Thursday, June 13, 2013

திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயில் ஆனித் திருவிழா 2013

திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயில் ஆனித் திருவிழா கொடியேற்றத்துடன் நாளை (14ம் தேதி )துவங்குகிறது. 22ம் தேதி ஆனித் தேரோட்டம் நடக்கிறது. திருவிழாவின் 9 நாட்களும் பக்தி இன்னிசை, சொற்பொழிவு, நாட்டிய நிகழ்ச்சிகள் நடக்கிறது.

நெல்லையப்பர் கோயில் ஆனித் பெருந் தேரோட்டத் திருவிழா நாளை (14ம் தேதி) துவங்குகிறது. காலை 7.47 மணிக்கு மேல் 8.17 மணிக்குள் நடக்கிறது. முன்னதாக கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடக்கிறது.

இரவு 7 மணிக்கு சுவாமி, அம்பாள் பூங்கோயில் சப்பரத்தில் திருவீதியுலாவும் நடக்கிறது.

அன்று முதல் தினந்தோறும் காலை, இரவு வேளைகளில் சுவாமி, அம்பாள் சப்பர பவனி நடக்கிறது.

தொடர்ந்து மாலை 5 மணிக்கு நின்றசீர் நெடுமாறன் கலையரங்கில் திருமலை பக்தி சொற்பொழிவு,

6 மணிக்கு விஜயலெட்சுமி இசைக்குழுவினரின் இசை நிகழ்ச்சி,

8 மணிக்கு தாயிற்சிறந்த தயாவான தத்துவன் என்ற தலைப்பில் தேச மங்கையர்கரசி பக்தி சொற்பொழிவு நடக்கிறது.

நிகழ்ச்சியை ராஜதீபன் ஜூவல்லரி, சிட்டி யூனியன் பாங்க், நெல்லை துணிவணிகர் இலக்கிய வட்டத்தினர் இணைந்து நடத்துகின்றனர்.
----------------------------------------------------------------------------------------------
15ம் தேதி மாலை 5 மணிக்கு காந்திமதி அம்பாள் கைங்கர்ய கமிட்டி குழுவினரின் பக்தி சொற்பொழிவு,

6 மணிக்கு சிவாலயா நாட்டியப்பள்ளி மாணவிகளின் கலை நிகழ்ச்சி,

இரவு 8 மணிக்கு சென்னை புஷ்பா ஆனந்த் பக்தி இன்னிசை நடக்கிறது.

நல்லி சில்க்ஸ், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, சவுபாக்கியா ஜூவல்லர்ஸ், பாளை., கணேஷ் ஸ்டோர்ஸ், நெல்லை டாடா கோல்டு பிளஸ் ÷ஷாரூம் நிறுவனத்தினர் வழங்குகின்றனர்.
-----------------------------------------------------------------------------------------------
16ம் தேதி மாலை 5 மணிக்கு கோமதி திருநாவுக்கரசு சொற்பொழிவு,

6 மணிக்கு கிருஷ்ணவாணி நிருத்தியாலயா நாட்டியப்பள்ளி மாணவர்களின் நாட்டிய நிகழ்ச்சி,

இரவு 8 மணிக்கு பெங்களூர் சம்பத்குமார் பக்தி இசை நிகழ்ச்சி நடக்கிறது.

நிகழ்ச்சியை கல்யாண் ஜூவல்லர்ஸ், நெல்லை கிருஷ்ணா டிவிஎஸ்., கரூர் வைஸ்யா பாங்க், கோடீஸ்வரன் ஜூவல்லர்ஸ் நிறுவனத்தினர் வழங்குகின்றனர்.
--------------------------------------------------------------------------------------------
17ம் தேதி மாலை 5 மணிக்கு கலைமுத்து இசை நாட்டியப்பள்ளி மாணவி ஹரிதா நாட்டிய நிகழ்ச்சி,

6 மணிக்கு பழனி வெங்கடேஷ் குழுவினரின் திருமுறை விண்ணப்பம்,

இரவு 8 மணிக்கு ராஜேஷ் வைத்யா வீணை இசை நடக்கிறது. நிகழ்ச்சியை நெல்லை தினமலர், ஹோட்டல்கள் ஆர்யாஸ், ஜானகிராம், நயினார், ராம்பிரசாத், மதுரம், விசாகபவன், சேலம் சரவணபவா, இந்தியன் ஓவர்சீஸ் பாங்க் நிறுவனத்தினர் வழங்குகின்றனர்.

---------------------------------------------------------------------------------------------
18ம் தேதி மாலை 5 மணிக்கு ஸ்ரீ ராம நாட்டியலயா மாணவிகளின் நாட்டிய நிகழ்ச்சி,

மாலை 6 மணிக்கு கோவை ஜெயராமன் பக்தி இன்னிசை,

இரவு 8 மணிக்கு டி.எம்.கிருஷ்ணா பக்தி இன்னிசை நடக்கிறது. நிகழ்ச்சியை கணபதி கெமிக்கல்ஸ், நேச்சுரல் காட்டன் மில்ஸ், சியமளா புக் சென்டர், அனில் ஸ்டோர், ராஜேஷ் எலக்ட்ரிகல்ஸ், சுதர்ஸன் மருத்துவமனை மற்றும் லெட்மிவிலாஸ் பாங்க் நிறுவனத்தினர் வழங்குகின்றனர்.
-------------------------------------------------------------------------------------------------
19ம் தேதி மாலை 5 மணிக்கு ஜோதிடர் பாலசுப்பிரமணியன் பக்தி சொற்பொழிவு,

6 மணிக்கு பட்டினத்தார் என்ற தலைப்பில் திருச்சி கல்யாணராமன் பக்தி சொற்பொழிவு,

இரவு 8 மணிக்கு சென்னை ஆர்.எஸ்.மனோகர் வழித்தோன்றல் பாலசுந்தரம் வழங்கும் "ராகு கேது புராண நாடகம் நடக்கிறது. நிகழ்ச்சியை சென்னை சில்க்ஸ், குமரன் தங்க மாளிகை நிறுவனத்தினர் வழங்குகின்றனர்.

----------------------------------------------------------------------------------------------------
20ம் தேதி மாலை 5 மணிக்கு தூத்துக்குடி வசுமதி பக்தி சொற்பொழிவு,

6 மணிக்கு நிருத்தியாஞ்சலி நாட்டியாலயா மாணவிகளின் நாட்டிய நிகழ்ச்சி,

இரவு 8 மணிக்கு ஆன்மிகம் தழைக்க பெரிதும் துணை நிற்பது பக்தி நெறியா, தொண்டு நெறியா என்ற தலைப்பில் பேராசிரியர் ஞானசம்பந்தம் தலைமையில் சுழலும் சொல்லரங்கம் நடக்கிறது. நிகழ்ச்சியை ஆரெம்கேவி நிறுவனத்தினர் வழங்குகின்றனர்.
----------------------------------------------------------------------------------------------------
21ம் தேதி மாலை 5 மணிக்கு விஜயலெட்சுமி பக்தி சொற்பொழிவு,

6 மணிக்கு சென்னை சாய் ஸ்ருதி இசைக்குழு மாணவிகளின் பக்தி இன்னிசை,

இரவு 8 மணிக்கு டாக்டர் விஜயலெட்சுமி நவநீதகிருஷ்ணன் குழுவினரின் கிராமியக் கலை நிகழ்ச்சி நடக்கிறது. போத்தீஸ் நிறுவனத்தினர் நிகழ்ச்சியை வழங்குகின்றனர்.
-----------------------------------------------------------------------------------------

22ம் தேதி காலை 7.45 மணிக்கு மேல் 8.45 மணிக்குள் திருத்தேர் வடம் பிடித்தல் நடக்கிறது.

மாலை 5 மணிக்கு சங்கீத ஸம்வர்த்தினி சபா மாணவிகளின் பக்தி இன்னிசை,

6 மணிக்கு நெல்லை அரசு இசைப்பள்ளி மாணவ, மாணவிகளின் பல்சுலை நிகழ்ச்சி,

இரவு 8 மணிக்கு எம்.ஆர்.விஜயா, பாம்பே சாரதா குழுவினரின் பக்தி இன்னிசை நடக்கிது. நிகழ்ச்சியை நெல்லை ஓட்டல் சரவணபவா, நாகா மைதா, இந்தியன் பாங்க், நெல்லை பனியன் ஏஜென்ஸி, ஜி.டி.எம்.தங்க நகை மாளிகை நிறுவனத்தினர் வழங்குகின்றனர்.
----------------------------------------------------------------------------------------
விருந்தினர் உபசரிப்பு பணியில் நெல்லை ஆர்.ஆர்.இன் ஓட்டல் நிறுவனம், மேடை அலங்கார பணிகளில் கஜானா ஜூவல்லர்ஸ் இணைந்து செய்துள்ளனர்.

கலை நிகழ்ச்சிகளை நெல்லை கல்சுரல் அகடமி நிறுவனத்தினரும் இணைந்து செய்துள்ளனர்.

Friday, May 3, 2013

விளக்கேற்றும் பலன்கள்

காலை 6 மணி முதல் 7 மணி வரை வீட்டில் தீபம் ஏற்றுவது சர்வ மங்கள யோகம் தரும்.

பௌர்ணமியன்று விளக்கேற்றும் பலன்கள் :
------------------------------------------------------------
ஒவ்வொரு மாதத்திலும் வரும் பௌர்ணமியன்று திருவிளக்கேற்றி வழிபடுவதன் மூலம் சிறப்பான பலன்கள் ஏற்படும் என்று முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள் .ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு பலன்
நடைபெறும்.

சித்திரை மாத பௌர்ணமியன்று விளக்கேற்றினால் தான்யம் பெருமளவில் கிடைக்கும்.

வைகாசி மாத பௌர்ணமியன்று விளக்கேற்றினால் விவாக பேச்சுக்கள் முடிவாகி மனநிம்மதியைக் கொடுக்கும்.

ஆனி மாத பௌர்ணமியன்று விளக்கேற்றினால் புத்திர பாக்கியம் ஏற்படும்.

புரட்டாசி மாத பௌர்ணமியன்று விளக்கேற்றினால் பசுக்கள் விருத்தியாகும் .

ஐப்பசி மாத பௌர்ணமியன்று விளக்கேற்றினால் பசிப்பினிகள் நம்மை விட்டு அகலும் .

கார்த்திகை மாத பௌர்ணமியன்று விளக்கேற்றினால் ஐஸ்வரியம் பெருகும், நிலைத்த புகழ் ஏற்படும் .

மார்கழி மாத பௌர்ணமியன்று விளக்கேற்றினால் துன்பம் அகலும் .இன்பங்கள் வந்து சேரும் .

பங்குனி மாத பௌர்ணமியன்று விளக்கேற்றினால் தர்ம புண்ணிய சிந்தனைகள் அதிகரிக்கும்.

ஒரு முகம் ஏற்றினால் - நினைத்த செயல்கள் நடக்கும்
இரு முகம் ஏற்றினால் - குடும்பம் சிறக்கும்
மூன்று முகம் ஏற்றினால் - புத்திரதோஷம் நீங்கும்
நான்கு முகம் ஏற்றினால் - செல்வம் பெருகும்
ஐந்து முகம் ஏற்றினால் - நற்பலன்கள் உண்டாகும்

யாருக்கு என்ன எண்ணெய் (விளக்கேற்றுவதில் ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு எண்ணெய் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது.)
------------------------------------------------------------------------
கணபதி - தேங்காய் எண்ணெய்
நாராயணன், சர்வதேவதைகள் - நல்லெண்ணெய்
மகாலட்சுமி - பசுநெய்
குலதெய்வம் - வேம்பு, இலுப்பை, பசுநெய் கலந்த எண்ணெய்
ருத்திரர் - இலுப்பெண்ணெய்
பராசக்தி - விளக்கெண்ணெய், வேம்பு, தேங்காய், இலுப்பை, பசுநெய் சேர்ந்த எண்ணெய்

எண்ணையும் அதன் பயன்களும்
---------------------------------------------
விளக்கு எண்ணெய் - துன்பங்கள் விலகும்
பசுநெய் - சகல செல்வமும் பெருகும்.
நல்லெண்ணெய் - பீடை விலகும். எம பயம் அணுகாது
ஆமணக்கு எண்ணெய் - தாம்பத்யம் சிறக்கும்.
இலுப்பை எண்ணெய் - பூஜிப்பவருகும், பூஜிகப்படும் இடத்துக்கும் விருத்தி உண்டு
கடலை எண்ணெய் மட்டும் பயன்படுத்தவே கூடாது

தீபம் ஏற்றும் திசைகள்
---------------------------------
கிழக்கு நோக்கி தீபமேற்ற - துன்பங்கள் நீங்கி பீடை விலகும்
மேற்கு நோக்கி தீபமேற்ற - கடன் தொல்லை அகலும், கிரக தோஷம் கழியும்
தெற்கு நோக்கி தீபமேற்ற - பாவம், அபசகுனம், எமனுக்குப் பிரீதி.
வடக்கு நோக்கி தீபமேற்ற - திருமணத்தட ை, சுபகாரியத் தடை, வேலை வாய்ப்புத் தடை நீங்கி செல்வம் பெருகும். சர்வ மங்களம் உண்டாகும்.

விளக்கு துலக்க வேண்டிய நாட்கள் அதன் பயன்கள்
----------------------------------------------------------------------
ஞாயிறு - கண் சம்பந்தமான நோய் தீரும்
திங்கள் - அலை பாயும் மனம் அடங்கி அமைதியுறும ்
வியாழன் - குரு பார்க்கக் கோடி நன்மை உண்டாகும். மனக்கவலை தீரும்
சனி - வாகன விபத்துகள் ஏற்படாமல் நம்மைக் காக்கும்

குத்துவிளக்கை ஞாயிறு, திங்கள், வியாழன், சனி ஆகிய நாட்களில் துலக்குவது மிகவும் நல்லது. செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் துலக்குவதை விட இந்நாட்கள் அதிக பலன்களை தரக்கூடியவை. இதற்கு ஒரு காரணமும் உண்டு. திருவிளக்கில் திங்கள் நள்ளிரவு முதல் புதன் நள்ளிரவு வரையில் தனயட்சணி குடியிருக்கிறாள். எனவே செவ்வாய், புதன் கிழமைகளில் விளக்கை கழுவினால் இவள் வெளியேறிவிடுவாள் என்பதால் அந்நாட்களில் கழுவக்கூடாது

திரிகளும், பயன்களும்
-------------------------------
குத்துவிளக்கிற்கு பயன்படுத்தும் எண்ணெயை பொறுத்து பலன்கள் வேறுபடுவதைப் போல, திரிகளாலும் பயன்கள் மாறுபடுகின்றன.
* பருத்தி பஞ்சினால் ஏற்றப்படும் திரியால் குடும்பம் சிறக்கும், நற்செயல்கள் நடக்கும்.
* வாழைத் தண்டின் நாரில் செய்த திரியால் முன்னோர் சாபம், தெய்வ குற்றங்கள் நீங்கி அமைதி உண்டாகும்.
* தாமரைத்தண்டு நூலால் செய்யப்பட்ட திரியால் முன்வினைப் பாவங்கள் நீங்கி, நிலைத்த செல்வம் கிடைக்கும்.
* வெள்ளை எருக்கம்பட்டை மூலம் செய்யப்படும் திரியால் செல்வம் பெருகும்.
* புதிய மஞ்சள் துணியால் செய்யப்பட்ட திரியால் அம்பாளின் அருளால் நோய்கள் குணமாகும்.
* சிவப்பு வண்ண துணியால் திரிக்கப்பட்ட திரி குழந்தையின்மை தொடர்பான தோஷம் நீங்கும்.
* வெள்ளை துணி திரியால் அனைத்து நற்பலன்களும் கிடைக்கும். இந்த துணியின் மீது பன்னீர் தெளித்து காயவைத்து பின்பு திரியாக்கி விளக்கேற்றுவது மிகவும் நல்லது.

வளம் பெருக்கும் அகல்:
---------------------------------
கார்த்திகை மதம் பௌர்ணமி அன்று வானில் முழு நிலவு பிரகாசிக்கும் நேரத்தில் வீட்டு முற்றங்களில் தீபம் ஏற்றிவைத்தால் அந்த இல்லத்தில் ஐஸ்வரியம் பெருகும் என்பார்கள்.
இந்தநாளின் மற்ற விளக்குகளை விட அகல் விளக்கு ஏற்றுவதே உத்தமமானது என்கிறது ஆன்மீகம். அகல் என்பதற்கு விரிவடைதல் என்ற அர்த்தமும் உண்டு. வாழ்க்கை அனைத்து வசதிகளுடன் விரிவடைந்து வளம் பெருக வேண்டும் என்பதற்காகவே இந்த வழிபாடு

கோவில் வழிபாட்டில் கடைபிடிக்கவேண்டிய விதிமுறைகள்

1. பிரகாரம் வலம் வரும் பொழுது வேகமாக நடக்க கூடாது.
2. வீண் வார்த்தைகளும், தகாத சொற்களும் பேசுதல் கூடாது.
3. சோம்பல் முறித்தல், தலை சிக்கெடுத்தல், தலை விரித்துப் போட்டுகொண்டு செல்லுதல், வெற்றிலை பாக்கு போடுதல், பொடிபொடுதல் கூடாது.
4. பிறப்பு, இறப்பு, தீட்டுக்களுடன் செல்ல கூடாது.
5. கைலி, தலையில் தொப்பி, முண்டாசு அணிய கூடாது.
6. கொடிமரம், பலிபீடம்,நந்தி, கோபுரம் நிழலை மிதிக்க கூடாது.
7. கவர்ச்சியான ஆடைகள் அணியக்கூடாது.
8. நந்தி தேவருக்கும் சிவலிங்கத்திற்கும் இடையில் போக கூடாது.
9. தரிசனம் செய்தபின் பின்னால் சிறிது தூரம் நடந்து, பின்னர் திரும்ப வேண்டும்.
10. ஒரு கையால் தரிசனம் செய்ய கூடாது.
11. மேலே துண்டுடன் தரிசனம் செய்ய கூடாது.
12. கோவிலுக்குள் உண்ண, உறங்க கூடாது.
13. கோவிலுக்குள் உயர்ந்த ஆசனத்தில் அமர கூடாது.
14. பலிபீடத்திற்கு உள்ளே சந்நிதியில் யாரையும் வணங்க கூடாது.
15. கோவில் சொத்துக்களை எவ்விதத்திலும் அபகரிக்கவோ அனுபவிக்கவோ கூடாது.
16. அஷ்டமி,நவமி, அமாவசை,பௌர்ணமி,மாத பிறப்பு, சோமவரம், பிரதோஷம், சதுர்த்தி, இந்த தினங்களில் வில்வம் பறிக்க கூடாது. இதற்கு முதல் நாள் மலையிலேயே பறித்து வைத்து கொள்ள வேண்டும்.
17. ஆலயத்தில் புகைப்படம் எடுக்க கூடாது.
18. தெய்வ வழிபாடு ஈர துணி, ஒராடைஉடன் கூடாது.
19. கோவிலுக்குள் குளிக்காமல் செல்ல கூடாது.
20. சந்நிதியில் தீபம் இல்லாமல் தரிசனம் செய்ய கூடாது.
21. கோவிலுக்கு சென்று வந்தபின் உடனடியாக கால்களை கழுவ கூடாது. சிறுது நீரம் அமர்ந்த பிறகு தான் கழுவிக்கொள்ளவேண்டும்
22. கோவிலுக்குள் நுழைந்தது முதல் வெளியே வரும் வரை நிதானமாக அவசரம் இன்றி கடவுளை நமக்குள் உணர்ந்து ஓம் நமசிவாய மந்திரம் கூறி வழிபடுவது மிக சிறந்ததாகும்.
23. கோவிலில் நுழையும் பொதும் திரும்பி வரும் போதும் கோபுர தரிசனம் அவசியம்
24. ஸ்தல விருட்சங்களை இரவில் வழிபட கூடாது.
25. கோவில் உள்ளே உரக்க பேசுதல் கூடாது.
26. நம்முடைய பேச்சுக்களோ செயல்களோ அடுத்தவர்களுடைய வழிபாடையோ, தியனத்தையோ இடையுறு செய்ய கூடாது.(உதாரணம்: கோவில் உள்ளே செல் போன் பேசுதல்)

அக்ஷய திருதியை

--------------------------
ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் அமாவாசைக்குப் பின்னால் மூன்றாம் பிறை நாளில் வருவதே அக்ஷய திருதியை நாள். "அக்ஷய " என்றால் குறைவில்லாதது என்று பொருள்.இந்த அக்ஷய திருதியை மகாலட்சுமிக்கான நாள்.எனவே இந்த நாளில் மகாலட்சுமி பூஜை செய்வது அபார பலன்களைத் தரும். அக்ஷய திருதியை நாள் முன்னோர்களை நினைத்து வணங்குவதற்கும் சிறந்த நாள். காரணம் முன்னோர்கள் அருளால், குடும்பத்தில் சாந்தி, ஆரோக்கியம், ஐஸ்வரியம் கிடைக்கும் என்றும் சாஸ்திர சம்பிரதாயங்கள் சொல்கிறது.

அஷ்ட ஐஸ்வர்யங்களையும், சகல சௌபாக்கியங்களையும் தரவல்ல லக்ஷ்மி தேவி எங்கெல்லாம் வாசம் செய்கிறாள்? எந்த இல்லங்களில் இருக்கிறாள்? எந்த பொருட்களை விரும்புகிறாள் என்று பார்த்தோமானால்

தெய்வ பக்தி, ஆற்றல், துணிவு, பொறுமை, இனிய பேச்சு, பெரியோரை மதித்தல், போன்ற நற்பண்புகள் உள்ளவரிடம் நீங்காது இருப்பாள்.

சூரிய உதயத்திற்கு முன் எழுந்து , வீட்டை தூய்மையாக வைத்திருக்கும், குப்பைகளை வீட்டின் முன் கொட்டாமலும், பெருக்கி கோலமிட்டு, தீபமேற்றி , வழிபாடு செய்கின்றனரோ அங்கே இருப்பாள்.
சங்கு, மஞ்சள், குங்குமம், கற்பூர ஜோதி, துளசிச் செடி, வாழை மரம், நெல்லிக்காய், பூரண கும்பம் போன்றவற்றிலும், பசு, யானை போன்றவற்றிலும் நீங்காது இருப்பாள்.

வீட்டில் பெண்கள் அதிகாலை எழுந்து குளித்து , குத்துவிளக்கேற்றி, மகாலட்சுமி படம் அல்லது அரிசி நிறைந்த செம்பு, அல்லது நீர் நிறைத்து அதில் வாசனை திரவியங்களான பச்சை கற்பூரம், ஏலம், போட்டு வைத்து ,வாசனை மலர்களால் தெரிந்த மந்திரம் கூறி , பாயசம் நைவேத்தியம் வைத்து , மகாலட்சுமியை வணங்கி ,பின் வீட்டிற்கு சுமங்கலிகளை அழைத்து, முடிந்த வரை தட்சிணை வைத்து தோலுரிக்காத , மட்டையுடன் கூடிய தேங்காயை வைத்து மஞ்சள், குங்குமம் தந்து வணங்கினாலே மகாலட்சுமி மகிழ்ந்து இல்லம் வருவாள். அக்ஷய திருதியை இவ்வாறு கொண்டாடுங்களேன்.

பழைய ஏடுகளில் இருந்து எடுக்கப்பட்ட மகாலட்சுமி மந்திரம் உங்களுக்காக.....

அஷ்ட லட்சுமி தியானம்

1 தன லட்சுமி

யா தேவி ஸர்வ பூதேஷூ புஷ்டி ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம

எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் செல்வத்தின் வடிவாக உறைகிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன்,வணங்குகிறேன்,வணங்குகிறேன்.

2 வித்யா லட்சுமி
யா தேவி ஸர்வ பூதேஷூ புத்தி ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம

எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் கலை, கல்வியின் வடிவாக உறைகிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன், வணங்குகிறேன், வணங்குகிறேன்.

3 தான்ய லட்சுமி
யா தேவி ஸர்வ பூதேஷூ க்ஷுதா ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம

எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் உணவு பொருட்களின் வடிவாக இருக்கிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன், வணங்குகிறேன், வணங்குகிறேன்.

4 வீர லட்சுமி
யா தேவி ஸர்வ பூதேஷூ த்ரூதிரு ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம

எந்த தேவியானவள் எல்லா உயிர்களிடத்தும் வீரம், வெற்றியின் அம்சமாக உறைகிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன் வணங்குகிறேன் வணங்குகிறேன்.

5 ஸௌபாக்ய லட்சுமி
யா தேவி ஸர்வ பூதேஷூ முஷ்டி ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம

எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் சுகம், நிம்மதியின் வடிவாக இருக்கிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன் வணங்குகிறேன் வணங்குகிறேன்.

6 சந்தான லட்சுமி

யா தேவி ஸர்வ பூதேஷூ மாத்ரூ ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம

எந்த தேவியானவள் எல்லா உயிர்களிடத்தும் தாயாக இருக்கிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன் வணங்குகிறேன் வணங்குகிறேன்.

7 காருண்ய லட்சுமி
யா தேவி ஸர்வ பூதேஷூ தயா ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம

எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் அன்பு, கருணை வடிவாக இருக்கிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன் வணங்குகிறேன் வணங்குகிறேன்.

8 மஹா லட்சுமி
யா தேவி ஸர்வ பூதேஷூ லக்ஷ்மீரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம

எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் அனைத்து செல்வங்களின் வடிவாக இருக்கிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன் வணங்குகிறேன் வணங்குகிறேன்.

இந்த மந்திரம் கூறி வழிபட்டாலே போதும் எல்லா நன்மைகளும் வந்து சேரும்.

சில வருடங்களாக தங்கம் வாங்கினால் நல்லது என்று சொல்லி சொல்லி தங்கம் விற்பனையை பெரிக்கிவிட்டனர்.இந்த நாளில் குரு பகவானின் அருள் பெற்ற உலோகமான தங்கத்தை வாங்குவது சிறப்பென்று ஒரு ஐதீகம் உண்டு .அதற்காக தங்கத்தை வாங்குவது ஒன்றுதான் இந்த நாளின் மகத்துவம் என்று கூறுவது பேதமை.அக்ஷய திருதியை என்றால் தங்கம் வாங்கித்தான் கொண்டாட வேண்டும் என்ற அவசியம் இல்லை.
(மேலும் இரண்டு வருடங்களாக வெள்ளை நிற உலோகம் வாங்கினால் நல்லது என்று சொல்லி பிளாட்டினம் வாங்க சொல்லுகிறார்கள் .ஏன் வெள்ளை என்றால் அலுமினியம் அல்லது வெள்ளி வாங்கினால் ஆகாதா ? இதை நாம் சிந்திக்க வேண்டிய விஷயம் ).

இந்த நல்ல நாளில் நாம் செய்ய வேண்டிய முக்கிய கடமை என்ன வென்றால் பெரியோர்களையும் பித்ருக்களையும் வணங்குவது தான் .

சத்ரு சாந்தி 'யை பூஜிக்க சிறந்த நாளாக கருதப்படுகிறது

மிருத சஞ்சீவினி மந்திரம் தெரிந்தவர்கள் அதை நிறைய ஜெபிக்கலாம்.இதனால் வியாதிகளின் வீரியம் குறையும் .

அட்சய திருதியை அன்று வீட்டின் நான்கு மூலையிலும் சோழிகளைப் போட்டு வைப்பது மரபு.இது எல்வத்தை கொண்டு வரும் அம்சமாகும்.

அன்றைய தினம் ,பசித்தோருக்கு உணவு படைத்தல்,இயலாதோருக்கு உடை கொடுத்தல் , ஏழைகளுக்கு நம்மால் இயன்ற உதவியை செய்தல் போன்றவை நம்மை குறைவில்லாத செல்வம் ,ஆயுள் , மகிழ்ச்சியுடன் வாழ வைக்கும்.

இறைவனை வழிபடுவதோடு அன்று மனிதன் செய்யும் தானங்கள், அளப்பரிய புண்ணியத்தைத் தரும். குடை, விசிறி, எழுது கோல், தண்ணீர் பாத்திரம், வஸ்திரம், பசு மற்றும் மனித குலத்திற்கு உணவு அளித்தல் இப்படிப் பல தானங்களை செய்யலாம்.

அக்ஷய திருதியை தினத்தை "நல்லுதவி தினமாக " கொண்டாடலாம் இது நம் முன்னோருக்கு செய்யும்
நன்றியாகும் .

அக்ஷய திருதியை தினமானது மகாவிஷ்ணுவின் ஆறாவது அவதாரமான பரசுராமரின் பிறந்தநாளாக கொண்டாடப்படுகிறது

மணிமேகலைக்கு இந்நாளில் தான் அக்ஷய பாத்திரம் கிடைத்தது.அதனால் அன்று முதல் மக்களின் பசியை போக்குவதையே தன கடமையாக கொண்டிருந்தாள் .

சாபம் பெற்று தேய்ந்து போன சந்திரன் ,அட்சய திருதியை தினத்தன்று அட்சய வரம் பெற்று ,மீண்டும் அட்சய திரிதியை தினத்திலிருந்து வளரத் தொடங்கினான்

இதை வைத்துப் பார்க்கையில் அக்ஷய திரிதியை அன்று செய்யும் காரியங்கள் வளர்பிறை போல வளரும்.

இன்றைய காலகட்டத்தில் தங்கம் தேவை என்றாலும் , வியாபார உத்திக்காக சொல்லபடும் "அக்ஷய் திருதியை அன்று தங்கம் வாங்க வேண்டும்" என்பதை சாஸ்த்திரமாக கருதுவது தான் வருந்துவதற்குரியதாகும்

Wednesday, April 10, 2013

கோவில் வழிபாட்டில் கடைபிடிக்கவேண்டிய விதிமுறைகள் :

கோவில் வழிபாட்டில் கடைபிடிக்கவேண்டிய விதிமுறைகள்
---------------------------------------------------------------------------
1. பிரகாரம் வலம் வரும் பொழுது வேகமாக நடக்க கூடாது.
2. வீண் வார்த்தைகளும், தகாத சொற்களும் பேசுதல் கூடாது.
3. சோம்பல் முறித்தல், தலை சிக்கெடுத்தல், தலை விரித்துப் போட்டுகொண்டு செல்லுதல், வெற்றிலை பாக்கு போடுதல், பொடிபொடுதல் கூடாது.
4. பிறப்பு, இறப்பு, தீட்டுக்களுடன் செல்ல கூடாது.
5. கைலி, தலையில் தொப்பி, முண்டாசு அணிய கூடாது.
6. கொடிமரம், பலிபீடம்,நந்தி, கோபுரம் நிழலை மிதிக்க கூடாது.
7. கவர்ச்சியான ஆடைகள் அணியக்கூடாது.
8. நந்தி தேவருக்கும் சிவலிங்கத்திற்கும் இடையில் போக கூடாது.
9. தரிசனம் செய்தபின் பின்னால் சிறிது தூரம் நடந்து, பின்னர் திரும்ப வேண்டும்.
10. ஒரு கையால் தரிசனம் செய்ய கூடாது.
11. மேலே துண்டுடன் தரிசனம் செய்ய கூடாது.
12. கோவிலுக்குள் உண்ண, உறங்க கூடாது.
13. கோவிலுக்குள் உயர்ந்த ஆசனத்தில் அமர கூடாது.
14. பலிபீடத்திற்கு உள்ளே சந்நிதியில் யாரையும் வணங்க கூடாது.
15. கோவில் சொத்துக்களை எவ்விதத்திலும் அபகரிக்கவோ அனுபவிக்கவோ கூடாது.
16. அஷ்டமி,நவமி, அமாவசை,பௌர்ணமி,மாத பிறப்பு, சோமவரம், பிரதோஷம், சதுர்த்தி, இந்த தினங்களில் வில்வம் பறிக்க கூடாது. இதற்கு முதல் நாள் மலையிலேயே பறித்து வைத்து கொள்ள வேண்டும்.
17. ஆலயத்தில் புகைப்படம் எடுக்க கூடாது.
18. தெய்வ வழிபாடு ஈர துணி, ஒராடைஉடன் கூடாது.
19. கோவிலுக்குள் குளிக்காமல் செல்ல கூடாது.
20. சந்நிதியில் தீபம் இல்லாமல் தரிசனம் செய்ய கூடாது.
21. கோவிலுக்கு சென்று வந்தபின் உடனடியாக கால்களை கழுவ கூடாது. சிறுது நீரம் அமர்ந்த பிறகு தான் கழுவிக்கொள்ளவேண்டும்
22. கோவிலுக்குள் நுழைந்தது முதல் வெளியே வரும் வரை நிதானமாக அவசரம் இன்றி கடவுளை நமக்குள் உணர்ந்து ஓம் நமசிவாய மந்திரம் கூறி வழிபடுவது மிக சிறந்ததாகும்.
23. கோவிலில் நுழையும் பொதும் திரும்பி வரும் போதும் கோபுர தரிசனம் அவசியம்
24. ஸ்தல விருட்சங்களை இரவில் வழிபட கூடாது.
25. கோவில் உள்ளே உரக்க பேசுதல் கூடாது.
26. நம்முடைய பேச்சுக்களோ செயல்களோ அடுத்தவர்களுடைய வழிபாடையோ, தியனத்தையோ இடையுறு செய்ய கூடாது.(உதாரணம்: கோவில் உள்ளே செல் போன் பேசுதல்)

இறைவன் எங்கும் நிறைந்திருக்கிறார் என்றால் ஆலயம் சென்று வழிபட வேண்டிய அவசியம்

இறைவன் எங்கும் நிறைந்திருக்கிறார் என்றால் ஆலயம் சென்று வழிபட வேண்டிய அவசியம்
-----------------------------------------------------------------------------

வீட்டில் வழிபாடு செய்வதற்கும், ஆலய வழிபாட்டிற்கும் என்ன வேறுபாடு
-----------------------------------------------------------------------------
ஆலயம் என்பது ஆண்டவன் திருவடியில் ஆன்மா லயிப்பதற்கும் உரிய இடம் என்று பொருள், மற்றும் 'ஆ' என்பது ஆணவ மலத்தையும், லயம் என்பது அடங்கியிருத்தலையும் குறிக்கும் .எனவே ஆணவ மலத்தையும் அடக்குமிடம் என்பதே ஆலயமாகும் .

இறைவனை கோவிலிலும் வழிபடலாம் ,வீட்டிலேயும் வழிபடலாம் .ஆனால் ஞானிகளால் நிறுவப்பட்ட ஆலயம் சென்று வழிபடும்போது பயன் அதிகமாகவும் , விரைவிலேயும் கிடைத்து விடும் .

பசுவின் உடம்பு முழுவதும் பால் வளம் நிரம்பி பரவி நிற்கிறது. பாலப் பெற விரும்புவோர், அதன் வாலையோ கொம்பையோ பிடித்து இழுத்தால், பால் கிடைப்பதில்லை. அதெற்கென படைக்கப்பட்ட காம்பை வருடினால் மட்டுமே பால் கிடைக்கபெறும் .அதுபோலவே ஆலயங்களில் உள்ள தெய்வத்திரு
உருவங்கள் பசுவின் மடியைப் போன்றவை .அங்கே போனதும் பக்தி உணர்வு சுரந்து விடும் .இறைவன்பால் மனம் ஒன்றிப் போக வழிபிறக்கும் .

கோயிலில் இறைவனை வழிப்பட்டால் வினைகள் வெந்து எரிந்து கருகி,நீராகி விடுவது போல் ,
மனம் நிம்மதி கொள்ள வாய்ப்புகள் உருவாகிவிடும் . கொடிய வெய்யிலில் ஒரு துணியைக் காய வைத்தால் , அத்துணி ஈரத்தையிழந்து காய்ந்து போகுமேயன்ரி எரிந்து விடாது .ஆனால் ஒரு குவியாடியை வெய்யிலில் வைத்து அதன் கீழ் குவிந்து வரும் சூரியக் கதிரில் துணியை வைத்தால் இப்போது துணியில் நெருப்பு தோன்றி முற்றிலுமாகக் கருகிச்
சாம்பலாகிவிடும் .நேர் சூட்டிற்கு இல்லாத சக்தி ,குவி ஆடியின் கீழேயுள்ள சூரிய வெயிலுக்கு உண்டு தானே.

பறந்து விரிந்து கிடைக்கின்ற கதிரவனுடைய கதிர்களின் வெப்பத்தை ஒருமுகபடுத்தி தன் கீழேயுள்ள இடத்திற்கு குவியாடி பாய்ச்சுகிறது .பிற இடங்களில் இறைவனை வழிபடுவதென்பது வெய்யிலில் துணியை உளற வைப்பது போன்றதாகும்.. ஆலயங்களில் ஆண்டவனை வழிபடுவதென்பது குவியாடி கொண்டு
பாவங்களை பொசுக்குவது போலாகும். எனவே ,மற்ற எல்லா இடங்களிலும் இறைவனை வழிபட்டாலும் அலையை வழிபாடே மிக இன்றியமையாததாகும் .

விஞான ரீதியிலும் ஒரு கருத்து அழுத்தமாகவே தெரிவிக்கப்படுகின்றது .நன்றாக மின் சக்தியை
ஏற்கக்கூடிய பொருட்கள் தான் பூஜை அறையில் பயன்படுத்தபடுகின்றது. வேப்பிலை, மாவிலை , துளசி, எழுமிச்சைபழம் போன்றவைகளுக்கு இந்த ஆற்றல் அதிகம். பிராண வாயு நமது ரத்தத்தில் ஹீமோக்ளோபின் பண்பாக கலப்பதற்கு
இது உதவுகின்றது. கோயில்களில் -நகரங்களிலும் வெளியிலும் இருப்பதைவிட, பூஜை நடைபெறும் கர்ப்ப
கிரகத்தில் இந்த சக்தி அதிகமாகவே கிடைக்கிறது .

கடற்கரையிலும் ,மலை மீதும் உள்ள ஆலயங்களில் இந்த சக்தி இயற்கையாகவே நிரம்பக் கிடைக்கிறது . மலை அருவிகள் பொழியும் இடங்களிலும் இது நிறைந்துள்ளன .எனவே தான் பழனி,திருப்பரங்குன்றம்,
திருப்பதி ,பழனி,திருத்தணி போன்ற மலைகள் மீதும் , ராமேஸ்வரம் ,கன்யாகுமாரி ,திருச்செந்தூர் போன்ற
கடற்கரையிலும் குற்றாலம் போன்ற அருவிகள் கொட்டும் இடங்களிலும் ஆலயங்கள் அமைக்கபட்டுள்ளன. இன்று நகரங்களில் உள்ள ஆரோக்கியமற்ற சூழ்நிலைகளில் இந்த சக்தி வாய்ந்த பண்பு கிடைப்பதில்லை .எனவே பக்தி பூர்வமாக சென்று வழிபடுவதுடன் ,உடல் நலம் பெறவும் இவ்வாலயங்கள் வாய்ப்பளிக்கின்றன .

ஆலயங்களில் பிரதிஷ்டை செய்யப்படும் எந்திரம் என்பது விஞான பூர்வமாக, அதிலிருந்து
மைண்டான், ஆல்பா போன்ற கதிர்கள் வெளி வருகின்றன என்ற செய்தி ,ஒத்துக் கொள்ளப்பட்ட ஒரு சக்தி வாய்ந்த அமைப்பாகிறது. இதனால் அந்தத் தகட்டின் மேல் வைக்கப்பட்ட சிலையின் வழியாக , தகட்டிலிருந்து வரும் கதிர்கள் (நேர் மின்னோட்டம் உள்ள)நமது கண்களில் வழியாக சென்று உடலில் பாய்ந்து சங்கமமாகின்றது .

ஒலிக்கப்படும் மணியிலிருந்து வரும் அதிர்வு ,அணு மண்டலத்தில் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு ஒரு அலைவரிசையைத் தோற்றுவிக்கும். நமது உடலும் உள்ளமும் ஆன்மாவும் அந்த அலைவரிசயினால் மீட்டப்பட்டு,மூளை ,இருதயம் ,செவிப்பறை ,முகுளம் போன்றவற்றிக்கு ஊட்டம் அளிக்கின்றது .பின்னர் எரியும் கற்பூரத்திலிருந்து வரும் வெளிச்சம் ,கண்ணின் ஆடிகளை அகல விரியச் செய்து அதனால் ஏற்படும் அதிர்வுகள் நரம்பு மண்டலத்தையே உறுதி செய்கின்றன.

எல்லாவற்றையும் விட,இன்றைய பரபரப்பான விஞான உலகில் ஆலய தரிசனம் என்பது அன்றாட நடவடிக்கை என்பது இல்லாது போயிற்று.ஆண்டவன் எங்கும் நிறைந்துள்ளான் என்பது உண்மை என்றாலும் , ஆலயத்தை அவனது இருப்பிடமாக கருதி வழிபடுவதில் ஒரு தனி சுகத்தையே நாம் காண்கின்றோம்.ஏனெனில் , அணைத்து இடங்களிலும் ,சூழ்நிலைகளிலும்
மனதை ஒரு நிலைப்படுத்துவதென்பது இயலாத ஒன்றாகும்.ஆனால் ,ஆண்டவன் குடி கொண்டுள்ள இடம் ஆலயம் எனக் கருதி ,அங்கே நுழையும் போதே மனம் ஒருவித நிலைப்பாட்டுக்குள் வந்துவிடுகிறது. தவிர,ஆலயம் புனிதமான இடம் என்கிற
எண்ணம் நம்முடைய மனதில் உதயமாகி நிலைத்திருக்கின்ற போது ,அங்கே நம் மனதையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டிய கட்டாயமும் தானாகவே உருவாகிவிடுகின்றன .மேலாக ஆலயத்தின் மணியோசை அங்கு கமழும் தூப,தீப,
நைவேத்யங்களின் வாசனை ,இறைவன் மீதான பாமாலைகளின் ஒழி,அங்கு குழுமியுள்ள இதர மனிதர்களின் பக்திபரவச நிலை ஆகிய அனைத்தும் சேர்ந்து ,நம்முடைய இதயங்களையும் வேறு திசைக்குத் திருப்பாமல்,பக்திப் பரவசத்தால் நிரப்பிவிடுகின்றன .இதனை நாம் அன்றாட வாழ்வில் நிச்சயமாக அனுபவிக்க இயலும் .உதாரணமாக ,ஒரு சில பக்தி விழாக்கள் ,பொதுமண்டபங்களில் நடைபெறும் போது ,நம்மால் பரவசம் கொள்ளவியலாமல் தடுமாறி நிற்பதை நாம் நன்கு அறிவோம் .அதாவது ஆயுதபூஜை போன்ற விழாக்கள் அலுவலகங்களில் நடைபெறும் போது நம்மால் உள்ள பூர்வமாக அவற்றில் ஒன்றிபோய் ,பரவசம் கொள்வது கிடையாது.காரணம் ,அங்கே கொலுவீற்றிருப்பது அசல் ஆண்டவன் இல்லையென்ற நினைப்பு ஒருபுறம்,படையல் தானே என நினைவூட்டிகொண்டிருக்கின்றன .எனவே தான்,
வெளியில் பெறமுடியாத இறையுணர்வை ,பக்திப் பரவசத்தை ஆலயங்களில் பெற முடிவதால் , ஆலயதிற்குச் சென்று ஆண்டவனை வழிபடுவதே சாலச் சிறந்தது ஆகும் .தனி நபருக்கான காரியமாகும் .

என்ன இல்லை இந்து மதத்தில்? - நூலிலிருந்து
 
Photo: இறைவன் எங்கும் நிறைந்திருக்கிறார் என்றால் ஆலயம் சென்று வழிபட வேண்டிய அவசியம்