Friday, October 5, 2012

தடம் மாறும் விவசாயம்

தடம் மாறும் விவசாயம்

Author: செந்தில் நடேசன்


கடந்த காலங்களில் விவசாயத்
தொழிலை நம்பி இருந்த வேலை
ஆட்கள் தற்போது ஜவஹர் கிராம
வேலை வாய்ப்பு திட்டத்திற்குச்
செல்ல ஆரம்பித்து விட்டார்கள்.
விவசாயம் செய்ய வேண்டுமானால் போதிய வேலை ஆட்கள் தேவை. எந்த ஒரு தொழிலும் வேலை ஆட்களை நம்பித்தான் இருக்கிறது. இதில் வேளாண்மைத் தொழிலும் விதிவிலக்கல்ல.
இந்தியா சுதந்திரம் அடைந்த பின்பு ஆரம்பித்த முதல் ஐந்தாண்டு திட்டத்தில் வேளாண்மைக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. இதனால் புதிய நீர் தேக்கங்கள் கட்டப்பட்டன. நீர் ஆகாரங்கள் பெருக்கப்பட்டன. ஏரிகள், குளங்கள், ஆறுகள் பயன்படுத்தி விவசாயம் பெருகுவதற்கு வழிவகைகள் செய்யப்பட்டன. மேலும் வேளாண்மைக்குத் தேவையான உரங்கள், கருவிகள், இடுபொருட்கள் கிடைக்க வழிவகை செய்யப்பட்டது.
இதற்குப் பின்னர் வந்த ஐந்தாண்டுத் திட்டங்களில் மற்ற துறைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. அதனால் மற்ற துறைகளும் வளர்ச்சி அடையத் தொடங்கின.

தற்போது விவசாயம் எதிர்நோக்கி உள்ள சவால், ஆட்கள் பற்றாக்குறை. அது எதனால் வந்தது? இதை எப்படி இந்திய விவசாயம் எதிர்கொள்ளப் போகிறது? என்பது தான் இந்த கட்டுரையின் நோக்கம்.
இந்தியா பல ஐந்தாண்டுத் திட்டங்களை தீட்டியதில் கடந்த 11வது ஐந்தாண்டுத் திட்டத்தில் 2007 2012ல் ஆண்டில் புதியதாக கொண்டு வரப்பட்ட “ஜவஹர் ஊரக வேலை வாய்ப்புத் திட்டம்” (Jawahar Rural Rojar Yojana) இந்திய விவசாயத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த திட்டம் செயல்படுத்தி கடந்த ஐந்து ஆண்டுகளில் விவசாயத்தை நம்பி இருந்த வேலையாட்களை கிராமத்தின் அடிப்படைக் கட்டமைப்பு வேலையாட்களுக்கு மாற்றத் தொடங்கினர். இந்த மாற்றங்கள் தற்போது விவசாயத் தொழிலுக்கு வேலையாட்கள் கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
கிராமத்தில் உள்ள வேலையாட்கள் பெரும்பாலும் விவசாயம் சார்ந்த வேலைகளுக்குத் தான் செல்வது வழக்கம். இதனால் ஒவ்வொரு கிராமத்திலும் தேவையான தினசரி விவசாய வேலைகளுக்கு அந்த கிராமத்தில் உள்ள ஆட்களை வைத்து வேலைகளை செய்து கொண்டு வந்தார்கள். உதாரணமாக, நெல் நடவு, களை எடுத்தல், நெல் அறுவடை, வைக்கோல் போர் வைப்பது போன்ற அனைத்து நெல் பயிரிட்ட விவசாயிகள் தங்கள் ஊரில் உள்ள வேலையாட்களை வைத்து வேலைகளை செய்து முடித்தார்கள் அல்லது பக்கத்து கிராமத்து வேலையாட்கள் தேவையான வேலைகளை செய்து வந்தார்கள்.

ஆனால் தற்போது நெல் பயிரிடும் விவசாயிக்கு நெல் நடவு முதல் அறுவடை வரை தேவையான வேலைகளை ஆட்கள் வைத்து செய்ய முடிவதில்லை. ஏனென்றால் இருந்த பெரும்பாலான வேலையாட்களும் 100 நாள் கிராம வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலைக்குச் சென்று வருகின்றனர்.
எனவே விவசாயிகள், நாற்று நடவு செய்யும் இயந்திரத்தைத் தேடி அலைந்து கொண்டு இருக்கிறார்கள். களைகளை ஒழிக்க களைக்கொல்லி பயன்படுத்துகிறார்கள். அறுவடைக்கு அறுவடை இயந்திரம் கை கொடுக்கிறது. கிராமத்தில் உள்ள விவசாயிகள் தோட்டத்தில் இருந்த வேலை மாடுகள் பராமரிக்க ஆள் இல்லாமல் விற்கப்பட்டன. கால்நடைகளை நம்பி இருந்த வேளாண்மை தற்போது விவசாய உபகரங்களை நம்பி நடந்து கொண்டுள்ளது.
வேலை ஆட்கள் இல்லாமல் விவசாயிகள் வேளாண்மையைத் தொடர்வது எப்படி? இதுவரை இருந்த ஆட்கள் இப்போது கிடைப்பதில்லை. அப்படி விவசாயத்திற்கு வேலையாட்கள் தேடி சென்றால், நகரத்தில் இருக்கும் தொழிற்சாலையில் உள்ள வேலை ஆட்களுக்கு நிகரான கூலியை கொடுத்த விவசாயத்தை வெற்றிகரமாக செய்ய முடியுமாஙு
ஆட்களே இல்லாமல் மேலை நாடுகள் (அமெரிக்க, ஐரோப்பா) போன்று ஒரு குடும்ப உறுப்பினர்கள் 100க்கு மேற்பட்ட ஏக்கர் விளைநிலங்களை ஒரு விவசாயி பராமரிக்க முடியுமா? இல்லை இந்த நிலை இந்திய விவசாயத்திலும் வருமா? என்ற பல கேள்விக் குறிகளுடன் இன்னும் விவசாயம் செய்து வரும் விவசாயிகளை நம்பி இந்தியாவின் உணவு உற்பத்தி உள்ளது.

தமிழக விவசாயிகள் இந்த கேள்விகளுக்கு விடை தேடிக்கொண்டு இருப்பதை விட, தற்போது ஏற்படும் மாற்றத்தை முழுமையாக உணர்ந்து கொண்டால் போதும். மாறும் சூழ்நிலைகளை உண்ணிப்பாக கவனிக்க வேண்டும்.
விவசாய கூலி ஆட்கள் மற்ற வேலைக்கு நகரத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கிறார்கள் என்பதை அனைத்து விவசாயிகளும் அறிவர். ஏனென்றால் விவசாய குடும்பத்தில் தங்கள் பிள்ளைகள் விவசாயத்தைத் தொடர விரும்புவதில்லை. எனவே விவசாய கூலிகள் எப்படி விவசாயத் தொழிலுக்கு வருவார்கள்?

கடந்த காலங்களில் விவசாயத் தொழிலை நம்பி இருந்த வேலை ஆட்கள் தற்போது ஜவஹர் கிராம வேலை வாய்ப்பு திட்டத்திற்குச் செல்ல ஆரம்பித்து விட்டார்கள். எனவே அவர்களுக்கு கிடைத்து வந்த ஆட்கள் வேறு தொழிலுக்கு சென்றுவிட்டார்கள். இவர்கள் மீண்டும் முழுநேர விவசாய பணிக்கு கிடைப்பார்கள் என்று எதிர்பார்ப்பது நடக்காத ஒன்று.
எனவே விவசாயத்தைத் தொடர்ந்து செய்ய வேண்டும். ஆனால் அதிக ஆட்கள் தேவைப்படாத பயிர்களைப் பயிரிட ஆரம்பிக்க வேண்டும். அல்லது பயிரிடும் பயிர்களை நடவு செய்ய, களை எடுக்க, அறுவடை செய்ய இயந்திரங்கள் இருக்கிறதா என்று பார்த்து பயிர் செய்ய வேண்டும்.

தங்கள் குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களை வைத்து முடிந்த வரை விவசாய வேலைக்கு செய்ய முடியுமா என்று யோசிக்க வேண்டும். அப்படி சிந்தித்து விவசாயம் செய்தால், தொடர்ந்து விவசாயிகளாக இருக்க முடியும்ஙு இல்லையென்றால் விவசாயிகளின் எதிர்காலம் அவர்கள் கையில் இருக்காது!

No comments:

Post a Comment