Monday, November 26, 2012

எழுத்தாளர் அருந்ததி ராய் பிறந்ததினம் இன்று !!!

வாழ்க்கைக் குறிப்பு :

அருந்ததி ராய் மேகாலயாவின் தலைநகர் சில்லாங்கில் பிறந்தார். கேரளத்தை சேர்ந்த மேரி ரோசுக்கும், வங்காளத்தைச் சேர்ந்த தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்த தந்தைக்கும் பிறந்தார்.
னது சிறுவயதில் கேரளாவில் உள்ள ஆய்மணம் (Aymanam) என்ற சிற்றூரில் வளர்ந்தார். கோட்டயத்திலும் நீலகிரியிலும் பள்ளிப்படிப்பை முடித்தார். பின்னர்தில்லி பல்கலைக்கழகத்தில் கட்டிடக்கலை படிப்பில் சேர்ந்தார். அங்கு தனது முதல் கணவரைச் சந்தித்தார். பின் தங்கள் படிப்பை விடுத்து இருவரும் வெளியேறினர். தன் முதல் கணவருடன் நான்கு ஆண்டுகள் வாழ்ந்தார். பின்னர் அவர் பிரதீப் கிரிஷன் என்ற திரைப்பட இயக்குநரை மணந்தார். இருவரும் சேர்ந்து சில படங்களை எடுத்தனர். இப்படங்களுக்கு அருந்ததி திரைக்கதை எழுதியது குறிப்படத்தக்கது. அவற்றில் சில In Which Annie Gives It Those Ones and Electric Moon...

சமூகக் குரல் :

அருந்ததி ராய் தனது பள்ளி பருவத்திலிருந்தே தானாகச் சிந்திப்பவர். இதற்கு அவர் படித்த பள்ளியின் கட்டற்ற படிப்புமுறை காரணமாகத் திகழ்ந்தது. இவரது பல படைப்புகளில் சமுதாயத்திலுள்ள பெண் அடிமைத்தனம் குழந்தைத் தொழிலாளர் பிரச்சனை , அமேரிக்காவின் வெளியுறவு கொள்கைகள் முதலியவற்றை விமர்சனத்துக்கு உட்படுத்தினார். மேதா பட்கர் தொடங்கிய நர்மதா பச்சாவோ அந்தோலன் ( en:Narmada Bachao Andolan ) என்ற அமைப்பில் தீவிரமாக பங்கு கொண்டார். இவ்வாறே இவரது குரல் சமுதாயத்தின் மறுபக்கத்தை மக்களிடம் கொண்டு சேர்த்தது. இந்த குரல் பல முறை எழுத்து வடிவமாக இருந்தது என்பது குறிப்பிடத் தகுந்தது.

நர்மதை போராட்டம்

Maybe. Inch by inch. Bomb by bomb. Dam by dam. Maybe by fighting specific wars in specific ways. We could begin in the Narmada Valley.

காஷ்மீர் பிரச்சனை

India needs azadi from Kashmir just as much—if not more—than Kashmir needs azadi from India...

அருந்ததிராய்… இந்திய எழுத்துலகின் முற்போக்கு முகம்! மத்திய இந்தியாவின் தண்டகாரண்யா காடுகளில் இருக்கும் கனிம வளங்கள் பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தாரைவார்க்கப்படுவதை எதிர்த்துப் பழங்குடி மக்கள் வில், அம்பு ஏந்தி வீரத் துடன் போரிட்டுக்கொண்டு இருக்க,அறிவுலகில் தன்னந்தனியாக நின்று போராடுகிறார் அருந்ததி ராய்.

'ஆபரேஷன் பசுமை வேட்டை' என்ற பழங்குடி மக்களுக்கு எதிரான உள்நாட்டு யுத்தத்தை மிகக் கடுமையாக எதிர்க்கும் அருந்ததி ராய், அண்மையில் அந்தக் காடுகளுக்குள் நேரடியாகச் சென்றும் வந்தார்.கடந்த வாரம் சென்னைக் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்தவரை, பிறகு தனியே சந்தித்தேன். மென்மையான குரலில், வன்மையான சொற்களில் எல்லாக் கேள்விகளையும் எதிர்கொள்கிறார் அருந்ததி ராய்."தண்டகாரண்யா காடு என்பது இன்று இந்தியாவின் மர்மப் பிரதேசம். அங்கு போய் வந்தவர் என்ற அடிப்படையில் தண்டகாரண் யாவில் என்னதான் நடக்கிறது என்பதுபற்றிச் சொல்ல முடியுமா?"

"மத்திய இந்தியாவில் சட்டீஸ்கர், ஒரிஸ்ஸா, மகாராஷ்டிரா, ஆந்திரா ஆகியமாநில எல்லைகளை இணைப்பதாக இருக்கும் தண்டகாரண்யா காடு, இந்தியப் பழங்குடிகளின் பூர்வீகப் பிரதேசம். குறிப்பாக டோங்ரியா, கோண்டு இன மக்களின் தாயகம். இந்தியாஎன்ற ஒரு நாடு தோன்றுவதற்கு முன்பிருந்தே அந்த மக்கள் அந்தக் காடுகளில்தான் வாழ்கிறார்கள். காட்டின் வளங்களை அவர்கள் பணம் கொட்டும் இயந்திரங்களாகப் பார்ப்பது இல்லை. காடு, அவர்களின் கடவுள். அவர்களின் கடவுளை அவர்களுக்கே தெரியாமல் பன்னாட்டு நிறுவனங்களிடம் விற்று விட்டது இந்திய அரசு. நல்ல விலை கிடைக்கிறதுஎன்பதற்காக உங்கள் கடவுளை விற்பீர்களா? (அது 'நல்ல விலை'யும் இல்லை என்பது வேறு விஷயம்).

தண்டகாரண்யா காட்டின் மலைத் தொடர்களில் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பாக்ஸைட் கனிம வளம் இருக்கிறது. இதுதான் வேதாந்தா, ஜிண்டால், எஸ்ஸார் போன்ற மிகப் பெரிய நிறுவனங்களின் இலக்கு. இந்த நிறுவனங்களுக்காக தரகர் வேலை பார்க்கும் பிரதமரும், உள்துறை அமைச்சரும் பழங்குடி மக்களிடம் இருந்து வலுக்கட்டாயமாக நிலங்களைப் பிடுங்குகின்றனர்.

அந்த மக்களுக்கு இந்த அரசினால் இதுவரை எந்த நன்மையும் கிடைக்கவில்லை. பள்ளிக்கூடம், மருத்துவமனை, சாலை வசதி, சுத்தமான குடிநீர், வனம்சார் விளைபொருட்களுக்கான விலை, குறைந்தது போலீஸ் பயமற்ற நிம்மதியான வாழ்க்கை என எதுவுமே இல்லை. ஆனால், எஞ்சியிருக்கும் நிலங்களையும் வன்முறையாகப் பிடுங்குகின்றனர். நாட்டின் இதர பகுதி மக்களை போலீஸ், ராணுவம் மூலம்அரசு அடக்கி ஒடுக்குகிறது. ஆனால், பழங்குடி மக்கள் வீரத்துடன் எதிர்த்துப் போரிடுகின்றனர். ஒடுக்கப்படும் பழங்குடி மக்களுக்கு ஆதரவாக மாவோயிஸ்ட்டுகள் ஆயுதம் ஏந்திக் களத்தில் நிற்கின்றனர். உடனே, அவர்களை 'இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான மிகப் பெரிய சக்தி' என வர்ணிக்கிறார் பிரதமர்..

நன்றி
கவி அரசு
Photo: எழுத்தாளர் அருந்ததி ராய் பிறந்ததினம் இன்று !!!

வாழ்க்கைக் குறிப்பு :

அருந்ததி ராய் மேகாலயாவின் தலைநகர் சில்லாங்கில் பிறந்தார். கேரளத்தை சேர்ந்த மேரி ரோசுக்கும், வங்காளத்தைச் சேர்ந்த தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்த தந்தைக்கும் பிறந்தார்.
தனது சிறுவயதில் கேரளாவில் உள்ள ஆய்மணம் (Aymanam) என்ற சிற்றூரில் வளர்ந்தார். கோட்டயத்திலும் நீலகிரியிலும் பள்ளிப்படிப்பை முடித்தார். பின்னர்தில்லி பல்கலைக்கழகத்தில் கட்டிடக்கலை படிப்பில் சேர்ந்தார். அங்கு தனது முதல் கணவரைச் சந்தித்தார். பின் தங்கள் படிப்பை விடுத்து இருவரும் வெளியேறினர். தன் முதல் கணவருடன் நான்கு ஆண்டுகள் வாழ்ந்தார். பின்னர் அவர் பிரதீப் கிரிஷன் என்ற திரைப்பட இயக்குநரை மணந்தார். இருவரும் சேர்ந்து சில படங்களை எடுத்தனர். இப்படங்களுக்கு அருந்ததி திரைக்கதை எழுதியது குறிப்படத்தக்கது. அவற்றில் சில In Which Annie Gives It Those Ones and Electric Moon...

சமூகக் குரல் :

அருந்ததி ராய் தனது பள்ளி பருவத்திலிருந்தே தானாகச் சிந்திப்பவர். இதற்கு அவர் படித்த பள்ளியின் கட்டற்ற படிப்புமுறை காரணமாகத் திகழ்ந்தது. இவரது பல படைப்புகளில் சமுதாயத்திலுள்ள பெண் அடிமைத்தனம் குழந்தைத் தொழிலாளர் பிரச்சனை , அமேரிக்காவின் வெளியுறவு கொள்கைகள் முதலியவற்றை விமர்சனத்துக்கு உட்படுத்தினார். மேதா பட்கர் தொடங்கிய நர்மதா பச்சாவோ அந்தோலன் ( en:Narmada Bachao Andolan ) என்ற அமைப்பில் தீவிரமாக பங்கு கொண்டார். இவ்வாறே இவரது குரல் சமுதாயத்தின் மறுபக்கத்தை மக்களிடம் கொண்டு சேர்த்தது. இந்த குரல் பல முறை எழுத்து வடிவமாக இருந்தது என்பது குறிப்பிடத் தகுந்தது.

நர்மதை போராட்டம்

Maybe. Inch by inch. Bomb by bomb. Dam by dam. Maybe by fighting specific wars in specific ways. We could begin in the Narmada Valley.

காஷ்மீர் பிரச்சனை

India needs azadi from Kashmir just as much—if not more—than Kashmir needs azadi from India...

அருந்ததிராய்… இந்திய எழுத்துலகின் முற்போக்கு முகம்! மத்திய இந்தியாவின் தண்டகாரண்யா காடுகளில் இருக்கும் கனிம வளங்கள் பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தாரைவார்க்கப்படுவதை எதிர்த்துப் பழங்குடி மக்கள் வில், அம்பு ஏந்தி வீரத் துடன் போரிட்டுக்கொண்டு இருக்க,அறிவுலகில் தன்னந்தனியாக நின்று போராடுகிறார் அருந்ததி ராய்.

'ஆபரேஷன் பசுமை வேட்டை' என்ற பழங்குடி மக்களுக்கு எதிரான உள்நாட்டு யுத்தத்தை மிகக் கடுமையாக எதிர்க்கும் அருந்ததி ராய், அண்மையில் அந்தக் காடுகளுக்குள் நேரடியாகச் சென்றும் வந்தார்.கடந்த வாரம் சென்னைக் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்தவரை, பிறகு தனியே சந்தித்தேன். மென்மையான குரலில், வன்மையான சொற்களில் எல்லாக் கேள்விகளையும் எதிர்கொள்கிறார் அருந்ததி ராய்."தண்டகாரண்யா காடு என்பது இன்று இந்தியாவின் மர்மப் பிரதேசம். அங்கு போய் வந்தவர் என்ற அடிப்படையில் தண்டகாரண் யாவில் என்னதான் நடக்கிறது என்பதுபற்றிச் சொல்ல முடியுமா?"

"மத்திய இந்தியாவில் சட்டீஸ்கர், ஒரிஸ்ஸா, மகாராஷ்டிரா, ஆந்திரா ஆகியமாநில எல்லைகளை இணைப்பதாக இருக்கும் தண்டகாரண்யா காடு, இந்தியப் பழங்குடிகளின் பூர்வீகப் பிரதேசம். குறிப்பாக டோங்ரியா, கோண்டு இன மக்களின் தாயகம். இந்தியாஎன்ற ஒரு நாடு தோன்றுவதற்கு முன்பிருந்தே அந்த மக்கள் அந்தக் காடுகளில்தான் வாழ்கிறார்கள். காட்டின் வளங்களை அவர்கள் பணம் கொட்டும் இயந்திரங்களாகப் பார்ப்பது இல்லை. காடு, அவர்களின் கடவுள். அவர்களின் கடவுளை அவர்களுக்கே தெரியாமல் பன்னாட்டு நிறுவனங்களிடம் விற்று விட்டது இந்திய அரசு. நல்ல விலை கிடைக்கிறதுஎன்பதற்காக உங்கள் கடவுளை விற்பீர்களா? (அது 'நல்ல விலை'யும் இல்லை என்பது வேறு விஷயம்).

தண்டகாரண்யா காட்டின் மலைத் தொடர்களில் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பாக்ஸைட் கனிம வளம் இருக்கிறது. இதுதான் வேதாந்தா, ஜிண்டால், எஸ்ஸார் போன்ற மிகப் பெரிய நிறுவனங்களின் இலக்கு. இந்த நிறுவனங்களுக்காக தரகர் வேலை பார்க்கும் பிரதமரும், உள்துறை அமைச்சரும் பழங்குடி மக்களிடம் இருந்து வலுக்கட்டாயமாக நிலங்களைப் பிடுங்குகின்றனர்.

அந்த மக்களுக்கு இந்த அரசினால் இதுவரை எந்த நன்மையும் கிடைக்கவில்லை. பள்ளிக்கூடம், மருத்துவமனை, சாலை வசதி, சுத்தமான குடிநீர், வனம்சார் விளைபொருட்களுக்கான விலை, குறைந்தது போலீஸ் பயமற்ற நிம்மதியான வாழ்க்கை என எதுவுமே இல்லை. ஆனால், எஞ்சியிருக்கும் நிலங்களையும் வன்முறையாகப் பிடுங்குகின்றனர். நாட்டின் இதர பகுதி மக்களை போலீஸ், ராணுவம் மூலம்அரசு அடக்கி ஒடுக்குகிறது. ஆனால், பழங்குடி மக்கள் வீரத்துடன் எதிர்த்துப் போரிடுகின்றனர். ஒடுக்கப்படும் பழங்குடி மக்களுக்கு ஆதரவாக மாவோயிஸ்ட்டுகள் ஆயுதம் ஏந்திக் களத்தில் நிற்கின்றனர். உடனே, அவர்களை 'இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான மிகப் பெரிய சக்தி' என வர்ணிக்கிறார் பிரதமர்..

நன்றி 
கவி அரசு

No comments:

Post a Comment