Tuesday, October 23, 2012

அதி நவீன காற்றாலை !!!

அதி நவீன காற்றாலை !!!

காற்றாலைகள் மூலம் மின்சாரம் தயாரிக்கும் வழி மிகவும் சுற்று சூழலுக்கு உகந்தது என்றாலும் அதிகப்படியான காற்றோ ( சூறாவளி / புயல் ) அல்லது குறைந்த காற்றோ இருக்கும் போது அவைகளின் இயக்கம் நிறுத்தப்படுகிறது . இந்த சூழ்நிலைய
ில் தான் அதிநவீன காற்றாலை ஒன்றை ஆஸ்திரேலியாவை சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர் .

70 அடி உயரமுள்ள இந்த காற்றாலைகள் 21 அடி விட்டமுள்ள நவீன வட்ட வடிவ இறக்கையை தாங்கி நிற்கிறது . அதி வேக காற்று வீசும் போது இந்த வடிவமைப்பு தானாகவே செங்குத்தான நிலையில் இருந்து காற்றின் போக்கில் மாறி விடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது . மணிக்கு 118 மைல் வேகத்தில் காற்று வீசினாலும் இந்த காற்றாலைகள் தாங்கும் சக்தி கொண்டது

குறைந்த பட்சமாக மணிக்கு 9 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் காற்றிலும் இது இயங்கும் . வருடத்திற்கு கிட்டத்தட்ட 18000 கிலோ வாட் ( 18 மெகா வாட் ) லிருந்து 30000 கிலோ வாட் ( 30 மெகா வாட் ) வரைக்கும் மின்சாரம் தயாரிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது பசுமையான மின்சாரம் கொடுக்கும் பசுமையான திட்டம் வருக ... வெல்க

தமிழகத்திலும் நிறைய முயற்ச்சிகள் எடுக்கபடுகிறது .
காற்றாலைகளை நிறுவுகிறது பாரத் ஸ்டேட் வங்கி (SBI).
நாட்டில் முதல் முறையாக பொதுத் துறை வங்கியான பாரத்ஸ்டேட் வங்கி சொந்தப் பயன்பாட்டிற்காக தமிழகம் ,ஜதராபாத் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் காற்றாலைகளை நிறுவுகிறது. தமிழகம் , மகராஷ்டிரா ,குஜராத் ஆகிய மாநிலங்களில் உள்ள கிளைகளுக்கான மின்சாரத்தை தயாரிக்கும் நோக்கில் இம்மூன்று மாநிலங்களிலும் காற்றாலைகளை நிறுவ SBI திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் கோயம்பத்தூரில் சமீபத்தில் காற்றாலைகளைஇவ்வங்கி நிறுவியது. மற்ற மாநிலங்களில் இன்னும் நான்குமாதங்களில் இத்திட்டம் துவக்கப்பட்டுவிடும்.

இதேபோல் அனைத்து தொழிற்ச்சாலைகள் மற்றும் தனியார்நிறுவனங்கள் அவர்களுக்குத் தேவையான மின்சக்தியைதயாரிக்க அவைகளே முன்வந்தால் தமிழகத்தில் மட்டுமல்ல உலகநாடுகள் அனைத்திலும் மின்சக்தி தட்டுப்பாடேஏற்ப்படாது.
Photo: அதி நவீன காற்றாலை !!!

காற்றாலைகள் மூலம் மின்சாரம் தயாரிக்கும் வழி மிகவும் சுற்று சூழலுக்கு உகந்தது என்றாலும் அதிகப்படியான காற்றோ ( சூறாவளி / புயல் )  அல்லது குறைந்த காற்றோ இருக்கும் போது அவைகளின் இயக்கம் நிறுத்தப்படுகிறது .  இந்த சூழ்நிலையில் தான் அதிநவீன காற்றாலை ஒன்றை ஆஸ்திரேலியாவை சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர் .

70  அடி உயரமுள்ள இந்த காற்றாலைகள் 21  அடி விட்டமுள்ள நவீன வட்ட வடிவ இறக்கையை தாங்கி நிற்கிறது .  அதி வேக காற்று வீசும் போது இந்த வடிவமைப்பு தானாகவே செங்குத்தான நிலையில் இருந்து காற்றின் போக்கில் மாறி விடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது .   மணிக்கு 118 மைல் வேகத்தில் காற்று வீசினாலும் இந்த காற்றாலைகள் தாங்கும் சக்தி கொண்டது 

குறைந்த பட்சமாக மணிக்கு 9 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் காற்றிலும் இது இயங்கும் .   வருடத்திற்கு கிட்டத்தட்ட 18000 கிலோ வாட் ( 18 மெகா வாட் )  லிருந்து 30000 கிலோ வாட் ( 30 மெகா வாட் ) வரைக்கும் மின்சாரம் தயாரிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது பசுமையான மின்சாரம் கொடுக்கும் பசுமையான திட்டம் வருக ... வெல்க 

தமிழகத்திலும் நிறைய முயற்ச்சிகள் எடுக்கபடுகிறது .
காற்றாலைகளை நிறுவுகிறது பாரத் ஸ்டேட் வங்கி (SBI).
நாட்டில் முதல் முறையாக பொதுத் துறை வங்கியான பாரத்ஸ்டேட் வங்கி சொந்தப் பயன்பாட்டிற்காக தமிழகம் ,ஜதராபாத் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் காற்றாலைகளை நிறுவுகிறது. தமிழகம் , மகராஷ்டிரா ,குஜராத் ஆகிய மாநிலங்களில் உள்ள கிளைகளுக்கான மின்சாரத்தை தயாரிக்கும்  நோக்கில் இம்மூன்று மாநிலங்களிலும் காற்றாலைகளை நிறுவ SBI திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் கோயம்பத்தூரில் சமீபத்தில் காற்றாலைகளைஇவ்வங்கி நிறுவியது. மற்ற மாநிலங்களில் இன்னும் நான்குமாதங்களில் இத்திட்டம் துவக்கப்பட்டுவிடும்.

இதேபோல் அனைத்து தொழிற்ச்சாலைகள் மற்றும் தனியார்நிறுவனங்கள் அவர்களுக்குத் தேவையான மின்சக்தியைதயாரிக்க  அவைகளே முன்வந்தால் தமிழகத்தில் மட்டுமல்ல உலகநாடுகள் அனைத்திலும் மின்சக்தி தட்டுப்பாடேஏற்ப்படாது.

முதுகுவலி: ஏன் வருகிறது? எப்படி போக்குவது? அறிந்து கொள்வோம் !!

முதுகுவலி முதியவர்களுக்கு மட்டும்தான் வரும் என்றில்லை. இளைஞர்களையும் இப்போது பாடாய்படுத்திக் கொண்டிருக்கிறது. பெண்களும் முதுகுவலி, கழுத்து வலியால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார
்கள்.

முதுகின் கட்டமைப்பு எப்படி இருக்கிறது?

முதுகில் வலி உருவாக என்ன காரணம்?

வலி வராமல் தடுப்பது எப்படி, வந்தால் அதை குணப்படுத்துவது எப்படி?

தாய் வயிற்றில் கருவான எத்தனையாவது நாளில் சிசுவுக்கு முதுகெலும்பு உருவாகும்? முதலில் எப்படி தோன்றி, படிப்படியாக வளரும்? முதுகெலும்பின் டிஸ்குகள் மற்றும் அதன் கட்டமைப்பு என்ன?
“முதுகெலும்பும், முதுகுத்தண்டும் கரு உருவான 18-ம் நாளிலிருந்தே உருவாக ஆரம்பிக்கும். முதலில் முதுகெலும்பு உருவாகி திறந்தபடி இருக்கும். கரு உருவான 29-வது நாள் மூடிக்கொள்ளும். அதன் நடு மையத்தில் மூளையின் தொடர்ச்சியான தண்டு வடம், இடுப்பு பகுதி வரையில் நீண்டு இருக்கும்.

முதுகெலும்பு, ஒன்றுடன் ஒன்றாக இணைக்கப்பட்ட 33 சிறு துண்டு எலும்புகளைக் கொண்டது. இதில் முதல் 7 எலும்புகள் கழுத்துப் பகுதியிலும் (செர்வைக்கல்), 12 எலும்புகள் மார்பு பகுதியிலும் (தெராசிக்), 5 எலும்புகள் இடுப்பு பகுதியிலும் (லம்பார்), 5 எலும்புகள் ஒன்றோடு ஒன்று இணைந்த நிலையில் அடி முதுகு பகுதியிலும் (சேக்ரல்), கடைசி 4 எலும்புகள் சேர்ந்து ஒரே எலும்பாய் முதுகின் அடிப்பகுதியிலும் (காக்சிஸ்) அமைந்து உள்ளது. இவற்றில் கடைசி 9 எலும்புகள் அசைவற்றதாகவும், இதர 24 எலும்புகள் அசையக்கூடியதாகவும் இருக் கும். எலும்புகளுக்கிடையில் மெல்லிய ஜவ்வு போன்ற டிஸ்க் பகுதி அமைந்துள்ளது.

இந்த டிஸ்க்குகள் உடலில் ஏற்படும் அதிர்வை தாங்கிக்கொள்ள பயன்படுகிறது. முதுகெலும்பு நேராக இல்லாமல் சில வளைவுகளுடன் இருக்கும். முதுகெலும்பின் நடுவில் இருக்கும் தண்டுவடத்தில் இருந்து 31 ஜோடி நரம்புகள் முதுகெலும்புகளுக்கிடையில் உள்ள துவாரத்தின் வழியாக வெளியேறி உடலின் பல முக்கிய உறுப்புகளுக்கு சென்று செயல்பட வைக்கிறது.”

எத்தனை வயது வரை முதுகெலும்பு வளரும்? வேகமாக வளரும் காலகட்டம் எது?
“குழந்தை பிறந்ததில் இருந்தே எலும்புகளின் வளர்ச்சி வேகமாகவும், சீராகவும் இருக்கும். எலும்பின் வளர்ச்சி 18 வயது வரையில் வேகமாகவும், அதன்பின் 25 வயது வரை மிதமாகவும் இருக்கும்.”

முதுகெலும்பின் அமைப்பில் ஆண்-பெண்ணுக்கு வித்தியாசம் ஏதாவது இருக்கிறதா? “முதுகெலும்பின் அமைப்பிலோ, செயல்பாட்டிலோ ஆணுக்கும்- பெண்ணுக்கும் வித்தியாசம் இல்லை. ஆனால் முதுகெலும்பின் வளைவுகளில் சிறு வித்தியாசம் இருக்கும். வளைவு ஆண்களை விட பெண்களுக்கு சற்று அதிகமாக இருக்கும்.”

வீடு பெருக்குதல், துணி துவைத்தல் போன்ற வேலைகளில் ஈடுபட்டால் அவர்களுக்கு முதுகு வலி ஏற்படுமா?“பெண்கள் 45-50 வயது வரை வீட்டு வேலைகளை செய்வது நல்லது. வீட்டு வேலைகளால் முதுகெலும்பிற்கோ, எலும்புகளின் நடுவில் உள்ள டிஸ்கிற்கோ எந்த பாதிப்பும் வராது. ஆனால் முதுகெலும்பில் ஏதாவது பிரச்சினையோ, நோயோ ஏற்பட்டிருந்தால் கடினமான வேலைகளை செய்யாமல் இருக்கவேண்டும். இடுப்பில் தண்ணீர் குடத்தை தூக்குவதாலும், குழந்தைகளை இடுப்பில் தூக்குவதாலும் பெண்களின் முதுகெலும்பில் பொதுவாக பாதிப்பு ஏற்படுவதில்லை.”

கர்ப்பம், பிரசவத்திற்கு தக்கபடி பெண்களின் முதுகெலும்பு கட்டமைப்பில் ஏதேனும் மாற்றங்கள் இருக்கிறதா? “பெண்களின் அடி முதுகு வளைவு அவர்களது கர்ப்ப காலத்தில் வயிற்றின் முன் பக்க வளர்ச்சிக்கு ஏற்ப, பின்பக்கம் சாய்ந்து கொள்ளக்கூடிய விதத்தில் அமைந்துள்ளது. இதனால் வயிற்றில் குழந்தை வளர வளர முன்பக்க பாரத்திற்கு ஈடுகொடுக்கும் விதத்தில், பின்புறமாக சாய்ந்துகொண்டு கர்ப்பிணிகளால் அன்றாட வேலைகளை செய்ய முடியும். இதற்கு கர்ப்ப காலத்தில் சுரக்கும் ஹார்மோன்களும் உதவி புரிகின்றன.”

முதுகுவலி தோன்ற எத்தனை விதமான காரணங்கள் இருக்கின்றன?“முதுகுவலி தோன்ற கீழ்க்கண்டவை பொதுவான காரணங்களாக இருக்கின்றன.
டிஸ்க் ப்ரொலாப்ஸ்: முதுகெலும்புகளுக்கு இடையில் ஷாக் அப்சர்வர் போல் இயங்கும் `டிஸ்க்’ என்னும் மெல்லிய ஜவ்வு வயதாவதாலோ, காயம் பட்டதினாலோ அல்லது அழற்சியினாலோ தேய்ந்து விடும். அப்போது 2 எலும்புகளுக்கிடையே போதிய இடைவெளி இன்றி டிஸ்க் எலும்பை விட்டு வெளியே பிதுங்கி விடும். இதனால் அதன் அருகில் செல்லும் ரத்தக்குழாயையோ, நரம்பையோ அழுத்தி வலியை உண்டு பண்ணும்.

ஸ்பாண்டிலோசிஸ்: வயதாகி எலும்புகளில் தேய்மானம் ஏற்படுவதாலும், எலும்புகளுக்கிடையே சில தாதுக்கள் படிவதாலும் எலும்புகளுக்கிடையே உராய்வு ஏற்படும். இதனால் அழற்சியோ, கிருமி தொற்றோ ஏற்பட்டு வலி ஏற்படும்.

ஆஸ்டியோபொரோஸிஸ்: உடலின் கால்சியம் சத்துக்களின் அளவு வயதாவதினாலோ, பெண்களுக்கு மாதவிடாய் நின்ற பிறகோ குறைந்து விடலாம். இதனால் எலும்புகளில் போதிய அளவு சுண்ணாம்பு சத்து இல்லாததால் எலும்புகள் வலுவிழந்து, அடர்த்தி குறைவாகிவிடும். இதனாலும் எலும்புகளில் வலியும், எலும்பு முறிவும் ஏற்படலாம்.

ஸ்பான்டிலோலிஸ்தஸிஸ்: முதுகெலும்பு வலுவிழக்கும்போது வரிசையாய் இருக்க வேண்டிய எலும்புகளில் ஒன்றிரண்டு வரிசையிலிருந்து முன்புறமோ பின்புறமோ விலகி விடும். இதனாலும் முதுகுவலியோ, முதுகு தசை பிடிப்போ, மரத்து போதலோ ஏற்படலாம். இது 35 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்படுகிறது.

ஆர்த்ரைட்டிஸ்: மூட்டுக்களில் ஏற்படும் அழற்சியே ஆர்த்ரைட்டிஸ். இது ருமடாய்டு ஆர்த்ரைட்டிஸ், ஆன்க்கிலோசில் ஸ்பான்டிலோசிஸ் போன்ற நோய்களின் விளைவால் ஏற்படக்கூடியதாக இருக்கும்.”

மேடு, பள்ளம் நிறைந்த சாலைகளில் இரு சக்கர வாகன பயணம் மேற்கொள்வது முதுகுவலியை ஏற்படுத்துமா?
“முதுகெலும்புகளுக்கு நடுவில் உள்ள டிஸ்க் ஷாக் அப்சர்வர் போல் செயல்பட்டு அதிக பளு தூக்குதல், குனிதல், குதித்தல் போன்ற சமயங்களில் அதிர்வுகளை தாங்கி கொள்ளும். ஆனால் டிஸ்க் தேய்ந்து விட்டாலோ அல்லது எலும்புகளில் வேறு பிரச்சினை இருந்தாலோ மேடு, பள்ளம் நிறைந்த சாலையில் செல்லும்போது டிஸ்க் அழுத்தப்பட்டு, அழுத்தம் தாளாமல் வெளியே பிதுங்கி பக்கத்தில் உள்ள நரம்புகளை அழுத்தும். இதனால் வலி ஏற்படும்.”

முதுகுவலி என்பது கழுத்து வலியும் சேர்ந்ததா? முதுகு வலிக்கும்போது கழுத்தும் சேர்ந்து வலிக்குமா?
“முதுகெலும்பில் எங்கு வேண்டுமானாலும் எலும்பு தேய்மானமோ, அழற்சியோ, டிஸ்க் ப்ரொலாப்ஸோ ஏற்படலாம். இதனால் எங்கு வேண்டுமானாலும் வலி ஏற்படலாம். பொதுவாக கழுத்து எலும்பில் டிஸ்க் ப்ரொலாப்ஸ் என்றால் கழுத்து, தோள்பட்டை, கைகளில் வலி பரவலாம்.

அதே போல் அடி முதுகில் ப்ரொலாப்ஸ் என்றால் அடிமுதுகு, இடுப்பு மற்றும் கால்களில் வலி ஏற்படலாம். இரண்டு வித வலியும் சேர்ந்து இருக்க வேண்டிய அவசியமில்லை.”

முதுகெலும்பின் அடர்த்தி குறைவு மற்றும் பிரச்சினைகளை வலி வரும் முன்பே கண்டுபிடிக்க முடியுமா?“வலியின் அறிகுறி தெரியும் வரை முதுகெலும்பில் டிஸ்க் ப்ரொலாப்ஸ் பிரச்சினையை கண்டுபிடிக்க முடியாது.”

கழுத்து வலி மற்றும் முதுகுவலிக்கு இருக்கும் நவீன சிகிச்சை என்ன?“பேக் அண்ட் நெக் கட்டமைப்பு மருத்துவத்தில், டிஸ்க் ப்ரொலாப்ஸை அறுவை சிகிச்சையின்றி கட்டுப்படுத்தலாம். நவீன மருத்துவ முறையில் வடிவமைக்கப்பட்ட DRX 9000 என்ற கருவி முதுகுவலிக்கும், DRX 9000C என்ற கருவி கழுத்து வலிக்கும் சிகிச்சையளிக்க பயன்படுகிறது. இந்த சிகிச்சை முறை கிட்டத்தட்ட 86 சதவீதம் வரை வலியை குறைத்து நோயாளி தன் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப உதவும்.”

உறுப்பு மாற்று ஆபரேஷன் இப்போது பரவலாக இருக்கிறதே. முதுகெலும்புகளை எடுத்து எலும்பு வங்கிகளில் சேகரிக்க முடியுமா? அதை மாற்று ஆபரேஷன் மூலம் பாதிக்கப்பட்டவருக்கு பொருத்த முடியுமா?“எலும்பு வங்கியில் எலும்புகள் சேமித்து வைக்கப்படுகிறது. ஆனால் முதுகெலும்புகள் சேமிக்கப்படுவதில்லை. மேலும் செயற்கை டிஸ்க்குகளை பயன்படுத்தி டிஸ்க் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. ஆனால் முதுகெலும்பு மாற்று அறுவை சிகிச்சை இதுவரை செய்யப்படவில்லை.

அதேபோல் தண்டுவட பாதையோ, தண்டு வடமோ வேறொருவரிடம் இருந்து மாற்றாக எடுத்து வைக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் கிடையாது. இனி எதிர்காலத்தில் இதற்கான புது சிகிச்சை முறைகள் வரலாம்.”
Photo: முதுகுவலி: ஏன் வருகிறது? எப்படி போக்குவது? அறிந்து கொள்வோம் !!

முதுகுவலி முதியவர்களுக்கு மட்டும்தான் வரும் என்றில்லை. இளைஞர்களையும் இப்போது பாடாய்படுத்திக் கொண்டிருக்கிறது. பெண்களும் முதுகுவலி, கழுத்து வலியால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அலுவலகம் செல்பவர்களுக்கு அத்தியாவசியமான குறிப்புகள் !!

காலை உணவைத் தவிர்க்காதீர்!

பெரும்பாலும் காலையில் அலுவலகம் செல்லும் அவசரத்தில், காலை உணவைத் தவிர்ப்பது பலரின் பழக்கமாகிவிட்டது. காலை வேளையில்தான் உங்கள் சக்தி முழுமையாய் இருக்கும். அந்
த வேளையில் சக்தியளிக்கக்கூடிய உணவை நீங்கள் அளிக்காவிட்டால், அன்று முழுவதும் களைப்பாயிருக்கும்; வேலைகளையும் சுறுசுறுப்பாகச் செய்ய முடியாது. ஒரு கிளாஸ் ஆரஞ்சு ஜூஸ் அல்லது தக்காளி அல்லது ஒரு டம்ளர் பால் அல்லது ஒரு கப் தயிர் இவைகூட உங்கள் சக்திக்குப் போதுமானவை. வைட்டமின் மாத்திரைகள்தான் உடல் நலம் அளிப்பவை என்று கருதாதீர்கள்.

இயற்கையாகக் கிடைக்கும் காய்கறிகள், பழங்கள் ஆகிய உணவு வகைகளே உடல்நலத்திற்கு உகந்தவை.சாப்பிடும்போது, எந்த வேலையும் செய்யாமல் சாப்பிடுவது நல்லது. சிலர் சாப்பிடும்போது புத்தகம் படிக்கிறார்கள். இது மிகவும் தவறு. காலையில் சாப்பிடாமல் மதியம் சிலர் அதிகமாக உண்பார்கள். இதுவும் தவறு. குறைவான உணவை நேரம் தவறாமல் ரசித்தும், மெதுவாகவும் சாப்பிடுவதும் சிறந்தது. வேகமாகவும், மனச்சோர்வுற்றிருக்கும்போதும் உணவு உட்கொள்வது நல்லதல்ல. மதிய உணவிற்கு முன்னர் எதையாவது கொறித்துத் தின்ன வேண்டாம். காலை உணவிற்கும், மதிய உணவிற்கும் இடையில் ஒரு டம்ளர் இளநீர் அல்லது மோர் அருந்தினால் போதும். நொறுக்குத்தீனி அதிகம் சாப்பிட்டால் உடலில் தேவையற்ற சதைகள் உருவாகும்.

காபி, டீ குறையுங்கள்!

காபியும், டீயும் சுறுசுறுப்பை அளிக்கின்றன என்று கருதிக் கொண்டு பலர் இவற்றை அருந்தும் பழக்கத்தை மேற்கொண்டிருக்கிறார்கள். நடைமுறை வாழ்க்கையில் அடிக்கடி காபி, டீ குடிப்பது உடலுக்குக் கெடுதலை விளைவிக்கும், உடனே இந்தப் பழக்கத்தை விடமுடியாதாவர்கள், படிப்படியாக டீ அல்லது காபி உட்கொள்வதைக் குறைத்துக் கொண்டு வரலாம். காபி, டீ அடிக்கடி குடிப்பது இளநரை ஏற்படுவதற்கும் காரணமாய் அமைகிறது.

வழியில் விற்கும் உணவுப் பொருள்களைச் சாப்பிடாதீர்கள்

வீட்டிற்கு வரும் வழியில் ‘ஸ்நாக்ஸ்’ சாப்பிடும் பழக்கம் அலுவலகம் செல்லும் பலரிடம் இருக்கிறது. இவர்கள் பிரயாணம் செய்யும்போதும், சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள். இது நல்ல பழக்கம் அன்று. அது உங்கள் இரவு உணவையும் பாதிக்கும். ரெடிமேட் உணவு வகைளான Instant Food, Fast Foods ஆகியவற்றை இரவு உணவாகப் பயன்படுத்தாதீர்கள். அதிகமாக எண்ணெய் உள்ள பண்டங்களையும், வறுத்தெடுத்த பண்டங்களையும் தவிர்த்து வேகவைத்த உணவு வகைகளைக் சாப்பிடலாம்.

இரவு நேர ஸ்நாக்ஸ் வேண்டாம்

டி.வி. பார்க்கும்போதும், ஓய்வாக வீட்டில் அரட்டை அடிக்கும் போதும், பாதி ராத்திரியில் தூக்கம் இல்லாமல் படுத்துப் புரண்டு கொண்டிருக்கும்போதும், ஸ்நாக்ஸ் சாப்பிடுவதை சிலர் பழக்கமாகக் கொண்டிருப்பர். இதுவும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும். ஏதாவது ஒன்றைக் கொறித்துச் சாப்பிட வேண்டுமென்றால் காரட், பீட்ரூட், வெள்ளரி போன்றவற்றைத் துண்டுகளாக நறுக்கி அவற்றைச் சாப்பிடலாம்.

உடற்பயிற்சி

அலுவலக வேலை செய்யவே நேரம் இருக்கிறது என்று அலுத்துக் கொள்பவர்கள், காலையில் சற்று சீக்கிரம் எழுந்து, 15 நிமிடமாவது உடற்பயிற்சியும், தியானமும் செய்தால் அன்று முழுவதும் களைப்பில்லாமல் வேலை செய்ய முடியும். உடலும் அதிக எடையற்றதாக இருக்கும்!

நன்றி

எகயா
Photo: அலுவலகம் செல்பவர்களுக்கு அத்தியாவசியமான குறிப்புகள் !!

காலை உணவைத் தவிர்க்காதீர்!

பெரும்பாலும் காலையில் அலுவலகம் செல்லும் அவசரத்தில், காலை உணவைத் தவிர்ப்பது பலரின் பழக்கமாகிவிட்டது. காலை வேளையில்தான் உங்கள் சக்தி முழுமையாய் இருக்கும். அந்த வேளையில் சக்தியளிக்கக்கூடிய உணவை நீங்கள் அளிக்காவிட்டால், அன்று முழுவதும் களைப்பாயிருக்கும்; வேலைகளையும் சுறுசுறுப்பாகச் செய்ய முடியாது. ஒரு கிளாஸ் ஆரஞ்சு ஜூஸ் அல்லது தக்காளி அல்லது ஒரு டம்ளர் பால் அல்லது ஒரு கப் தயிர் இவைகூட உங்கள் சக்திக்குப் போதுமானவை. வைட்டமின் மாத்திரைகள்தான் உடல் நலம் அளிப்பவை என்று கருதாதீர்கள்.

இயற்கையாகக் கிடைக்கும் காய்கறிகள், பழங்கள் ஆகிய உணவு வகைகளே உடல்நலத்திற்கு உகந்தவை.சாப்பிடும்போது, எந்த வேலையும் செய்யாமல் சாப்பிடுவது நல்லது. சிலர் சாப்பிடும்போது புத்தகம் படிக்கிறார்கள். இது மிகவும் தவறு. காலையில் சாப்பிடாமல் மதியம் சிலர் அதிகமாக உண்பார்கள். இதுவும் தவறு. குறைவான உணவை நேரம் தவறாமல் ரசித்தும், மெதுவாகவும் சாப்பிடுவதும் சிறந்தது. வேகமாகவும், மனச்சோர்வுற்றிருக்கும்போதும் உணவு உட்கொள்வது நல்லதல்ல. மதிய உணவிற்கு முன்னர் எதையாவது கொறித்துத் தின்ன வேண்டாம். காலை உணவிற்கும், மதிய உணவிற்கும் இடையில் ஒரு டம்ளர் இளநீர் அல்லது மோர் அருந்தினால் போதும். நொறுக்குத்தீனி அதிகம் சாப்பிட்டால் உடலில் தேவையற்ற சதைகள் உருவாகும்.

காபி, டீ குறையுங்கள்!

காபியும், டீயும் சுறுசுறுப்பை அளிக்கின்றன என்று கருதிக் கொண்டு பலர் இவற்றை அருந்தும் பழக்கத்தை மேற்கொண்டிருக்கிறார்கள். நடைமுறை வாழ்க்கையில் அடிக்கடி காபி, டீ குடிப்பது உடலுக்குக் கெடுதலை விளைவிக்கும், உடனே இந்தப் பழக்கத்தை விடமுடியாதாவர்கள், படிப்படியாக டீ அல்லது காபி உட்கொள்வதைக் குறைத்துக் கொண்டு வரலாம். காபி, டீ அடிக்கடி குடிப்பது இளநரை ஏற்படுவதற்கும் காரணமாய் அமைகிறது.

வழியில் விற்கும் உணவுப் பொருள்களைச் சாப்பிடாதீர்கள்

வீட்டிற்கு வரும் வழியில் ‘ஸ்நாக்ஸ்’ சாப்பிடும் பழக்கம் அலுவலகம் செல்லும் பலரிடம் இருக்கிறது. இவர்கள் பிரயாணம் செய்யும்போதும், சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள். இது நல்ல பழக்கம் அன்று. அது உங்கள் இரவு உணவையும் பாதிக்கும். ரெடிமேட் உணவு வகைளான Instant Food, Fast Foods ஆகியவற்றை இரவு உணவாகப் பயன்படுத்தாதீர்கள். அதிகமாக எண்ணெய் உள்ள பண்டங்களையும், வறுத்தெடுத்த பண்டங்களையும் தவிர்த்து வேகவைத்த உணவு வகைகளைக் சாப்பிடலாம்.

இரவு நேர ஸ்நாக்ஸ் வேண்டாம்

டி.வி. பார்க்கும்போதும், ஓய்வாக வீட்டில் அரட்டை அடிக்கும் போதும், பாதி ராத்திரியில் தூக்கம் இல்லாமல் படுத்துப் புரண்டு கொண்டிருக்கும்போதும், ஸ்நாக்ஸ் சாப்பிடுவதை சிலர் பழக்கமாகக் கொண்டிருப்பர். இதுவும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும். ஏதாவது ஒன்றைக் கொறித்துச் சாப்பிட வேண்டுமென்றால் காரட், பீட்ரூட், வெள்ளரி போன்றவற்றைத் துண்டுகளாக நறுக்கி அவற்றைச் சாப்பிடலாம்.

உடற்பயிற்சி

அலுவலக வேலை செய்யவே நேரம் இருக்கிறது என்று அலுத்துக் கொள்பவர்கள், காலையில் சற்று சீக்கிரம் எழுந்து, 15 நிமிடமாவது உடற்பயிற்சியும், தியானமும் செய்தால் அன்று முழுவதும் களைப்பில்லாமல் வேலை செய்ய முடியும். உடலும் அதிக எடையற்றதாக இருக்கும்!

நன்றி

எகயா

Wednesday, October 17, 2012

கர்வம் தவிர் மனிதனை மனிதனாக பார் !!

கர்வம் தவிர் மனிதனை மனிதனாக பார் !!

'கர்வமுடையவர்கள் எப்போதும் மற்றவர்களைக் குனிந்தே பார்ப்பதால், தமக்கு மேல் இருக்கும் உயரிய விஷயங்களைப் பார்க்கும் வாய்ப்பை இழந்து விடுகிறார்கள்' என்கிறார், கடந்த நூற்றாண்டின் பெருமைக்குரிய அயர்லாந்து நாட்டு எழுத்தாளர் சி.எஸ். லூயிஸ்.

தன்னை மட்டும் பல்லக்கில் உட்கார வைத்து, மற்றவர்களை மதிப்புக் குறைந்தவர்களாய்ப் பார்க்க வைப்பது கர்வத்தின் முதல் வேலை.மனிதனுடைய வளர்ச்சிப்படியில் கர்வம் கால்நீட்டிப் படுத்திருக்கும். இதுதான் கடைசிப் படி என ம
னிதன் அதன் காலடியில் இளைப்பாறத் துவங்கும்போது, வெற்றிகளின் கதவுகள் துருப்பிடிக்கத் துவங்கும்.

கர்வம் மனிதனின் வேகக்கால்களை வெட்டி வீழ்த்தும் கண்ணுக்குத் தெரியாத ஆயுதம்.கொஞ்சம் நடுநிலைமையோடு கர்வத்தின் முகங்களைக் கொஞ்சம் கூர்மையாகப் பார்த்தால், கர்வம் நமது தனி வாழ்க்கையையும், சமூக வாழ்க்கையையும் எப்படியெல்லாம் பாதிக்கிறது எனும் கோரமான உண்மை புரியும்.எனக்கு எல்லாம் தெரியும்' என்பது கர்வக் கிரீடத்தின் குரல்ஆழ்மனதின் ஆழத்தை எட்டிப் பார்த்தால் வெற்றிடங்களின் விலாசமே தெரியும்.

எல்லாம் தெரியும் எனும் கர்வம், தனது குடத்தை மூடி வைத்து விடுகிறது. தண்ணீர் நிரம்பாத நிலை அதன் நிரந்தரமாகி விடுகிறது.

'நீ எனக்கு மரியாதை செலுத்த வேண்டும்' என கர்வத்தின் வேர்கள் கூக்குரலிடும்.

பிறருடைய மரியாதை மழையில் நனைய நினைக்கும் தாவரமாய் கர்வம் மனிதனை நடுவழியில் இறக்கிவிடும்.'மரியாதையை எதிர்பார்க்கும் மனம், பிறரை மரியாதை செய்ய மறுத்தும் விடும்' என்பதுதான் நிதர்சனத்தின் இன்னோர் பக்கம்.

'நான் எல்லோரையும் விட பெரியவன்' என கர்வம் தனது காலரைத் தூக்கிவிட்டுக் கொள்ளும்.தனது வெற்றுக் கொடியை வேற்றுக் கிரகத்தில் நாட்ட வேண்டுமென நாட்டம் கொள்ளும்.

அடுத்தவனை விட நான் பெரியவன் எனும் சிந்தனையே அவன் மனதிலிருந்து ஒட்டுமொத்தப் பணிவையும் தூக்கி பரணில் போடும்.இதோ என் சாதனைகளின் பட்டியல்' என வெற்றிப் பட்டியலை கர்வம் தனது நெஞ்சில் சுமந்து திரியும். தவறுகளின் நிகழ்வுகளை யாரும் காணா எல்லைக்கப்பால் நாடு கடத்தும்.
தனது வெற்றிகளைப் பறைசாற்றவும், சாமான்யன் தனக்குச் சாமரங்கள் வீச வேண்டுமென எதிர்பார்க்கவும் கர்வம் துடிதுடிக்கும்.

'நான் தவறுகளுக்கு அப்பாற்பட்டவன்' என கர்வம் முகமூடியை முகமாக்க முயலும். தவறுகள் செய்யாத மனிதன் இல்லை- என்னைத் தவிர, என்று கர்வம் கொக்கரித்துத் திரியும்.'என் தகுதிக்குரியவை எனக்குக் கிடைத்திருக்கின்றன. மறுக்கப்பட்ட பலவற்றுக்கும் கூட நான் தகுதியானவனே' என கர்வம் தனக்குக் கிடைத்த பிறர் உதவிகளையோ, இறை வரங்களையோ கூட தனது காலடியில் மண்டியிடச் செய்யும். தன்னால்தான் எல்லாமே நடக்கின்றன எனும் சக்கரவர்த்தியின் மூச்சுக் காற்றாய் முணுமுணுக்கும்.

'என்னைப் பாராட்டுங்கள், நான் அதற்குத் தகுதியானவன்' என கர்வம் தனக்கான பாராட்டு அபிஷேகத்தை எப்போதும் எதிர்பார்க்கும். பாராட்டுவோர் பாக்கியவான்கள் என நினைத்து இன்னும் நாலு மடங்கு கர்வம் கொள்ளும்.

கர்வத்தின் கணக்கற்ற முகங்களின் சில முகங்களே இவை. கர்வம் தனது அலமாரி முழுக்க பல்வேறு முகத்திரைகளை வரிசையாய் வைத்திருக்கிறது. தனது தேவைக்கேற்ப ஒன்றை அது அணிந்து திரிகிறது.

ஏதோ ஒரு செயலைச் செய்துவிட்டால், அது நல்லபடியாய் முடிந்துவிட்டால் நம்மால் இயல்பாக இருக்க முடிவதில்லை. பெருமை வந்து விடுகிறது. அது அத்துடன் நின்று போவதில்லை. அதே செயலைச் செய்ய முயன்று தோற்றுப் போன எல்லோரையும் அது இளக்காரமாய்ப் பார்க்க ஆரம்பித்து விடுகிறது.

ஒரு மனிதனுடைய வெற்றி இன்னொரு மனிதனை வெற்றியை நோக்கி இழுக்க வேண்டுமே தவிர, அவனுடைய தோல்வியை விமர்சிப்பதாய் அமையக் கூடாது. மனிதநேயத்தின் இயல்பே அரவணைத்தலில்தான் இருக்கிறது. இல்லையேல் நீங்கள் அடைந்த வெற்றியே ஒருவகையில் உங்களுடைய இயல்பைச் சிதைப்பதால் தோல்வியாகி விடுகிறது.

பலர் செய்யும் ஒரு தவறு, கர்வத்தையும் தன்னம்பிக்கையையும் போட்டுக் குழப்பிக் கொள்வதுதான். தன்னம்பிக்கை வேறு, கர்வம் வேறு. தன்னம்பிக்கை உங்கள் மீது நீங்கள் வைக்கும் மரியாதை. கர்வம் என்பது பிறரைத் தாழ்ந்தவராய்க் கருதிக்கொள்ளும் உங்களுடைய ஆழ்மன ஆர்வம்.

என்னால் முடியும் என்பதும், என்னால் மட்டும்தான் முடியும் என்பதும் தன்னம்பிக்கைக்கும், கர்வத்துக்குமான ஓர் உதாரணமாகக் கொள்ளலாம்.

தன்னம்பிக்கையை உளவியல் ரீதியான உந்துதல் என்று கொண்டால், கர்வத்தை மோசமான குணாதிசயம் எனலாம்.

கர்வம் மனிதனை தவறுகளை நோக்கிச் செலுத்தும் சுக்கானாகி விடுகிறது. கர்வம் தவறுகளை ஏற்றுக் கொள்ளும் மனதைத் தருவதில்லை. பழியைத் தூக்கி அடுத்தவர் தோளில் சுமத்தும் வழியையே தேடச் செய்யும். காரணம், கர்வத்தின் அஸ்திவாரத்தில் ஈகோ உறைந்து கிடக்கும்.

கர்வத்தைக் கழற்றி வைத்துவிட்டுச் சக மனிதர்களோடு கலந்து வாழும் வாழ்க்கையே ஆனந்தங்களின் இசையை திசையெங்கும் இசைக்கும். அதுவே தனிமைகளின் கூட்டை உடைத்து இனிமைகளின் கூட்டணியை அமைக்கும். கர்வத்தின் கல்வெட்டுகளைத் தாண்டி தாழ்மையின் படிக்கட்டுகளை நோக்கிய பயணமே மனிதகுலத்துக்கு அவசியம்.

தாழ்மை நம்மைப் பற்றிய ஆழமான அறிதலில் இருந்து புறப்படும். உண்மையில் நான் யார்? எனது மனம் மனிதநேயத்தின் தாழ்வாரங்களில்தான் நடக்கிறதா? பிறருக்குத் தெரியாத பலவீனங்கள் எனக்கு என்னென்ன இருக்கின்றன? கோபம், பொறாமை, சுயநலம், வெறுப்புணர்வு இப்படிப்பட்ட ஒவ்வோர் புரிதலும் நமது தாழ்மையைக் கூர்தீட்டும்.

தாழ்மை என்பது பச்சாதாபமல்ல. அது நம்மைக் கனவுப் பல்லக்கிலிருந்து இறங்கி வீதியில் நடக்க வைப்பது மட்டுமே. அது சக மனிதனின் மீதான கரிசனையின் மீது கட்டியெழுப்பப்படும். தன்னைப் பற்றிய மையத்தை விட்டு வெளியே வரும் மனதின் சிறகடிப்பே தாழ்மையின் வாசம்.

ஒரு மன்னனைக் காண ஏழை மனிதன் ஒருவன் வந்தான். நெடுநேரக் காத்திருப்புக்குப் பின் அவனுக்கு மன்னனைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. உள்ளே சென்றதும் தனது தலைப்பாகையை அவிழ்த்து மன்னனுக்கு முன்னால் குனிந்து வணங்கினான் அவன். மன்னனும் உடனே எழுந்து கிரீடத்தைக் கழற்றி வைத்துவிட்டுக் குனிந்து வணங்கினான்.

அந்த ஏழை சென்றபின் அமைச்சர்கள் மன்னனிடம் கேட்டார்கள், "அவன் ஓர் ஏழை, அவனுக்கு முன்னால் நீங்கள் ஏன் கிரீடம் கழற்றினீர்கள் மன்னரே?''

மன்னன் சொன்னான், "வந்தவன் செல்வத்தால் ஏழை. ஆனால் தாழ்மையில் அவன் மன்னனாக இருந்தான். அவனுக்கு முன்னால் நானும் கர்வத்தைக் கழற்றி வைத்துவிட்டு தாழ்மையை அணிவதே நல்லதெனப் பட்டது.''தாழ்மை என்பது கர்வத்தைக் கழற்றுவதுதான். யார் வேண்டுமானாலும் எட்டி மிதிக்கும் மிதியடியாய் மாறுவதல்ல.

பிறரைப் பாராட்டும் குணம் தாழ்மையான மனதின் வெளிப்பாடு. தான் மட்டுமே சிறப்பானவன் எனும் கர்வம் எப்போதுமே பாராட்டுகளை வழங்கத் தயங்கும். எல்லோரையும் சமமாய் நேசிக்கும் மனதில் பாராட்டுகளுக்குப் பஞ்சம் இருக்காது. பிறர் உயர்ந்தவர் என நாம் கருதும் வினாடியில் நாம் புதிய விஷயங்கள் சிலவற்றைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பும் உருவாகிறது என்பதை கவனத்தில் கொள்வோம்.விலக்கிவிட மிகவும் கஷ்டமான விஷயம் கர்வம்தான். நான் கர்வத்தை விட்டு விலகி தாழ்மையாய் மாறிவிட்டேன் என்று சொல்லும்போது கூட, 'நான் தாழ்மையின் சின்னம்' என கர்வம் கொள்ள முயல்கிறது மனது' என்கிறார் பெஞ்சமின் பிராங்ளின்.
கர்வம் என்பது எந்த விஷயத்துக்காக வேண்டுமானாலும் எழலாம் என்பதையே அவருடைய வாசகங்கள் படம் பிடிக்கின்றன. 'நான் நல்லவன்', 'நான் பிறரை மதிப்பவன்', 'நான் எளிமையானவன்', 'நான் கடவுள் பக்தி நிறைந்தவன்', 'நான் ஏழைகளுக்கு உதவுபவன்' என எந்த முளையிலிருந்து வேண்டுமானாலும் கர்வத்தின் தரு தழைத்து வளரலாம்.

தாழ்மை உங்களுடைய உறவினர்களோடு ஆழமான, நேர்மையான அன்புறவு கொள்ள வைக்கும். கர்வம் பல வேளைகளில் சண்டைகளுக்கான முதல் சுவடை வைத்து விடும். விட்டுக் கொடுத்தல் தாழ்மையின் அடையாளம். உறவுகளைக் கட்டி எழுப்புகையில் நமது வலக்கரமாய் செயல்படும் விஷயமும் அதுதான்.
தொட்டதுக்கெல்லாம் அடுத்தவர்களோடு ஒப்பிட்டு, அவர்களை விட நான் பெரியவன் என நினைப்பதுதான் கர்வத்தின் காட்டுத் தீயில் எண்ணை ஊற்றும் சமாச்சாரம். ஒப்பீடுகளினால் எதுவும் நிகழப் போவதில்லை. அதனால்தான் ஆழமான ஆன்மிகவாதிகள் தங்களை இறைவனோடு ஒப்பிட்டுப் பார்க்கிறார்கள். அது அவர்களுக்குத் தாழ்மையை கற்றுக் கொடுக்கிறது.

சின்னச் சின்ன விஷயங்களில் இருக்கும் அழகையும், வியப்பையும் ரசிக்கத் துவங்குங்கள். தாழ்மை உங்களை வந்தடையும். ஆர்வமும், தேடலும் உலகின் அழகிய பக்கங்களை அவிழ்த்து வைக்கும். நமது அறியாமையின் கதவுகளை ஒவ்வொன்றாய்த் திறக்கும். கூடவே நமது கர்வத்தின் திரைச்சீலைகளை ஒவ்வொன்றாய்க் கிழிக்கும்.பிறர் மீதான உண்மையான கரிசனை அவரையும் நம்மைப் போலவே நேசிப்பதில் துவங்குகிறது. அது நமது தாழ்மையின் பயணத்தில் நிகழ்கிறது.

கர்வப் பிழைகள் அழியட்டும்
தாழ்மை மழையாய் பொழியட்டும்!
Photo: கர்வம் தவிர்  மனிதனை  மனிதனாக பார் !! 

'கர்வமுடையவர்கள் எப்போதும் மற்றவர்களைக் குனிந்தே பார்ப்பதால், தமக்கு மேல் இருக்கும் உயரிய விஷயங்களைப் பார்க்கும் வாய்ப்பை இழந்து விடுகிறார்கள்' என்கிறார், கடந்த நூற்றாண்டின் பெருமைக்குரிய அயர்லாந்து நாட்டு எழுத்தாளர் சி.எஸ். லூயிஸ்.

தன்னை மட்டும் பல்லக்கில் உட்கார வைத்து, மற்றவர்களை மதிப்புக் குறைந்தவர்களாய்ப் பார்க்க வைப்பது கர்வத்தின் முதல் வேலை.மனிதனுடைய வளர்ச்சிப்படியில் கர்வம் கால்நீட்டிப் படுத்திருக்கும். இதுதான் கடைசிப் படி என மனிதன் அதன் காலடியில் இளைப்பாறத் துவங்கும்போது, வெற்றிகளின் கதவுகள் துருப்பிடிக்கத் துவங்கும்.

டாஸ்மாக்கினால் அரசுக்கு ஆண்டுக்கு 14000 கோடி !! டாஸ்மாக்கினால் பல குடும்பகள் இன்று நிற்பது ?

குடியின் கெடுதல் குறித்து, தமிழ் சமூகத்தில் எவருக்கும் கட்டுரை எழுதி புரிய வைக்கவேண்டிய அவசியம் இல்லை. ஆனால் இன்று தமிழகத்தில், பத்து விழுக்காடு மக்கள் அதாவது ஏழரை லட்சம் மக்கள் தினமும் மது அருந்துகின்றனர் என்றும், மேலும் 13 வயது பள்ளி மாணவர்களும் கூட மது அருந்துவதாகவும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஏழை மக்களின் வாழ்வில் ஒளியேற்றி வைக்க வேண்டிய நமது ஆட்சியாளர்கள், க ுடும்பத்த
லைவனை குடி பழக்கத்திற்கு அடிமையாக்கி அந்த குடியானவனைக் கொன்றுவிட்டு, அதன் மூலமாகக் கிடைக்கும் வருவாயைக்கொண்டு, அவனது மனைவிக்கு விதவை உதவித்தொகை வழங்கி வருகின்றனர். இப்படியாக ஒரு நாட்டின் குடிமக்கள், அவர்களின் ஆட்சியாளர்களால் திட்டமிட்டு போதைக்கு அடிமையாக்கப்பட்டு வருகின்றனர் என்பது கண்கூடு.

இந்திய அரசியலமைப்பு சாசனத்தில் மது விலக்கு:

உணவு சத்துக்களை மேம்படுத்தவும், அடிப்படை வாழ்க்கை வசதிகளைப் பெருக்கவும், நல்வாழ்வினை உயர்த்தவும், தேவையானவற்றைத் தமது தலையாய கடமைகளாக அரசு கருத வேண்டும். அதிலும் குறிப்பாகப் போதையூட்டும் மதுவகைகளையும், உடலுக்குத் தீங்கு பயக்கும் நச்சுப் பொருள்களையும், மருந்துக்காக அன்றி வேறுவிதமாகப் பயன்படுத்துவதைத் தடை செய்வதற்காக மதுவிலக்கை அமல்படுத்த முயற்சி செய்யவேண்டும்.” என்று இந்திய அரசியலமைப்பு சாசனம், 1950ல் ‘அரசின் நெறியுறுத்தும் கொள்கைகள்’ என்ற தலைப்பின் கீழ் அமைந்துள்ள, பிரிவு 47 கூறுகிறது.

மது விலக்கு:

போதை தரக்கூடிய, மது வகைகளை உற்பத்தி செய்வதற்கும், விற்பனை செய்வதற்கும், அதனை அருந்துவதற்கும் சட்டப்படி தடை செய்தல் முறையே மது விலக்கு என குறிப்பிடப்படுகிறது.

தமிழ் சமூகத்தில் தனி மனித வாழ்க்கையில் பெரும் ஒழுக்கக்கேடுகளாகக் கருதப்படுகின்றவற்றில் மது பழக்கமும் ஒன்று.

பௌத்த மதத்தைப் பின்பற்றுவோர் கடைபிடிக்கும் ‘’பஞ்ச சீலம்’’ என அழைக்கப்படும் ஐந்து கொள்கைகளில், நான்காவது கோட்பாடானது, மதுவையோ அல்லது வேறு வகையான போதை பொருட்களையோ பயன்படுத்தக் கூடாது என்பதாகும்.

உலக பொதுமறையாம் ‘திருக்குறளில்”, அறத்துப்பால் எனும் தலைப்பில் இயற்றப்பட்டுள்ள குறள்களில் 93வது அதிகாரமாக “கள்ளுண்ணாமை” குறித்து அய்யன் வள்ளுவரால் பாடப்பட்டுள்ளது..

மது விற்பனையின் மூலமாகக் கிடைக்கும் வருவாயினை, ஒரு நாட்டின் கல்வி மற்றும் பொது சேவைக்குப் பயன்படுத்துவது குற்றம். மேலும் மது விற்பனையின் மூலமாக பெறப்படும் பணமானது கறை படிந்த ஒன்று. எனவே அது தேசத்தைச் சீரழித்துவிடும் என்று இந்தியாவின் தேசத்தந்தையாகப் போற்றப்படும், மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி எச்சரித்தார்.

மது விலக்கை வலியுறுத்தி ராஜாஜி “விமோசனம்” என்ற பெயரில் இதழ் ஒன்றை நடத்தினார்.

தந்தை பெரியார், 1921ம் ஆண்டில் ஈரோட்டில் நடந்த கல்லுக்கடை மறியல் போராட்டத்தில் பங்குபெற்றதோடு மட்டுமின்றி, அதனைத்தொடர்ந்து, சேலம் மாவட்டத்தில் தனக்குச் சொந்தமாக தாத்தம்பட்டியிலுள்ள தோப்பிலிருந்த ஐநூறு தென்னை மரங்களையும் வெட்டினார்.

தமிழ்நாட்டில் மது விலக்கு:

ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தின் போது, கடந்த 1937ம் ஆண்டில் ராஜாஜியின் ஆட்சியின்போது “தமிழ்நாடு மது விலக்கு சட்டம்” என்றொரு சட்டம் இயற்றப்பட்டு தமிழகத்தில் மது விலக்கு அமலுக்கு வந்து விட்டது. இப்படியாக, இந்தியாவில் மதுவிலக்கு கொண்டு வந்ததற்கு முன்னோடியாகத் திகழ்ந்தது தமிழ்நாடு. கடந்த, 1952ம் ஆண்டு அப்போதைய சென்னை மாகாணத்தில் முழு மது விலக்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது ராஜாஜி முதல்வராக இருந்தார். பின்னர், காமராஜர் ஆட்சி காலத்திலும், 1967ம் ஆண்டு அண்ணா முதல்வரான பிறகும்கூட தொடர்ந்து மது விலக்கு அமலில் இருந்தது.

தமிழ்நாட்டில் மது விலக்கு நீக்கம்:

சுதந்திர இந்தியாவில் தமிழ்நாட்டிலும், குஜராத் மாநிலத்திலும் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டு வந்தன. இந்நிலையில் மதுவிலக்கை மற்ற மாநிலங்களுக்கும் பரவலாக்கும் நோக்கத்தில் மத்திய அரசானது, புதிதாக மதுவிலக்கை அமல்படுத்தும் மாநிலங்களுக்கு மானியம் வழங்கப்படும் என்றும், ஆனால் ஏற்கனவே மதுவிலக்கை அமல்படுத்திவரும் மாநிலங்களுக்கு மானியம் ஏதும் வழங்கப்படமாட்டாது என்றும் 1970ம் ஆண்டில் அறிவித்தது. ஏற்கனவே மதுவிலக்கை அமல்படுத்திவரும் மாநிலங்களுக்கு இப்படி தண்டனை அளிப்பதா? எங்களுக்கும் மானியம் கொடுங்கள், என்று அப்போது தமிழக முதல் அமைச்சராக இருந்த கருணாநிதி, மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தபோதும் அது ஏற்கப்படாததைத் தொடர்ந்து, அவரது ஆட்சியின் போது, 1971 ஆகஸ்டு மாதம் 30ம் நாள் முதல், மதுவிலக்கு தள்ளி வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

மது விலக்கை நீக்கும் அவசர சட்டம்:

தமிழ்நாட்டில் மதுக்கடைகளைத் திறப்பதற்கு வழிவகுக்கும் வகையில் ‘’தமிழ்நாடு மது விலக்கு சட்டம்,1937 அமல்படுத்தப்படுவது அடியோடு நிறுத்தி வைக்கப்படுகிறது என்றும், அரசியல் சாசனத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது’’ என்றும் கூறி, அவசர சட்டம் ஒன்றை கடந்த 1971ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 30ம் நாள், சட்டசபை கூட்டம் கூட்டப்படாமலேயே, அப்போதைய ஆளுனர் கே.கே.ஷா பிறப்பித்தார். மேலும், தமிழ்நாட்டில் திட்டமிட்டபடி கள்ளுக்கடைகள் திறக்கப்படும். கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கருணாநிதி அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் கள்ளுக்கடைகள், சாராயக்கடைகள், ஒயின் மற்றும் மது கடைகள் திறக்கப்பட்டன. மாநிலம் முழுவதும் 7,395 கள்ளுக்கடைகளும், 3,512 சாராயக் கடைகளும் திறக்கப்பட்டன. சென்னை நகரில் 120 ஒயின் மற்றும் மது கடைகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டது. பிற மாவட்டங்களில் தலா 60 முதல் 100 கடைகள் வரையிலும் திறக்கப்பட்டன.

மீண்டும் மது விலக்கு:

1973ம் ஆண்டு செப்டம்பரில் மீண்டும் மதுவிலக்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன் முதல் படியாக, 1973 ஜுலை 30ம் நாள் முதல் 7 ஆயிரம் கள்ளுக்கடைகளும், 1974 செப்டம்பர் 1ஆம் தேதி சாராயக் கடைகளும் தமிழ்நாட்டில் மூடப்பட்டன. 1981ம் ஆண்டில் மே மாதம் கள் மற்றும் சாராயத்தை உரிமத்துடன் விற்பனை செய்யலாம் என்று கூறப்பட்டது. 1984 வரையிலும், மதுபானங்களைத் தயாரிக்கும் உரிமம் தனியார் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டது. 1983ம் ஆண்டில் ஜுலை மாதம் “தமிழ்நாடு மாநில வாணிப கழகம்”(TASMAC) நிறுவனம் உருவாக்கப்பட்டு, அந்த நிறுவனமானது, இந்தியாவில் தயாரிக்கப்படும் அயல்நாட்டு மதுபானங்கள் மற்றும் சாராயத்துக்கான மொத்த விற்பனைக்கு பொறுப்பேற்றுக் கொண்டது.

மது விலக்கு சட்ட திருத்தம், 2003:

தமிழ்நாடு மது விலக்கு சட்டம், 1937ல், கடந்த 29.11.2003 அன்று, அப்போதைய ஜெயலலிதா ஆட்சியின் போது, மது தொடர்பாக சில்லறை விற்பனை செய்வதற்கும் அதிகாரம் பெற்ற ஒரே முற்றுரிமையாளராக, “தமிழ்நாடு மாநில வாணிப கழகம்” (TASMAC) மட்டுமே விளங்கும் என்று சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. அடுத்து 2006ல் பொறுப்பேற்ற கருணாநிதி ஆட்சியின் போதும் அதேநிலைதான் தொடர்ந்தது.

மது விலக்கு கோரி வேண்டுகோள்:

கடந்த 2008ம் ஆண்டு, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள், பிரதிநிதிகள், அப்போதைய முதல்வர் கருணாநிதியைச் சந்தித்து தமிழகத்தில் மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்கள். அவர்களது கோரிக்கையை பரிசீலித்து படிப்படியாக மது விலக்கை நிறைவேற்றுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்குமென்றும், 2006 மற்றும் 2007ம் ஆண்டுகளில் மட்டும் தமிழகம் முழுவதிலும் 1,300 மதுக் கூடங்களும், 128 சில்லரை விற்பனைக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. மேலும் தமிழகத்தில், படிப்படியாக முழு மது விலக்கினை எய்திடும் வகையில், முதற்கட்டமாக இனி புதிய மதுக்கடைகள் எதையும் தமிழகத்தில் திறப்பதில்லை என்று தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஆனால் தமிழகத்தில் ஏற்கனவே 6 சாராய ஆலைகளுக்கு மட்டுமே அனுமதி இருந்த நிலையில் தற்போது மேலும் 8 ஆலைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக அமைச்சரவையின் கருத்து:

டாஸ்மாக்கினால் ஆண்டுக்கு 14000 கோடி வருமானம் வருகிறது. டாஸ்மாக்கை மூடினால், இந்த வருமானம் சமூக விரோதிகளுக்குப் போய்ச் சேர்ந்துவிடும். அதேவேளையில், இந்த வருமானத்தை ஈடு செய்யும் வகையில் மத்திய அரசு நிதி ஒதுக்கினால், மாநில அரசு அவற்றை மூடுவதற்குத் தயார். தமிழகத்தில் இருந்த கள்ளசாராய வியாபாரிகள் பெருமளவில் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இதனால் மாநிலத்தில் சாராயம் விற்பனை முழுமையாக ஒழிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் அண்டை மாநிலங்களில், மதுவிற்பனை நடக்கும் நிலையில், தமிழகத்தில் மட்டும் மதுவிலக்கை அமல்படுத்த முடியாது. அப்படி செய்தால் தமிழகம் தனித்தீவு போல காட்சியளிக்கும். மேலும், கள்ளச்சாராயமும், மதுவிற்பனையும் நடக்க வழிவகுக்கும். தமிழகத்தோடு சேர்ந்து, அண்டை மாநிலங்களும் மதுவிலக்கை அமல்படுத்தினால் அது பூரண மதுவிலக்கிற்கான வெற்றியை தரும் என்றும் தமிழ்நாட்டின், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், கடந்த ஆகஸ்ட் 12 ஆம் நாள் சட்டமன்றத்தில் கூறியுள்ளார்.

மது விலக்கு அமலுக்கு வந்தால் கள்ள சாராயம் பெருகும் என்பது ஆட்சியாளர்களால் முன் வைக்கப்படும் வாதங்களில் ஒன்று. ஆனால் மது விலக்கு அமலில் இல்லாத தற்போது, கடந்த ஏப்ரல் 25, 2011ல், தமிழக அரசு கொடுத்த செய்தி அறிக்கையின் படி, தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி முதல் 24ம் தேதி வரை நடத்தப்பட்ட தொடர் மது விலக்கு சோதனையில் 1,057 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 134 பெண்கள் உள்பட 1,002 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் படி பார்த்தால், கள்ள சாராயம் எல்லா காலத்திலும் காய்ச்சப்படுகிறது என்பது புலனாகிறது.

மதுவினால் விளையும் தீமைகள்:

மது அருந்தியதால் ஏற்பட்ட போதையில் தன் மகளிடமே தகாத முறையில் நடந்த தந்தை, தன் மருமகளிடம் மது போதையில் மதிகெட்டு நடக்கும் மாமனார், தனக்கு மது அருந்த பணம் தரவில்லை என்ற ஒரே காரணத்திற்காக பெற்ற தாயைக் கொலை செய்ய துணிந்த மகன், நாட்டில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய காவல் துறையினரே மது அருந்திவிட்டு, பொது இடத்தில் கட்டிபுரண்டு சண்டை, தமிழகத்தில் நிகழும் சாலை விபத்துகளில் 60 விழுக்காடு மது அருந்திவிட்டு வாகனத்தை இயக்குவதால் தான் என்கிறது புள்ளிவிபரம்.....இப்படி மது பழக்கம் கருவையே கருவருக்கின்றது.

மது நாட்டுக்கும், வீட்டுக்கும், உயிருக்கும், உடலுக்கும் கேடு” என்று பள்ளி பாட புத்தகங்களில் அச்சடிக்கப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது. இதைப்படிக்கும் மாணவன் பள்ளியை விட்டு வெளியே வந்தால் அங்கு தென்படுவது டாஸ்மாக் கடை. என்னவொரு விந்தை? அதேபோல, குடி குடியைக் கெடுக்கும்” என்ற தமிழ் பழமொழியானது, அனைத்து மது புட்டிகளிலும் அச்சடிக்கப்பட்டு அரசால் விநியோகிக்கப்படுகிறது. போதாததற்கு, திரைப்படங்களில் மது அருந்தும் கட்சிகளின் போது, இதே வாசகம் ஒளிபரப்பப்படுகிறது. இதையெல்லாம் காணும்போது நகைச்சுவை எண்ணம் தான் மேலேழுகிறதேதவிர, “குடி” குறித்த விழிப்புணர்வு எண்ணம் ஏதும் தோன்றுவதில்லை. ஒரு நாட்டின் மண்ணின் மைந்தன், தன்னை அந்த நாட்டின் “குடிமகன்” என்று பெருமையாகச் சொல்லிக்கொள்ள முடியாத வகையில், இங்கே “குடிமகன்” என்ற வார்த்தைக்கு அர்த்தமே மாறிப்போய் உள்ளது.

மது விற்பனை செய்வது தனது அடிப்படை உரிமை என்று எவரும் கோர முடியாது என்றும், சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தொலைவிற்குள் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது என்ற வாதத்தை, பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் சூழலில் எடுக்க முடியாது என்பது போன்ற தீர்ப்புகளை நீதிமன்றங்கள் தொடர்ந்து வழங்கி வந்தாலும், மது விலக்கு தொடர்பான சரத்தானது, இந்திய அரசியலமைப்பு சாசனத்தில், ‘அரசின் நெறியுறுத்தும் கொள்கைகள்’ என்ற தலைப்பின் கீழ் அமைந்துள்ளதால், அது தொடர்பாக முடிவெடுக்க வேண்டியது அந்தந்த மாநிலங்கள் மட்டுமே. இதனால் இதில் நீதிமன்றங்களால் தலையிட முடியாத சூழலே நிலவுகிறது. ஆரம்பக் கல்வி வழங்க வேண்டியது, எப்படி அரசின் நெறியுறுத்தும் கொள்கைகள் என்பதிலிருந்து, அடிப்படை உரிமைக்கு மாற்றப்பட்டதோ அதேபோல, மது விலக்கும் அடிப்படை உரிமைக்கு மாற்றப்பட வேண்டியது இன்றியமையாத ஒன்றாகும். பூரண மது விலக்கு மட்டுமே ஒரு நாட்டைத் துடிப்புடன் வைத்திருக்க முடியும்.
Photo: டாஸ்மாக்கினால்  அரசுக்கு ஆண்டுக்கு 14000 கோடி !! டாஸ்மாக்கினால் பல  குடும்பகள் இன்று நிற்பது  ?

குடியின் கெடுதல் குறித்து, தமிழ் சமூகத்தில் எவருக்கும் கட்டுரை எழுதி புரிய வைக்கவேண்டிய அவசியம் இல்லை. ஆனால் இன்று தமிழகத்தில், பத்து விழுக்காடு மக்கள் அதாவது ஏழரை லட்சம் மக்கள் தினமும் மது அருந்துகின்றனர் என்றும், மேலும் 13 வயது பள்ளி மாணவர்களும் கூட மது அருந்துவதாகவும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஏழை மக்களின் வாழ்வில் ஒளியேற்றி வைக்க வேண்டிய நமது ஆட்சியாளர்கள், க ுடும்பத்தலைவனை குடி பழக்கத்திற்கு அடிமையாக்கி அந்த குடியானவனைக் கொன்றுவிட்டு, அதன் மூலமாகக் கிடைக்கும் வருவாயைக்கொண்டு, அவனது மனைவிக்கு விதவை உதவித்தொகை வழங்கி வருகின்றனர். இப்படியாக ஒரு நாட்டின் குடிமக்கள், அவர்களின் ஆட்சியாளர்களால் திட்டமிட்டு போதைக்கு அடிமையாக்கப்பட்டு வருகின்றனர் என்பது கண்கூடு.

ஒரு டன் மூங்கில் ஒரு மெகாவாட் மின்சாரம் !

தகவலுக்கு நன்றி ராஜன் மற்றும்
நன்றி: தினமணி

தமிழகம், கர்நாடகம் உள்பட இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் மின்வெட்டு, மின்பற்றாக்குறை, மின் தட்டுப்பாடு போன்ற வார்த்தை பயன்பாட்டை அடிக்கடி காணமு
டியும். மின்வெட்டால் மக்கள் படும் அவதியை சொல்லி தெரிய வேண்டியதில்லை. தமிழகத்தின் அரசியலை நிர்ணயிக்கும் அளவுக்கு மின்வெட்டு பிரச்னை தலைத்தூக்கியிருக்கும் நிலையில், இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வுகாண முனைந்திருக்கிறார் ஓசூர் நகரில் இயங்கிவரும் குரோமோர் உயிரிநுட்ப நிறுவனத்தின் இயக்குநர் என்.பாரதி. இவர் கண்டுபிடித்திருக்கும் பீமா என்ற மூங்கில், மின் உற்பத்தியில் உயிரி எரிபொருளாகப் பயன்படுத்தக்கூடியதாக அமைந்துள்ளது.

இது குறித்து பாரதி நம்மிடம் பகிர்ந்து கொண்டதிலிருந்து...

நான்கு ஆண்டுகாலம் கடுமையான ஆராய்ச்சியில் ஈடுபட்டு பீமா என்ற மூங்கில் வகையைக் கண்டுபிடித்துள்ளேன். வழக்கமான மூங்கிளைக் காட்டிலும் இது மாறுபட்டது. 6 மாதங்கள் வரை 6 அங்குலம் வளரும் பீமா மூங்கில், 2 ஆண்டுகளுக்கு ஒருநாளைக்கு ஒன்று முதல் ஒன்றரை அடி உயரம் வளரும். சூரியஒளி உதவியுடன் வளரும் இவ்வகை மூங்கில், கரியமிலவாயுவை அதிகளவில் உறிஞ்சிக்கொண்டு, மனிதன் சுவாசிக்க உதவும் பிராணவாயுவை சுற்றுச்சூழலில் அதிகளவில் வெளியேற்றுகிறது.

சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பாக இருப்பது தவிர, நவநாகரீக வாழ்க்கைக்கு அத்தியாவசிய தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்வதிலும் பீமா மூங்கிலின் பங்கு மகத்தானது. ஒரு ஏக்கரில் ஆயிரம் பீமா மூங்கில் செடிகளை நடலாம். 2 ஆண்டுகள் கழித்து 40 டன் மூங்கில் கிடைக்கும். ஒருமணி நேரத்திற்கு விறகை எரியூட்டினால் மின்சாரம் தயாரிக்கலாம். அதாவது ஒருகிலோ மூங்கிலில் ஒருயூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யலாம்.

மின்பற்றாக்குறையால் தவிக்கும் இந்தியாவில் கிராமந்தோறும் மூங்கில் பயிரிட்டால் அடுத்த 2 ஆண்டுகளில் நமது நாடு மின் தேவையில் தன்னிறைவு பெறும். கிராமந்தோறும் 200 ஏக்கரில் மூங்கில் விளைவித்தால், ஒருமணி நேரத்திற்கு ஒரு மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யமுடியும். அப்படியானால், ஆண்டின் 52 வாரங்களில் 7 ஆயிரம் மெகாவாட் முதல் 8 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாகும். வழக்கமாக ஒரு யூனிட் மின்சார உற்பத்திக்கு ரூ.5.40 ஆகிறது. ஆனால் மூங்கில் விறகில் தயாராகும் மின்சாரத்தின் அடக்கவிலை ரூ.1.50 மட்டுமே. மாற்று எரிசக்திக்காக ஏங்கும் இந்தியாவில் மாற்று சிந்தனையால் உருவானதுதான் பீமா மூங்கில்.

மூங்கில் விறகால் தயாரிக்கப்படும் மின் உற்பத்தியால் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பில்லை, மின் தேவையிலும் தன்னிறைவு அடையமுடியும். ஒரு ஏக்கரில் மூங்கில் பயிரிட்டால் ஆண்டுக்கு ஒருலட்சம் ரூபாய் வருவாய் ஈட்டமுடியும். விவசாயிகளின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதோடு, கிராம பொருளாதாரத்தையும் மேம்படுத்த முடியும். இதுகனவு போல தோன்றினாலும், நடைமுறை சாத்தியமானது என்பதை இந்தியா தவிர, தென் ஆப்பிரிக்கா, மொசாம்பிக், தாய்லாந்து, பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் நிரூபித்துள்ளேன். கடந்த 8 ஆண்டுகளில் இந்நாடுகளில் 14 லட்சம் பீமா மூங்கில் செடிகளை நட்டுள்ளோம். இந்தியாவில் மட்டும் 1.5 லட்சம் மரக்கன்றுகளை விநியோகித்துள்ளேன். இதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.

மூங்கில் மரச்செடி தவிர, இதனை பயிடுவதற்கான முறை மற்றும் அறுவடை தொடர்பான பயிற்சியை அளிக்கிறோம். தரிசுநிலம், வறண்டவானிலை போன்ற எந்த இயல்புள்ள சூழலிலும் பீமா மூங்கில் வளமாக வளரும். மூங்கில் பயிருக்கு உரம், ஊட்டச்சத்து, பாசனம் அவசியம்.

வழக்கமாக ஒருடன் மரவிறகு ரூ.3 ஆயிரத்திற்கு விற்பனையாகிறது. மூங்கில் விறகு ஒருடன் ரூ.800க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் மின் உற்பத்திக்கு ஆகும் செலவு குறைகிறது. விவசாயிக்கும் உற்பத்திச்செலவு கிடைத்துவிடும். இதன்விளைவாக ஒருஏக்கர் நிலத்தில் மூங்கில் பயிரிட்டால் ஓராண்டில் விவசாயிகள் ஒருலட்சம் ரூபாய் வரை சம்பாதிக்க முடியும்.

தமிழகத்தில் இயங்கிவரும் 12 சர்க்கரை ஆலைகளில் மூங்கில் விறகு மற்றும் கரும்புச் சக்கை மூலமாக மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. வெள்ளோட்டமாக, 15 மாவட்டங்களில் 2 ஆயிரம் ஏக்கரில் பீமா மூங்கிலை பயிரிடுமாறு தமிழக அரசு எங்களை கேட்டுக்கொண்டுள்ளது. இதேபோல, கர்நாடகத்திலும் பீமா மூங்கில் பயிரிடுவதற்கு முக்கியத்துவம் அளிக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு ஊக்கம் அளிக்க திட்டமிட்டுள்ள இந்திய அரசு, உயிரி எரிசக்தி (எனர்ஜி பிளான்டேஷன்) என்ற திட்டத்தை வகுத்துள்ளது. விறகு மூலம் மின்சாரம் உற்பத்திசெய்யப்படுவதை ஊக்குவிப்பதற்காக மத்திய திட்டக்குழு உயிரி எரிசக்திக்கான துணைக்குழுவை அமைத்துள்ளது. அதில் என்னையும் உறுப்பினராக சேர்த்துள்ளனர்.

எதிர்வரும் காலத்தில் உயிரி எரிசக்தி பிரபலமடையும் என்ற நம்பிக்கை உள்ளது. அதில் பீமா மூங்கில் முக்கியப் பங்காற்றும். இந்தியாவின் மின் தேவைக்கு மூங்கில் விறகின் பங்கு மகத்தானதாக அமையும்'' என்றார் பாரதி.
Photo: ஒரு டன் மூங்கில்  ஒரு மெகாவாட் மின்சாரம் ! 

தகவலுக்கு நன்றி ராஜன் மற்றும் 
நன்றி: தினமணி 

தமிழகம், கர்நாடகம் உள்பட இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் மின்வெட்டு, மின்பற்றாக்குறை, மின் தட்டுப்பாடு போன்ற வார்த்தை பயன்பாட்டை அடிக்கடி காணமுடியும். மின்வெட்டால் மக்கள் படும் அவதியை சொல்லி தெரிய வேண்டியதில்லை. தமிழகத்தின் அரசியலை நிர்ணயிக்கும் அளவுக்கு மின்வெட்டு பிரச்னை தலைத்தூக்கியிருக்கும் நிலையில், இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வுகாண முனைந்திருக்கிறார் ஓசூர் நகரில் இயங்கிவரும் குரோமோர் உயிரிநுட்ப நிறுவனத்தின் இயக்குநர் என்.பாரதி. இவர் கண்டுபிடித்திருக்கும் பீமா என்ற மூங்கில், மின் உற்பத்தியில் உயிரி எரிபொருளாகப் பயன்படுத்தக்கூடியதாக அமைந்துள்ளது.

இது குறித்து பாரதி நம்மிடம் பகிர்ந்து கொண்டதிலிருந்து...

நான்கு ஆண்டுகாலம் கடுமையான ஆராய்ச்சியில் ஈடுபட்டு பீமா என்ற மூங்கில் வகையைக் கண்டுபிடித்துள்ளேன். வழக்கமான மூங்கிளைக் காட்டிலும் இது மாறுபட்டது. 6 மாதங்கள் வரை 6 அங்குலம் வளரும் பீமா மூங்கில், 2 ஆண்டுகளுக்கு ஒருநாளைக்கு ஒன்று முதல் ஒன்றரை அடி உயரம் வளரும். சூரியஒளி உதவியுடன் வளரும் இவ்வகை மூங்கில், கரியமிலவாயுவை அதிகளவில் உறிஞ்சிக்கொண்டு, மனிதன் சுவாசிக்க உதவும் பிராணவாயுவை சுற்றுச்சூழலில் அதிகளவில் வெளியேற்றுகிறது.

சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பாக இருப்பது தவிர, நவநாகரீக வாழ்க்கைக்கு அத்தியாவசிய தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்வதிலும் பீமா மூங்கிலின் பங்கு மகத்தானது. ஒரு ஏக்கரில் ஆயிரம் பீமா மூங்கில் செடிகளை நடலாம். 2 ஆண்டுகள் கழித்து 40 டன் மூங்கில் கிடைக்கும். ஒருமணி நேரத்திற்கு விறகை எரியூட்டினால் மின்சாரம் தயாரிக்கலாம். அதாவது ஒருகிலோ மூங்கிலில் ஒருயூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யலாம்.

மின்பற்றாக்குறையால் தவிக்கும் இந்தியாவில் கிராமந்தோறும் மூங்கில் பயிரிட்டால் அடுத்த 2 ஆண்டுகளில் நமது நாடு மின் தேவையில் தன்னிறைவு பெறும். கிராமந்தோறும் 200 ஏக்கரில் மூங்கில் விளைவித்தால், ஒருமணி நேரத்திற்கு ஒரு மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யமுடியும். அப்படியானால், ஆண்டின் 52 வாரங்களில் 7 ஆயிரம் மெகாவாட் முதல் 8 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாகும். வழக்கமாக ஒரு யூனிட் மின்சார உற்பத்திக்கு ரூ.5.40 ஆகிறது. ஆனால் மூங்கில் விறகில் தயாராகும் மின்சாரத்தின் அடக்கவிலை ரூ.1.50 மட்டுமே. மாற்று எரிசக்திக்காக ஏங்கும் இந்தியாவில் மாற்று சிந்தனையால் உருவானதுதான் பீமா மூங்கில்.

மூங்கில் விறகால் தயாரிக்கப்படும் மின் உற்பத்தியால் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பில்லை, மின் தேவையிலும் தன்னிறைவு அடையமுடியும். ஒரு ஏக்கரில் மூங்கில் பயிரிட்டால் ஆண்டுக்கு ஒருலட்சம் ரூபாய் வருவாய் ஈட்டமுடியும். விவசாயிகளின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதோடு, கிராம பொருளாதாரத்தையும் மேம்படுத்த முடியும். இதுகனவு போல தோன்றினாலும், நடைமுறை சாத்தியமானது என்பதை இந்தியா தவிர, தென் ஆப்பிரிக்கா, மொசாம்பிக், தாய்லாந்து, பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் நிரூபித்துள்ளேன். கடந்த 8 ஆண்டுகளில் இந்நாடுகளில் 14 லட்சம் பீமா மூங்கில் செடிகளை நட்டுள்ளோம். இந்தியாவில் மட்டும் 1.5 லட்சம் மரக்கன்றுகளை விநியோகித்துள்ளேன். இதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.

மூங்கில் மரச்செடி தவிர, இதனை பயிடுவதற்கான முறை மற்றும் அறுவடை தொடர்பான பயிற்சியை அளிக்கிறோம். தரிசுநிலம், வறண்டவானிலை போன்ற எந்த இயல்புள்ள சூழலிலும் பீமா மூங்கில் வளமாக வளரும். மூங்கில் பயிருக்கு உரம், ஊட்டச்சத்து, பாசனம் அவசியம்.

வழக்கமாக ஒருடன் மரவிறகு ரூ.3 ஆயிரத்திற்கு விற்பனையாகிறது. மூங்கில் விறகு ஒருடன் ரூ.800க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் மின் உற்பத்திக்கு ஆகும் செலவு குறைகிறது. விவசாயிக்கும் உற்பத்திச்செலவு கிடைத்துவிடும். இதன்விளைவாக ஒருஏக்கர் நிலத்தில் மூங்கில் பயிரிட்டால் ஓராண்டில் விவசாயிகள் ஒருலட்சம் ரூபாய் வரை சம்பாதிக்க முடியும்.

தமிழகத்தில் இயங்கிவரும் 12 சர்க்கரை ஆலைகளில் மூங்கில் விறகு மற்றும் கரும்புச் சக்கை மூலமாக மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. வெள்ளோட்டமாக, 15 மாவட்டங்களில் 2 ஆயிரம் ஏக்கரில் பீமா மூங்கிலை பயிரிடுமாறு தமிழக அரசு எங்களை கேட்டுக்கொண்டுள்ளது. இதேபோல, கர்நாடகத்திலும் பீமா மூங்கில் பயிரிடுவதற்கு முக்கியத்துவம் அளிக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு ஊக்கம் அளிக்க திட்டமிட்டுள்ள இந்திய அரசு, உயிரி எரிசக்தி (எனர்ஜி பிளான்டேஷன்) என்ற திட்டத்தை வகுத்துள்ளது. விறகு மூலம் மின்சாரம் உற்பத்திசெய்யப்படுவதை ஊக்குவிப்பதற்காக மத்திய திட்டக்குழு உயிரி எரிசக்திக்கான துணைக்குழுவை அமைத்துள்ளது. அதில் என்னையும் உறுப்பினராக சேர்த்துள்ளனர்.

எதிர்வரும் காலத்தில் உயிரி எரிசக்தி பிரபலமடையும் என்ற நம்பிக்கை உள்ளது. அதில் பீமா மூங்கில் முக்கியப் பங்காற்றும். இந்தியாவின் மின் தேவைக்கு மூங்கில் விறகின் பங்கு மகத்தானதாக அமையும்'' என்றார் பாரதி.

பைசா கோபுரம் பற்றிய தகவல் !!!

பைசா கோபுரம் பற்றிய தகவல் !!!

இத்தலியில் பைசா நகரில் ஒரு கதீட்ரல் கட்டினார்கள். அருகாமையிலே கோயில் மணியடிக்க கட்டபட்ட கோபுரம். கடைசியில் "பைசா கோபுரம்" என்று புகழ்பெற்றது. 1173_ல் மூன்று மாடிகள் கட்டபட்ட உடனே கட்டிடம் சாயத்தொடங்கியது. ஒரு
பக்கத்தில் நிலத்துக்கடியில் மண் உறுதியாக இல்லாமல் இருந்தது தான் காரணம். உடனே பயந்து போய் கட்டுமான வேலைகளை உடனே இடை நடுவே நிறுத்தி விட்டார்கள்.அது எவ்வளவு காலத்திற்கு என்று தெரியுமா நூறு ஆண்டுகளுக்கு இதை தொடர்ந்து கட்டாமல் நிறுத்தி விட்டார்கள்!!

அதற்கு பின்னர் ஆயிரத்திற்கு மேட்பட்ட கட்டடக்கலை அனுபவசாளிகள், கட்டடம் விழாமல் தொடர்ந்து கட்ட முடியும், என்று அரசுக்கு திட்டம் தீட்டி அனுப்பினார்கள். அவர்களது வரை படத்திற்கு ஏதுவான அடிப்படையில் எட்டு மாடிகள் வரை கட்டப்பட்டன. கலிலியோவும் மாடியேறி விதவிதமான கற்களை கீழே போட்டு, புவியீர்ப்பை பற்றி சோதனை செய்தார்.

ஆனால்... பைசா கோபுரம் தொடர்ந்து சாய்கின்றது என்று தெரியவந்தது. அஸ்த்திவாரத்தை பலப்படுத்த புதுவகையில் சிமெண்ட் செய்து அஸ்த்திவாரத்க்கு செலுத்தி பார்த்தும் பயன் இல்லை. ஆண்டுக்கு ஆண்டு அங்குலம் வீதம் சாய்ந்துகொண்டுதான் இறந்தது

உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படும் பைசா நகரத்து சாய்ந்த கோபுரம் முதல் முறையாக சாயாமல் நிற்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 800 ஆண்டுகளில் முதல் முறையாக இப்போதுதான் சாய்வதை நிறுத்தியுள்ளது இந்தக் கோபுரம் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தாலியின் பைசா நகரத்தில் உள்ள இந்த சாய்ந்த கோபுரம் உலக அதிசயங்களுல் ஒன்றாக கருதப்படுகிறது. 14 ஆயிரம் டன் எடை கொண்ட இந்த கோபுரம், 1174ம் ஆண்டு முதல் 1370ம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் பல கட்டங்களாக கட்டப்பட்டது.

கோபுரம் கட்ட ஆரம்பித்த பின்னர் மெதுவாக சாயத் தொடங்கியது. அன்று முதல் இன்று வரை தொடர்ந்து இன்ச், இன்ச்சாக சாய்ந்து வந்தது. இதனால்தான் இக்கோபுரத்திற்கு சாய்ந்த கோபுரம் என்ற பெயர் வந்தது.

இந்த நிலையில் கோபுரம் சாயாமல் தடுக்க கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு முயற்சிகள் எடுக்கப்பட்டன. இந்தத் திட்டத்திற்கு இப்போது பலன் கிடைத்துள்ளது. தற்போது முதல் முறையாக கோபுரம் சாயாமல் நின்றுள்ளது.

கடந்த 800 ஆண்டுகளில் கோபுரம் சாயாமல் இருப்பது இதுவே முதல் முறையாகும் என பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர். இன்னும் 300 ஆண்டுகளுக்கு கோபுரம் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Photo: பைசா கோபுரம் பற்றிய தகவல் !!!

இத்தலியில் பைசா நகரில் ஒரு கதீட்ரல் கட்டினார்கள். அருகாமையிலே கோயில் மணியடிக்க கட்டபட்ட கோபுரம். கடைசியில் "பைசா கோபுரம்" என்று புகழ்பெற்றது. 1173_ல் மூன்று மாடிகள் கட்டபட்ட உடனே கட்டிடம் சாயத்தொடங்கியது. ஒரு பக்கத்தில் நிலத்துக்கடியில் மண் உறுதியாக இல்லாமல் இருந்தது தான் காரணம். உடனே பயந்து போய் கட்டுமான வேலைகளை உடனே இடை நடுவே நிறுத்தி விட்டார்கள்.அது எவ்வளவு காலத்திற்கு என்று தெரியுமா நூறு ஆண்டுகளுக்கு இதை தொடர்ந்து கட்டாமல் நிறுத்தி விட்டார்கள்!!