அடிமைத்தனம் குறித்து ஜோதிராவ் புலே !!!
வரலாற்றில் வாசிக்கபடாத பக்கங்கள் .தமிழர்கள் அனனவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல் !!!

ஜோதிராவ் புலே எழுதிய குலாம்கிரி (அடிமைத்தனம்) என்னும் புத்தகம் 1873
ஜூலை மாதம் வெளியானபோது அதன் முதல் பக்கத்தில் இருந்தே பிரச்னைக்கு
உள்ளானது. காரணம், தன் நூலை புலே கீழ்வருமாறு சமர்ப்பணம் செய்திருந்தார்.
நீக்ரோ அடிமைகளின் விடுதலையில்
ஐக்கிய நாடுகளைச் சேர்ந்த
நல்ல மனிதர்களின்
உன்னதமான விருப்பு வெறுப்பற்ற
சுய தியாகமுள்ள ஈடுபாட்டுக்காக
அவர்களைப் பாராட்டுவதன் அடையாளமாகவும்
அவர்களின் மேலான உதாரணத்தை
என் நாட்டு மக்கள்
பார்ப்பன அடிமைத் தளையிலிருந்து
தம் சூத்திர சகோதரரை விடுவிக்க
வழிகாட்டியாகக் கொள்வர் எனும்
உளப் பூர்வமான ஆசையோடும்
இந்நூலைச் சமர்ப்பிக்கிறேன்.
புத்தகத்தின் மொத்த உள்ளடக்கத்தையும் இந்தச் சமர்ப்பணம் மிகத் தெளிவாக உணர்த்துவிடுகிறது. ‘இனவெறியின் பிடியில் இருந்து நீக்ரோக்களை விடுவித்தது போல், பார்ப்பனர்களின் பிடியில் இருந்து சூத்திரர்களை விடுவிக்கவேண்டும். அதற்கு நல்ல உள்ளங்கள் உதவவேண்டும்.’
பெரியார் கையாண்ட அதே மொழிநடையை புலே கையாண்டிருக்கிறார். சமூகக் கோபத்தோடு சேர்ந்து கிண்டலும் குரும்பும் ஒவ்வொரு வரியிலும் கொப்பளிக்கும். பாமரர்களுக்குப் புரியும்வகையில் எளிமையான உதாரணங்களையும் மேற்கோள்களையும் புலே பயன்படுத்தியிருக்கிறார். அடிமைத்தனம் நூலின் இன்னொரு சிறப்பம்சம், அது முழுக்க முழுக்க உரையாடல் வடிவில் அமைந்திருப்பது. அந்த வகையில், மிகச் சுலபமாக ஒரே வாசிப்பில் முழு நூலையும் உள்வாங்க முடிகிறது.
முன்னுரையில் ஓமர் என்பவரை புலே மேற்கோள் காட்டுகிறார். ‘ஒரு மனிதரை ஓர் அடிமையின் நிலைக்குத் தாழ்த்தியதுமே அவருடைய நல்ல குணங்களில் பாதி அவரிடமிருந்து பறிபோய்விடுகின்றன.’ பார்ப்பன ஆதிக்கத்தின் வரலாற்றை ஆராயத் தொடங்கி பிறகு அவர்கள் இயற்றிய மனிதத் தன்மையற்ற கொடிய சட்டங்களைளையும் அவற்றின் உள்நோக்கங்களையும் ஆராய்கிறார் புலே. பாமரர்களை ஏமாற்றுவதுதான் பார்ப்பனர்களின் நோக்கம் என்பதை ஆதாரபூர்வமாக புலே அம்பலப்படுத்துகிறார். அடிமைச் சங்கிலியால் கீழ்ச்சாதிகாரர்களைப் பார்ப்பனர்கள் கட்டிப்போட்டிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
புலேவைப் பொருத்தவரை, பார்ப்பனர்கள் இந்திய ஐரோப்பிய பேரினத்தின் ஒரு கிளையினர். இவர்களில் இருந்தே பாரசீகரும் இந்தோ ஜெர்மானிய இனத்தவரான மீடுகளும் ஆசியாவில் உள்ள பிற இரானியர்களும் ஐரோப்பாவின் முக்கிய நாட்டினரும் உருவாயினர். இதற்கு ஆதாரமாக, சிந்து, பாரசீகம், சமஸ்கிருதம் ஆகியவற்றுக்கும் ஐரோப்பிய மொழிகளுக்கும் உள்ள நெருக்கத்தையும் பொதுப்பண்புகளையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
‘அமைதியான முறையில் குடியேறி வாழும் நோக்கத்துடன் ஆரியர் இந்தியாவுக்குள் நுழையவில்லை. மாறாக வெற்றியாளர்களாகவே நுழைந்தார்கள். தங்களைப் பற்றி மிக உயர்ந்த நினைப்பில் ஊறித் திளைத்த இனமாகவே, மிகுந்த சூழ்ச்சியும் திமிரும் வீம்பும் கொண்ட இனமாகவே அவர்கள் இருந்தார்கள்.’
தேவர்களுக்கும் ராட்சசருக்கும் இடையில் நடந்த போர்கள் பற்றிய நூல்கள் பழங்காலப் போராட்டத்தைக் குறிக்கின்றன என்கிறார் புலே. ‘இந்தப் பூமியிலே இருக்கும் கடவுள்களாக பார்ப்பானை (பூ தேவரை) எதிர்த்துப் போரிட்ட பூர்விகக் குடிகள் ராட்சசர்கள் எனப்பட்டது பொருத்தமே.’ அமெரிக்காவில் குடியேறிய ஐரோப்பிய குடியேறிகள் அங்கிருந்த அமெரிக்க இந்தியர் மீது நடத்திய கொடுமைகளை அவர் இத்துடன் ஒப்பிடுகிறார். சத்திரியர்களை பரசுராமன் கொன்றொழித்ததையும் குறிப்பிடுகிறார்.
முதலில் கங்கைக்கரையில் பார்ப்பனர்கள் குடியமர்ந்தார்கள். பிறகு படிப்படியாக இந்தியா முழுவதும் பரவினார்கள். புராணம் மற்றும் மாயாஜால அமைப்பை உண்டாக்கினார்கள். சாதியத்தை அரசுச் சட்டமாக்கினார்கள். புரோகித அமைப்பை உண்டாக்கினார்கள். ‘அவர்களுடைய ஆழமான சூழ்ச்சியின் பின்விளைவே சாதி என்பது அவர்கள் எழுதி வைத்துள்ளதில் இருந்தே தெளிவாகிறது.’ சூத்திரர்களும் ஆதி சூத்திரர்களும் மனிததன்மையற்ற முறையில் நடத்தப்பட்டார்கள். இந்த மண்ணைக் கைப்பற்றும் நோக்கத்தில்தான் பார்ப்பனர்களின் போராட்டம் தொடங்கியது.
மதத்தைப் பார்ப்பனர்கள் தங்களுடைய ஆயுதமாகப் பயன்படுத்திக்கொண்டார்கள். மத நூல்களை நம்புமாறு சூத்திரர்களும் ஆதி சூத்திரர்களும் செய்யப்பட்டனர். மத நூல்கள் அவர்களைச் சிறிது சிறிதாக ஆக்கிரமித்துக்கொண்டது. பார்ப்பனர்கள் தங்களை அவர்களுடைய மீட்பர்களாக காட்டிக்கொண்டார்கள். நயவஞ்சகமான முறையில் அவர்களை வலைவீசி அடிமைப்படுத்தினர். ‘ஏழைகளை கைப்பற்றி அவர்களை அடிமை கொள்ளும் அருவருப்பான பழக்கம், ஆப்பிரிக்க, அமெரிக்கக் கண்டங்களில் பல நூற்றாண்டுகளாக நடைமுறையில் இருந்து வந்தது.’ அவ்வாறான ஒரு வழக்கத்தைத்தான் பார்ப்பனர்கள் இங்கே மேற்கொண்டனர்.
பிரிட்டிஷார் ஒரு நடுநிலையான விசாரணையை நடத்தினால் பார்ப்பனர்களின் அயோக்கியத்தனம் வெளிவரும் என்று பூலே ஆலோசனை கூறினார். ஒடுக்கப்பட்ட மக்கள் அனுபவித்த கொடுமைகள் அப்போதுதான் முழுமையாக தெரியவரும் என்றார். ‘அன்றாட பிரச்னைகளிலும் நிர்வாக யந்திரத்திலும் பொது மக்களை பார்ப்பனர்கள் சுரண்டும் வழிமுறை பற்றி அரசாங்கம் இன்னமும் அறியவில்லை. இந்த அவசரப் பணியில் அரசாங்கம் அக்கறையுடன் கவனம் செலுத்தி பார்ப்பனர்களின் சதிகளுக்குக் கட்டுப்பட்டுள்ள மன ரீதி அடிமைத்தனத்தில் இருந்து பொது மக்களை விடுவிக்க எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறேன்.’
‘ஒரு புத்திசாலி பத்து அறியா மக்களைக் கட்டுப்படுத்திவிடமுடியும். அந்தப் பத்து பேரும் ஒன்றுபட்டால் புத்திசாலியை வெல்லலாம்.’ இதை நன்கு புரிந்துகொண்ட பார்ப்பனர்கள், ‘சாதியம் என்ற நாசகார கட்டுக்கதையை’ உருவாக்கினார்கள். தாழ்த்தப்பட்டவர்கள் ஒருங்கிணைவதைத் தடுப்பதற்காக உண்டாக்கப்பட்ட ஏற்பாடே சாதியம்.
பார்ப்பனர்களின் தோற்றத்தையும் மதம் மற்றும் சாதியத்தின் உருவாக்கத்தையும் விரிவாக அலசிய பிறகு, பார்ப்பனர்களின் மத நூல்களையும் அவற்றில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்களையும் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டார் புலே. இந்த இடத்திலிருந்து நையாண்டியும் கிண்டலும் பிரதியை ஆக்கிரமித்துக்கொள்கின்றன. ‘இந்த பூமியில் ஆங்கிலேயர் உள்ளிட்ட பலர் வாழ்கிறார்கள். அவர்கள் பிரம்மனின் எந்த உறுப்பிலிருந்து தோன்றினார்கள்?’ மனு நூலில் ஏன் ஆங்கிலேயர்கள் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை? ‘ஆங்கிலேயர் இழிவானர்கள் அதனால் அவர்கள் பற்றி மனுநூலில் இல்லை என்பது உண்மையானால் பார்ப்பனர்களில் இழிவானர்கள், ஒழுக்கம் கெட்டவர்களே இல்லையா?’
புராணங்களை எடுத்து வைத்துக்கொண்டு, கேள்விகள் எழுப்பினார். ‘பிரம்மனின் மனைவி சாவித்திரி. அவள் இருக்கும்போது எதற்காக பிரம்மன் தன் வாயில் குழந்தையை வளரவிடுகிறான்?’ இரணிய கசிபு கதையும் அவரிடம் இருந்து தப்பவில்லை. ‘இரணிய கசிபை மறைவிலிருந்து கோழைத்தனமாகக் கொலை செய்த நரசிம்மனை காப்பாற்றத்தான், அவன் தூணிலிருந்து தோன்றினான் என்றெல்லாம் கதை அளந்தார்களோ? உண்மையான சமயக் கோட்பாடுகளைத் தன் மகன் பிரகலாதனின் பிஞ்சுமனதில் ஊட்ட முயன்ற இரணிய மன்னனைக் கொலை செய்தது ஆதி நாராயணனின் அவதாரமே என்பது எவ்வளவு கேவலமான பொய்! ஒரு மகனுக்குத் தந்தை ஆற்றவேண்டிய கடமையைத்தானே இரணியகசிபு செய்தார்?’ நியாயப்படி பார்த்தால், தந்தைக்கும் மகனுக்கும் இடையில் சமரசம் செய்து அல்லவா வைத்திருக்கவேண்டும் அந்த நரசிம்மன்? ‘இன்றைக்குப் பல அமெரிக்க ஐரோப்பிய மத போதகர்கள் பல இந்திய இளைஞரை கிறிஸ்தவத்துக்கு மதம் மாற்றியிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் யாரும் அப்படி மதம் மாறியோரின் அப்பாவை படுகொலை செய்யும் கீழ்த்தரத்துக்குத் தம்மை இறக்கிக்கொள்ளவில்லை.’
பரசுராமனுக்கு ஒரு பகிரங்கக் கடிதம் எழுதுகிறார் புலே. பகடி எழுத்தின் உச்சம் என்று இதனைச் சொல்லலாம்.
பெறுநர் : சிரஞ்சீவி பரசுராமன்
தந்தை பெயர் : ஆதி நாராயணன்
இடம் : எங்கும் பார்க்கலாம்
அன்பு அண்ணன் பரசுராமன் அவர்களுக்கு,
பார்ப்பனர்களின் மூலமாக வெளிக்குக் காட்டப்படும் உங்கள் புகழ்பெற்ற மந்திர உச்சாடனங்களின் அற்புதங்களை நீங்கள் நேரடியாகவே காட்டி இந்த ஆங்கிலேயரையும் பிரெஞ்சாரையும் வாயடைத்துப் போகச் செய்ய வேண்டும். என்னைத் தவிர்க்கவோ என்னிடம் இருந்து தப்பிக்கவோ முயல வேண்டாம். இந்த அறிவிப்பு கண்ட நாளிலிருந்து ஆறு மாதத்துக்குள் தாங்கள் ஆஜராக வேண்டும். அப்போது நான் மட்டுமல்ல, உலகின் பல்வேறு நாடுகளின் மக்களும் உங்களை எங்கும் நிறைந்த ஆதிநாராயணனின் அதிகாரபூர்வ அவதாரம் என மதிப்போம்.
அப்படிக் காட்சியளிக்க தாங்கள் தவறினால் இந்த நாட்டின் மகார்களும் மாங்குகளும், சகலகலாவல்லவர்கள் என அழைத்துக் கொள்ளும் உங்கள் பார்ப்பன பக்தர்களை (இனத்தை) தெருவுக்கு இழுத்துப் போட்டு அவர்களின் உண்மையான லட்சணத்தை அம்பலப்படுத்தத் தயங்கமாட்டார்கள் என்பதை அன்புடன் அறியவும்.
இப்படிக்கு
தங்களைப் பற்றிய பிரச்சாரப் பெருமையின்
நிஜத்தை சோதிக்க விரும்பும்
ஜோதிராவ் கோவிந்தராவ் புலே
பார்ப்பனர்களின் மந்திர உச்சாடனங்களை புலே ஒதுக்கித் தள்ளினார். ‘இவர்கள் (பார்ப்பனர்கள்) சோமரசம் என்னும் மதுவைக் குடிப்பது வழக்கம். அதனால் போதையேறி அந்தப் போதையில் இருக்கையில் பொருளற்ற பொருத்தமற்ற சொற்களை உச்சரிப்பார்கள். அப்போது தாம் கடவுளுடன் ஒன்றிணைந்து இருப்பதாகச் சொல்லிக் கொள்வார்கள். பாமர மக்களை ஏமாற்றுவதற்காகவே இந்த திருக்குமறுக்கு வாதங்களை அவர்கள் பயன்படுத்தினார்கள். தன் வயிற்றுப்பாட்டுக்காக சம்பாதிப்பதற்காக மந்திரம் ஓதுவது, மறைவேத நடைமுறைகள், மந்திர உச்சாடனங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்திக்கொண்டார்கள்.’ சுமிருதிகள், சங்கிதைகள், சாஸ்திரங்கள் ஆகியவை பார்ப்பன எழுத்தாளர்களின் அபத்தக் கதைகள் என்றார் புலே.
ஆங்கிலேயர்களைப் பார்ப்பனர்களின் அடிமைத்தனத்தில் இருந்து மீட்டவர்களாகப் பார்த்தார் புலே. பார்ப்பனர்கள் தங்கள் ஆதிக்கத்தை இழப்பதற்கு அஞ்சியே அனைத்து பிரிவினரையும் வேறு வழியின்றி ஒருங்கிணைக்க முயன்றனர். ஆங்கிலேயர்களை அவர்கள் எதிர்த்ததற்குக் காரணம் தங்களுடைய அதிக்கம் பறிக்கப்படக்கூடாது என்பதற்காகத்தான். கிறிஸ்தவத்தையும் அதே காரணத்துக்காகத்தான் பார்ப்பனர்கள் எதிர்த்தனர். ஆங்கிலேயர்கள் பற்றிய புலேவின் பார்வை வித்தியாசமானது. ‘ஆங்கிலேயர்கள் இன்று இருப்பார்கள், நாளை போய்விடுவார்கள். அவர்களை நாம் ஏன் எதிர்க்கவேண்டும்? சூத்திரராகிய நாம் எல்லோரும் பார்ப்பான் (நம் மீது சுமத்திய) வழிவழி அடிமைத்தனத்தில் இருந்து நம்மை மீட்டுக்கொள்ள அதிகபட்ச அவசரத்துடன் முயலவேண்டும் என்பதே உண்மை ஞானத்தின் தீர்ப்பு.’
அதே சமயம் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் குறைபாடுகளை புலே விமரிசனத்துக்கு உள்ளாக்கினார். ஆதிசூத்திரர்களின் படிப்பு விஷயத்தில் அரசாங்கம் மெத்தனமாக இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். படைப் பிரிவுகளில் ஆள்கள் தேர்ந்தெடுப்பதில் சிரத்தையாக தானே முன்வந்து நிற்கும் வெள்ளையர்கள் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களைப் பயிற்றுவிக்கும் வேலையை பார்ப்பனர்களிடம் ஒப்படைத்துவிடுவது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.
தன் புத்தகத்தை புலே இவ்வாறு நிறைவு செய்கிறார். ‘பார்ப்பான், விவசாயி இருவருக்கும் ஒரேவிதமான அறிவே உள்ளது. ஒரே அளவான உடலே உள்ளது. அப்படி இருக்க பார்ப்பான் ஆடம்பர மெத்தையில் புரளுவதும் ஏழை விவசாயி வறுமையில் புரளுவதும் எப்படி? (அதிகார போதை தலைக்கேறிய) பார்ப்பனர்கள், சூத்திரர்களை கல்விபெறாமல் தடுத்துவிட்டார்கள். இந்த அநியாயமான தடைக்கு அடிபணிந்த சூத்திரர் காலகாலமாகத் துன்புற்றார்கள். மனுவை இப்போது தீக்கிரை ஆக்குவோம். ஆங்கில மொழி நம் (வளர்ப்புத்) தாய் ஆகியுள்ளது. (கல்வி எனும் குணமளிக்கும் மூலிகையை நம் எல்லார்க்கும் வழங்கி உள்ளது). நம் செவிலித்தாயான ஆங்கிலம் நமக்குப் பரிந்து தன் பாலூட்டுகின்றது. இனிப்பின்னடையாதீர் சூத்திரரே. மனுவின் பாழாய்ப்போன தத்துவத்தைச் சபித்து அதை உங்கள் உள்ளத்திலிருந்து உதறியெறியுங்கள். நீங்கள் கல்வி பெற்றால் நிச்சயம் மகிழ்ச்சியாயிருப்பீர்கள். என் இந்தப் புதிய ஏற்பாட்டை ஏற்றுக்கொள்ளுங்கள்.’
புலேவின் புதிய ஏற்பாட்டை பின்னர் அம்பேத்கர் ஏற்றுக்கொண்டது வரலாறு.
ஆதாரம் :-- (அம்ருதா மே 2012 இதழில் வெளியான கட்டுரை.)
தகவலுக்கு நன்றி
பாலகிருஷ்ணன்

No comments:
Post a Comment