Tuesday, August 14, 2012

குட்டீஸ்க்கு ஜீரணக்கோளாறா? ஆரஞ்சு ஜூஸ் கொடுங்க

குட்டீஸ்க்கு ஜீரணக்கோளாறா? ஆரஞ்சு ஜூஸ் கொடுங்க

குழந்தைகளுக்கு அஜீரணக்கோளறு ஏற்படுவது சாதாரணமானது. இதற்காக அச்சப்படத்தேவையில்லை. வீட்டில் உள்ள பொருட்களைப் பயன்படுத்தி அஜீரணக்கோளாறுகளை போக்கிவிடலாம் என்கின்றனர் குழந்தை நல மருத்துவர்கள்.
உண்ட
உணவு ஜீரணமாகாமல் வயிறு மந்தமாக இருந்தால் சரியாகும் வரை திட உணவு கொடுக்கவேண்டாம் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். குழந்தைகளுக்கு ஏற்படும் அஜீரணத்தைத் தீர்க்க சீரணப்பாதையை சுத்தம் செய்தலே சரியான தீர்வு.

முதலில் குழந்தைகளுக்கு பழச்சாறுகள் மட்டுமே கொடுக்க வேண்டும், ஆரஞ்சு சாற்றை வென்னீரில் 50 : 50 என்ற விகிதத்தில் முதலில் கொடுக்கலாம்.

சீரணமாகாத உணவுகளை உடனே வெளியேற்றும் குணம் பழங்களுக்கு மட்டுமே உண்டு. சீரணக் கோளாறுகளை குணப்படுத்தும் சிறந்த பழம் எலுமிச்சை பழம். எலுமிச்சையில் உள்ள அமிலச்சத்து ஜீரணப்பாதையை சரியாக்கும்.

திராட்சைப் பழம் அஜீரணக்கோளாறுக்கு ஏற்றது. உடனடியாக பலனளிக்கும். வயிறு வலி இருந்தாலும் உடனடியாக சரியாகும். அதேபோல் அன்னாசிபழச்சாற்றினை குழந்தைகளுக்குக் கொடுத்தால் அது டானிக் போல செயல்பட்டு உடனடி பலன் தரும். பழங்கள், பழச்சாறுகள் உணவு முறையை மேலும் 2 நாட்களுக்கு கொடுத்து வந்தபிறகு, சீரணமாகக் கூடிய லேசாக வேகவைத்த காய்கறிகள் மற்றும் மோர் ஆகியவற்றை கொடுக்கலாம்.

அஜீரணக்கோளாறு ஏற்பட்டுள்ள குழந்தைகளுக்கு உணவு அருந்தும்போது தண்ணீர் குடிக்கத் தரக்கூடாது. சாப்பிடும் முன் அரை மணி நேரத்திற்கு முன்னதாக அல்லது சாப்பாட்டிற்குப் பிறகு 1 மணி நேரம் கழித்து தண்ணீர் கொடுக்கலாம்

பசிக்காமல் சாப்பிடக் கொடுக்கக் கூடாது. அதேபோல் வயிறு முட்ட சாப்பிடத் தரக்கூடாது. சாப்பிடும் போது அவசரமாக விழுங்காமல் உணவை நன்றாக மென்று விழுங்கச் சொல்லவேண்டும்.

இந்த நடைமுறைகளை பின்பற்றினால் குழந்தைகளின் ஜீரணக்கோளாறுகளை சரியாக்கலாம்.

No comments:

Post a Comment