Saturday, November 19, 2011

irctc-reduced-tatkal-ticket-booking-24-hours

டெல்லி: ரயில்களில் தக்கல் முறையில் டிக்கெட் முன்பதிவு செய்யும் நேரம் 48 மணி நேரத்தில் இருந்து 24 மணிநேரமாக குறைக்கப்பட்டுள்ளது, இந்திய ரயில்வே துறை அறிவித்துள்ளது.

ரயில் பயணத்துக்கு தக்கல் முறையி்ல் டிக்கெட் எடுக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்த திட்டத்தின்படி பயணம் செய்வதற்கு 48 மணிநேரத்துக்கு முன் தக்கல் முறையில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.

அந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட போது, திடீரென பயண ஏற்பாடுகளை செய்யும் பயணிகளுக்கு பெரும் உதவியாக இருந்தது. ஆனால் நாளாடைவில் தக்கல் டிக்கெட்களை வெளிசந்தைகளை சேர்ந்த ஏஜென்ட்கள் பெற்று கொண்டு, அதிக விலையில் விற்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து ரயில்வே துறைக்கு அதிகளவில் புகார்கள் வந்தன. அதனையடுத்து தக்கல் டிக்கெட் எடுக்கும் நேரம் 48 மணி நேரத்தில் இருந்து 24 மணிநேரமாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் டிக்கெட் ஏஜென்ட்களுக்கான நேரம் 1 மணி நேரத்தில் இருந்து 2 மணி நேரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி காலை 8 மணியில் இருந்து 10 மணி வரை ஏஜெண்ட்கள் தக்கல் டிக்கெட்களை பெற்று கொள்ளலாம்.

இது குறித்து ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி கூறியதாவது,

அவசரகதியில் பயண ஏற்பாடுகளை செய்யும் பயணிகளுக்காகவே தக்கல் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது வழக்கமாக செல்லும் பயணிகள் தான் தக்கல் டிக்கெட்களை அதிகளவில் பயன்படுத்துகின்றனர். தக்கல் முறையின் மூலம் ரயில்வே துறைக்கு வருமானம் கிடைக்கிறது. இருப்பினும் அவசரகதியில் பயணிப்போரின் நலனை கருத்தில் கொண்டே புதிய விதிமுறைகளை நடைமுறைப்படுத்துகிறோம்.

புதிய முறை மூலம் தக்கல் டிக்கெட்களை மொத்தமாக ஏஜென்ட்கள் பெற்று கொள்வது தடுக்க திட்டமிட்டுள்ளோம். முன்பதிவு செய்யும் போதே டிக்கெட் வாங்குபவரின் அடையாள அட்டையின் நகலும் இணைக்கப்படும். இதனால் டிக்கெட் பெற்றவர் மட்டுமே பயணிக்க முடியும்.

இறுதி முன்பதிவு பட்டியல் வெளியிடும் போது, அந்த அடையாள அட்டையும் சேர்த்து வெளியிடப்படும். இணையதளத்தில் தக்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும் போதும் விபரங்களை இணைக்க வேண்டும். ஒரு பி.என்.ஆர். மூலம் தக்கலில் 4 சீட்கள் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். சாதாரண முறையி்ல் ஒரு பி.என்.ஆர். மூலம் 6 சீட்கள் முன்பதிவு செய்யலாம்.

No comments:

Post a Comment