Showing posts with label திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா. Show all posts
Showing posts with label திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா. Show all posts

Monday, October 16, 2017

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா அக். 20ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்குகிறது.
இக்கோயிலின் மிகவும் பிரசித்திப் பெற்ற திருவிழாவான கந்த சஷ்டி திருவிழா,
அக். 20ஆம் தேதி தொடங்கி, அக். 26ஆம் தேதி திருக்கல்யாண நிகழ்ச்சியுடன் நிறைவுபெறுகிறது.
விழாவை முன்னிட்டு தொடக்க நாளான அக். 20ஆம் தேதி அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட பூஜை, காலை 6 மணிக்கு ஸ்ரீ ஜெயந்திநாதர் யாகசாலை புறப்பாடு, காலை 9 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, மற்ற கால பூஜைகள் வழக்கம் போல் நடைபெறுகின்றன.
2ஆம் திருநாள்முதல் 5ஆம் நாள் வரை கோயில் அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட பூஜை, தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறுகின்றன.
அக். 25ஆம் தேதி சூரசம்ஹார விழாவை முன்னிட்டு கோயில் அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட பூஜை, காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், பிற்பகல் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, மாலை 4.30 மணிக்கு கோயில் கடற்கரையில் சூரசம்ஹார நிகழ்ச்சி ஆகியன நடைபெறுகின்றன.
அக். 26ஆம் தேதி திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, தொடர்ந்து பூஜைகள் நடைபெற்று, அதிகாலை 5 மணிக்கு அம்பாள் தவசுக் காட்சிக்கு புறப்பாடு, மாலை 6.30 மணிக்கு சுவாமி, அம்பாள் தோள்மாலை மாற்றும் நிகழ்ச்சி, இரவு திருக்கல்யாண வைபவம் ஆகியன நடைபெறுகின்றன.
சஷ்டியில் விரதமிருப்போம்!!
சகல நன்மைகளையும் பெறுவோம்!!