஆகியோர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment