நோபல் பரிசு வாங்கிய ராமகிருஷ்ணன் !!!!!
தமிழ்நாட்டில் உள்ள சிதம்பரத்தில் பிறந்த விஞ்ஞானி ராமகிருஷ்ணனுக்கு நோபல்பரிசு கிடைத்து உள்ளது. நோய் தடுப்பு மருந்து ஆராய்ச்சியில் மேற் கொண்ட புதியகண்டுபிடிப்புக்காக அவருக்கும், மேலும் 2 விஞ்ஞானிகளுக் க

ும் கூட்டாக இந்த பரிசுவழங்கப்பட்டு இருக்கிறது.
உலகிலேயே மிகப்பெரிய விருதாக கருதப்படுவது 'நோபல் பரிசு'.
ஐரோப்பா கண்டத்தில் உள்ள சுவீடன் நாட்டை சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரட் நோபல்நினைவாக ஆண்டுதோறும் இந்த பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இவர்தான் 'டைனமைட்'டை கண்டுபிடித்தவர்.
இலக்கியம், பொருளாதாரம், மருத்துவம், வேதியியல், இயற்பியல் ஆகியதுறைகளில் சாதனை படைத்தவர்களை 'ராயல் சுவீடன் அகாடமி' ஆண்டுதோறும்தேர்ந்து எடுத்து, நோபல் பரிசு வழங்கி கவுரவித்து வருகிறது.
நோபல் பரிசு ரூ.7 கோடி பரிசுத்தொகையை கொண்டது ஆகும்.
இந்த ஆண்டுக்கான (2009) நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே மருத்துவம், இயற்பியல்துறைகளுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
வேதியியல் துறைக்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த உயர்ந்த பரிசு தமிழ்நாட்டைச் சேர்ந்தஒருவருக்கு கிடைத்து உள்ளது.
இங்கிலாந்தில் வசிக்கும் 57 வயது தமிழரான விஞ்ஞானி வெங்கடராமன் ராமகிருஷ்ணனுக்கு 2009-ம்ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக 'ராயல் சுவீடன் அகாடமி' நேற்றுஅறிவித்தது. விஞ்ஞானி ராமகிருஷ்ணன் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரத்தில் பிறந்தவர்.
ராமகிருஷ்ணனுடன் அமெரிக்காவைச் சேர்ந்த தாமஸ் ஸ்டெயிட்ஸ் (வயது 69), இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்தஅடா யோனாத் ஆகியோர் வேதியியலுக்கான நோபல் பரிசை பகிர்ந்து கொண்டு உள்ளனர். அதாவதுவேதியியலுக்கான நோபல் பரிசை 3 பேரும் கூட்டாக பெறுகிறார்கள். இவர்களில் அடா யோனாத் பெண் ஆவார்.
நோய் எதிர்ப்பு (ஆன்டிபயாட்டிக்ஸ்) மருந்து தயாரிப்பதற்கு தேவையான வேதியியல் கண்டுபிடிப்புக்காகஇவர்களுக்கு இந்த விருது கிடைத்து உள்ளது. புரதச்சத்தை தரும் 'ரிபோசம்' என்ற வேதியியல் பொருள் பற்றிஇவர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சி நோய் எதிர்ப்பு மருந்து தயாரிக்க பெரிதும் உதவியாக இருக்கும்.
இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் நுண்ணணு உயிரியல் ஆய்வகத்தில் (எம்.ஆர்.சி.) 3 விஞ்ஞானிகளும் கூட்டாகஆய்வு மேற்கொண்டனர். இந்த குழுவுக்கு மூத்த விஞ்ஞானியான ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
தாமஸ் ஸ்டெயிட்ஸ் அமெரிக்காவில் உள்ள யேல் பல்கலைக்கழகத்தில் நுண்ணணு உயிரி இயற்பியல் மற்றும்உயிரி வேதியியல் துறையில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். பெண் விஞ்ஞானியான அடா யோனாத்இஸ்ரேலில் ரெகோவோட்டில் உள்ள வெய்ஸ்மான் விஞ்ஞான நிறுவனத்தில் உயிரியல் பேராசிரியராக இருந்துவருகிறார்.
தனக்கு நோபல் பரிசு கிடைத்து இருப்பது பற்றிய தகவல் கிடைத்ததும் விஞ்ஞானி ராமகிருஷ்ணன் மிகுந்தமகிழ்ச்சி அடைந்தார்.
அவர் கூறுகையில்; ஆராய்ச்சியில் என்னுடன் இணைந்து பணியாற்றிய விஞ்ஞானிகள், டாக்டர்கள்,மாணவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நான் மிகுந்த கடன்பட்டிருக்கிறேன் என்றார். கேம்பிரிட்ஜ் நுண்ணணுஉயிரியல் ஆய்வகம், உதா பல்கலைக்கழகம் ஆகியவை தங்கள் ஆராய்ச்சிக்கு பெரிதும் உதவியாகஇருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
நண்பர்களால் வெங்கி என்று அன்புடன் அழைக்கப்படும் விஞ்ஞானி வெங்கடராமன் ராமகிருஷ்ணன் 1952-ம்ஆண்டு சிதம்பரத்தில் பிறந்தார். 1971-ம் ஆண்டு குஜராத் மாநிலம் பரோடா பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி பட்டம்பெற்ற இவர், பின்னர் அமெரிக்கா சென்று 1976-ம் ஆண்டு ஓஹியோ பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறையில்டாக்டர் பட்டம் பெற்றார். அதன் பிறகு அவர் உயிரியியல் துறைக்கு மாறினார்.
சான்டியாகோவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பாடம் நடத்தினார். பிறகு அவர் ஆய்வுப்பணியில்ஈடுபட்டார். தற்போது இங்கிலாந்து நாட்டில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகிறார். `ரிபோசம்' தொடர்பாக 'நேச்சர்' உள்ளிட்ட பத்திரிகைகளில் ஆய்வு கட்டுரைகள் எழுதி இருக்கிறார்.
நோபல் பரிசு பெற்ற 3-வது தமிழர் என்ற பெருமை விஞ்ஞானி ராமகிருஷ்ணனுக்கு கிடைத்து உள்ளது. ஏற்கனவேசர் சி.வி.ராமன், சந்திரசேகர் ஆகியோர் நோபல் பரிசு பெற்று உள்ளனர். இப்போது ராமகிருஷ்ணனுக்கு அந்த பரிசுகிடைத்து இருக்கிறது.
மேலும் நோபல் பரிசு பெற்ற 7-வது இந்தியர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்து உள்ளது. விஞ்ஞானிராமகிருஷ்ணனுக்கு நோபல் பரிசு கிடைத்து இருப்பது இந்தியர்கள் அனைவருக்கும் பெரும் மகிழ்ச்சியைஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்க நாட்டின் குடியுரிமை பெற்றுள்ள விஞ்ஞானி ராமகிருஷ்ணன் தற்போது இங்கிலாந்தில் வசித்துவருகிறார்

No comments:
Post a Comment