இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இன்று தொடங்கும் முதலாவது டெஸ்ட் போட்டி இரு அணிகளுக்கும் இடையிலான 100 வது டெஸ்ட் போட்டி ஆகும்.
இதனால் போட்டி தொடங்கப்படுவதற்கு முன்னர், டாஸ் போடும் நேரத்தில் பிசிசிஐ தலைவர் சஷாங் மனோகர், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் கில்ஸ் கிளார்க் ஆகிய இருவரும் பரிசுக்களை பரிமாறி வாழ்த்து தெரிவித்து கொள்கின்றனர்.
போட்டியின் நான்காவது நாள் ஆட்டத்தின் உணவு இடைவேளையில், போட்டி மைதானத்தில், இந்திய, இங்கிலாந்து முன்னால் கேப்டன்கள், வீரர்கள் கௌரவிக்கப் படவிருக்கின்றனர்.
இதனால் இந்திய முன்னாள் டெஸ்ட் கேப்டன்கள், ரவி சாஸ்திரி, சௌவ்ரவ் கங்குலி ஆகியோரும் இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன்கள் இயான் போத்தம், பாப் வில்லிஸ், நசீர் உசேன் ஆகியோரும், போட்டி நடைபெறும் மைதானத்திற்கு வருகை தரவுள்ளனர். இங்கிலாந்து - இந்திய அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி 1932ம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்றது.
இதேவேளை சச்சின் இன்று தொடங்கும் டெஸ்ட் போட்டியில் சதமடித்தால் அது அவரது 100 வது சதம் என்பதால் இப்போட்டி மேலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஆனால் சச்சினுக்கு லார்ட்ஸ் மைதானம் ராசியில்லை எனவும், அங்கு அவர் ஒரு முறை கூட சதமடித்ததில்லை எனவும் ஒரு கருத்து நிலவுகிறது. எமது தொடரில் சச்சினை சதமடிக்க விட மாட்டோம் என இங்கிலாந்து வீரர்களும் சவால் விடுத்துள்ளதால், சச்சின் மீது அனைவரது கவனமும் திரும்பியுள்ளது.
இங்கிலாந்து - இந்தியாவுக்கு இடையில் இன்று தொடங்கும் டெஸ்ட் போட்டி மேலும் சில சுவாரஷ்யமான விடயங்களால் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
அவை
1. கிரிக்கெட் உலகின் 2000 வது டெஸ்ட் போட்டி இது!
2. ராகுல் ட்ராவிட், லக்ஷ்மன், சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் இறுதியாக லோர்ட்ஸில் விளையாடும் போட்டியாக இருக்கலாம்.
4. மூவரில் ஒருவரும் இங்கு சதமடித்ததில்லை.
5.சச்சின் 100 வது சதத்தை எதிர்பார்த்திருக்கும் போட்டி
6.இங்கிலாந்து - இந்திய அணிகளுக்கு இடையில் 100 வது டெஸ்ட் போட்டி
7. ராகுல் ட்ராவிட், லக்ஷ்மன், சச்சின் ஆகியோர் எடுத்துள்ள மொத்த டெஸ்ட் சதங்கள் 99. இதில் ஒருவர் சதமடித்தாலும் இந்த எண்ணிக்கையும் 100 ஆக மாறும்.
8. டன்கன் ஃபிளெட்ஷர், பயிற்றுவிப்பாளராக களமிறங்கும் 100 வது டெஸ்ட்.
9.இந்த போட்டித்தொடரில் வெல்லும் அணி டெஸ்ட் தரவரிசையின் முதலாம் இடத்தை பெற்றுக்கொள்ளும்.
No comments:
Post a Comment