கிராமும் விவசாயமும் - நேற்று இன்று நாளை
-சாமிநாதன்
கிராமம் என்று சொன்னவுடனேயே பலருக்கு (குறிப்பாக நகரவாசிகள், கிராமத்தை விட்டு வெகுநாட்களுக்கு முன்னரே வளியேறியவர்களுக்கு) நினைவுக்கு வருவது விவசாயம் , விவசாயிகள், எல்லாம் ஏழை மக்கள், படிப்ப

றிவு அதிகம் இல்லாதவர்கள் என்பதுதான்.
முன்னர் காலங்களில் அப்படிதான் இருந்திருக்கும். 10 வருடங்களுக்கு முன்னர் எனது கிராமம் அதற்கான அடையாளங்களோடு தான் இருந்தது. ஆனால் இன்றைய நிலை அப்படியில்லை காலங்களால் பெரும் மாற்றம் கண்டுள்ளது.. கிராமம் பற்றிய பார்வையில் புரிதலில் நிறைய மாற்றங்கள் கொள்ள வேண்டியுள்ளது.
எனது கிராமம் ஆமந்தகடவு, உடுமலை பகுதியில் உள்ளது. நான் சொல்லும் மாற்றங்கள் தமிழ்நாட்டின் நிறைய பகுதிக்கு பொருந்தும். இந்த மாற்றங்கள் உண்யைில் முன்னேற்றமா என்பதை நீங்களே கணக்கிட்டு கொள்ளலாம்.
யார் விவசாயிகள்?.
இந்த கேள்விக்கு சரியான புரிதல் வேண்டும். கிராமத்தில் உள்ள அனைவரும் விவசாயிகள் என்று கணக்கிடுவது தவறு. ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு குறிப்பிட்ட சாதி மக்கள் மட்டும் நிலம் வைத்திருப்பார்கள். அவர்கள் தான் விவசாயி மற்றவர்கள் விவசாய கூலி ஆட்களும், அதை சார்ந்தவர்களும்.
கிராம அமைப்பு
கிராமம் வீதிகளால் பரிக்கபட்டிருக்கும்.
ஒவ்வொரு வீதியிலும் ஒவ்வொரு சாதி மக்கள் இருப்பார்கள், தொழில் வாரியாக - விவசாய கூலி வேலை செய்பவர்கள், சலவை தொழில் செய்பவர்கள், தச்சு வேலை செய்பவர்கள், கட்டுமான பணி செய்பவர்கள், முடிதிருத்துபவர்கள், விவசாய கருவி தயாரிப்பவர்கள், பண்டங்கள் செய்பவர்கள் என்று சாதிபெயர் அடைமொழியோடு தெருப்பெயர் இருக்கும். (சாதியை குறிக்ககூடாது என்ற கொள்கையால் அவற்றை குறிக்கவில்லை.) மருத்துவம், தரகு வியாபாரம், சமையல் வேலை ஆகியவற்றையும் சிலர் தம் குலத்தொழிலோடு சேர்த்து செய்வார்கள். இந்த பிரிவுகளுக்குள் உயர்சாதி ஆதிக்கம், தீண்டாமை நிலை எல்லாம் நிலவி வந்தாலும், கிராமம் எல்லா பிரிவுகளும் இருந்ததால் தான் நிறைவாக இருந்தது. அருகாமையிலேயே வார சந்தை கூடும், 5ஆம் வகுப்பு வரை பள்ளிக்கூடம் இருக்கும், கோயில் திருவிழா என்றால் சிறப்பாக இருக்கும். கிராமம் நிறைய மக்கள் கூட்டம் இருக்கும். ஒருவரை ஒருவர் சார்ந்திருந்தனர்.
கிராமம் தன்னிரைவோடு இருந்தது..
அன்றைய கிராமம்.
அன்றெல்லாம் பணம் ஈட்ட வேண்டும் என்ற பெரும் ஆசை இருந்திருக்கவில்லை. மற்றவர்களோடு பகிர்ந்து கொண்டனர். அளவிற்கு அதிகமாக சேகரிக்க பழகவில்லை. குறைவான கூலி, விளைந்ததில் கொஞ்சம் விவசாயிகள் கொடுப்பர்கள். கூலி ஆட்களும் எஜமானிடம் (நிலம் வைத்திருப்பவர்களிடம்) அத்துனை பணிவோடும், மரியாதையோடும் இருப்பார்கள். ஏன் இந்த அடிமைத்தனம் என்று எண்ணும்படி ஒரு பணிவு இருக்கும்.
முன்னர் “பண்ணையத்திற்கு ஆள் வைப்பது” என்ற முறை இருக்கும். அதாவது ஒரு வருடத்திற்கான கூலியை முதலிலேயே கூலி ஆள் பெற்றுக்கொண்டு வருடம் முழுதும் அந்த எஜமானிடமே வேலை பார்க்கவேண்டும். பெரும்பாலான கூலி தொழிலார்கள் குடும்பம் 15வயது தாண்டிய தமது பிள்ளைகளை இது போல் பண்ணையத்தில் அமர்த்தி பணம் வாங்கி தங்களுக்கான பெரும் செலவை மேற்கொள்வார்கள். அந்த குடும்பம் பணம் தேவைப்படும் போதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக வாங்க, பின் கடன் அதிகரிக்க, அவனது திருமண வயதுவரை அங்கேயே வேலையை தொடர்வான். பின் அந்த இடத்திற்கு வேறொரு ஆள் வருவான். உடல்நிலை சரியில்லாதது, வீட்டில் விவேஷம் தவிரஎந்த விடுமுறையும் கிடையாது. எல்லாநாளும் காலை 7மணி முதல் மாலை 7 மணிவரை வேலை செய்வான். இப்படி வருடமெல்லாம் உழைத்து, சகலவிதமான வேலைகளும் கற்று பின் மற்ற காடுகளுக்கு கூலிக்கு சென்று அதிகமான பணம் சம்பாதிப்பான். சுருக்கமாக சொன்னால் பண்ணைத்திற்கு வேலை செய்வது என்பது குறைவான ஊதியம் மற்றும் இரண்டு வேலை சாப்பட்டுடன் கூடிய பயிற்சி காலம்.
விவசாயிற்கு மகனாக பிறந்தவனுக்கும் இதே நிலைதான். தனது 10 வயது முதலே தோட்டத்தில் பெற்றோருக்கு உதவியாய் சிறு சிறு வேலை பார்க்க துவங்கி வயதிற்கேற்ற வேலை செய்து வளர்வான். மற்ற பரிவினரும் தத்தமது குலத்தொழிலில் தங்களது பிள்ளைகளை வேலை பழக்கி ஆளாக்குவார்கள். இப்படி வளர்ந்த கிராமத்து இளைஞனுக்கு உடல் வலு இருக்கும், சோம்போறிதனம் இராது, வெயில் மழையை பொருட்படுத்த மாட்டான், உழைப்பின் வலி தெரியும், குடும்பத்தின் மீது பொறுப்பு வரும், தொழில் நுணுக்கும் கண்டறிவான், பின்நாளில் கடுமையாக உழைக்கும் தொழிலாளியாக விவசாயியாக மாறுவான்.
கல்வியின் வளர்ச்சி
முன்பெல்லாம் 5 முதல் 8ஆம் வகுப்பு வரை படிப்பார்கள். 5ஆம் வகுப்பு வரை சொந்த கிராமத்திலேயே இருக்கும். 8ஆம் வகுப்பு வரை என்றால் பக்கத்து சிற்றுர்க்கு செல்ல வேண்டும். அதற்கு மேல் என்றால் பட்டணம் செல்ல வேண்டும். அதையும் தாண்டி உயர்நிலை பள்ளி, கல்லூரிக்கெல்லம் நகரங்களை தேடி வெகுசிலரே செல்வர்.. 8ஆம் வகுப்போடு முடிந்தாலும் கிராமத்து சிறுவர்களுக்குரிய எல்லா சேட்டைகள், அட்டகாசம், விளையாட்டு என்று பூரணமாக கழியும் பிள்ளை வயது. அதன்பின் குடும்ப சூழலுக்கும் பிள்ளையின் விருப்பத்திற்கும் ஏற்றாற்போல் கல்வியோ குடும்ப தொழிலே தொடரும். இந்த நிலை மெல்ல மாறியது. கல்வியின் தேவை குறித்து விழிப்புணர்வு நடந்தது. கல்வி முக்கியத்துவம் பெற்றது. எல்லோரும் தங்களது குழந்தையை படிக்க வைக்க ஆசைப்பட்டனர். ஆங்கில வழிக்கல்வி புகுந்தது, தங்களின் பிள்ளைகளுக்கு அழகாக சீறுடை அணிவித்து, பள்ளி பேருந்தில் அணுப்பி வைத்து அழகு பார்த்தனர். மற்றவர்கள் ஏக்கத்தோடு பிள்ளைகளை அரசு பள்ளிகளுக்கு அனுப்பினர். தனியார் பள்ளி-ஆங்கில வழி கல்வியின் மோகம் காலப்போக்கில் அதிகரிக்க இயன்றவர்கள் பிள்ளைகளை அதற்கு மாற்றினர்.
பொருளாதார வளர்ச்சி
இந்த காலகட்டத்தில் பொருளாதாரமும் முக்கியத்துவம் பெற்றது. தொழில் துறை வளர்ந்தது. பசுமை புரட்சி விவசாயத்தில் புதிய மாற்றங்களை கொண்டுவந்தது. விவசாயிகள் வேளான்மையில் லாபம் பார்க்க துவங்கினர். கூலியாட்களும் பணிவுகளையெல்லாம குறைத்து கொண்டு கூலியை உயர்த்தி தர வேண்டினர்.
படித்தவர்க்கெல்லாம் நல்ல வேலை வாய்ப்பு, உயர்ந்த ஊதியம், கடினமில்லாத வேலை, சொகுசான வாழ்க்கை என்ற எண்ணம் கிராம மக்களிடையே வளர்ந்தது. தங்களது பிள்ளைகளை படிக்க வைத்து தாமும் பணக்காரர் ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டனர். பசுமை புரட்சியால் வேளாண்மை இயந்திரமயமாகி கூலி ஆட்களின் தேவை குறைவது போல் ஒரு தோற்றம் உண்டானது. கிராம மக்கள் பக்கத்து கிராங்களுக்கும், நகரங்களுக்கும் சென்று அதிகம் சமாபதித்து பொருளாதார வாழ்க்கையை உயர்த்த முற்பட்டனர். சிலர் நகரங்களுக்கே குடிபெயர்ந்தனர். இந்த போராட்டத்தில் பெரும்பாலானோர் வாழ்கையில் ஓரளவு முன்னேற்றம் கண்டனர். பிள்ளைகளுக்கு கல்வியை கட்டாயமாக்கினர். இதன் எண்ணிக்கை வருடத்திற்து வருடம் அதிகரித்து வருகிறது.
சமூக வளர்ச்சி
கல்வி முக்கியத்துவம் பெற்றது, பொருளாதாரம் வளர்ச்சி அடைந்தது. இதனால் எல்லோரும் கல்வி பயில தொடங்கினர். கல்வி கற்ற ஒருவரால் தான் வரும் காலத்தை எதிர்க்கொள்ள முடியும் என்ற வெளிப்படையான நிலை உருவானது. பின்னர் கற்றவர்கள் வேலைக்கு சென்றால் தான் மதிப்பு, குடும்பத்திற்து கவுரவம், ஊதியத்திற்கு வழி என்றானது.
தம்பிள்ளைகளின் மீது பெரும் முதலிடுகள் செய்து உயர்ந்தபடிப்பு படிக்கவைத்து வேலைக்கு அனுப்பி பெரும் பணம் ஈட்ட வேண்டும் என்ற நிலை உருவானது. இதற்கிடையில் அயல்நாடுகளிலிருந்து தொழில் புரட்சியோடு இறக்குமதி செய்யப்பட்ட நாகரீகம், காலாச்சாரம் சமூகத்தில் பெரும் மாற்றத்தை கொண்டுவந்தது. ஆடம்பர வாழ்க்கைக்கு வழிவகுத்தது. இது கிராம மக்களையும் ஆட்கொண்டது.
இன்றைய கிராமம்
இன்று கிராமத்தின் அடிப்படை அமைப்புகள் எல்லாம் சிதைவிண்டு போய்விட்டன, கிராமம் வளர்ந்து சிற்றூர்களாக மாறிவிட்டது. தொழில்வாரியாக பிரிந்திருந்த தெருக்கலெல்லாம் பெயரளவில் தான் உள்ளது. பழைய ஆட்கள்தான் உள்ளனர். அவர்களது வாரிசுகள் எல்லாம் படித்து தொழிற்துறைக்கு சென்றுவிட்டனர். படிக்காதவர்களும் அவர்களது குடும்ப குலத்தொழிலை நகரங்களில் நவீனமாக செய்ய துவங்கிவிட்டனர்.
விவசாய தொழிலை சார்ந்திருந்தவர்களின் வாரிசுகள் வௌியேறி கிராமம் வெறிச்சோடி, விவசாயிகளின் வாரிசுகளும் வௌியேறி விவசாயம் நலிந்தது. இப்போது சுற்றுச்சூழல் மாறுபாட்டாலும் அரசின் கொள்கைகளாலும் நசுங்கிக்கிடக்கும் இந்த விவசாயத்தை கடந்த கால விவசாயிகளும் கூலி ஆட்களும் எப்படி காப்பாற்ற முடியும்?.
யாருமே தங்கள் வாரிசுகளுக்கு குலத்தொழிலை கற்றுதர முனையவில்லை, அதற்கு கல்வியும் சொகுசு வாழ்க்கை பற்றிய கனவும் தடையானது. கிராமங்களில் குலத்தொழிலாக இருந்த கட்டுமானப் பணி, சலவைத்தொழில், முடி திருத்துவது, பண்டங்கள் கருவிகள் தயாரிப்பது என எல்லாமே வணிகத் தொழிலாக மாறிவிட்டது. விவசாயமும் வணிகத்தின பிடியில் சிக்கி தவிக்கிறது.
இன்றைய தலைமுறை
எல்லோரும் குறைந்தது 12ஆம் வகுப்புவரை படிக்கின்றனர். இரண்டு முதல் நான்கு தனியார் பள்ளி பேருந்துகள் எல்லா கிராமங்களுக்கும் சென்று வருகிறது. பல்கி பெருகிவிட்ட கல்லூரிகளால் எல்லோருக்கம் கல்லூரி படிப்பு எளிதாகிவிட்டது. பெரும்பாலானோர் கல்லூரி வரை படிக்கின்றனர். இது வரவேற்கதக்க முன்னேற்றம். இந்த முன்னேற்றத்தால் ஏற்பட்ட மாற்றங்கள் பல. படிப்பவர்கள் எல்லாம் தத்தமது பெற்றோர்களின் வேலையை (விவசாயம் உட்பட) கற்காமல் தொழில்துறைகளையே நம்பி வளர்கின்றனர். இதனால் பள்ளி, கல்லூரி முடிக்கும் வரை கேளிக்கை, சுற்றுலா, விளையாட்டு என சுகமாக வாழக்கை வாழ்ந்து நகரங்களின் மீது மையல் கொண்டு வளர்கின்றனர். நிறைய பெற்றோர்கள் தாங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் தங்கள் பிள்ளைகளுக்கு எந்த கஷ்டங்களையும் கொடுக்காமல் சுகமாக வளர்க்க நினைக்கின்றனர். பிள்னை படித்து பின்நாளில் நல்ல வேளையில் நிறைய பணம் ஈட்ட வேண்டும் என கனவு காணுகின்றனர்.
பெற்றோர்களும் உண்மை அறியாமல் படிப்பு படிப்பு என நிலங்களை விற்று, கடன் வாங்கி பிள்ளைகளிடம் படிப்பை திணிக்கின்றனர். பிள்ளைகளும் என்னநிலை என்பதறியாமலே படிப்பு முடியும் வரை காதல் கலாட்டா என சுகமாக வாழ்கின்றனர்.
கல்வியை முடித்து விட்டு, வீட்டையும் கிராமத்தையும் விட்டு வெளியேறி சொற்ப சம்பளத்திற்காக நகரங்களுக்குள் நுழையும் போதுதான் இளைஞர்களுக்கு வாழ்க்கையின் எதார்த்தம் உணரமுடிகிறது. (இளைஞர்கள் என நான் குறிப்பது பெண்களையும் சேர்த்துதான்..) சிலருக்கு உயர்ந்த ஊதியத்தில் வேலை(அவர்கள் படும் துன்பம் மறுபக்கம்), சிலருக்கு குறைந்த ஊதியத்திலேனும் ஒரு வேலை. பலருக்கு வேலையில்ல பட்டதாரி என்ற அடையாளமே எஞ்சியுள்ளது.. இப்படி கல்வியை முடித்துவிட்டு கல்விக்காக பட்ட கடனை அடைக்கவும் முடியாமல், குடும்பத்திறகு உதவவும் முடியாமல் மனம் புழுங்கி கிடக்கும் இளைஞர்களை நாம் நிறைய அறிவோம்.(நகரத்து இளைஞர்களும் இதற்கு விதிவிலக்கல்ல.)
வரும் நாட்கள்
1. விவசாயத்தை குடும்ப பின்னியாக கொண்ட மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. கல்லூரி முடித்த நிறைய இளைஞர்களுக்கு விவசாயம் என்றால் என்னவென்றே தெரியாத நிலை. விவசாய குடும்பம் சார்ந்த இளைஞர்களுக்கு விவசாயம் பற்றிய அறிவு இருந்தாலும், அவர்களால் உழைக்க இயலாது. இப்போது பள்ளிகளில் இருப்பவர்கள் கல்லூரி முடிக்கும் போது எந்த இளைஞர்க்கும் விவசாயம் பற்றிய எந்த அறிவும் இருக்காது. எப்படி தழைக்கும் விவசாயம்.?
2. கவனிக்கவேண்டிய இன்னொரு வருத்தம். வளர்ந்து வரும் கலாச்சார நாகரீக அபத்தங்களால் பல உடற்கேடுகளோடு வளரும் இந்த இளைய சமுதாயம் ஆர்வப்பட்டாலும் நிர்பந்திக்க பட்டாலும் கழனியில் இறங்கி வேலை பார்ப்பது சாத்தியமா?
3. கல்விமுறை சரியில்லை, மாணவர்கள் சரிவர படிப்பதில்லை வேலைக்கு தகுதியானவரகள் இல்லை என்ற வல்லுனர்களின் வாதங்களும், ஆர்வலர்களின் ஆதங்கங்களும் ஒருபுறமிருக்கட்டும். அப்படியே எல்லாம் சரியாக இருந்து முறையாக நடந்தால், இன்று பள்ளியில் இருக்கும் அத்தனை லட்சம் மாணவர்களுக்கும் வேலை வாய்பை உருவாக்கி விட முடிமா?.
4. LPG எனும் கூண்டுக்குள் சிக்கி வளர்ந்த நாடுகளை சார்ந்திருக்கும் நமது பொருளாதாரம் இப்போதே சறுக்கிகொண்டிருக்கிறது. I.T, BPO, MNC என்ற பன்னாட்டு சேவை நிறுவனங்கள் எந்நேரமும் கடையை மூடிவிட்டு வேறு இடத்திற்து செல்லலாம்.. அப்போது நமது நிலைமை என்ன?
5. இன்னும் 10 ஆண்டுகளில் விவசாயமே தெரியாத இளைய தலைமுறை உருவானபின், யார் விவசாயம் செய்வது? நவீன முறை இராசாயன விவசாயம் இன்றே பல்லை இளித்துவிட்டது. புவி வெப்பம், சுற்றுச்சூழல் சீர்கேடு, பருவ மாற்றம் என இயற்கைக்கு எதிராக நடக்கும் போரில் விவசாயம் அழிந்து வரும் நிலையில், கிராமங்களை சிதைத்து, பாரமபரிய வேளாண்முறையை அழத்துவிட்டு நாளைய நமது உணவு தேவைக்கு எந்த நாட்டிடம் கையேந்தி நிற்க போகிறோம்?
6. விவசாயிகளே இல்லாத விவசாய நாட்டில், கிராமங்களே இல்லாத பாரத நாட்டில்..., இந்தியா விவசாய நாடு, கிராமங்கள் பாரத நாட்டின் முதுகெழும்பு என்று கூவி கொண்டு யார்போய் யாரிடம் பிச்சை கேட்டு பிழைப்பது?
நாட்டின் குடிமக்களே சிந்தியுங்கள்..!
எனது நிலைப்பாடு
1. கிராமங்களுக்கும் இளையதலைமுறைக்கும் கல்வி வேண்டாம் என்பதல்ல என் வாதம். நிச்சயம் எல்லோரும் கல்வி கற்க வேண்டும். விவசாயிகள் கல்லாதவர்கள் என்ற தோற்றம் தான் இன்றைய அவல நிலைக்கு காரணம், கற்ற இளைஞர்கள் விவசாயம் செய்ய முன்வர வேண்டும்.
2. இன்றைய நிலையை எல்லா மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும், ஒவ்வொரு குடிமகனுக்கும் உணர்த்தவேண்டும். பணம் இருந்தால் சொகுசாக வாழ்க்கை வாழ்ந்து விடலாம், நகர வாழ்க்கை, அலுவலக வேலைதான் கௌரவம் என்ற எண்ணத்தை மாற்ற வேண்டும்.
3. விவசாயத்தின் பக்கம் இளைஞர்களை ஈர்க்கவும், விவசாயத்தை நிலையான வருமானம் தரும் தொழிலாக மாற்றவும் அரசு முனைப்பு காட்ட வேண்டும்.
4. இளைஞர்கள் விவசாயத்திற்கு வந்து பாரம்பரியத்தை சிதைக்காமல் இயற்கையோடு இயைந்து. சுற்றுச்சூழல் மாசுபடாமல் நவீன முறையில் விவசாயம் செய்து பழக வேண்டும். இன்று துவங்கினால்தான் இருக்கும் விவசாயிகளிடம் இருந்த கொஞ்சம் பாரம்பரித்தையாவது மீட்க முடியும்.
5. எதை எப்போது எங்கே எப்படி எவ்வளவு விதைப்பது அறுவடை செய்வது விற்பது சேமிப்பது என்று இளைஞர்கள் ஒன்றுபட்டு திட்டமிட்டு செயல்பட்டால் நிச்சியம் விவசாயம் செழிக்கும்.
சமூகத்தின் மீது அக்கறையோ, விவசாயத்தின் ஆர்வமோ சிறிதளவேனும் இருக்குமாயின் உங்களது கருத்துக்களை பதிவிடவும். நம்மால் இயன்றதை முயற்சிப்போம்.
ஒன்றுபடுவோம்... திட்டமிடுவோம்... செயல்படுவோம்...
அக்கறையுடன்,
சாமிநாதன்.
https://www.facebook.com/profile.php?id=100002520375509

No comments:
Post a Comment