ஸ்ரீஹரிகோட்டா: பிஎஸ்எல்வி-சி17 ராக்கெட் மூலம் ஜிசாட்-12 செயற்கைக் கோள் இன்று மாலை வெற்றிகரமாக ஏவப்பட்டது.
இன்று மாலை சரியாக 4.48 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் விண்வெளி ஏவுதளத்தின் 2வது பேடிலிருந்து ராக்கெட் செலுத்தப்பட்டது.
1410 கிலோ எடை கொண்ட பிரமாண்டமான செயற்கைக் கோளான ஜிசாட் 12 செயற்கைக் கோள் ரூ. 90 கோடியில் உருவாக்கப்பட்டதாகும். இந்த செயற்கைக் கோள் 12 டிரான்ஸ்பாண்டர்களுடன் கூடியதாகும். வானிலை முன்னறிவிப்பு, தொலைத் தொடர்பு சேவைகளுக்காக இந்த செயற்கைக் கோள் ஏவப்படுகிறது.
இந்தத் திட்டத்தின் மொத்த செலவு ரூ. 200 கோடியாகும்.
முன்னதாக திருப்பதி கோவிலுக்கு வந்த இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட வி்ஞ்ஞானிகள், ராக்கெட்டின் மாதிரியை ஏழுமலையான் பாதத்தில் வைத்து பூஜை செய்தனர். அதேபோல காளஹஸ்தி கோவிலுக்கும் இவர்கள் சென்று வழிபாடு நடத்தினர்.
19வது பி.எஸ்.எல்.வி:
பிஎஸ்எல்வி வகை ராக்கெட்களில் இது 19வது ராக்கெட்டாகும். இன்றைய தினம் இந்திய விண்வெளித்துறைக்கு முக்கியமானதும் கூட. காரணம், இன்று செலுத்தப்பட்ட செயற்கைக் கோள் அதிக எடை கொண்டதாகும். இதை சிறிய வகை ராக்கெட் மூலம் செலுத்தி இஸ்ரோ சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சுற்று வட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டது
பிஎஸ்எல்வி-சி17 ராக்கெட் மூலம் ஏவப்பட்ட ஜிசாட்-12 செயற்கைக் கோள் வெற்றிகரமாக அதன் சுற்றுவட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது.இதனையடுத்து ஸ்ரீ ஹரிஹோட்டாவில் உள்ள சதீஸ்தவான் விண்வெளி மையத்தில் விஞ்ஞானிகள் கைதட்டி உற்சாகத்தை பகிர்ந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் இது இந்திய விஞ்ஞானிகளின் உழைப்பிற்கு கிடைத்த வெற்றி தெரிவித்தார்
No comments:
Post a Comment