திருச்சிக்கு பெருமை சேர்த்த சுதந்திர போராட்ட வீரர் சையத் முர்துஜா ஹஸ்ரத் !!!!
இவர்களை போன்ற மாமனிதர்களை நாம் நினைவு கூறுவது மிக முக்கியமான ஒன்று , மாமனிதர்களின் சரித்திரங்கள் மறைக்க பட்டு உள்ளது ஒரு நண்பர் இவரை பற்றிய தகவல் தந்து பகிர சொன்

னார் அதனால் நான் இந்த தகவலை உங்களுக்கு
பகிர்கிறேன் ,இது போன்று உங்களுடைய ஊருக்கு பெருமை சேர்த்த தலைவர்கள் ,ஊர்
பெருமை பற்றிய தகவல் தந்தால் நான் எல்லா நண்பர்களுக்கு பகிர்கிறேன் . இதன்
மூலம் தெரியாத விசையங்களை எல்லோருக்கும் தெரிய ஒரு வாய்ப்பாக அமையும் .
சையத் முர்துஜா ஹஸ்ரத் அவர்களின் பூர்வீகம் புகாரா (புகாரஸட் – ரஷ்யா) ஆகும். ஹஸ்ரத் அவர்கள் பிறந்தது, வளர்ந்தது திருச்சிராப்பள்ளியில் தான். இவர் பி.ஏ. வரை படித்து தேர்வு பெற்று, திருச்சி ஜில்லா மாவட்ட ஆட்சியர் காரியாலயத்தில் தலைமைக் குமாஸ்தா பதவியை ஏற்றார்கள். கல்வியில் இஸ்லாமியர்கள் சிறக்க வேண்டும் என்பதால் “இஸ்லாமிய உயர்நிலைப்பள்ளி” என்ற பள்ளியைத் தோற்றிவித்தார். இப்போது இதன் பெயர் “சையத் முர்துஜா அரசு உயர்நிலைப்பள்ளி” என்று மாற்றப்பட்டுள்ளது.
ஹஸ்ரத் அவர்கள் சமுதாய கல்வி வளர்ச்சிக்காகப் பாடுபட்ட அதே நேரத்தில் அரசியலிலும் பங்கெடுத்துத் தேசத்திற்காகவும் சேவை செய்து வந்தார்கள். கி.பி. 1912- ல் மதராஸ் சட்டக்கவுன்ஸில் அங்கத்தினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அச்சமயம் இந்தியாவை ஆண்டு வந்த ஐந்தாம் ஜார்ஜ் அவர்கள் ஹஸ்ரத்தை அழைத்து ஹானரபிள் என்ற பட்டம் வழங்கினார். ஆனால் இந்தப் பட்டத்தை தூக்கியெறிந்து விட்டு பிரிட்டிஷாரின் பகையை ஏற்படுத்திக் கொண்டார்கள். கி.பி. 1919 –க்குப் பின் கிலாபத் இயக்கத்தில் தீவிர பங்கு கொண்டு, காங்கிரஸ் உடன் சேர்ந்து ஒத்துழையாமை இயக்கத்திலும் கலந்து கொண்டார்கள்.
மெளலானா ஷவுகத் அலி, காந்திஜீ ஆகிய இரு பெருந்தலைவர்கள் திருச்சி வந்தபொழுது இந்திய விடுதலைப் போராட்டத்திற்காக ரூ.20 ஆயிரம் நிதி திரட்டிக் கொடுத்தார்கள். இதனால் ஹஸ்ரத் அவர்களின் புகழ் இந்தியாவின் எண்திசைகளிலும் பரவக் காரணமாகியது. கி.பி. 1923-ஆம் ஆண்டில் டத்திய சட்டசபை (தற்போதைய பாராளுமன்றத் தேர்தல் போன்றது) தேர்தல் நடந்தபொழுது, சென்னை மாநிலத்தின் பதினொரு ஜில்லாக்களின் சார்பில் நடைபெற்ற தேர்தலில் ஹஸ்ரத் அவர்கள் திருச்சி ஜில்லாவில் நின்று வெற்றி வாகை சூடினார். இவர் 24 வருடங்கள் தொடர்ந்து மத்திய சட்டசபையில் இருந்து வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு நீண்ட காலத்திற்கு ஹஸ்ரத் அவர்கள் மத்திய சட்டசபையில் சேவை செய்து வந்ததால் இந்தியாவில் அனைத்துத் தலைவர்களுக்கும் ஹஸ்ரத் அறிமுகமானவராக இருந்தார்.
பாகிஸ்தான் ஏற்படுவதை எதிர்த்த குறைந்த முஸ்லீம் தலைவர்களில் ஹஸ்ரத் அவர்களும் ஒருவராக இருந்தார்கள். இதனால் திருச்சி மக்கள் அனைவரும் இவரை “படே ஹஸ்ரத்” (பெரிய ஹஸ்ரத்) என்றே அன்புடன் அழைத்தனர். இவர் கி.பி. 1940 –ம் ஆண்டு நவம்பர் மாதம் 6 –ம் தேதி மறைந்தார்கள்.

No comments:
Post a Comment