Thursday, September 27, 2012

முதல் உதவி பற்றிய தகவல் !!!!!!

முதல் உதவி பற்றிய தகவல் !!!!!!

திடீரென ஏற்படும் மாரடைப்பு, தீக்காயம், விபத்துக்களினால் உண்டாகும் எலும்பு முறிவு போன்ற ஆபத்தான காலகட்டங்களில் மருத்துவமனைக்குச் செல்வதற்கு முன் ஆபத்திலிருந்து நம் உயிரைக்காப்பாற்றிக் கொள்ள முதல் உதவி சிகிச்சை
செய்ய வேண்டும்.

மாரடைப்பு

மாரடைப்பிற்கான அறிகுறிகள்

நெஞ்சுவலி. நெஞ்சினைக் கசக்கிப்பிழிவதுபோல் திடீரென்று தாங்கமுடியாத வலி நெஞ்சின் நடுவே தோன்றுதல்.

இரண்டு தோள்பட்டை, புஜம் மற்றும் கழுத்து, முதுகைச் சுற்றிலும் கடுமையான வலி ஏற்படுதல்.

கத்தியால் குத்துவது போன்று மார்பில் வலி ஏற்படுதல்.

படபடப்பு. மூச்சுவிடச் சிரமப்படுதல் வாந்தி அல்லது கடுமையான அஜீரணம் ஏற்படுதல்.காரணம் இல்லாமல் வியர்த்துக் கொட்டுதல். தலைசுற்றுதல் மற்றும் தளர்ச்சியுடன் கூடிய சோர்வு.

முதல் உதவி சிகிச்சை

மாரடைப்பினால் பாதிக்கப்பட்டவரைப் படுக்க வையுங்கள். ஆம்புலன்சை வரவழையுங்கள்.

ஒரு ஆஸ்ப்ரின் மாத்திரையை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டுக் குடிக்கச் செய்யுங்கள். நாக்குக்கு அடியிலும் ஒரு சார்பிட்ரேட் மாத்திரையை வையுங்கள்.

பாதிக்கப்பட்டவருக்கு சுவாச மூச்சு நின்று போயிருந்தால் செயற்கை சுவாசம் கொடுக்க ஆரம்பியுங்கள். தலையைப் பின்பக்கம் உயர்த்தி, நாடியையும் மேல்நோக்கி உயர்த்தி மூச்சுக்குழலை நேராக இருக்குமாறு செய்து பாதிக்கப்பட்டவரின் மூக்கின் இரு நாசித்துவாரங்களையும் அழுத்தி மூடிக்கொண்டு, பாதிக்கப்பட்டவரின் வாயோடு உங்கள் வாயைப் பொருத்திக்கொண்டு மெதுவாக காற்றை உட்செலுத்துங்கள்.

நாம் காற்றை உள்ளிழுக்கும் போது நம் மார்புப்பகுதி மேல் நோக்கி அசைவதுபோல பாதிக்கப்பட்டவரின் மார்புப்பகுதி மேல்நோக்கி அசைகிறதா என்று பாருங்கள். இல்லாவிட்டால், மேற்கண்ட முறையில் மீண்டும் மீண்டும் செயற்கை சுவாசம் கொடுங்கள்.பாதிக்கப்பட்டவர் மூச்சுவிடத் தொடங்கும் வரை இப்படி தொடர்ந்து கொடுங்கள்.

தீக்காயத்திற்கான முதல் உதவி

சாதாரண தீக்காயமாக இருந்தால் அதற்குரிய களிம்பு மற்றும் ஸ்பிரே மூலம் குணப்படுத்தலாம்.

தீக்காயத்தில் தொடர்ச்சியாக தண்ணீரை ஊற்றிக் குளிர்ச்சியாக வைத்திருங்கள்.

பாதிக்கப்பட்டவருக்குத் தலைசுற்றல், தளர்ச்சி, தாங்கமுடியாத ஜ×ரம், நடுக்கத்தோடு உளறுதல் மற்றும் உடல் வியர்த்து, விரைத்து குளிர்ந்துபோனால் உடனடியாக டாக்டரிடம் அழைத்துச் செல்லுங்கள்.

வெட்டுக்காயம்

சின்னஞ்சிறு வெட்டுக்காயமானால் காயத்திலுள்ள தூசித் துகள்களை அப்புறப்படுத்திவிட்டு அன்ட்டிபயாட்டிக் களிம்பினைக் காயத்தின்மீது போடலாம். காயத்தை சுற்றிக் கட்டு போடுங்கள். தினமும் புது பேண்டேஜ் துணிகொண்டு கட்டுப் போடுங்கள்.

வெட்டுக்காயம் நீண்டநாட்களாக ஆறாமல் இருந்து, அதிலிருந்து சீழ் வடிதல், மற்றும் ஜுரம் வந்தால் உடனடியாக டாக்டரிடம் அழைத்துச் செல்லுங்கள்.

கண்ணாடிப்பிசிறு போன்றவை ரொம்ப ஆழத்தில் உள்ளே சென்றிருந்தால் அதை அகற்ற நீங்கள் முயற்சி செய்யவேண்டாம்.

எலும்பு முறிவு:

கையிலோ அல்லது காலிலோ அடிபட்டு எலும்பு முறிவு ஏற்படும்போது கை அல்லது கால் விரல்களில் உணர்ச்சி இருக்கிறதா என்று பாருங்கள். இல்லாவிட்டால், நரம்பு மண்டலம் அல்லது முதுகுத்தண்டு பாதிக்கப்பட்டிருக்கும். அதனால், உடனடியாக பாதிக்கப்பட்டவரை டாக்டரிடம் கொண்டு செல்ல வேண்டும். டாக்டர் பார்க்கும் வரை கை கால்களை அசைக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். கைவிரல் அல்லது கால் விரல்களில் காயம் பட்டிருந்தால் விரல்களை அசைக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

எலும்புமுறிவுக் காயத்தில் எலும்பு வெளியே தெரிந்தால், அதைச் சுத்தமான துணியால் மூடி டாக்டரிடம் அழைத்துச் செல்லுங்கள்.

எலும்பு முறிவு ஏற்பட்ட இடத்தில் அழுத்தி நீவுதலோ அல்லது வெளியில் தெரிகின்ற எலும்பினை உள்ளே பழைய நிலைக்கு அமுக்கி வைக்கவோ நேரே நிறுத்தி வைக்கவோ முயற்சி செய்யாதீர்கள். எலும்புமுறிவுக் காயத்திற்கு மேல் அல்லது கீழ் உள்ள மூட்டுக்களை ஆட்டவோ அசைக்கவோ கூடாது.

டாக்டர் பார்ப்பதற்கு முன்னால், எலும்புமுறிவு ஏற்பட்டவருக்கு தண்ணீரோ வேறு எந்த நீராகாரமோ அல்லது உணவோ கொடுக்கக்கூடாது.
Photo: முதல் உதவி பற்றிய தகவல் !!!!!!

திடீரென ஏற்படும் மாரடைப்பு, தீக்காயம், விபத்துக்களினால் உண்டாகும் எலும்பு முறிவு போன்ற ஆபத்தான காலகட்டங்களில் மருத்துவமனைக்குச் செல்வதற்கு முன் ஆபத்திலிருந்து நம் உயிரைக்காப்பாற்றிக் கொள்ள முதல் உதவி சிகிச்சை செய்ய வேண்டும்.

உலகசாதனை புத்தகம் உருவான கதை !!!!! ( GUINNESS BOOK )

1951ம் வருடம் ஒரு நாள் மாலைப்பொழுது, அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த ‘கின்னஸ் வாட் சாலைஎன்ற அமைப்பிற்கு நிர்வாக இயக்குநராக இருந்தவர் ‘சர்க்யூ பீவர்’. இவர் வேட்டையாடுவதற்காக ஒரு நதிக் கரையோரம
் சென்று கொண்டிருந்தார். அப்போது ஆகாயத்தில் ஒரு நீண்ட கோடு போல ஏராளமான பறவைகள் பறந்து சென்று கொண்டிருந்தன. அவர், உடனே அவற்றை சுட எண்ணி, குனிந்து தன் பேண்ட் பாக் கெட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்தார்.

எடுத்து நிமிர்ந்தவர் அந்தப் பறவைக்கூட்டம் கண்ணுக்கே தெரியாத தொலைவுக்குச் சென்று விட்டதை அறிந்தார். வியப்பில் உறைந்து போனார். என்ன ஒரு வேகம்! ‘கோல்டன் பிளவர்’ என்ற பறவையினம் அவை. அப்போதுதான் அவருக்கு ஒரு சிந்தனை பளிச்சிட்டது. ஒருவேளை உலகிலேயே மிகவும் வேகமாகப் பறக்கும் பறவையினம் இவையாகத்தான் இருக்குமோ என்று எண்ணினார். பலரிடம் பல புத்தகங்களிலும் விடை தேடினார்.

பலன்தான் இல்லை. இது குறித்து நாமே ஒரு புத்தகம் வெளியிட்டால் என்ன என்று யோசித்தார். அவர் உடனே லண்டன் சென்றார். அங்கு அரசாங்கத்திற்காக புள்ளி விவரங்கள் சேகரிக்கும் நோரிஸ் மைக் வைக்ட்டர், ரோஸ் மைக் வைக்ட்டர் என்ற இரட்டைச் சகோதரர்களைச் சந்தித்தார். தனது புதிய புத்தக யோசனையை தெரிவித்தார். அவர்களும் ஒத்துழைப்புதர முன்வந்தனர். மூவரின் உழைப்பில் பிறந்ததுதான் கின்னஸ் புத்தகம். முதல் கின்னஸ் புத்தகம் 1955ம் ஆண்டு ஆகஸ்ட் 27ல் 198 பக்கங்களுடன் அவர்களால் வெளியிடப்பட்டது.

உலகிலேயே மிகவும் பெரியது. மிகவும் சிறியது ஆகிய விவரங்கள் இதில் அடங்கியிருந்தன. மேலும் அவ்வாண்டு வெளியான புத்தகங்களில் அமோக விற்பனையான புத்தகம் என்ற பெருமையும் கின்னஸ் புத்தகத்திற்குக் கிடைத்தது. அன்று தொடங்கி ஒவ்வொரு ஆண்டும் புதுப்புது சாதனை புரிந்தவர்களைப் பற்றிய செய்திகளோடு புத்தகம் வெளிவந்தது. தொடர்ந்து ஆண்டுதோறும் வெளிவரும் கின்னஸ் புத்தகம் இடையில் 1957, 1959 ஆகிய இரண்டு ஆண்டுகளில் மட்டும் வெளிவரவில்லை.

இதற்கான காரணம் தெரியவில்லை. தனிப்பட்ட நபரின் எந்த ஒரு புதிய சாதனையையும் கின்னஸ் புத்தகத்திற்கு அனுப்பலாம். இதற்கான தகுந்த ஆதாரங்களைக் காட்டவேண்டும் எப்படி? என பார்ப்போம். சாதனையாளரின் சாதனை பற்றிய பத்திரிகை செய்திகள், பார்வையாளர்களாக இருந்த பொறுப்பானவர்களின் கையெழுத்துத் தொகுப்பு, இவை உண்மைதான் என்று ஒரு பொறுப்பான நிறுவனத்தின் தலைவர் வழங்கும் உறுதிமொழி.

இவ்வளவும் அனுப்ப வேண்டும். புதிய சாதனை முந்தைய சாதனையை முறியடிப்பதற்காக இருந்தால் அந்தச் செய்தியும் சாதனையாளர் பற்றிய தகவலும் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறும். கின்னஸ் புத்தகத்தில் சாதனை நிகழ்ச்சிகளை வெளியிடுவார்களே தவிர, யாரையும் சாதனைபுரியத் தூண்டமாட்டார்கள். கின்னஸ் புத்தகம் பற்றிக் கூட கின்னஸ் புத்தகத்தில் 1974ல் இடம் பெற்றது. அது உலகிலேயே அதிகமாக விற்பனையான புத்தகம் என்ற வரிசையில்தான். முதலில் ஆங்கிலத்தில் மட்டுமே வெளிவந்த புத்தகம் விரைவிலேயே 35 மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.
Photo: உலகசாதனை புத்தகம் உருவான கதை !!!!! ( GUINNESS BOOK )

1951ம் வருடம் ஒரு நாள் மாலைப்பொழுது, அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த ‘கின்னஸ் வாட் சாலைஎன்ற அமைப்பிற்கு நிர்வாக இயக்குநராக இருந்தவர் ‘சர்க்யூ பீவர்’. இவர் வேட்டையாடுவதற்காக ஒரு நதிக் கரையோரம் சென்று கொண்டிருந்தார். அப்போது ஆகாயத்தில் ஒரு நீண்ட கோடு போல ஏராளமான பறவைகள் பறந்து சென்று கொண்டிருந்தன. அவர், உடனே அவற்றை சுட எண்ணி, குனிந்து தன் பேண்ட் பாக் கெட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்தார்.

எடுத்து நிமிர்ந்தவர் அந்தப் பறவைக்கூட்டம் கண்ணுக்கே தெரியாத தொலைவுக்குச் சென்று விட்டதை அறிந்தார். வியப்பில் உறைந்து போனார். என்ன ஒரு வேகம்! ‘கோல்டன் பிளவர்’ என்ற பறவையினம் அவை. அப்போதுதான் அவருக்கு ஒரு சிந்தனை பளிச்சிட்டது. ஒருவேளை உலகிலேயே மிகவும் வேகமாகப் பறக்கும் பறவையினம் இவையாகத்தான் இருக்குமோ என்று எண்ணினார். பலரிடம் பல புத்தகங்களிலும் விடை தேடினார்.

பலன்தான் இல்லை. இது குறித்து நாமே ஒரு புத்தகம் வெளியிட்டால் என்ன என்று யோசித்தார். அவர் உடனே லண்டன் சென்றார். அங்கு அரசாங்கத்திற்காக புள்ளி விவரங்கள் சேகரிக்கும் நோரிஸ் மைக் வைக்ட்டர், ரோஸ் மைக் வைக்ட்டர் என்ற இரட்டைச் சகோதரர்களைச் சந்தித்தார். தனது புதிய புத்தக யோசனையை தெரிவித்தார். அவர்களும் ஒத்துழைப்புதர முன்வந்தனர். மூவரின் உழைப்பில் பிறந்ததுதான் கின்னஸ் புத்தகம். முதல் கின்னஸ் புத்தகம் 1955ம் ஆண்டு ஆகஸ்ட் 27ல் 198 பக்கங்களுடன் அவர்களால் வெளியிடப்பட்டது.

உலகிலேயே மிகவும் பெரியது. மிகவும் சிறியது ஆகிய விவரங்கள் இதில் அடங்கியிருந்தன. மேலும் அவ்வாண்டு வெளியான புத்தகங்களில் அமோக விற்பனையான புத்தகம் என்ற பெருமையும் கின்னஸ் புத்தகத்திற்குக் கிடைத்தது. அன்று தொடங்கி ஒவ்வொரு ஆண்டும் புதுப்புது சாதனை புரிந்தவர்களைப் பற்றிய செய்திகளோடு புத்தகம் வெளிவந்தது. தொடர்ந்து ஆண்டுதோறும் வெளிவரும் கின்னஸ் புத்தகம் இடையில் 1957, 1959 ஆகிய இரண்டு ஆண்டுகளில் மட்டும் வெளிவரவில்லை.

இதற்கான காரணம் தெரியவில்லை. தனிப்பட்ட நபரின் எந்த ஒரு புதிய சாதனையையும் கின்னஸ் புத்தகத்திற்கு அனுப்பலாம். இதற்கான தகுந்த ஆதாரங்களைக் காட்டவேண்டும் எப்படி? என பார்ப்போம். சாதனையாளரின் சாதனை பற்றிய பத்திரிகை செய்திகள், பார்வையாளர்களாக இருந்த பொறுப்பானவர்களின் கையெழுத்துத் தொகுப்பு, இவை உண்மைதான் என்று ஒரு பொறுப்பான நிறுவனத்தின் தலைவர் வழங்கும் உறுதிமொழி.

இவ்வளவும் அனுப்ப வேண்டும். புதிய சாதனை முந்தைய சாதனையை முறியடிப்பதற்காக இருந்தால் அந்தச் செய்தியும் சாதனையாளர் பற்றிய தகவலும் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறும். கின்னஸ் புத்தகத்தில் சாதனை நிகழ்ச்சிகளை வெளியிடுவார்களே தவிர, யாரையும் சாதனைபுரியத் தூண்டமாட்டார்கள். கின்னஸ் புத்தகம் பற்றிக் கூட கின்னஸ் புத்தகத்தில் 1974ல் இடம் பெற்றது. அது உலகிலேயே அதிகமாக விற்பனையான புத்தகம் என்ற வரிசையில்தான். முதலில் ஆங்கிலத்தில் மட்டுமே வெளிவந்த புத்தகம் விரைவிலேயே 35 மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.

புரட்சி நாயகன் லெனின் பற்றிய தகவல் !!!

 புரட்சி நாயகன் லெனின் பற்றிய தகவல் !!!

நாட்டில் தலை விரித்தாடிய பசிக்கொடுமையை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்ற வைராக்கியம் ஒரு வரலாற்று நாயகரின் நெஞ்சத்திலும், வயிற்றிலும் தீயாக கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. அன்றைய தினம் அந்த
தீ விஸ்வரூபம் எடுத்து நாட்டின் இடைக்கால ஆட்சியைக் கவிழ்த்து ஒரு புதிய ஆட்சியை அமைக்க உதவியது. 'நவம்பர் புரட்சி' என்று வரலாறு அழைக்கும் அந்த புரட்சியை சந்தித்த நாடு ரஷ்யா.

"இந்த நாட்டிற்க்கு இப்போதைய தேவை யுத்தம் இல்லை, அமைதியும், உணவும், வேலையும்தான். உலகப் போரிலிருந்து ரஷ்யா உடனடியாக விலக வேண்டும். பசித்த வயிற்றுடன் நம் இராணுவத்தினர் இனிமேல் வீம்புக்காக போர் முனைகளில் சாகக்கூடாது. மக்களுக்கு அமைதி, உண்ண உணவு, விவசாயம் செய்ய நிலம், இந்த மூன்றுதான் இந்த நாட்டின் இப்போதைய தேவை".

என்ற ஆவேசமான பிரச்சாரத்துடன் தன் நாட்டு மக்களை ஒன்றுபடுத்தி அந்த நவம்பர் புரட்சிக்கு வித்திட்டு ரஷ்யாவில் கம்யூனிஸ்ட் ஆட்சி மலர வழி வகுத்த அந்த வரலாற்று நாயகர் லெனின். கம்யூனிச சித்தாந்தம் கார்ல் மார்க்ஸின் சிந்தனையில் உதித்த ஒன்று என்றாலும் அந்த சித்தாந்தத்தை வரலாற்றில் முதன் முதலில் செயல்படுத்தி காட்டிய புரட்சி வீரர் லெனின்தான்.

1870-ஆம் ஆண்டு ஏப்ரல் 22-ஆம் நாள் ரஷ்யாவின் வால்கா (Volga River) நதிக்கரையோரம் உள்ள சிம்பிர்ஸ்க் (Simbirsk) எனும் நகரத்தில் பிறந்தார் விளாடிமிர் இலீச் உல்யானவ் (Vladimir Ilyich Ulyanov) என்ற லெனின். அந்த நகரம் இப்போது லெனினின் நினைவாக உல்யானவ்ஸ் (Ulyanov's) என்று அழைக்கப்படுகிறது. லெனினுக்கு அலெக்ஸாண்டர், டிமிட்ரி என்ற சகோதரர்களும், ஆனர், மரியா, ஆல்கா என்ற சகோதரிகளும் இருந்தனர். அவரது தந்தை நம்பிக்கைக்குரிய அரசாங்க அதிகாரியாக இருந்தாலும், லெனினின் மூத்த சகோதரர் அலெக்ஸாண்டர் முற்போக்கு கொள்கையும், தீவிரவாத கொள்கையும் உடையவராக இருந்தார். அப்போது ரஷ்யாவை ஆண்டு வந்த ஷா மன்னன் மக்கள் நலன் மீது அக்கறை இல்லாதவனாக இருந்தான்.

மன்னனைக் கொல்வதே ரஷ்ய மக்களுக்கு நல்வாழ்வு கிடைக்க ஒரே வழி என்று நம்பிய அலெக்ஸாண்டர் அதற்காகத் திட்டமிடத் தொடங்கினார். அந்தத் திட்டத்தை அறிந்த மன்னனின் அதிகாரிகள் அலெக்ஸாண்டரையும், அவரது நண்பர்களையும் கைது செய்ததோடு மட்டுமின்றி 1887-ஆம் ஆண்டு மே 8-ஆம் நாள் அவர்களை தூக்கிலிட்டுக் கொன்றனர். அப்போது லெனினுக்கு வயது பதினேழுதான். சிறு வயதிலிருந்தே தன் அண்ணனோடு நெருங்கிப் பழகியவர் லெனின். பெற்றோர் தெய்வ நம்பிக்கை உடையவர்களாக இருந்தனர். ஆனால் அலெக்ஸாண்டருக்கும், லெனினுக்கும் மதப்பற்று இருந்ததில்லை. குடும்பம் முழுவதும் ஞாயிற்றுக் கிழமைகளில் ஆலயம் செல்லும்போது அவர்கள் இருவர் மட்டும் ஆலயம் செல்ல மறுத்தனர். பிள்ளைகளின் சுதந்திரத்தில் பெற்றோர் தலையிட விரும்பாததால் குழந்தைப் பருவத்திலிருந்தே புதுமைக் கருத்துகளோடும், சுயமாக சிந்தித்து செயல்பட்டு முடிவெடுக்கும் வாய்ப்போடும் வளர்ந்தார் லெனின்.

விளையாட்டிலும், படிப்பிலும் பள்ளியில் முதல் மாணவனாக திகழ்ந்த அவர் உயர்நிலைப்பள்ளி இறுதித் தேர்வில் மாநிலத்திலேயே முதல் மாணவனாக தேர்ச்சிப் பெற்றார். அண்ணனின் மரணம் அவரை பெரிதாக பாதித்தாலும் தன் நாட்டுக்கு புதிய ஆட்சி தேவை என்ற எண்ணம் அவரிடம் வேரூன்றி வளரத் தொடங்கியது. கஸான் நகரில் உள்ள (Kazan University) பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பட்டம் பயின்றார் லெனின். ஒரு தீவிரவாதியின் தம்பி என்று கூறி முதலில் அவரை சேர்த்துக் கொள்ள மறுத்தது பல்கலைக்கழகம். ஆனால் அவரது கல்வி தேர்ச்சியைக் கண்டு பின்பு மனம் மாறி ஏற்றுக்கொண்டது. பல்கலைக்கழகத்தில் தன்னுடம் படித்த முற்போக்கு சிந்தனையுடைய மாணவர்களுடன் சேர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டதால் லெனினை பல்கலைக்கழகம் வெளியேற்றியது. ஆனால் வைராக்கியத்துடன் சுயமாகவே படித்து 1891- ஆம் ஆண்டில் சட்டத்தில் பட்டம் பெற்றார் லெனின்.

அந்தக் காலகட்டத்தில் தான் கார்ல் மார்க்ஸின் புகழ்பெற்ற 'மூலதனம்' என்ற நூலை படிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. தொழிலாளர்களுக்காக பாடுபட வேண்டும் என்ற உந்துதல் அவருக்கு ஏற்பட்டது. கார்ல் மார்க்ஸின் கருத்துகளை அவர் பரப்பத் தொடங்கினார். அதனை அறிந்த ஷா மன்னன் லெனினை கைது செய்து மூன்று ஆண்டு சிறை தண்டனையுடன் ஷைபீரியாவுக்கு நாடு கடத்தினான். தண்டனை முடிந்ததும் 1900-ஆம் ஆண்டு ஜெர்மனிக்கு சென்ற லெனின் அங்கிருந்து ஒரு பத்திரிக்கை நடத்தத் தொடங்கினார். அடுத்த பதினேழு ஆண்டுகள் அவர் ஐரோப்பாவிலேயே தங்கியிருந்து ஷா மன்னனின் கொடுங்கோன்மை பற்றியும், ரஷ்ய தொழிலாளர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும் நிறைய எழுதினார். லெனினின் கோபத்திற்கு காரணம் இல்லாமல் இல்லை.

ஷா மன்னனின் ஆட்சியில் நிலக்கரி தட்டுப்பாட்டால் தொழிற்சாலைகள் மூடப்பட்டன. ஒரு ரொட்டித் துண்டுக்காக மக்கள் ஒருவரையொருவர் வெட்டிக் கொல்லும் அளவுக்கு உணவு பஞ்சம் கோர தாண்டவம் ஆடியது. மன்னன் தன் மனைவி அலெக்ஸாண்ட்ராவின் கைப்பாவையாக விளங்கினான். மனைவியோ ரஷ்புட்டின் என்ற காமுக சாமியாரின் கட்டுப்பாட்டில் இருந்தாள். மன்னனும், ராணியும் மக்கள் நலன் மீது அக்கறை இல்லாமல் இருந்ததால்தான் மன்னனைக் கொல்ல திட்டம் தீட்டினார் லெனினின் அண்ணன் அலெக்ஸாண்டர். தங்கள் பிரச்சினைகளை சொல்ல அரண்மனை நோக்கி ஊர்வலமாக சென்ற அப்பாவி மக்கள் ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொல்லப்பட்டனர். பொறுத்தது போதும் என்று ஒரு தேசமே பொங்கி எழுந்தது.

1917-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வீதிகளில் திரண்ட ரஷ்ய மக்கள் மன்னனுக்கு எதிராக எழுப்பிய கோஷங்களால் ரஷ்யாவே அதிர்ந்தது. அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மிதவாத சோசியலிஸ்ட் என்று தங்களை அடையாளம் காட்டிக்கொண்ட ஒரு குழு ஆட்சியைக் கைப்பற்றியது. பெரும் கோபத்தில் இருந்த கம்யூனிஸ்டுகள் ஷா மன்னனையும், அவனது ஒட்டுமொத்த குடும்பத்தையும் நிற்க வைத்து சுட்டுக் கொன்றனர். ஆனால் புதிதாக ஆட்சிக்கு வந்தவர்களாலும் உணவு தட்டுப்பாட்டைப் போக்க முடியவில்லை. ஷா மன்னன் மறைந்தாலும் நாட்டின் அவலங்கள் மறையவில்லை. அதுதான் சரியான தருணம் என்று நம்பிய லெனின் தன் தாய்நாடு நோக்கி புறப்பட்டார். அவருடைய சகாக்கள் உருவாக்கியிருந்த செஞ்சேனியைக் கொண்டு அதே ஆண்டு அதாவது 1917-ஆம் ஆண்டு நவம்பர் 7-ஆம் நாள் தலைநகர் பெட்ரோகிராடை (Petrograd) சுற்றி வளைத்தது லெனினின் படைகள்.

இடைக்கால ஆட்சியின் வீரர்கள் துப்பாக்கிகளை கீழே போட்டு விலகி நிற்க, ஒரு சொட்டு இரத்தம் சிந்தாமல், வன்முறை நிகழாமல் ஆட்சியைக் கைப்பற்றினார் லெனின். ரஷ்யாவில் கம்யூனிஸ்டு ஆட்சி மலர்ந்தது. பிரச்சாரத்தில் கூறியிருந்ததைப் போலவே ஆட்சிக்கு வந்த மறுநாளே நில பிரபுக்களின் விளை நிலங்களை கைப்பற்றி விவசாயிகளுக்கு பிரித்துக் கொடுத்தார் லெனின். தொழிற்சாலைகளின் நிர்வாகம் தொழிலாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன. லெனின் ரஷ்யாவின் கம்யூனிஸ்டு ஆட்சியை அமைத்த பிறகுதான் பெரும்பாலான நாடுகளில் கம்யூனிசம் பரவத் தொடங்கியது. கார்ல் மார்க்ஸின் கொள்கைகளை அவர் பின்பற்றினாலும் அடக்கு முறையை வன்முறையால்தான் எதிர்கொள்ள வேண்டும் என்று அவர் நம்பினார்.

நிறைய புத்தகங்களை படிக்கும் பழக்கம் அவரிடம் இருந்தது. தனது புரட்சிகரமான கருத்துகளை அவர் புத்தகங்களாகவும் எழுதியிருக்கிறார். அவரது எழுத்துகள் 55 தொகுதிகளாக வெளிவந்திருக்கின்றன. 1922-ஆம் ஆண்டு மே மாதம் லெனினை முடக்குவாதம் தாக்கியது. உடல் செயலிழந்தது. இரண்டு ஆண்டுகளில் அதாவது 1924-ஆம் ஆண்டு ஜனவரி 21-ஆம் நாள் தனது 54-ஆவது வயதில் அவர் காலமானார். அவரது பதப்படுத்தபட்ட உடல் இன்றும் மாஸ்கோவின் செஞ்சதுக்கத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. நாட்டில் அடக்கு முறையையும், முறையற்ற ஆட்சியும் நடந்தபோது நம்மால் என்ன செய்ய முடியும்? என்று மற்றவர்களைப்போல் லெனினும் ஒதுங்கியிருந்திருந்தால் அவரால் வரலாற்றில் அவ்வுளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க முடியாது.

கம்யூனிசம் கொள்கைகளின் நிறை, குறைகளைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டியதில்லை. ஆனால் நாட்டில் வறுமை ஒழிய வேண்டும், எல்லொருக்கும் வேலை கிடைக்க வேண்டும், அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்றும் சிந்தித்ததாலேயே வரலாற்றில் அழியா இடத்தைப் பெற்றிருக்கிறார் லெனின். அவரைப் பற்றியும், ரஷ்ய புரட்சியைப் பற்றியும் வருணிக்க முனைந்த மகாகவி பாரதியார்....

என்று கவிதை வடித்திருக்கிறார். நம்மால் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்ற அசைக்க முடியா நம்பிக்கையும், தன் இலக்கை நோக்கி இரவு, பகல் பாராமல் உழைக்கும் மனஉறுதியும், எல்லோருக்கும் எல்லாமும் வேண்டும் என்ற பரந்த மனப்பான்மையும்தான் லெனின் என்ற அந்த வரலாற்று நாயகனுக்கு வானத்தை வசப்படுத்த உதவிய பண்புகள். அதே பண்புகளை நாமும் வளர்த்துக்கொண்டால் லெனினைப் போல் ஒரு தேசத்தின் தலையெழுத்தையே மாற்ற முடியாவிட்டாலும், குறைந்தது நம் தலையெழுத்தையாவது மாற்றிக் கொள்ளலாம்.

Photo: புரட்சி நாயகன் லெனின் பற்றிய தகவல் !!!

நாட்டில் தலை விரித்தாடிய பசிக்கொடுமையை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்ற வைராக்கியம் ஒரு வரலாற்று நாயகரின் நெஞ்சத்திலும், வயிற்றிலும் தீயாக கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. அன்றைய தினம் அந்த தீ விஸ்வரூபம் எடுத்து நாட்டின் இடைக்கால ஆட்சியைக் கவிழ்த்து ஒரு புதிய ஆட்சியை அமைக்க உதவியது. 'நவம்பர் புரட்சி' என்று வரலாறு அழைக்கும் அந்த புரட்சியை சந்தித்த  நாடு ரஷ்யா.

முகமது அலி (உலக குத்துச்சண்டை வீரர்) -வரலாறு !!!

எந்த ஒரு துறையிலும் உச்சத்தை எட்டுவோருக்கு 'The Great' அல்லது 'The Greatest' என்ற உயரிய அங்கீகாரத்தை வழங்குகிறது வரலாறு. விளையாட்டுத் துறையில் அந்தத் தகுதியை எட்டிய ஒரு வீரரைப் பற்றி தெரிந்
துகொள்ளவிருக்கிறோம்.விளையாட்டுத் துறையில் 'The Greatest' என்ற தகுதையைப் பெற்ற ஒரே வீரர் குத்துச் சண்டை உலகின் முடிசூடா மன்னன் முகமது அலி. 1942 ஆம் ஆண்டு ஜனவரி 17 -ஆம் தேதி அமெரிக்காவில் ஒரு கருப்பினத்தவர் குடும்பத்தில் பிறந்தார் முகமது அலி. பிறந்தபோது அவருக்கு சூட்டப்பட்ட பெயர் Cassius Marcellus Clay.

சிறு வயதிலிருந்தே அவர் உடல் வலிமை மிக்கவராக இருந்தார். அந்த வயதிலேயே மிகவும் புகழ் பெற்ற குத்துச் சண்டை வீரராக வர வேண்டும் என்ற கனவு அவரிடம் இருந்தது. பின்னர் கருப்பின முஸ்லீம் இயக்கத்தில் சேர்ந்து இஸ்லாமைத் தழுவிய அவர் முகமது அலி என தன் பெயரை மாற்றிக் கொண்டார். பதினெட்டு வயதானபோதே அனைத்துலக குத்துச் சண்டை விருதை வென்றார் அலி. 1960-ஆம் ஆண்டு ரோமில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொண்ட அவருக்கு தங்கபதக்கம் கிடைத்தது. அப்போதுகூட விளையாட்டு உலகம் அவரை சரியாக அடையாளம் கண்டுகொள்ளவில்லை.

1965-ஆம் ஆண்டு பிப்ரவரி 25-ஆம் நாள்தான் முகமது அலி என்ற புலி வீறுகொண்டு எழுந்து குத்துச் சண்டை உலகில் ஒரு புதிய சகாப்தத்தைத் தொடங்கியது. அந்த ஆண்டில்தான் முகமது அலி சோனி லிஸ்டன் என்ற உலக குத்துச்சண்டை வீரரை வீழ்த்தி "உலக ஹெவி வெய்ட்" (World Heavyweight Champion) குத்துச் சண்டை விருதை முதன் முதலாக வென்றார். குத்துச் சண்டை உலகில் ஒரு மாவீரன் உருவானதை அன்று விளையாட்டு உலகம் கண்டுகொண்டது. 1964 முதல் 1967 வரை "உலக ஹெவி வெய்ட்" குத்துச் சண்டை வீரராக திகழ்ந்தார் அலி. அதன் பின்னர் அமெரிக்கா இராணுவத்தில் கட்டாயச் சேவை புரிய மறுத்ததால் அவரது பட்டம் பறிக்கப்பட்டது. மீண்டும் அந்த பட்டத்தை வெல்ல அவர் Joe Frazier-யுடன் பொருதினார். ஆனால் தோல்வியடைந்தார்.

விளையாட்டில் வெற்றி தோல்வி மாறி மாறி வரும் என்பதை உணர்ந்த அலி மனம் தளராமல் கடும் பயிற்சியில் ஈடுபட்டார். 1974-ஆம் ஆண்டு மீண்டும் ஜோ பிரேசியருடன் பொருதி அவரை வீழ்த்தி உலக விருதை மீண்டும் வென்றார். பிறகு Leon Spinks-யுடன் தோல்வியைத் தழுவிய முகமது அலி 1978-ஆம் ஆண்டு அதே Spinks-ஐ வீழ்த்தி உலக விருதை மூன்றாவது முறையாக மீண்டும் கைப்பற்றினார். உலக குத்துச் சண்டை வரலாற்றில் தன்னை வீழ்த்தியவர்களையே வீழ்த்தி உலக விருதை மூன்று முறை வென்ற முதல் வீரர் முகமது அலி என்பது குறிப்பிடதக்கது. அதன் பிறகுதான் அவருக்கு 'The Greatest' என்ற பட்டம் சூட்டப்பட்டது. அவர் 61 முறை குத்துச் சண்டை போட்டியில் களமிறங்கியிருக்கிறார். அதில் 56-ல் வெற்றி பெற்று ஐந்தே ஐந்து தோல்விகளைதான் தழுவினார்.

37 முறை நாக்-அவுட் முறையில் வென்றார் என்பது குறிப்பிடதக்கது. நான்காவது முறையாக அந்த விருதை வெல்லும் முயற்சியில் Larry Holmes-யுடன் பொருதி தோற்றார் முகமது அலி. அந்த தோல்விக்கு வயதும் ஒரு காரணம். ஆனால் ஏற்கனவே அவருக்கு கிடைத்திருந்த பெயருக்கும், புகழுக்கும் இந்த தோல்வியால் பாதிப்பில்லை. உலகம் முழுவதும் குத்துச் சண்டையைப் பிரபலபடுத்தியதில் முகமது அலிக்கு பெரும் பங்கு உண்டு. அவரைப் பின்பற்றி இப்போது அவரது மகள் லைலா அலி பெண்கள் குத்துச் சண்டை உலகில் கலக்குகிறார். முகமது அலியை மையமாக வைத்து 'The Greatest' என்ற திரைப்படமும் வெளியானது.

தமது பலத்தால் பலரை வீழ்த்திய முகமது அலியை Parkinson's நோய் வீழ்த்தியிருப்பது உண்மைதான். குத்துச் சண்டைகளின் போது அவருக்கு தலையில் விழுந்த குத்துகளால்தான் அவருக்கு அந்த நோய் ஏற்பட்டது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இருந்தாலும் குத்துச்சண்டை உலகுக்கு அவர் கொண்டு வந்த புகழையும், வசீகரத்தையும் இன்னொருவர் எட்டிப்பிடிக்க காலம் பல ஆகலாம் என்பதே விளையாட்டு உலகின் கணிப்பு. கருப்பினத்தவர்கள் தோல் உயர்த்தி நடக்க காரணமாயிருந்த பலரில் முகமது அலிக்கு நிச்சயம் முக்கிய பங்கு உண்டு. அவர் தனது வெற்றியைப்பற்றிக் குறிப்பிடும்போது இவ்வாறு சொல்கிறார்:

"வீரர்கள் வெறும் உடற்பயிற்சி கூடங்களில் உருவாவதில்லை. அவர்களுக்கு ஆழ்மனதில் ஒரு கனவு, ஒரு தொலைநோக்கு, ஒரு விருப்பம் இருக்க வேண்டும். அவர்களுக்கு திறமையும் முக்கியம் மனோதிடமும் முக்கியம். ஆனால் திறமையைவிட மனோதிடம்தான் அதிமுக்கியம்"
Photo: முகமது அலி (உலக குத்துச்சண்டை வீரர்) -வரலாறு  !!!

எந்த ஒரு துறையிலும் உச்சத்தை எட்டுவோருக்கு 'The Great' அல்லது 'The Greatest' என்ற உயரிய அங்கீகாரத்தை வழங்குகிறது வரலாறு. விளையாட்டுத் துறையில் அந்தத் தகுதியை எட்டிய ஒரு வீரரைப் பற்றி தெரிந்துகொள்ளவிருக்கிறோம்.விளையாட்டுத் துறையில் 'The Greatest' என்ற தகுதையைப் பெற்ற ஒரே வீரர் குத்துச் சண்டை உலகின் முடிசூடா மன்னன் முகமது அலி. 1942 ஆம் ஆண்டு ஜனவரி 17 -ஆம் தேதி அமெரிக்காவில் ஒரு கருப்பினத்தவர் குடும்பத்தில் பிறந்தார் முகமது அலி. பிறந்தபோது அவருக்கு சூட்டப்பட்ட பெயர் Cassius Marcellus Clay.

சிறு வயதிலிருந்தே அவர் உடல் வலிமை மிக்கவராக இருந்தார். அந்த வயதிலேயே மிகவும் புகழ் பெற்ற குத்துச் சண்டை வீரராக வர வேண்டும் என்ற கனவு அவரிடம் இருந்தது. பின்னர் கருப்பின முஸ்லீம் இயக்கத்தில் சேர்ந்து இஸ்லாமைத் தழுவிய அவர் முகமது அலி என தன் பெயரை மாற்றிக் கொண்டார். பதினெட்டு வயதானபோதே அனைத்துலக குத்துச் சண்டை விருதை வென்றார் அலி. 1960-ஆம் ஆண்டு ரோமில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொண்ட அவருக்கு தங்கபதக்கம் கிடைத்தது. அப்போதுகூட விளையாட்டு உலகம் அவரை சரியாக அடையாளம் கண்டுகொள்ளவில்லை.

1965-ஆம் ஆண்டு பிப்ரவரி 25-ஆம் நாள்தான் முகமது அலி என்ற புலி வீறுகொண்டு எழுந்து குத்துச் சண்டை உலகில் ஒரு புதிய சகாப்தத்தைத் தொடங்கியது. அந்த ஆண்டில்தான் முகமது அலி சோனி லிஸ்டன் என்ற உலக குத்துச்சண்டை வீரரை வீழ்த்தி "உலக ஹெவி வெய்ட்" (World Heavyweight Champion) குத்துச் சண்டை விருதை முதன் முதலாக வென்றார். குத்துச் சண்டை உலகில் ஒரு மாவீரன் உருவானதை அன்று விளையாட்டு உலகம் கண்டுகொண்டது. 1964 முதல் 1967 வரை "உலக ஹெவி வெய்ட்" குத்துச் சண்டை வீரராக திகழ்ந்தார் அலி. அதன் பின்னர் அமெரிக்கா இராணுவத்தில் கட்டாயச் சேவை புரிய மறுத்ததால் அவரது பட்டம் பறிக்கப்பட்டது. மீண்டும் அந்த பட்டத்தை வெல்ல அவர் Joe Frazier-யுடன் பொருதினார். ஆனால் தோல்வியடைந்தார்.

விளையாட்டில் வெற்றி தோல்வி மாறி மாறி வரும் என்பதை உணர்ந்த அலி மனம் தளராமல் கடும் பயிற்சியில் ஈடுபட்டார். 1974-ஆம் ஆண்டு மீண்டும் ஜோ பிரேசியருடன் பொருதி அவரை வீழ்த்தி உலக விருதை மீண்டும் வென்றார். பிறகு Leon Spinks-யுடன் தோல்வியைத் தழுவிய முகமது அலி 1978-ஆம் ஆண்டு அதே Spinks-ஐ வீழ்த்தி உலக விருதை மூன்றாவது முறையாக மீண்டும் கைப்பற்றினார். உலக குத்துச் சண்டை வரலாற்றில் தன்னை வீழ்த்தியவர்களையே வீழ்த்தி உலக விருதை மூன்று முறை வென்ற முதல் வீரர் முகமது அலி என்பது குறிப்பிடதக்கது. அதன் பிறகுதான் அவருக்கு 'The Greatest' என்ற பட்டம் சூட்டப்பட்டது. அவர் 61 முறை குத்துச் சண்டை போட்டியில் களமிறங்கியிருக்கிறார். அதில் 56-ல் வெற்றி பெற்று ஐந்தே ஐந்து தோல்விகளைதான் தழுவினார். 

37 முறை நாக்-அவுட் முறையில் வென்றார் என்பது குறிப்பிடதக்கது. நான்காவது முறையாக அந்த விருதை வெல்லும் முயற்சியில் Larry Holmes-யுடன் பொருதி தோற்றார் முகமது அலி. அந்த தோல்விக்கு வயதும் ஒரு காரணம். ஆனால் ஏற்கனவே அவருக்கு கிடைத்திருந்த பெயருக்கும், புகழுக்கும் இந்த தோல்வியால் பாதிப்பில்லை. உலகம் முழுவதும் குத்துச் சண்டையைப் பிரபலபடுத்தியதில் முகமது அலிக்கு பெரும் பங்கு உண்டு. அவரைப் பின்பற்றி இப்போது அவரது மகள் லைலா அலி பெண்கள் குத்துச் சண்டை உலகில் கலக்குகிறார். முகமது அலியை மையமாக வைத்து 'The Greatest' என்ற திரைப்படமும் வெளியானது. 

தமது பலத்தால் பலரை வீழ்த்திய முகமது அலியை Parkinson's நோய் வீழ்த்தியிருப்பது உண்மைதான். குத்துச் சண்டைகளின் போது அவருக்கு தலையில் விழுந்த குத்துகளால்தான் அவருக்கு அந்த நோய் ஏற்பட்டது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இருந்தாலும் குத்துச்சண்டை உலகுக்கு அவர் கொண்டு வந்த புகழையும், வசீகரத்தையும் இன்னொருவர் எட்டிப்பிடிக்க காலம் பல ஆகலாம் என்பதே விளையாட்டு உலகின் கணிப்பு. கருப்பினத்தவர்கள் தோல் உயர்த்தி நடக்க காரணமாயிருந்த பலரில் முகமது அலிக்கு நிச்சயம் முக்கிய பங்கு உண்டு. அவர் தனது வெற்றியைப்பற்றிக் குறிப்பிடும்போது இவ்வாறு சொல்கிறார்:

"வீரர்கள் வெறும் உடற்பயிற்சி கூடங்களில் உருவாவதில்லை. அவர்களுக்கு ஆழ்மனதில் ஒரு கனவு, ஒரு தொலைநோக்கு, ஒரு விருப்பம் இருக்க வேண்டும். அவர்களுக்கு திறமையும் முக்கியம் மனோதிடமும் முக்கியம். ஆனால் திறமையைவிட மனோதிடம்தான் அதிமுக்கியம்"

சாப்பிட்ட உடனே ஜில்லுனு குடிக்காதீங்க! இதயத்திற்கு நல்லதில்லை

உணவு உட்கொண்ட உடன் ஜில் தண்ணீரோ, குளிர்பானமோ குடிப்பவர்களுக்கு இதயபாதிப்பு ஏற்படும் ஆபத்து அதிகம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இதற்கு காரணம் உண்ட உணவில் உள்ள எண்ணெய். க
ொழுப்புகளை ரத்த நாளங்களில் இந்த கொழுப்பு படியச் செய்வதே இதற்கு காரணம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

ஆசியா கண்டத்தைச் சேர்ந்தவர்களான ஜப்பானிய பெண்களின் சராசரி அதிகபட ்ட ஆயுட்காலம் 92. ஆண் ஜப்பானியர்கள் 84 வயது வரை உயிர் வாழ்கின்றனர். இதற்குக் காரணம் அவர்களின் உணவுப் பழக்கம். பச்சைக் காய்கறிகளையும், பழங்களையும் உணவில் சேர்த்துக்கொள்கின்றனர். உணவு உண்ட உடன் வெதுவெதுப்பான வெந்நீர் உட்கொள்வதும், கிரீன் டீ அருந்துவதும் அவர்களின் ஆரோக்கியத்திற்கு காரணமாக அமைந்துள்ளது.

கொழுப்பு உறைந்து விடும்

நம் நாட்டைச் சேர்ந்தவர்கள் இன்றைக்கு பெரும்பாலும் பிரிட்ஜில் வைத்த ஜில் தண்ணீரை அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். கிராமமோ, நகரமோ இன்றைக்கு குளிர்ந்த நீர்தான். கோடை காலம் தொடங்கிவிட்டது இனி காலை உணவில் தொடங்கி இரவு உணவு வரைக்கும் நம் நாட்டவர்கள் உபயோகிப்பது ஜில் தண்ணீர்தான் தான். இவ்வாறு குளிர்ந்த நீர் அருந்துவது ஆபத்தானது என்கின்றனர் மருத்துவர்கள். இது இதயத்தை பாதிக்கிறது. புற்றுநோய்க்கும் வழி வகுக்கிறது என்கின்றனர் மருத்துவர்கள்.

உணவு உண்டவுடன் குளிர்ச்சியான தண்ணீரை குடித்தால், அது நாம் சாப்பிட்ட உணவில் உள்ள எண்ணெய்த் துகள்களை கெட்டியாக்கி விடுகிறது. இதனால், சாப்பிட்ட உணவு ஜீரணம் ஆவதில் சிக்கல் ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி, உடலில் இருக்கும் கொழுப்பின் அளவு அதிகரிக்கவும் அது காரணமாகி விடுகிறது. இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் இதயம், சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பல பிரச்சினைகள் வரலாம்’ என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

இதயநோயாளிகள் பாதிப்பு

மாரடைப்பு நோய் உள்ளிட்ட இதயநோய்க்கு ஆளானவர்கள் சாப்பிடும்போது கூல் வாட்டரை தொடவேக் கூடாது என்றும் அவர்கள் அறிவுறுத்துகிறார்கள். ஜில் தண்ணீர் குடிப்பதனால் வேறு பல தீமைகளும் ஏற்படுத் என்றும் அவர்கள் பட்டியலிட்டுள்ளனர். நெஞ்செரிச்சல், உயர் ரத்த அழுத்தம், சரும பாதிப்பு, பக்கவாதம், வயிற்றுவலி, மைக்ரேன் தலைவலி, மூளை உறைவு நோய், பற்கள் பாதிப்பு போன்றவையும் ஏற்படுகின்றன. எனவே ஜில் தண்ணீர் அருந்துவதை தவிர்த்துவிடுங்கள் அதற்கு பதிலாக வெதுவெதுப்பான நீர் அருந்துங்கள் என்று அறிவுறுத்தியுள்ளனர் மருத்துவர்கள்
Photo: சாப்பிட்ட உடனே ஜில்லுனு குடிக்காதீங்க! இதயத்திற்கு நல்லதில்லை

உணவு உட்கொண்ட உடன் ஜில் தண்ணீரோ, குளிர்பானமோ குடிப்பவர்களுக்கு இதயபாதிப்பு ஏற்படும் ஆபத்து அதிகம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இதற்கு காரணம் உண்ட உணவில் உள்ள எண்ணெய். கொழுப்புகளை ரத்த நாளங்களில் இந்த கொழுப்பு படியச் செய்வதே இதற்கு காரணம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

ஆசியா கண்டத்தைச் சேர்ந்தவர்களான ஜப்பானிய பெண்களின் சராசரி அதிகபட ்ட ஆயுட்காலம் 92. ஆண் ஜப்பானியர்கள் 84 வயது வரை உயிர் வாழ்கின்றனர். இதற்குக் காரணம் அவர்களின் உணவுப் பழக்கம். பச்சைக் காய்கறிகளையும், பழங்களையும் உணவில் சேர்த்துக்கொள்கின்றனர். உணவு உண்ட உடன் வெதுவெதுப்பான வெந்நீர் உட்கொள்வதும், கிரீன் டீ அருந்துவதும் அவர்களின் ஆரோக்கியத்திற்கு காரணமாக அமைந்துள்ளது.

கொழுப்பு உறைந்து விடும்

நம் நாட்டைச் சேர்ந்தவர்கள் இன்றைக்கு பெரும்பாலும் பிரிட்ஜில் வைத்த ஜில் தண்ணீரை அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். கிராமமோ, நகரமோ இன்றைக்கு குளிர்ந்த நீர்தான். கோடை காலம் தொடங்கிவிட்டது இனி காலை உணவில் தொடங்கி இரவு உணவு வரைக்கும் நம் நாட்டவர்கள் உபயோகிப்பது ஜில் தண்ணீர்தான் தான். இவ்வாறு குளிர்ந்த நீர் அருந்துவது ஆபத்தானது என்கின்றனர் மருத்துவர்கள். இது இதயத்தை பாதிக்கிறது. புற்றுநோய்க்கும் வழி வகுக்கிறது என்கின்றனர் மருத்துவர்கள்.

உணவு உண்டவுடன் குளிர்ச்சியான தண்ணீரை குடித்தால், அது நாம் சாப்பிட்ட உணவில் உள்ள எண்ணெய்த் துகள்களை கெட்டியாக்கி விடுகிறது. இதனால், சாப்பிட்ட உணவு ஜீரணம் ஆவதில் சிக்கல் ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி, உடலில் இருக்கும் கொழுப்பின் அளவு அதிகரிக்கவும் அது காரணமாகி விடுகிறது. இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் இதயம், சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பல பிரச்சினைகள் வரலாம்’ என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

இதயநோயாளிகள் பாதிப்பு

மாரடைப்பு நோய் உள்ளிட்ட இதயநோய்க்கு ஆளானவர்கள் சாப்பிடும்போது கூல் வாட்டரை தொடவேக் கூடாது என்றும் அவர்கள் அறிவுறுத்துகிறார்கள். ஜில் தண்ணீர் குடிப்பதனால் வேறு பல தீமைகளும் ஏற்படுத் என்றும் அவர்கள் பட்டியலிட்டுள்ளனர். நெஞ்செரிச்சல், உயர் ரத்த அழுத்தம், சரும பாதிப்பு, பக்கவாதம், வயிற்றுவலி, மைக்ரேன் தலைவலி, மூளை உறைவு நோய், பற்கள் பாதிப்பு போன்றவையும் ஏற்படுகின்றன. எனவே ஜில் தண்ணீர் அருந்துவதை தவிர்த்துவிடுங்கள் அதற்கு பதிலாக வெதுவெதுப்பான நீர் அருந்துங்கள் என்று அறிவுறுத்தியுள்ளனர் மருத்துவர்கள்

Friday, September 21, 2012

நடக்கும் அதிசய மீன் பற்றிய தகவல் !!!

நடக்கும் அதிசய மீன் பற்றிய தகவல் !!!

தகவலுக்கு நன்றி >>>>>
ர.செந்தில்குமார் <<<<<<

நீரிலும் நிலத்திலும் மிக அதிக வேகத்தில் செல்லும் கப்பலை ஹோவர் கிராப்ட் கப்பல் என்கிறார்கள். இக்கப்பலைப் போலவே கடலில் நீந்தியும் நிலப்பரப்பில் நடந்தும் செ
ல்லும் அரியவகையான ஒரு மீன் இனம்தான் நடக்கும் மீன். இவை சுவாசிப்பதும் நடப்பதும் வித்தியாசமானவை என்றும் இதன் சிறப்புகள் குறித்தும் ராமநாதபுரத்தை சேர்ந்த கடல் உயிரியலாளர் ர.செந்தில்குமார் கூறியதாவது..

""சகதி அதிகம் நிறைந்த கடற்கரைகளில் நிலப்பரப்பிலும் கடலிலும் வாழும் இந்த நடக்கும் மீனுக்கு கோபிடே என்பது விலங்கியல் பெயர். சொல்லப் போனால் நீரைவிட நிலத்தில் அதிக சுறுசுறுப்புடன் வாழக்கூடிய ஜீவன். பொதுவாக சாதாரண மீன் வகைகள் தனது துடுப்புகளை நீந்துவதற்கு மட்டும்தான் பயன்படுத்தும். ஆனால் இந்த மீன் இனமோ தனது முன் துடுப்புகளை கால்களாக உருமாற்றி நிலத்தில் நடப்பதற்கு ஏற்றவாறு அமைத்துக் கொள்வது இதன் சிறப்பு.

சில சமயங்களில் கடலுக்கு அடியில் தண்ணீருக்குள் இருக்கும் போது சந்தோஷம் வந்து விட்டால் சுமார் 2 அடி உயரத்திற்குத் தாவிக் குதிக்கும். கடலுக்கு அடியில் சகதி நிறைந்த இடங்களில் துளைகள் அமைத்து அதை வீடு போலாக்கி அவற்றுக்குள் மறைந்து வாழ்கின்றன. கடல் அலைகள் கூட இவ்வீடுகளைச் சேதப்படுத்த முடியாத வகையிலும் எதிரிகளிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவும் கடலில் ஏற்படும் வெப்பத்திலிருந்து தப்பிக்கவும் இவ்வீடுகள்தான் இவற்றிற்குப் பேருதவியாக இருக்கின்றன.

முட்டையிடும் போது இக்குழிகளுக்குள் இட்டு அவை பாதுகாப்பாக இருக்க காற்று நிரப்பிய பை போன்ற ஒன்றையும் உருவாக்கி விடுகின்றன. சுவாசிக்க தேவைப்படும் ஆக்சிஜனின் அளவு குறையும் போது தேவைப்பட்டால் இக்காற்றுப் பைகளில் உள்ள காற்றையும் இவை சுவாசித்துக் கொள்கின்றன.

மியுகஸ் படலம் சூரிய ஒளியால் இதன் தொண்டைப்பகுதி காய்ந்து விடாமல் பாதுகாக்கிறது. இம்மீன்களின் செவுள் மற்ற மீன்களைப் போல இல்லாமல் தடித்தும் பெரியதுமாக காணப்படுகின்றது. அதிலும் காற்றை நிரப்பி வைத்துக் கொண்டு நிலத்தில் நடக்கும் நேரங்களில் அதன் மூலமும் சுவாசித்துக் கொள்வது இம்மீன்களிடம் உள்ள மேலும் ஒரு சிறப்பு.

பெரியோ தாலமஸ் என்ற வகையைச் சேர்ந்த நடக்கும் மீன்களில் மட்டுமே 18 வகைகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. மேற்கு வங்காளத்தில் சுந்தர வனக்காடுகள், குஜராத்தில் கட்ச் வளைகுடா பகுதிகள் மற்றும் மாங்குரோவ் காடுகளிலும் இவை மிக அதிகமாக காணப்படுகின்றன.

இம்மீன்கள் கடற்கரைகளில் தனக்கென ஒரு குறிப்பிட்ட பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டு அந்தப் பகுதிகளில் மற்ற மீன்களை நுழையக்கூட விடுவதில்லை. கடற்கரைகளில் வாழும் புழுக்கள், பூச்சிகள், சிறு நண்டுகள் இவற்றைத் தின்று உயிர் வாழும்.

கடலுக்கடியில் சகதிக்குழிக்குள் இருக்கும் போது கண்கள் பாதிக்கப்படாதவாறு தவளையைப் போன்று உடலின் வெளிப்புறத்தில் பெரிய கண்கள் இருக்கின்றன.

மட்ஸ்கிப்பர் என்ற ஆங்கிலப் பெயருடைய இம்மீன்கள் தவளைகளைப் போலவே நீரிலும், நிலத்திலும் வாழ்வதும் தவளைகளைப் போலவே தோலினாலும் சுவாசிக்க கூடிய ஒரு அபூர்வ ஜீவன்'' என்றார்.
Photo: நடக்கும் அதிசய மீன் பற்றிய தகவல் !!!

தகவலுக்கு நன்றி  >>>>>
ர.செந்தில்குமார்  <<<<<<

நீரிலும் நிலத்திலும் மிக அதிக வேகத்தில் செல்லும் கப்பலை ஹோவர் கிராப்ட் கப்பல் என்கிறார்கள். இக்கப்பலைப் போலவே கடலில் நீந்தியும் நிலப்பரப்பில் நடந்தும் செல்லும் அரியவகையான ஒரு மீன் இனம்தான் நடக்கும் மீன். இவை சுவாசிப்பதும் நடப்பதும் வித்தியாசமானவை என்றும் இதன் சிறப்புகள் குறித்தும் ராமநாதபுரத்தை சேர்ந்த கடல் உயிரியலாளர் ர.செந்தில்குமார் கூறியதாவது..

""சகதி அதிகம் நிறைந்த கடற்கரைகளில் நிலப்பரப்பிலும் கடலிலும் வாழும் இந்த நடக்கும் மீனுக்கு கோபிடே என்பது விலங்கியல் பெயர். சொல்லப் போனால் நீரைவிட நிலத்தில் அதிக சுறுசுறுப்புடன் வாழக்கூடிய ஜீவன். பொதுவாக சாதாரண மீன் வகைகள் தனது துடுப்புகளை நீந்துவதற்கு மட்டும்தான் பயன்படுத்தும். ஆனால் இந்த மீன் இனமோ தனது முன் துடுப்புகளை கால்களாக உருமாற்றி நிலத்தில் நடப்பதற்கு ஏற்றவாறு அமைத்துக் கொள்வது இதன் சிறப்பு.

சில சமயங்களில் கடலுக்கு அடியில் தண்ணீருக்குள் இருக்கும் போது சந்தோஷம் வந்து விட்டால் சுமார் 2 அடி உயரத்திற்குத் தாவிக் குதிக்கும். கடலுக்கு அடியில் சகதி நிறைந்த இடங்களில் துளைகள் அமைத்து அதை வீடு போலாக்கி அவற்றுக்குள் மறைந்து வாழ்கின்றன. கடல் அலைகள் கூட இவ்வீடுகளைச் சேதப்படுத்த முடியாத வகையிலும் எதிரிகளிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவும் கடலில் ஏற்படும் வெப்பத்திலிருந்து தப்பிக்கவும் இவ்வீடுகள்தான் இவற்றிற்குப் பேருதவியாக இருக்கின்றன.

முட்டையிடும் போது இக்குழிகளுக்குள் இட்டு அவை பாதுகாப்பாக இருக்க காற்று நிரப்பிய பை போன்ற ஒன்றையும் உருவாக்கி விடுகின்றன. சுவாசிக்க தேவைப்படும் ஆக்சிஜனின் அளவு குறையும் போது தேவைப்பட்டால் இக்காற்றுப் பைகளில் உள்ள காற்றையும் இவை சுவாசித்துக் கொள்கின்றன.

மியுகஸ் படலம் சூரிய ஒளியால் இதன் தொண்டைப்பகுதி காய்ந்து விடாமல் பாதுகாக்கிறது. இம்மீன்களின் செவுள் மற்ற மீன்களைப் போல இல்லாமல் தடித்தும் பெரியதுமாக காணப்படுகின்றது. அதிலும் காற்றை நிரப்பி வைத்துக் கொண்டு நிலத்தில் நடக்கும் நேரங்களில் அதன் மூலமும் சுவாசித்துக் கொள்வது இம்மீன்களிடம் உள்ள மேலும் ஒரு சிறப்பு.

பெரியோ தாலமஸ் என்ற வகையைச் சேர்ந்த நடக்கும் மீன்களில் மட்டுமே 18 வகைகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. மேற்கு வங்காளத்தில் சுந்தர வனக்காடுகள், குஜராத்தில் கட்ச் வளைகுடா பகுதிகள் மற்றும் மாங்குரோவ் காடுகளிலும் இவை மிக அதிகமாக காணப்படுகின்றன.

இம்மீன்கள் கடற்கரைகளில் தனக்கென ஒரு குறிப்பிட்ட பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டு அந்தப் பகுதிகளில் மற்ற மீன்களை நுழையக்கூட விடுவதில்லை. கடற்கரைகளில் வாழும் புழுக்கள், பூச்சிகள், சிறு நண்டுகள் இவற்றைத் தின்று உயிர் வாழும்.

கடலுக்கடியில் சகதிக்குழிக்குள் இருக்கும் போது கண்கள் பாதிக்கப்படாதவாறு தவளையைப் போன்று உடலின் வெளிப்புறத்தில் பெரிய கண்கள் இருக்கின்றன.

மட்ஸ்கிப்பர் என்ற ஆங்கிலப் பெயருடைய இம்மீன்கள் தவளைகளைப் போலவே நீரிலும், நிலத்திலும் வாழ்வதும் தவளைகளைப் போலவே தோலினாலும் சுவாசிக்க கூடிய ஒரு அபூர்வ ஜீவன்'' என்றார்.

அருகம்புல் சாறின் மருத்துவ குணம்!!

அருகம்புல் சாறின் மருத்துவ குணம்!!

தினமும் காலையில் வெறும் வயிற்றில் அருகம்புல் சாறு குடிக்க வேண்டும். இதை கொஞ்சம் கொஞ்சமாக சுவைத்துக் குடிக்க வேண்டும். குடித்த 2 மணி நேரத்திற்குப் பிறகு மற்ற உணவு வகைகள் சாப்பிடலாம். அருகம்புல் சாறு குடிப்
பதனால் ஏற்படும் பலன்கள்

1.நாம் எப்பொழுதும் உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கலாம்.

2.இரத்த சோகை நீங்கி, இரத்தம் அதிகரிக்கும்.

3.வயிற்றுப் புண் குணமாகும்.

4.இரத்த அழுத்தம் (பீ.பி) குணமாகும்.

5.நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.

6.சளி, சைனஸ், ஆஸ்துமா போன்ற நோய்களை குணப்படுத்தும்.

7.நரம்புத் தளர்ச்சி, தோல் வியாதி ஆகியவை நீங்கும்.

8.மலச்சிக்கல் நீங்கும்.

9.புற்று நோய்க்கு நல்ல மருந்து.

10.உடல் இளைக்க உதவும்

11.இரவில் நல்ல தூக்கம் வரும்.

12.பல், ஈறு கோளாறுகள் நீங்கும்.

13.மூட்டு வலி நீங்கும்.

14.கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும்.

15.நம் உடம்பை தினமும் மசாஜ் செய்தது போலிருக்கும்.

அருகம்புல் இயற்கை நமக்களித்த மிகச்சிறந்த மருந்தாகும். இது எளிதில் அனைவருக்கும் கிடைக்கக்கூடியது. பல நோய்களை கட்டுப்படுத்தும் ஆற்றல் இதற்கு உள்ளது.
அருகம்புல் சாறு எடுத்து உட்கொண்டால் உடலில் ஏற்படும் பல வியாதிகளுக்கு விடைகொடுக்கலாம். கிராமப்புறங்களில் வயல்வெளிகளில் அருகம்புல் எளிதாகக் கிடைக்கிறது. இதைப் பறித்து தண்ணீரில் நன்கு அலசி தூய்மைப்படுத்திய பின் தண்ணீரைச் சேர்த்து நன்கு இடித்து சாறு எடுத்து அருந்தலாம். தேவைப்பட்டால், அருகம்புல்லுடன் துளசி, வில்வம் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம். மிக்ஸியைப் பயன்படுத்தியும் சாறு எடுக்கலாம்.அருகம்புல் சாற்றினை காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும். மாலை வேளைகளிலும் 200 மிலி அளவுக்கு பருகலாம்
சித்த வைத்தியத்தில் மிகவும் சிறப்பாகக் கூறப்படும் ஒரு தாவரம் அருகம்புல்லாகும்.
இதன் ஆங்கில பெயர் Cynodon doctylon ஆகும். அருகம்புல் சர்க்கரை வியாதிகாரர்களுக்கும் சிறந்த மருந்து.

உடல் வெப்பத்தை அகற்றும், சிறுநீர் பெருக்கும், குடல் புண்களை ஆற்றும், இரத்தை தூய்மையாக்கும், உடலை பலப்படுத்தும், கண் பார்வை தெளிவுபெறும். உடல் இளைக்க வேண்டுமா? அப்படியானால் தினமும் அருகம்புல் குடியுங்கள் என்கிறது இயற்கை மருத்துவம்.

சுத்தம் செய்யப்பட்ட அருகம்புல் சாறை காலை எழுந்தவுடன் குடித்து வந்தால் உடலிலுள்ள கெட்ட நீர் வெளியேறி தேவையற்ற சதைப்பகுதி குறைந்து விடுமாம். ரத்தத்தை சுத்தப்படுத்தும் சக்தியும் அருகம்புல்லுக்கு உண்டாம்.

ஞாபக சத்தியைத் தூண்ட அருகம்புல் சிறந்த மருந்தாகும். ஞாபக மறதியைப் போக்கி அன்றாட வாழ்வில் மன உளைச்சல், மன இறுக்கம் நீங்கும். அருகம்புல்லை நிழலில் உலர்த்தி பொடி செய்து தினமும் கஷாயம் செய்து குடித்து வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.

அருகம்புல்லையும் தேங்காய் எண்ணையையும் சம அளவு எடுத்துக் கொண்டு அதை உடலில் தேய்த்து அரைமணி நேரம் ஊறவிடவும். பிறகு கடலை மாவால் தேய்த்துக் குளித்தால் உடல் கண்ணாடி போல் ஜொலிக்கும்.
Photo: அருகம்புல் சாறின் மருத்துவ குணம்!!

தினமும் காலையில் வெறும் வயிற்றில் அருகம்புல் சாறு குடிக்க வேண்டும். இதை கொஞ்சம் கொஞ்சமாக சுவைத்துக் குடிக்க வேண்டும். குடித்த 2 மணி நேரத்திற்குப் பிறகு மற்ற உணவு வகைகள் சாப்பிடலாம். அருகம்புல் சாறு குடிப்பதனால் ஏற்படும் பலன்கள்

1.நாம் எப்பொழுதும் உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கலாம்.

2.இரத்த சோகை நீங்கி, இரத்தம் அதிகரிக்கும்.

3.வயிற்றுப் புண் குணமாகும்.

4.இரத்த அழுத்தம் (பீ.பி) குணமாகும்.

5.நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.

6.சளி, சைனஸ், ஆஸ்துமா போன்ற நோய்களை குணப்படுத்தும்.

7.நரம்புத் தளர்ச்சி, தோல் வியாதி ஆகியவை நீங்கும்.

8.மலச்சிக்கல் நீங்கும்.

9.புற்று நோய்க்கு நல்ல மருந்து.

10.உடல் இளைக்க உதவும்

11.இரவில் நல்ல தூக்கம் வரும்.

12.பல், ஈறு கோளாறுகள் நீங்கும்.

13.மூட்டு வலி நீங்கும்.

14.கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும்.

15.நம் உடம்பை தினமும் மசாஜ் செய்தது போலிருக்கும்.

அருகம்புல் இயற்கை நமக்களித்த மிகச்சிறந்த மருந்தாகும். இது எளிதில் அனைவருக்கும் கிடைக்கக்கூடியது. பல நோய்களை கட்டுப்படுத்தும் ஆற்றல் இதற்கு உள்ளது.
அருகம்புல் சாறு எடுத்து உட்கொண்டால் உடலில் ஏற்படும் பல வியாதிகளுக்கு விடைகொடுக்கலாம். கிராமப்புறங்களில் வயல்வெளிகளில் அருகம்புல் எளிதாகக் கிடைக்கிறது. இதைப் பறித்து தண்ணீரில் நன்கு அலசி தூய்மைப்படுத்திய பின் தண்ணீரைச் சேர்த்து நன்கு இடித்து சாறு எடுத்து அருந்தலாம். தேவைப்பட்டால், அருகம்புல்லுடன் துளசி, வில்வம் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம். மிக்ஸியைப் பயன்படுத்தியும் சாறு எடுக்கலாம்.அருகம்புல் சாற்றினை காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும். மாலை வேளைகளிலும் 200 மிலி அளவுக்கு பருகலாம்
சித்த வைத்தியத்தில் மிகவும் சிறப்பாகக் கூறப்படும் ஒரு தாவரம் அருகம்புல்லாகும்.
இதன் ஆங்கில பெயர் Cynodon doctylon ஆகும். அருகம்புல் சர்க்கரை வியாதிகாரர்களுக்கும் சிறந்த மருந்து.

உடல் வெப்பத்தை அகற்றும், சிறுநீர் பெருக்கும், குடல் புண்களை ஆற்றும், இரத்தை தூய்மையாக்கும், உடலை பலப்படுத்தும், கண் பார்வை தெளிவுபெறும். உடல் இளைக்க வேண்டுமா? அப்படியானால் தினமும் அருகம்புல் குடியுங்கள் என்கிறது இயற்கை மருத்துவம்.

சுத்தம் செய்யப்பட்ட அருகம்புல் சாறை காலை எழுந்தவுடன் குடித்து வந்தால் உடலிலுள்ள கெட்ட நீர் வெளியேறி தேவையற்ற சதைப்பகுதி குறைந்து விடுமாம். ரத்தத்தை சுத்தப்படுத்தும் சக்தியும் அருகம்புல்லுக்கு உண்டாம்.

ஞாபக சத்தியைத் தூண்ட அருகம்புல் சிறந்த மருந்தாகும். ஞாபக மறதியைப் போக்கி அன்றாட வாழ்வில் மன உளைச்சல், மன இறுக்கம் நீங்கும். அருகம்புல்லை நிழலில் உலர்த்தி பொடி செய்து தினமும் கஷாயம் செய்து குடித்து வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.

அருகம்புல்லையும் தேங்காய் எண்ணையையும் சம அளவு எடுத்துக் கொண்டு அதை உடலில் தேய்த்து அரைமணி நேரம் ஊறவிடவும். பிறகு கடலை மாவால் தேய்த்துக் குளித்தால் உடல் கண்ணாடி போல் ஜொலிக்கும்.

நம்ம குடும்பம் எப்படி இருக்க வேண்டும்

நம்ம குடும்பம் எப்படி இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறிர்கள் ? கொஞ்சம் பொறுமையா இதை படிங்க !!!!!!

இன்றைய அவசர உலகின் சூழ்நிலைக்கேற்றவாறு குடும்பங்களின் வாழ்க்கை முறைகளும் நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருக்கின்றது என்பது உண்மை தான்.என்
றாலும் ஒரு சில குடும்பங்கள் இதுப் போன்ற எந்த சூழ்நிலையிலும் சிக்காமல் தனித்துவமாக வாழ்ந்து வருகின்றார்கள் என்பதும் ஆச்சரியம் தான்! அவ்வாறு அவர்களால் மட்டும் எப்படி முடிகின்றது என்று பார்த்தால் அவர்கள் தங்கள் குடும்பங்களில் எத்தனைப் பிரச்சனைகள் வந்தாலும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் எந்த சூழ்நிலையிலும் அனைவரையும் மதித்து யாரையும் மாற்ற நினைக்காமல் அப்படியே ஏற்றுகே கொண்டு வாழ்கின்றார்கள் என்று கூறுவது தான் பொருத்தமாக இருக்கும்.

நமது சொந்த உடலுறுப்புகளே ஒன்ருக்கொன்று வேறு படுகின்ற பொது, குடும்ப உறவுகள் அனைத்தும் ஒரே மாதிரியான மனநிலையில் இருந்தால் தான் அங்கு அக்குடும்பத்தில் அமைதி நிலவும் என்று நினைப்பது சரியாய் இருக்காது, உறவுகளை மதிக்க தெரிந்தாலே அக்குடும்பத்து உறவுகளில் பிணக்கம் ஏற்படவே வாய்பிருக்காது.

சின்னச் சின்ன விசயங்களுக்கெல்லாம் சண்டைப் போட்டுக் கொண்டிருப்பது உறவுகளுக்குள் இருக்கும் பந்த பாசத்தை வேறோடு அறுத்துவிடும், குடும்பத்தில் பெரியவர்கள் தவறு செய்தால் அவர்களை திருத்த முடியாது அது நமது வேலையும் அல்ல, அதைப் பற்றி மீண்டும் மீண்டும் பேசி பெரிதுபடுத்துவதால் எந்த பிரயோசனமும் இல்லை மாறாக அவர்களை மன்னித்து விடுவதுத் தான் சாலச் சிறந்தது. ஆனால் குடும்பங்களில் இருக்கும் குழந்தைகள் தவறு செய்தால் அந்தந்த பெற்றோர்கள் அதை உடனுக்குடன் கண்டித்து சரி செய்ய வேணும், இதனால் பிள்ளைகள் தங்கள் தவற்றை உணர்ந்து ஒருவரை ஒருவர் சரிசமமாகக் கருதி வளருவார்கள்.

குடும்பம் என்றாலே சிறிதேனும் சண்டைச் சச்சரவுகளும் மசக்கசப்புகளும் இருக்கத்தான் செய்யும் அவ்வாறு குடும்பத்தில் ஏற்படும் மனக்கசப்புகளுக்கு அதிக இடம் தராமல் சமாதானமாகப் போவது தான் விட்டுக் கொடுப்பதிலேயே தலையாயதாய் இருக்கும்.அவ்வாறு விட்டுக் கொடுத்து விரோதம் பார்க்காமல் வாழ்வதும் ஒரு கலை தான் என்று தோன்றுகின்றது அதிலிருந்து இதோ ஒரு சில யுத்திகள்:

1. குடும்ப உறவுகள் எப்போதும் ஏதாவது விசேஷங்களில் மட்டும் கூடுவதற்கு பதிலாக எந்த காரண காரியமும் இல்லாமல் அடிக்கடி குடும்பத்தாரரை பாசத்தோடு வீட்டிற்கு அழைப்பதும் அதேப் போல் அவர்களையும் தரிசிக்க செல்வதும் குடும்ப உறவுகளை மேலும் வலுவடைச் செய்யும் இதனால் பகைமையும் ஒழியும்.

2. அடிக்கடி குடும்ப உறவுகளோடு ஒன்றாகக் கூடி சுற்றுலா பயணம் மேற்கொள்வது குடும்பங்களுக்குள் மகிழ்ச்சியைக் கூட்டும் மனக்கசப்புகளையும் மறக்கடிக்கச் செய்யும்.அதைபோல் குடும்ப உறவுகள் அடிக்கடி உணவகங்களில்கூட விருந்துகள் ஏற்பாடுச் செய்து குடும்பமாக சென்று உண்டு மகிழலாம் இதுவும் குடும்பங்களை மீண்டும் மீண்டும் சந்திக்கும் ஆவலைத் தூண்டும்.

3. அதைப்போல் ஏதாவது புதிதாய் குடும்பப்படம் வெளிவரும் போது தங்கள் பெற்றோர்கள் அல்லது உறவினர்களை அவர்கள் எதிர்ப்பாராத வகையில் அவர்களுக்கு அழைப்பு விடுத்து ஒன்றாகச் சென்று கண்டு களிப்பது குடும்பங்களுக்குள் இருக்கும் வேற்றுமைகளும் கோபமும் கூட மறையச் செய்து விடும்.

4. மேலும் குடும்பத்தில் எதிர்பாராமல் துன்பம் வந்தால் முதலில் உறவுகளைத்தான் தேடி ஓட வேண்டும் மற்றவரெல்லாம் அதன் பிறகு தான். ஆனால் சிலர் அதை தவிர்த்து நண்பர்களையும் இன்னும் தெரிந்தவர்களையும் தான் உதவிக்கு நாடுவார்கள். இது முற்றிலும் தவறானது, நண்பர்கள் வருவார்கள் போவார்கள் ஆனால் வாழ நாள் முழுவதும் கஊடவே வருவது குடும்ப உறவுகளே, ஆகவே எப்போதும் முதலிடம் அவர்களுக்குத் தான் என்று கருத வேண்டும்.

5. சில சமயத்தில் குடும்பங்கள் கூடி மகிழ்கின்ற தருணங்களிலும் பிரச்சனைகள் எழலாம், இதை முன்க்கூட்டியே எதிர்பார்த்து அவ்வாறான சூழ்நிலைகளை சந்திக்கும் மனப்போக்கையும் வளர்த்து வருவது மிகவும் நல்லது. இதனால் யார் என்ன பேசினாலும் கேலி செய்தாலும் அவை நமது மனதை அதிகம் பாதிக்காது.

6. மேற்கூறிய விசயங்கள் அனைத்தும் உள்ளூரிலேயே வாழும் உறவுகளுக்குத் தான் பொருந்தும் என்பதில்லை வெளிநாடுகளில் சொர்ப்ப உறவினர்கள் அல்லது உறவுகளே இல்லாமல் தனித்து வாழும் குடும்பங்கள் கூட இவ்வாறான வழிகளைப் பின்பற்றி நட்புறவுகளைக்கூட மேன் மேலும் வளர்த்துக் கொள்ளலாம் இதனால் தனித்து வாழ்கிறோம் என்ற மனக்குறையும் அகலும்.

7. இவ்வாறு குடும்ப உறவுகளின் மகத்துவம் அறிந்து அவற்றை புதுபித்துக் கொண்டே வருவோமானால் உறவினர்களுக்குள் அவ்வபோது உண்டாகும் மனக்கசப்புகள் நிச்சயம் மறையும் ஏன் அவை தோன்றவே தோன்றாது என்றும் கூறலாம், மேலும் இவ்வாறான வாழ்க்கை முறையில் வாழ்ந்துக்காட்டி, வருங்காலத்து வாரிசுகளை ஒரு வலுவான குடும்பச் சூழ்நிலையில் தான் வளர்த்தோம் என்ற ஆத்ம திருப்தியோடு அவர்களுக்கு நல்லதொரு எடுத்துக்காட்டாயும் இருப்போம். இதை வாசிக்கும் அன்பு சகோதர சகோதரிகள் இத்தலைப்பைப் பற்றிய, மேலும் தங்களின் பொன்னாகக் கருத்துக்களையும் பதிக்கலாம் நன்
Photo: நம்ம குடும்பம் எப்படி இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறிர்கள் ? கொஞ்சம் பொறுமையா இதை படிங்க !!!!!!

இன்றைய அவசர உலகின் சூழ்நிலைக்கேற்றவாறு குடும்பங்களின் வாழ்க்கை முறைகளும் நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருக்கின்றது என்பது உண்மை தான்.என்றாலும் ஒரு சில குடும்பங்கள் இதுப் போன்ற எந்த சூழ்நிலையிலும் சிக்காமல் தனித்துவமாக வாழ்ந்து வருகின்றார்கள் என்பதும் ஆச்சரியம் தான்! அவ்வாறு அவர்களால் மட்டும் எப்படி முடிகின்றது என்று பார்த்தால் அவர்கள் தங்கள் குடும்பங்களில் எத்தனைப் பிரச்சனைகள் வந்தாலும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் எந்த சூழ்நிலையிலும் அனைவரையும் மதித்து யாரையும் மாற்ற நினைக்காமல் அப்படியே ஏற்றுகே கொண்டு வாழ்கின்றார்கள் என்று கூறுவது தான் பொருத்தமாக இருக்கும்.

நமது சொந்த உடலுறுப்புகளே ஒன்ருக்கொன்று வேறு படுகின்ற பொது, குடும்ப உறவுகள் அனைத்தும் ஒரே மாதிரியான மனநிலையில் இருந்தால் தான் அங்கு அக்குடும்பத்தில் அமைதி நிலவும் என்று நினைப்பது சரியாய் இருக்காது, உறவுகளை மதிக்க தெரிந்தாலே அக்குடும்பத்து உறவுகளில் பிணக்கம் ஏற்படவே வாய்பிருக்காது.

சின்னச் சின்ன விசயங்களுக்கெல்லாம் சண்டைப் போட்டுக் கொண்டிருப்பது உறவுகளுக்குள் இருக்கும் பந்த பாசத்தை வேறோடு அறுத்துவிடும், குடும்பத்தில் பெரியவர்கள் தவறு செய்தால் அவர்களை திருத்த முடியாது அது நமது வேலையும் அல்ல, அதைப் பற்றி மீண்டும் மீண்டும் பேசி பெரிதுபடுத்துவதால் எந்த பிரயோசனமும் இல்லை மாறாக அவர்களை மன்னித்து விடுவதுத் தான் சாலச் சிறந்தது. ஆனால் குடும்பங்களில் இருக்கும் குழந்தைகள் தவறு செய்தால் அந்தந்த பெற்றோர்கள் அதை உடனுக்குடன் கண்டித்து சரி செய்ய வேணும், இதனால் பிள்ளைகள் தங்கள் தவற்றை உணர்ந்து ஒருவரை ஒருவர் சரிசமமாகக் கருதி வளருவார்கள்.

குடும்பம் என்றாலே சிறிதேனும் சண்டைச் சச்சரவுகளும் மசக்கசப்புகளும் இருக்கத்தான் செய்யும் அவ்வாறு குடும்பத்தில் ஏற்படும் மனக்கசப்புகளுக்கு அதிக இடம் தராமல் சமாதானமாகப் போவது தான் விட்டுக் கொடுப்பதிலேயே தலையாயதாய் இருக்கும்.அவ்வாறு விட்டுக் கொடுத்து விரோதம் பார்க்காமல் வாழ்வதும் ஒரு கலை தான் என்று தோன்றுகின்றது அதிலிருந்து இதோ ஒரு சில யுத்திகள்:

1. குடும்ப உறவுகள் எப்போதும் ஏதாவது விசேஷங்களில் மட்டும் கூடுவதற்கு பதிலாக எந்த காரண காரியமும் இல்லாமல் அடிக்கடி குடும்பத்தாரரை பாசத்தோடு வீட்டிற்கு அழைப்பதும் அதேப் போல் அவர்களையும் தரிசிக்க செல்வதும் குடும்ப உறவுகளை மேலும் வலுவடைச் செய்யும் இதனால் பகைமையும் ஒழியும்.

2. அடிக்கடி குடும்ப உறவுகளோடு ஒன்றாகக் கூடி சுற்றுலா பயணம் மேற்கொள்வது குடும்பங்களுக்குள் மகிழ்ச்சியைக் கூட்டும் மனக்கசப்புகளையும் மறக்கடிக்கச் செய்யும்.அதைபோல் குடும்ப உறவுகள் அடிக்கடி உணவகங்களில்கூட விருந்துகள் ஏற்பாடுச் செய்து குடும்பமாக சென்று உண்டு மகிழலாம் இதுவும் குடும்பங்களை மீண்டும் மீண்டும் சந்திக்கும் ஆவலைத் தூண்டும்.

3. அதைப்போல் ஏதாவது புதிதாய் குடும்பப்படம் வெளிவரும் போது தங்கள் பெற்றோர்கள் அல்லது உறவினர்களை அவர்கள் எதிர்ப்பாராத வகையில் அவர்களுக்கு அழைப்பு விடுத்து ஒன்றாகச் சென்று கண்டு களிப்பது குடும்பங்களுக்குள் இருக்கும் வேற்றுமைகளும் கோபமும் கூட மறையச் செய்து விடும்.

4. மேலும் குடும்பத்தில் எதிர்பாராமல் துன்பம் வந்தால் முதலில் உறவுகளைத்தான் தேடி ஓட வேண்டும் மற்றவரெல்லாம் அதன் பிறகு தான். ஆனால் சிலர் அதை தவிர்த்து நண்பர்களையும் இன்னும் தெரிந்தவர்களையும் தான் உதவிக்கு நாடுவார்கள். இது முற்றிலும் தவறானது, நண்பர்கள் வருவார்கள் போவார்கள் ஆனால் வாழ நாள் முழுவதும் கஊடவே வருவது குடும்ப உறவுகளே, ஆகவே எப்போதும் முதலிடம் அவர்களுக்குத் தான் என்று கருத வேண்டும்.

5. சில சமயத்தில் குடும்பங்கள் கூடி மகிழ்கின்ற தருணங்களிலும் பிரச்சனைகள் எழலாம், இதை முன்க்கூட்டியே எதிர்பார்த்து அவ்வாறான சூழ்நிலைகளை சந்திக்கும் மனப்போக்கையும் வளர்த்து வருவது மிகவும் நல்லது. இதனால் யார் என்ன பேசினாலும் கேலி செய்தாலும் அவை நமது மனதை அதிகம் பாதிக்காது.

6. மேற்கூறிய விசயங்கள் அனைத்தும் உள்ளூரிலேயே வாழும் உறவுகளுக்குத் தான் பொருந்தும் என்பதில்லை வெளிநாடுகளில் சொர்ப்ப உறவினர்கள் அல்லது உறவுகளே இல்லாமல் தனித்து வாழும் குடும்பங்கள் கூட இவ்வாறான வழிகளைப் பின்பற்றி நட்புறவுகளைக்கூட மேன் மேலும் வளர்த்துக் கொள்ளலாம் இதனால் தனித்து வாழ்கிறோம் என்ற மனக்குறையும் அகலும்.

7. இவ்வாறு குடும்ப உறவுகளின் மகத்துவம் அறிந்து அவற்றை புதுபித்துக் கொண்டே வருவோமானால் உறவினர்களுக்குள் அவ்வபோது உண்டாகும் மனக்கசப்புகள் நிச்சயம் மறையும் ஏன் அவை தோன்றவே தோன்றாது என்றும் கூறலாம், மேலும் இவ்வாறான வாழ்க்கை முறையில் வாழ்ந்துக்காட்டி, வருங்காலத்து வாரிசுகளை ஒரு வலுவான குடும்பச் சூழ்நிலையில் தான் வளர்த்தோம் என்ற ஆத்ம திருப்தியோடு அவர்களுக்கு நல்லதொரு எடுத்துக்காட்டாயும் இருப்போம். இதை வாசிக்கும் அன்பு சகோதர சகோதரிகள் இத்தலைப்பைப் பற்றிய, மேலும் தங்களின் பொன்னாகக் கருத்துக்களையும் பதிக்கலாம் நன்

Thursday, September 20, 2012

நடைப் பயிற்சி பற்றிச் சில முக்கிய விபரங்களை

நடைப் பயிற்சி பற்றிச் சில முக்கிய விபரங்களைக் கேள்வி பதிலாகத் தொகுத்துள்ளேன். பத்து கேள்விகளாகத் தெரிந்தாலும் தகவல்கள் இக்கட்டுரையில் அதைவிட அதிகமாகவே உள்ளன.

1.நடப்பதற்கு முன் ஏதாவது சாப்பிடலாமா?
நிச்சயம் சாப்பிடலாம்! கீழே கொடுத்துள்ளபடி ம
ுறையாகச் சாப்பிட்டு விட்டு நடக்கலாம் :
* முழுதானிய ( ஓட்ஸ், அவல்,) சிற்றுண்டி
* முழு கோதுமை பிரட்
* வாழைப்பழம
* சாப்பிடுவது வயிற்றை நிரப்புவதாக இல்லாமல் குறைந்த அளவாக இருக்க வேண்டும்.
* கொழுப்பு நிறைந்ததாக இருக்கக் கூடாது.
* நடப்பதற்கு 1 மணிநேரம் முன்னதாக சாப்பிட வேண்டும்.
* சாப்பிட்டால் நீரும் அருந்த வேண்டும்.

2.ஒரு மணிநேரம் நடந்தால் எவ்வளவு கலோரிகள் செலவாகும்?
இது நாம் நடக்கும் வேகம், தூரம், நடப்பவரின் உடல் வலு ஆகியவற்றைப் பொருத்து மாறு படும். பொதுவாக 300 கலோரிகள் செலவிடப்படும்.

3.நடையில் வேகம் எப்படி இருக்க வேண்டும்?
நடையை மெதுவாக ஆரம்பிக்க வேண்டும். இதனால் நமது தசையும், மூட்டுக்களும் நடைக்குத் தயாராகும். அதே போல் நமது இதயத்தின் செயல்பாடும், இரத்த ஓட்டமும் மெதுவாக, சீராக அதிகரிக்கும். இதுவே உடலுக்கு நல்லது. நடையின் முடிவில் 10 நிமிடம் வேகத்தை சீராகக் குறைத்து வந்து மெதுவாக அமர்ந்து இருந்தால் இதயமும் , இரத்த ஓட்டமும் சீராகக் குறைந்து பழைய நிலைக்கு வரும். இதனால், அதிக களைப்பு, மயக்கம் ஆகியவற்றைத் தவிர்க்கலாம்.

4.நல்ல நடைப்பயிற்சி தூரம் எவ்வளவு?
பொதுவாக நல்ல உடல்நிலையிலுள்ளோர் 10 நிமிட நடையில் 1 கிலோமீட்டர் தூரம் நடக்கலாம். ஆனால் இது ஒவ்வொருவரின் உடல் நலம், நடக்கும் விதம், நடக்கும் நில அமைப்பு ஆகியவற்றினால் மாறும்.

5.நடக்கும் போது கைகளில் எடை வைத்துக் கொள்ளலாமா?
* பளு இல்லா நடையே சிறந்தது.
* கைகளில் எடையுடன் நடந்தால் நடப்பதில் சிரமம் ஏற்படும்.
* இரத்த அழுத்தம் கூடும்.
* மூட்டுகளில் உள்ள ஜவ்வுகள் சேதமாகலாம்.
* தனியாக எடை தூக்கும் பயிற்சி வைத்துக் கொள்வதே சிறந்தது.

6.நடக்கும் ஷூ எப்படி இருக்க வேண்டும்?
* குதிகால் உயரம் கூடாது.
* சரியாகப் பொருந்த வேண்டும்.
* ஷூவின் அடிப்பாகம் வளையும் தன்மையுடன் இருக்க வேண்டும்.
* ஷூ எடை குறைவாகவும், காற்றோட்டத் தன்மையுடனும் இருக்க வேண்டும்.

7.ஷூவை எவ்வளவு நாட்களுக்கொருமுறை மாற்ற வேண்டும்?

6-12 மாதத்துக்கொருமுறை மாற்றுதல் நலம். அதிகம் நடப்போர் இதற்க்கிடையில் மாற்றலாம். கால் வியர்வையால் ஷூ பாதிக்கப்படும். ஆகையால் 2 ஷூ வைத்துக் கொண்டு ஒரு நாள் ஒரு ஷூவும், அடுத்த நாள் மறு ஷூவும் என உபயோகித்தால் ஷூவில் உள்ள ஈரம் காய்ந்து விடும்.

8.நடைபயிற்சியால் ஓட்டப் பயிற்சியில் கிடைக்கும் அளவு உடலுக்கு நலன் கிடைக்குமா?
கிடைக்கும். வேகமாக நடத்தலில் ஓட்டத்தில் கிடைக்கும் பலன்கள் கிடைக்கின்றன.

9.நாம் நடக்கும் வேகத்தை எப்படிக் கணக்கிடுவது?

* இதனைக் கருவிகளின் உதவி இல்லாமலேயே கணக்கிடலாம்.
* ஒரு நிமிடத்துக்கு நீங்கள் நடைப்பயிற்சியின் போது எத்தனை அடிகள் எடுத்து வைக்கிறீர்கள் என்று எண்ணிக் கொள்ளவும். அதனை 30 ஆல் வகுக்க வேண்டும்
* உதாரணத்துக்கு ஒரு நிமிடத்துக்கு 60 அடிகள் எடுத்து வைத்தால்,
* 60/30= 2 , அதாவது உங்கள் நடைவேகம் ஒரு மணிநேரத்துக்கு 2 மைல்.
* எல்லோராலும் அதிக வேகமாக நடக்க முடியாது. குறைந்த வேகத்தில் நடப்பதும் நடைப் பயிற்சியில் கிடைக்கும் முழுப் பலனையும் தரும்.
* மேலும் சாதாரணமாக 2 மைல் வேகத்தில் நடப்பது, மூட்டுக்களின் மேல் குறைந்த பாதிப்பையே ஏற்படுத்துகிறது.
* ஆகையினால் வயதானவர்கள், கால் வலியுள்ளவர்கள் மெதுவாக நடப்பதே போதும்.
10.நடைப் பயிற்சியின்போது கால் அரிப்பு ஏற்படுகிறதே, ஏன்?
குறைந்த இரத்த ஓட்டத்தினால் காலில் அரிப்பு ஏற்படலாம். அது நடக்க நடக்க இரத்த ஓட்டம் அதிகரித்து சரியாகிவிடும்.
பொதுவாக வியர்வையால் அரிப்பு அதிகரிக்கும். இப்படி இருந்தால் உங்கள் கால் தோல் வறட்சியாலும் இருக்கலாம். இதற்கு வாசலின் போன்ற தோலை உலர விடாமல் தடுக்கும் களிம்பு, எண்ணைகள் தடவலாம்
Photo: நடைப் பயிற்சி பற்றிச் சில முக்கிய விபரங்களைக் கேள்வி பதிலாகத் தொகுத்துள்ளேன். பத்து கேள்விகளாகத் தெரிந்தாலும் தகவல்கள் இக்கட்டுரையில் அதைவிட அதிகமாகவே உள்ளன.

1.நடப்பதற்கு முன் ஏதாவது சாப்பிடலாமா?
நிச்சயம் சாப்பிடலாம்! கீழே கொடுத்துள்ளபடி முறையாகச் சாப்பிட்டு விட்டு நடக்கலாம் :

தீ விபத்து ஏற்படுகையில் நாம் அவசியம் அறிய வேண்டிய முதலுதவி முறைகள் !!!!

பல வகையில் பயன்படும் நெருப்பு ஆடையில் பற்றிக் கொண்டால் ஆபத்துதான். தீ விபத்துகளால் ஏற்படும் சேதங்கள் இன்னும் ஏராளம். இந்த ஆபத்துகளில் இருந்து உங்கள் உடமை, உயிர்
உறவி
னர்கள் யாவரையும் காப்பாற்ற அவசியம் அறிய வேண்டிய முதலுதவி முறைகள்

* நீங்கள் அறிந்து எங்காவது தீப்பற்றிக் கொண்டால்
உடனே தீயணைப்புத் துறைக்கு (போன் எண் 101) தகவல் தெரிவியுங்கள்.
* எண்ணை மற்றும் அமிலத்தால் ஏற்பட்ட தீ விபத்துகளுக்கு மணலை உபயோகித்து நெருப்பை அணைக்க முயலுங்கள். மற்ற தீவிபத்துகளை நீரூற்றி அணைக்க முயற்சி செய்யுங்கள்.
* விபத்தின்போது தீப்பிடித்து எரியும் நபரின் அருகில் நீங்கள் இருந்தால் உடனே அவரை கீழே தள்ளி கம்பளம் – போர்வை, கோணி இதில் ஏதாவது ஒன்றினால் அவரை இறுகச் சுற்றினால் தீ பரவாமல் அணைந்து விடும்.
* ஆடையில் தீப்பற்றி விட்டால் பயந்து ஓடக்கூடாது. ஓடினால் காற்றின் வேகத்தில் தீ மேலும் வேகமாக பற்றி எரியும். அதனால் தீப்பற்றியவர் கீழே படுத்துக் கொள்ள வேண்டும்.
* சூடான பாத்திரங்களை தொடுவதனாலோ, கொதிக்கும் சூடான எண்ணெய் தெறித்து விழுவதினாலோ, சூடான பொருள் உடலின் மீது விழுவதனாலோ ஏற்படும் சிறு புண்கள், கொப்புளங்களை கையினால் தேய்ப்பதோ, நகத்தால் கிள்ளுவதோ கூடாது. அப்படி செய்தால் விஷக் கிருமிகள் உள்ளே சென்றுவிட வாய்ப்புகள் அதிகம். அந்தக் கொப்புளங்களின் மீது `ஆன்டிசெப்டிக்’ மருந்துகளை வைத்து லேசாக கட்டுப்போட வேண்டும்.
* தீக்காயங்களுக்கு தேன் மிகவும் பயன்தரும். தேனை காயத்தின் மீது தடவலாம். முட்டையின் வெள்ளைக் கருவை புண்ணின் மீது தடவினால் எரிச்சல் குறையும்.
* கடுமையான தீக்காயங்களுக்கு அதன் மீது காற்றுப்படாமல் மூட வேண்டும். இது வலியை குறைக்கும்.
* தீ விபத்தில் உடலின் மீது துணி ஒட்டிக் கொண்டிருந்தால் அவசரப்பட்டு அந்தத் துணியை அகற்றக் கூடாது.
* இரண்டு கரண்டி சமையல் சோடாவை நீரில் கொதிக்க வைத்து வெதுவெதுப்பானதும் சுத்தமான துணியை அந்த நீரில் நனைத்து தீப்புண்ணை மூடலாம். துணி காய்ந்துபோனால் மீண்டும் அந்த நீரை சொட்டு சொட்டாக விட்டு நனைக்கலாம்.
* தீக்காயம் பட்டவருக்கு அடிக்கடி உப்பு கலந்த நீர், எலுமிச்சை சாறு கலந்த நீர், வெந்நீர் இவற்றைக் கொடுக்கலாம்.
* தீக்காயங்கள் அதிகம் ஏற்பட்டிருந்தால் பாதிக்கப்பட்டவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.
Photo: தீ விபத்து ஏற்படுகையில்  நாம் அவசியம் அறிய வேண்டிய முதலுதவி முறைகள் !!!!

பல வகையில் பயன்படும் நெருப்பு ஆடையில் பற்றிக் கொண்டால் ஆபத்துதான். தீ விபத்துகளால் ஏற்படும் சேதங்கள் இன்னும் ஏராளம். இந்த ஆபத்துகளில் இருந்து உங்கள் உடமை, உயிர் 
உறவினர்கள் யாவரையும் காப்பாற்ற அவசியம் அறிய வேண்டிய முதலுதவி முறைகள்

* நீங்கள் அறிந்து எங்காவது தீப்பற்றிக் கொண்டால் 
உடனே தீயணைப்புத் துறைக்கு (போன் எண் 101) தகவல் தெரிவியுங்கள்.
* எண்ணை மற்றும் அமிலத்தால் ஏற்பட்ட தீ விபத்துகளுக்கு மணலை உபயோகித்து நெருப்பை அணைக்க முயலுங்கள். மற்ற தீவிபத்துகளை நீரூற்றி அணைக்க முயற்சி செய்யுங்கள்.
* விபத்தின்போது தீப்பிடித்து எரியும் நபரின் அருகில் நீங்கள் இருந்தால் உடனே அவரை கீழே தள்ளி கம்பளம் – போர்வை, கோணி இதில் ஏதாவது ஒன்றினால் அவரை இறுகச் சுற்றினால் தீ பரவாமல் அணைந்து விடும்.
* ஆடையில் தீப்பற்றி விட்டால் பயந்து ஓடக்கூடாது. ஓடினால் காற்றின் வேகத்தில் தீ மேலும் வேகமாக பற்றி எரியும். அதனால் தீப்பற்றியவர் கீழே படுத்துக் கொள்ள வேண்டும்.
* சூடான பாத்திரங்களை தொடுவதனாலோ, கொதிக்கும் சூடான எண்ணெய் தெறித்து விழுவதினாலோ, சூடான பொருள் உடலின் மீது விழுவதனாலோ ஏற்படும் சிறு புண்கள், கொப்புளங்களை கையினால் தேய்ப்பதோ, நகத்தால் கிள்ளுவதோ கூடாது. அப்படி செய்தால் விஷக் கிருமிகள் உள்ளே சென்றுவிட வாய்ப்புகள் அதிகம். அந்தக் கொப்புளங்களின் மீது `ஆன்டிசெப்டிக்’ மருந்துகளை வைத்து லேசாக கட்டுப்போட வேண்டும்.
* தீக்காயங்களுக்கு தேன் மிகவும் பயன்தரும். தேனை காயத்தின் மீது தடவலாம். முட்டையின் வெள்ளைக் கருவை புண்ணின் மீது தடவினால் எரிச்சல் குறையும்.
* கடுமையான தீக்காயங்களுக்கு அதன் மீது காற்றுப்படாமல் மூட வேண்டும். இது வலியை குறைக்கும்.
* தீ விபத்தில் உடலின் மீது துணி ஒட்டிக் கொண்டிருந்தால் அவசரப்பட்டு அந்தத் துணியை அகற்றக் கூடாது.
* இரண்டு கரண்டி சமையல் சோடாவை நீரில் கொதிக்க வைத்து வெதுவெதுப்பானதும் சுத்தமான துணியை அந்த நீரில் நனைத்து தீப்புண்ணை மூடலாம். துணி காய்ந்துபோனால் மீண்டும் அந்த நீரை சொட்டு சொட்டாக விட்டு நனைக்கலாம்.
* தீக்காயம் பட்டவருக்கு அடிக்கடி உப்பு கலந்த நீர், எலுமிச்சை சாறு கலந்த நீர், வெந்நீர் இவற்றைக் கொடுக்கலாம்.
* தீக்காயங்கள் அதிகம் ஏற்பட்டிருந்தால் பாதிக்கப்பட்டவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.

இலங்கையில் வெள்ளையர்களை எதிர்த்து வீரப் போர் புரிந்து உயிர்த் தியாகம் செய்தவன் பண்டாரவவவுனியன் !!

இலங்கையில் வெள்ளையர்களை எதிர்த்து வீரப் போர் புரிந்து உயிர்த் தியாகம் செய்தவன்,பண்டாரவவவுனியன்வவுனியன்" .தமிழ்நாட்டில், வெள்ளையர்களை எதிர்த்த
ு இறுதிமூச்சு உள்ளவரை போராடியவன் வீரபாண்டியகட்டபொம்மன். அவனைப்போல, இலங்கையில் வெள்ளையரை எதிர்த்தவன் 'பாயும் புலி' பண்டாரவவவுனியன்வவுனியன்.முழுப்பெயர் குலசேகர வைரமுத்து பண்டாரகவன்னியன்.

தமிழர் ஆட்சி

யாழ்ப்பாணத்தை ஒட்டிய வன்னிப்பிரதேசத்தை பண்டாரவவவுனியன்வவுனியன் ஆண்டு வந்தான்.
வடக்கே யாழ்ப்பாணம் பரவைக்கடலையும், தெற்கே அருவிஆற்றையும், மேற்கே மன்னார் மாவட்டத்தையும்,கிழக்கே திரிகோணமலையையும் எல்லையாகக் கொண்டது வன்னி ராஜ்ஜியம். வன்னி மண் இன்று வடபுலத்தேஆனையிறவையும் தென்புலத்தே அனுராதபுரத்தையும் கிழக்கு மேற்குத் திசைகளில் இந்து சமுத்திரத்தையும்எல்லைகளாகக் கொண்ட நிலப் பரப்பாகச் (வவுனியா, மன்னார் , முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்கள்) சுருங்கிவிட்ட போதிலும், முன்பொரு காலத்தில் யாழ்ப்பாணத்திற்கும் கண்டிக்கும் இடையே உள்ள நாடு வன்னி வள நாடுஎன வழங்கப்பட்டது. கிழக்கே திருகோணமலை, மட்டக்களப்பு, கொட்டியாரம், யால பாலுகமும் மேற்கேயுள்ளபுத்தளம் முதலியனவும் முற்காலத்தில் வன்னி நாட்டைச் சேர்ந்திருந்தன. பின்னர் டச்சுக்காரர் காலத்தில்வன்னியின் தெற்கு எல்லையாக அரிப்பு ஆறும், காலு ஆறும் இருந்தன. இப்படியாக, வளம் கொழித்து விளங்கியவன்னி நாடு இன்று தன் பெரும் பகுதியை காடுகளுக்குள் தொலைத்து விட்டு, சோகங்களையே சொந்தமாக்கிக்கொண்டுள்ளது.

பண்டாரகவன்னியனும், கண்டி தமிழ் மன்னன் விக்கிரம ராசசிங்கனும் நெருங்கிய நண்பர்கள்.

டச்சுக்காரர்களை விரட்டிவிட்டு, இலங்கையில் பல இடங்களை கைப்பற்றிக்கொண்ட வெள்ளையர்கள்,பண்டாரகவன்னியனிடம் கப்பம் (வரிப்பணம்) கேட்டனர்.

தமிழ்நாட்டில், வெள்ளையருக்கு வரி கொடுக்க வீரபாண்டிய கட்டபொம்மன் மறுத்தது போல், பண்டாரவவவுனியன்வவுனியன கப்பம் கட்ட மறுத்தான். கப்பம் கேட்டு வந்த வெள்ளையனை விரட்டி அடித்தான்.

வெள்ளையர்கள் விடவில்லை. 1797 -ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி எல்லிஸ் டொய்லி என்ற தளபதியைபண்டாரகவன்னியரிடம் அனுப்பி, கிஸ்தியை வசூலித்து வருமாறு கூறினார்கள்.

வெட்டி வீழ்த்தினான்

வெள்ளையர்கள் மீண்டும் மீண்டும் ஆட்களை அனுப்பி கப்பம் கேட்டதால், பண்டாரகவன்னியன் வெகுண்டான்.எல்லிஸ் டொய்லி என்ற அந்த வெள்ளைக்கார தளபதியை வாளால் வெட்டி வீழ்த்தினான்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும், வெள்ளையர்கள் கடும் கோபம் கொண்டனர். படைகளை திரட்டிக் கொண்டு,பண்டாரகவன்னியன் மீது போர் தொடுத்தனர்.

கற்பூரப்புல் என்ற இடத்தில் இருதரப்பு படைகளும் மோதின. பண்டாரகவன்னியன் ஆவேசத்துடன் வீரப்போர் புரிந்து,பல வெள்ளைக்கார வீரர்களை வீழ்த்தினான்.

தமிழ் படைகளின் தாக்குதலை சமாளிக்க முடியாமல், வெள்ளையர் படை புறமுதுகிட்டு ஓடியது.

மீண்டும் போர்

ஆங்கிலேயர்கள், எப்படியாவது பண்டாரகவன்னியனை தோற்கடித்து விடவேண்டும் என்று பெரும் படை திரட்டினர்.இதைத் தெரிந்து கொண்ட பண்டாரகவன்னியன், ஆங்கிலேயர்களால் அமைக்கப்பட்ட முல்லைத்தீவு கோட்டையை, 1803-ம் ஆண்டில் தாக்கினான். காப்டன் ரிபேக் தலைமையில் இருந்த வெள்ளையர் படைகளுக்கும்,பண்டாரகவன்னியன் படைகளுக்கும் கடும் போர் நடந்தது. பண்டாரகவன்னியன் வெற்றி பெற்றான். வெள்ளையர்படை பின்வாங்கி ஓடியது.

மும்முனைத் தாக்குதல்

வெள்ளையர் பண்டாரகவன்னியனை எதிர்க்க புதிய வியூகம் வகுத்தனர். யாழ்பாணம், மன்னார், திரிகோணமலைஎன்ற மூன்று இடங்களில் இருந்தும் வெள்ளையர்கள் ஒரே நேரத்தில் படையெடுத்துச் சென்று,பண்டாரகவன்னியனை தாக்கினர்.

வெள்ளையர்களின் படைகளுடன் ஒப்பிடும் போது, பண்டாரகவன்னியனின் படை மிகச் சிறியது. இருப்பினும்,அஞ்சாமல் வீரப்போர் புரிந்தான்.

போரில் பண்டாரகவன்னியன் படுகாயம் அடைந்தான். அவனுடைய வீரர்கள், பனங்காமம் என்ற இடத்துக்குபண்டாரகவன்னியனை தூக்கிச் சென்றனர். சிகிச்சை அளித்து குணப்படுத்த எவ்வளவோ முயன்றும் பலன் இல்லை.

1803-ம் ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி பண்டாரக வன்னியன் உயிர் பிரிந்தது.

பண்டாரகவன்னியன் மாண்ட இடத்தில் ஒரு நடு கல் உள்ளது. அதில், "இந்த இடத்தில் பண்டாரகவன்னியனைகேப்டன் வான் டெரிபெர்க் தோற்கடித்தான்" என்று குறிப்பிட்டுள்ளது
Photo: இலங்கையில் வெள்ளையர்களை எதிர்த்து வீரப் போர் புரிந்து உயிர்த் தியாகம் செய்தவன் பண்டாரவவவுனியன் !!

இலங்கையில் வெள்ளையர்களை எதிர்த்து வீரப் போர் புரிந்து உயிர்த் தியாகம் செய்தவன்,பண்டாரவவவுனியன்வவுனியன்" .தமிழ்நாட்டில், வெள்ளையர்களை எதிர்த்து இறுதிமூச்சு உள்ளவரை போராடியவன் வீரபாண்டியகட்டபொம்மன். அவனைப்போல, இலங்கையில் வெள்ளையரை எதிர்த்தவன் 'பாயும் புலி' பண்டாரவவவுனியன்வவுனியன்.முழுப்பெயர் குலசேகர வைரமுத்து பண்டாரகவன்னியன்.
 
தமிழர் ஆட்சி

யாழ்ப்பாணத்தை ஒட்டிய வன்னிப்பிரதேசத்தை பண்டாரவவவுனியன்வவுனியன் ஆண்டு வந்தான்.
வடக்கே யாழ்ப்பாணம் பரவைக்கடலையும், தெற்கே அருவிஆற்றையும், மேற்கே மன்னார் மாவட்டத்தையும்,கிழக்கே திரிகோணமலையையும் எல்லையாகக் கொண்டது வன்னி ராஜ்ஜியம். வன்னி மண் இன்று வடபுலத்தேஆனையிறவையும் தென்புலத்தே அனுராதபுரத்தையும் கிழக்கு மேற்குத் திசைகளில் இந்து சமுத்திரத்தையும்எல்லைகளாகக் கொண்ட நிலப் பரப்பாகச் (வவுனியா, மன்னார் , முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்கள்) சுருங்கிவிட்ட போதிலும், முன்பொரு காலத்தில் யாழ்ப்பாணத்திற்கும் கண்டிக்கும் இடையே உள்ள நாடு வன்னி வள நாடுஎன வழங்கப்பட்டது. கிழக்கே திருகோணமலை, மட்டக்களப்பு, கொட்டியாரம், யால பாலுகமும் மேற்கேயுள்ளபுத்தளம் முதலியனவும் முற்காலத்தில் வன்னி நாட்டைச் சேர்ந்திருந்தன. பின்னர் டச்சுக்காரர் காலத்தில்வன்னியின் தெற்கு எல்லையாக அரிப்பு ஆறும், காலு ஆறும் இருந்தன. இப்படியாக, வளம் கொழித்து விளங்கியவன்னி நாடு இன்று தன் பெரும் பகுதியை காடுகளுக்குள் தொலைத்து விட்டு, சோகங்களையே சொந்தமாக்கிக்கொண்டுள்ளது.

பண்டாரகவன்னியனும், கண்டி தமிழ் மன்னன் விக்கிரம ராசசிங்கனும் நெருங்கிய நண்பர்கள்.

டச்சுக்காரர்களை விரட்டிவிட்டு, இலங்கையில் பல இடங்களை கைப்பற்றிக்கொண்ட வெள்ளையர்கள்,பண்டாரகவன்னியனிடம் கப்பம் (வரிப்பணம்) கேட்டனர்.

தமிழ்நாட்டில், வெள்ளையருக்கு வரி கொடுக்க வீரபாண்டிய கட்டபொம்மன் மறுத்தது போல், பண்டாரவவவுனியன்வவுனியன  கப்பம் கட்ட மறுத்தான். கப்பம் கேட்டு வந்த வெள்ளையனை விரட்டி அடித்தான்.

வெள்ளையர்கள் விடவில்லை. 1797 -ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி எல்லிஸ் டொய்லி என்ற தளபதியைபண்டாரகவன்னியரிடம் அனுப்பி, கிஸ்தியை வசூலித்து வருமாறு கூறினார்கள்.

வெட்டி வீழ்த்தினான்

வெள்ளையர்கள் மீண்டும் மீண்டும் ஆட்களை அனுப்பி கப்பம் கேட்டதால், பண்டாரகவன்னியன் வெகுண்டான்.எல்லிஸ் டொய்லி என்ற அந்த வெள்ளைக்கார தளபதியை வாளால் வெட்டி வீழ்த்தினான்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும், வெள்ளையர்கள் கடும் கோபம் கொண்டனர். படைகளை திரட்டிக் கொண்டு,பண்டாரகவன்னியன் மீது போர் தொடுத்தனர்.

கற்பூரப்புல் என்ற இடத்தில் இருதரப்பு படைகளும் மோதின. பண்டாரகவன்னியன் ஆவேசத்துடன் வீரப்போர் புரிந்து,பல வெள்ளைக்கார வீரர்களை வீழ்த்தினான்.

தமிழ் படைகளின் தாக்குதலை சமாளிக்க முடியாமல், வெள்ளையர் படை புறமுதுகிட்டு ஓடியது.

மீண்டும் போர்

ஆங்கிலேயர்கள், எப்படியாவது பண்டாரகவன்னியனை தோற்கடித்து விடவேண்டும் என்று பெரும் படை திரட்டினர்.இதைத் தெரிந்து கொண்ட பண்டாரகவன்னியன், ஆங்கிலேயர்களால் அமைக்கப்பட்ட முல்லைத்தீவு கோட்டையை, 1803-ம் ஆண்டில் தாக்கினான். காப்டன் ரிபேக் தலைமையில் இருந்த வெள்ளையர் படைகளுக்கும்,பண்டாரகவன்னியன் படைகளுக்கும் கடும் போர் நடந்தது. பண்டாரகவன்னியன் வெற்றி பெற்றான். வெள்ளையர்படை பின்வாங்கி ஓடியது.

மும்முனைத் தாக்குதல்

வெள்ளையர் பண்டாரகவன்னியனை எதிர்க்க புதிய வியூகம் வகுத்தனர். யாழ்பாணம், மன்னார், திரிகோணமலைஎன்ற மூன்று இடங்களில் இருந்தும் வெள்ளையர்கள் ஒரே நேரத்தில் படையெடுத்துச் சென்று,பண்டாரகவன்னியனை தாக்கினர்.

வெள்ளையர்களின் படைகளுடன் ஒப்பிடும் போது, பண்டாரகவன்னியனின் படை மிகச் சிறியது. இருப்பினும்,அஞ்சாமல் வீரப்போர் புரிந்தான்.

போரில் பண்டாரகவன்னியன் படுகாயம் அடைந்தான். அவனுடைய வீரர்கள், பனங்காமம் என்ற இடத்துக்குபண்டாரகவன்னியனை தூக்கிச் சென்றனர். சிகிச்சை அளித்து குணப்படுத்த எவ்வளவோ முயன்றும் பலன் இல்லை.

1803-ம் ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி பண்டாரக வன்னியன் உயிர் பிரிந்தது.

பண்டாரகவன்னியன் மாண்ட இடத்தில் ஒரு நடு கல் உள்ளது. அதில், "இந்த இடத்தில் பண்டாரகவன்னியனைகேப்டன் வான் டெரிபெர்க் தோற்கடித்தான்" என்று குறிப்பிட்டுள்ளது

திருச்சிக்கு பெருமை சேர்த்த சுதந்திர போராட்ட வீரர் சையத் முர்துஜா ஹஸ்ரத் !!!!

இவர்களை போன்ற மாமனிதர்களை நாம் நினைவு கூறுவது மிக முக்கியமான ஒன்று , மாமனிதர்களின் சரித்திரங்கள் மறைக்க பட்டு உள்ளது ஒரு நண்பர் இவரை பற்றிய தகவல் தந்து பகிர சொன்
னார் அதனால் நான் இந்த தகவலை உங்களுக்கு பகிர்கிறேன் ,இது போன்று உங்களுடைய ஊருக்கு பெருமை சேர்த்த தலைவர்கள் ,ஊர் பெருமை பற்றிய தகவல் தந்தால் நான் எல்லா நண்பர்களுக்கு பகிர்கிறேன் . இதன் மூலம் தெரியாத விசையங்களை எல்லோருக்கும் தெரிய ஒரு வாய்ப்பாக அமையும் .

சையத் முர்துஜா ஹஸ்ரத் அவர்களின் பூர்வீகம் புகாரா (புகாரஸட் – ரஷ்யா) ஆகும். ஹஸ்ரத் அவர்கள் பிறந்தது, வளர்ந்தது திருச்சிராப்பள்ளியில் தான். இவர் பி.ஏ. வரை படித்து தேர்வு பெற்று, திருச்சி ஜில்லா மாவட்ட ஆட்சியர் காரியாலயத்தில் தலைமைக் குமாஸ்தா பதவியை ஏற்றார்கள். கல்வியில் இஸ்லாமியர்கள் சிறக்க வேண்டும் என்பதால் “இஸ்லாமிய உயர்நிலைப்பள்ளி” என்ற பள்ளியைத் தோற்றிவித்தார். இப்போது இதன் பெயர் “சையத் முர்துஜா அரசு உயர்நிலைப்பள்ளி” என்று மாற்றப்பட்டுள்ளது.

ஹஸ்ரத் அவர்கள் சமுதாய கல்வி வளர்ச்சிக்காகப் பாடுபட்ட அதே நேரத்தில் அரசியலிலும் பங்கெடுத்துத் தேசத்திற்காகவும் சேவை செய்து வந்தார்கள். கி.பி. 1912- ல் மதராஸ் சட்டக்கவுன்ஸில் அங்கத்தினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அச்சமயம் இந்தியாவை ஆண்டு வந்த ஐந்தாம் ஜார்ஜ் அவர்கள் ஹஸ்ரத்தை அழைத்து ஹானரபிள் என்ற பட்டம் வழங்கினார். ஆனால் இந்தப் பட்டத்தை தூக்கியெறிந்து விட்டு பிரிட்டிஷாரின் பகையை ஏற்படுத்திக் கொண்டார்கள். கி.பி. 1919 –க்குப் பின் கிலாபத் இயக்கத்தில் தீவிர பங்கு கொண்டு, காங்கிரஸ் உடன் சேர்ந்து ஒத்துழையாமை இயக்கத்திலும் கலந்து கொண்டார்கள்.

மெளலானா ஷவுகத் அலி, காந்திஜீ ஆகிய இரு பெருந்தலைவர்கள் திருச்சி வந்தபொழுது இந்திய விடுதலைப் போராட்டத்திற்காக ரூ.20 ஆயிரம் நிதி திரட்டிக் கொடுத்தார்கள். இதனால் ஹஸ்ரத் அவர்களின் புகழ் இந்தியாவின் எண்திசைகளிலும் பரவக் காரணமாகியது. கி.பி. 1923-ஆம் ஆண்டில் டத்திய சட்டசபை (தற்போதைய பாராளுமன்றத் தேர்தல் போன்றது) தேர்தல் நடந்தபொழுது, சென்னை மாநிலத்தின் பதினொரு ஜில்லாக்களின் சார்பில் நடைபெற்ற தேர்தலில் ஹஸ்ரத் அவர்கள் திருச்சி ஜில்லாவில் நின்று வெற்றி வாகை சூடினார். இவர் 24 வருடங்கள் தொடர்ந்து மத்திய சட்டசபையில் இருந்து வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு நீண்ட காலத்திற்கு ஹஸ்ரத் அவர்கள் மத்திய சட்டசபையில் சேவை செய்து வந்ததால் இந்தியாவில் அனைத்துத் தலைவர்களுக்கும் ஹஸ்ரத் அறிமுகமானவராக இருந்தார்.

பாகிஸ்தான் ஏற்படுவதை எதிர்த்த குறைந்த முஸ்லீம் தலைவர்களில் ஹஸ்ரத் அவர்களும் ஒருவராக இருந்தார்கள். இதனால் திருச்சி மக்கள் அனைவரும் இவரை “படே ஹஸ்ரத்” (பெரிய ஹஸ்ரத்) என்றே அன்புடன் அழைத்தனர். இவர் கி.பி. 1940 –ம் ஆண்டு நவம்பர் மாதம் 6 –ம் தேதி மறைந்தார்கள்.
Photo: திருச்சிக்கு பெருமை சேர்த்த சுதந்திர போராட்ட வீரர் சையத் முர்துஜா ஹஸ்ரத் !!!!

இவர்களை போன்ற மாமனிதர்களை நாம் நினைவு கூறுவது மிக முக்கியமான ஒன்று , மாமனிதர்களின் சரித்திரங்கள் மறைக்க பட்டு உள்ளது ஒரு நண்பர் இவரை பற்றிய தகவல் தந்து பகிர சொன்னார் அதனால் நான் இந்த தகவலை உங்களுக்கு பகிர்கிறேன் ,இது போன்று உங்களுடைய ஊருக்கு பெருமை சேர்த்த தலைவர்கள் ,ஊர் பெருமை பற்றிய தகவல் தந்தால் நான் எல்லா நண்பர்களுக்கு பகிர்கிறேன் . இதன் மூலம் தெரியாத விசையங்களை எல்லோருக்கும் தெரிய ஒரு வாய்ப்பாக அமையும் .

சையத் முர்துஜா ஹஸ்ரத் அவர்களின் பூர்வீகம் புகாரா (புகாரஸட் – ரஷ்யா) ஆகும். ஹஸ்ரத் அவர்கள் பிறந்தது, வளர்ந்தது திருச்சிராப்பள்ளியில் தான். இவர் பி.ஏ. வரை படித்து தேர்வு பெற்று, திருச்சி ஜில்லா மாவட்ட ஆட்சியர் காரியாலயத்தில் தலைமைக் குமாஸ்தா பதவியை ஏற்றார்கள். கல்வியில் இஸ்லாமியர்கள் சிறக்க வேண்டும் என்பதால் “இஸ்லாமிய உயர்நிலைப்பள்ளி” என்ற பள்ளியைத் தோற்றிவித்தார். இப்போது இதன் பெயர் “சையத் முர்துஜா அரசு உயர்நிலைப்பள்ளி” என்று மாற்றப்பட்டுள்ளது.

ஹஸ்ரத் அவர்கள் சமுதாய கல்வி வளர்ச்சிக்காகப் பாடுபட்ட அதே நேரத்தில் அரசியலிலும் பங்கெடுத்துத் தேசத்திற்காகவும் சேவை செய்து வந்தார்கள். கி.பி. 1912- ல் மதராஸ் சட்டக்கவுன்ஸில் அங்கத்தினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அச்சமயம் இந்தியாவை ஆண்டு வந்த ஐந்தாம் ஜார்ஜ் அவர்கள் ஹஸ்ரத்தை அழைத்து ஹானரபிள் என்ற பட்டம் வழங்கினார். ஆனால் இந்தப் பட்டத்தை தூக்கியெறிந்து விட்டு பிரிட்டிஷாரின் பகையை ஏற்படுத்திக் கொண்டார்கள். கி.பி. 1919 –க்குப் பின் கிலாபத் இயக்கத்தில் தீவிர பங்கு கொண்டு, காங்கிரஸ் உடன் சேர்ந்து ஒத்துழையாமை இயக்கத்திலும் கலந்து கொண்டார்கள்.

மெளலானா ஷவுகத் அலி, காந்திஜீ ஆகிய இரு பெருந்தலைவர்கள் திருச்சி வந்தபொழுது இந்திய விடுதலைப் போராட்டத்திற்காக ரூ.20 ஆயிரம் நிதி திரட்டிக் கொடுத்தார்கள். இதனால் ஹஸ்ரத் அவர்களின் புகழ் இந்தியாவின் எண்திசைகளிலும் பரவக் காரணமாகியது. கி.பி. 1923-ஆம் ஆண்டில் டத்திய சட்டசபை (தற்போதைய பாராளுமன்றத் தேர்தல் போன்றது) தேர்தல் நடந்தபொழுது, சென்னை மாநிலத்தின் பதினொரு ஜில்லாக்களின் சார்பில் நடைபெற்ற தேர்தலில் ஹஸ்ரத் அவர்கள் திருச்சி ஜில்லாவில் நின்று வெற்றி வாகை சூடினார். இவர் 24 வருடங்கள் தொடர்ந்து மத்திய சட்டசபையில் இருந்து வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு நீண்ட காலத்திற்கு ஹஸ்ரத் அவர்கள் மத்திய சட்டசபையில் சேவை செய்து வந்ததால் இந்தியாவில் அனைத்துத் தலைவர்களுக்கும் ஹஸ்ரத் அறிமுகமானவராக இருந்தார்.

பாகிஸ்தான் ஏற்படுவதை எதிர்த்த குறைந்த முஸ்லீம் தலைவர்களில் ஹஸ்ரத் அவர்களும் ஒருவராக இருந்தார்கள். இதனால் திருச்சி மக்கள் அனைவரும் இவரை “படே ஹஸ்ரத்” (பெரிய ஹஸ்ரத்) என்றே அன்புடன் அழைத்தனர். இவர் கி.பி. 1940 –ம் ஆண்டு நவம்பர் மாதம் 6 –ம் தேதி மறைந்தார்கள்.

Tuesday, September 18, 2012

எலும்பு தேய்மானத்தை தடுக்க சில தகவல்கள் !!!

வயதானவர்களுக்கு எலும்புத் தேய்மானம் வருவது இயற்கை. ஆனால் உடற்பயிற்சியின்மை, உட்கார்ந்த நிலையிலேயே வேலை பார்த்தல், கால்சியம் சத்துக் குறைபாடான உணவு பழக்கம், பாஸ்ட் புட் உணவுகள் சாப்பிடும் பழக்கம் 
என எலும்புத் தேய்வுக்கு மேலும் பல காரணங்கள் உள்ளன. எலும்புத் தேய்மானத்தால் ஏற்படும் தொந்தரவுகளில் இருந்து காத்துக் கொள்வது பற்றி விளக்கம் அளிக்கிறார் பிசியோதெரபிஸ்ட் ரம்யா. மனித உடலில் 206 எலும்புகள் உள்ளன. இந்த எலும்புகளில் மாற்றங்கள் தொடர்ச்சியாக இருக்கும். எலும்புகளுக்கான அடிக்கட்டமைப்பை புரதங்கள் வலுவாக்குகின்றன.

கால்சியம், பாஸ்பேட் போன்ற மினரல்கள் எலும்புகளுக்கு இடையில் பரவி மேலும் வலு சேர்க்கிறது. இந்த இயக்கம் உடலில் தொடர்ந்து இருப்பதால் உணவில் அதிக கால்சியம் தேவைப்படுகிறது. இதற்கு சிறு வயது முதல் பால் மற்றும் பச்சைக் காய்கறிகள் போதுமான அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். நாம் உண்ணும் உணவில் உள்ள சத்துக்களை உடல் உட்கிரகித்துக் கொள்வதற்கான உணவு மற்றும் உடற்பயிற்சிகளை வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.

எலும்பைப் பொறுத்தவரை அளவுக்கு மீறி அழுத்தம் கொடுப்பது மற்றும் விபத்துக்களினால் எலும்பு முறிவு ஏற்படும். காயங்களினால் ரத்தக்கட்டு உண்டாகும். மினரல்கள் இழப்பு காரணமாக எலும்புத் தேய்வு ஏற்படும். எலும்புத் தேய்வின் அறிகுறியாக உடலில் வலி ஏற்படுகிறது. எலும்பு வலுவிழக்கும் போது உடல் எடை முழுவதையும் தசைப்பகுதி தாங்குகிறது. இதனால் தசையும் பலவீனம் அடையும். உடல் சோர்வு, வலி, வீக்கம் ஏற்படலாம். மூட்டுப்பகுதியில் வீக்கம் உண்டாகும். உடலை அசைப்பதே கடினமாக இருக்கும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைய துவங்கும்.
எலும்புத் தேய்மானம் ஏற்படுவதை தடுக்க கால்சியம் உள்ள உணவுகள் எடுத்து கொள்ள வேண்டும்.

மேலும் உடற்பயிற்சி செய்யும் போது எலும்புக்கு தேவையான தாதுக்கள் தசைப்பகுதியில் இருந்து உட்கிரகிக்கப்படும். இதனால் சத்தான உணவு சாப்பிட்டாலும் உடற்பயிற்சி கட்டாயம் அவசியம். இதில் எலும்பின் வலிமைக்கு தேவையான ஊட்டச்சத்துகள் கிடைத்து விடுகிறது. இதனால் எளிமையான நடைப்பயிற்சி, வீட்டு வேலைகள் மற்றும் தோட்ட வேலைகளும் இதற்கு கைகொடுக்கும். எலும்பு மற்றும் மூட்டுக்களில் வலி காணப்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி எலும்பு உறுதித் தன்மை குறித்த பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம் எலும்பில் தாதுக்களின் குறைபாடு அளவு அறிந்து அதற்கு தகுந்த சிகிச்சை செய்து கொள்ளலாம்.

பாதுகாப்பு முறை: சிறு வயது முதல் ஏதாவது ஒரு உடற்பயிற்சியை வழக்கப்படுத்திக் கொள்ளலாம். உட்கார்ந்த நிலையில் வேலை செய்பவர்கள் நடைப்பயிற்சி மற்றும் சைக்கிள் பயிற்சி மூலம் தங்கள் எலும்பை உறுதி செய்து கொள்ளலாம். உடல் எடை அதிகரிப்பின் காரணமாக எலும்பின் உறுதித் தன்மை குறையும். எலும்பின் உறுதி குறைந்து நோய் எதிர்ப்பு சக்தி இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு மற்ற நோய்கள் உடலை எளிதில் தாக்க வாய்ப்புள்ளது. பெண்களுக்கு மெனோபாஸ் ஏற்பட்ட பின்னர் ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரோஜெஸ்ட்ரான் ஆகிய ஹார்மோன் சுரப்பு குறையும். இதனால் எலும்புத் தேய்வு ஏற்படும். கால்சியம் குறைபாடு ஏற்படும்.

எனவே இந்த சமயத்தில் பெண்கள் முழு கவனத்துடன் இருந்து கால்சியம் சத்துள்ள உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டும். வயதானவர்களுக்கு ஆஸ்டியோபீனா எனப்படும் எலும்பு கொழகொழப்புத் தன்மை அடைகிறது. இதனால் உடல் எடையை தாங்க முடியாமல் கால்கள் வளைந்து விடும். ஆஸ்டியோபோரசிஸ் என்ற பாதிப்பால் கீழே விழுந்தால் கூட எலும்பு உடைந்து விடும். எனவே எலும்பின் உறுதியைப் பாதுகாப்பது மிகவும் அவசியம்.

ரெசிபி

பொன்னாங்கன்னிக் கீரை கட்லட்: பொன்னாங்கன்னிக் கீரை இரண்டு கட்டு சுத்தம் செய்து பொடியாக நறுக்கி எண்ணெய்யில் வதக்கி கொள்ளவும். பெரிய வெங்காயம் 1, பச்சை மிளகாய் 2, கடலை மாவு 1 டேபிள் ஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது ஒரு டீஸ் பூன், கரம்மசாலா ஒரு டீஸ்பூன், உப்பு தேவையான அளவு எடுத்து அவற்றை வாணலியில் எண்ணெய் விட்டு வதக்கவும். பின்னர் கீரையுடன் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து வடை பதத்துக்கு பிசைந்து விரும்பிய வடிவத்தில் தட்டி பிரட் தூளில் உருட்டி தோசைக்கல்லில் வேக வைத்து எடுக்கவும். பொன்னாங்கன்னி கீரையில் கால்சியம் சத்து உள்ளது.

ஓட்ஸ் குருமா: பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் சோம்பு உள்ளிட்ட மசாலா பொருட்கள் 1 டீஸ்பூன் எடுத்து தேங்காய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். 2 வெங்காயம், தக்காளி, 2 கப் ஓட்ஸ் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். இத்துடன் அரைத்த விழுது, கொத்தமல்லி தூள் சேர்த்து தண்ணீர் விட்டு கொதித்த பின் இறக்கவும். சப்பாத்தி, தோசைக்கு தொட்டுக் கொள்ளலாம். கால்சியம் சத்து அதிகம் உள்ளது.

பிரட் தோசை: தோசை மாவு இரண்டு கப் எடுத்துக்கொள்ளவும். அதில் பச்சை மிளகாய் 2, வெங்காயம் 1, கருவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை பொடியாக நறுக்கி மாவில் கலந்து கொள்ளவும். பிரட் துண்டுகளை மாவில் போட்டு தோசைக்கல்லில் சுட்டு எடுக்கவும். இதில் தேவையான அளவு கார்போஹைட்ரேட் கிடைக்கிறது.

டயட்

பழங்கள், மற்றும் பச்சைக் காய்கறிகள் அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். கீரை, தானியங்கள், ஓட்ஸ், கொண்டைக்கடலை, கொள்ளு, பருப்பு, கேழ்வரகு ஆகியவற்றை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஆரஞ்சு மற்றும் மஞ்சள் வண்ணக் காய்கறிகள் மற்றும் பழங்களும், மக்காச்சோளம் ஆகியவற்றையும் உணவில் சேர்க்கவும். அசைவ உணவுகள் வாரம் ஒரு முறை மட்டும் எடுத்துக் கொள்ளலாம். தினமும் ஒரு முட்டை வேகவைத்து சாப்பிட வேண்டும்.

சுண்ட காய்ச்சிய பால் ஒரு நாளைக்கு நான்கு டம்ளர்கள் அருந்த வேண்டும். காய்கறிகளை அரை வேக்காட்டில் சாப்பிடுவதன் மூலம் கால்சியம் சத்து முழுமையாக கிடைக்கும். உலர்ந்த திராட்சை, பாதாம், காலிபிளவர், முட்டைக்கோஸ், வாழைப்பூ, வாழைத்தண்டு, வாழைப்பழம், மாதுளை மற்றும் இரும்புச் சத்து அதிகம் உள்ள உணவு வகைகளையும் தினமும் உணவில் சேர்க்கவும். சின்ன வெங்காயம் குழம்பில் சேர்க்கலாம். என்கிறார் உணவு ஆலோசகர் சங்கீதா.

பாட்டி வைத்தியம்

அத்திக்காயை வேக வைத்து சிறுபருப்பு சேர்த்து கடைந்து சாப்பிட்டால் கை, கால் வலிகள் நீங்கும்.

அதிவிடயம், எள், வெள்ளரி விதை மூன்றும் தலா 100 கிராம் அளவுக்கு எடுத்து அரைத்து கொள்ளவும். காலை மாலை இரு வேளையும் 2 கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் உடல் உறுதிப்படும்.

அமுக்காரா, ஏலக்காய், சுக்கு, சித்திரத்தை ஆகியவற்றில் தலா 100 கிராம் எடுத்து அரைத்துக் கொள்ளவும் இதில் ஐந்து கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் கை, கால் மற்றும் மூட்டு வலிகள் குணமாகும்.

மூட்டு வலிக்கு அவுரி இலையை விளக்கெண்ணெயில் வதக்கி ஒத்தடம் கொடுக்கலாம்.

ஆடாதொடா இலையை கஷாயம் வைத்து குடித்தால் உடல் குடைச்சல் குணமாகும்.

ஆளி விதை 100 கிராம் பொடி செய்து அத்துடன் 10 கிராம குங்கிலி பஸ்பம் 10 கிராம் சேர்த்து கலந்து தினமும் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.

இலுப்பைக் கொட்டையில் இருந்து எண்ணெய் எடுத்து இடுப்பில் தேய்த்தால் நிவாரணம் பெறலாம்.

உளுந்து, கோதுமை, கஸ்தூரி மஞ்சள் மூன்றையும் சம அளவு எடுத்து பொடி செய்து அதில் வெந்நீரில் கலந்து பற்று போட்டால் மூட்டு வாதம், மூட்டு வலி குணமாகும்.